இன்றைய சந்தை 20.02.2009


நேற்றைய தினம் எழுதியதை இன்று தொடருகிறேன்….  

நாம் திங்கள் கிழமை பதிவில் குறிப்பிட்டது போலவே தங்கம் 988$ என்ற முதல் இலக்கை அடைந்து விட்டது.

கச்சா எண்ணை 40 $ ஐ தொட்டு விட்டது…

8000 ஐ தன் வசப்படுத்தி வைத்திருந்த அமெரிக்க சந்தைகள் தாக்குதல்களை சாமாளிக்க முடியாமல் 7800-700 7500 என்று பின் வாங்கி 7400 க்கே வந்து விட்டது. 

அவர்களையே அடி வருடும் ஆசிய சந்தைகள்.  

உலகளவில் ஊடகங்களின் இன்றைய விவாதப்பொருள் “டவ் அண்ணாச்சி 7000 ஐ உடைத்து 6000 க்கு செல்வாரா? இல்லை, 5000 க்கு செல்வாரா?” என்பது தான்.   அவ்வாறு நிகழ்ந்தால் இன்னும் அமெரிக்காவை நாட்டாமையாக நினைத்து செயல்படும் நம்மை போன்றவர்களுக்கு சிக்கல் தான்.  (தற்போதைய சூழ்நிலையில் அவர்கள் பொருளாதார வல்லரசு கிடையாது, ஆனால் இன்றும் அவர்கள் தான் ஆயுத வல்லரசு என்பதை மறுக்க முடியது).

கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கச்சா எண்ணை விலையேற்றம்,  அமெரிக்க சந்தை சரிவு, உள் நாட்டு பணவீக்க விகிதம் வரலாறு காணாத அளவில் உயர்ந்தது என்று பிரச்சினைகள் ஒரு சேர தாக்கியபோது வளரும் நாடுகள், பதறின ஆங்காங்கே சில சந்திப்புகள் மாநாடுகள் என்று விவாதித்தனர். ஆனால் பிரச்சினைகளின் வீரியம் குறைந்த உடன்,

அமெரிக்காவின் ஆட்சிமாற்றம் சில காட்சி மாற்றங்களை நிகழ்த்தும் என்ற நம்பிக்கையில் மெத்தனமாக இருந்து விட்டன.  அமெரிக்காவுக்கே பிரச்சினையின் ஆழம் தெரியவில்லை என்று அவர்களின் ஊடகங்களில் தற்போது வரும் செய்திகள் பூச்சாண்டி காட்டுகின்றன.

கடந்த ஒரு வருட உலக பொருளாதார சரிவுக்கு அமெரிக்கா தான் காரணம் என்றால் மிகையில்லை.  நமது நாட்டில் ஒரே ஒரு ”சத்ய” சோதனை தான் நிகழ்ந்து உள்ளது.  அதுவும் தொழில் ரீதியான சரிவு இல்லை, முறை கெட்ட நிர்வாகமும் அதோடு கூட்டணி சேர்ந்த நமது நாட்டின் சாபக்கேடான ஊழல் அரசியலும்  தான்.  மற்றபடி அஸ்திவாரத்தையே ஆட்டம் காணச்செய்யும் நிலையில் எந்த நிறுவனமும் இல்லை.  

இது போன்ற சூல்நிலையில் இன்னும் அமெரிக்காவை பின்பற்றும் நிலை ஏன்?    கிராமங்களில் அனைத்தையும் இழந்து தவிக்கும் சிலரை பண்ணையார் என்று அழைப்பார்கள்.  அது போலவே உள்ளது இன்னும் அமெரிக்காவை பெரிய அண்ணன் என்று அழைப்பது.  

2 நாட்களில் 200 புள்ளிகளுக்கும் அதிகமாக இழந்த நமது சந்தை அமெரிக்க சந்தைகள் மீளாதா என்று ஒரு நப்பாசையிலும், (நேற்றைய  தினம்  திடீரென்று  டவ் ப்யூச்சர் 70 புள்ளிகள் உயர்ந்த போது நமது சந்தையும் உயர்ந்ததை கவனித்திருக்கலாம்)  ரிசர்வ் வங்கி ஏதாவது வட்டி குறைப்பு போன்ற அறிவிப்புகளை வெளியிடாதா என்ற எதிர் பார்ப்பிலும்…  நிலைப்பெற்றது. கூடுதல் காரணம் ஒரு பெரிய சரிவினை தொடர்ந்து நிகழும் சார்ட் கவரிங்.    

3 நாட்கள் தொடர் விடுமுறை காரணம் வரும் திங்கள் மாஹாசிவராத்திரி. அன்றும் நமது சந்தைக்கு விடுமுறை.

  தற்போது சரிவுடன் துவங்கியுள்ளது ஜப்பான் / சீன சந்தைகள். 

 இப்படி பட்ட சூழ்நிலையில் துவங்கும் நமது சந்தை என்ன செய்யும் இன்னும் நம்பிக்கையுடன் செயல் பட முடியுமா.  சந்தேகம் தான்.  அதே நேரத்தில் 2745 – 2730 உடைக்காத வரை சரிவுகள் தள்ளிப்போடப்படலாம்.

எனது தனிப்பட்ட எதிர் பார்ப்பு…  2650 வரை தான்.. அந்த இடத்தில் உலக சந்தைகளில் ஒரு நம்பிக்கை ஏற்பட்டால்,  குறிப்பாக அமெரிக்க பங்காளி இழந்த மானம் மருவாதியை காப்பாற்றிகொள்ளும் முயற்சியில் இறங்கினால், அடுத்த வாரம்  சந்தை மேல் நோக்கி பயணமாகும்.  குறிப்பாக வங்கித்துறை பங்குகள்.

கடந்த 17.02.2009 அன்று நான் பரிந்துரைத்த.

ஹீரோ  ஹோண்டாவில் பெரிய மாற்றம் இல்லை.

போலாரிஸ் 48.50 என்ற விலையில் விற்றிருந்தால் 4/- லாபம் 2800 லாட் சைஸ் = 11200 லாபம். 

பயனாளிகள் பின்னூட்டமிடவும்.

நிலைகள் 2828 க்கும் 2727 க்கும் தான் போட்டி இதில் எந்த நிலை முதலில் உடை படுதோ அந்த பக்கம் செல்ல வேண்டியது தான். 

============================================================================

ரஹ்மான் – தங்கள் அளவுக்கு தரம் தாழ்ந்து என்னால் எழுத முடியும் என்றாலும் அது எனது சுபாவம் இல்லை என்பதால் நாகரீகமாகவே பதில் எழுதுகிறேன்.  

Jai hind  என்றும் indian  என்றும் போலியான ஈ.மெயில் தர வேண்டாம்… தாங்கள் முதல் பின்னூட்டம் எழுதிய போதே உங்களின் வீட்டு முகவரி /  தொலை பேசி எண் உட்பட அனைத்து தகவல்களையும் விசாரித்து விட்டோம்.  

முதலில் தங்களை யாரென்று எனக்கு தெரியாது, நீங்கள் யாருக்காக இப்படி வசைபாடுகிறீர்கள் என்றும் தெரியவில்லை.. உங்களுடைய எதிர் பார்ப்பு என்ன..? மனநிலை பாதிக்கபட்டவரா?

தங்கள் நோக்கம் என்னை கெட்ட வார்த்தைகளால் திட்டுவதும நான் எழுதுவதை நிறுத்த செய்வதும் என்றே அறிகிறேன்..  முதலில் விஜய குமார் என்பவரின் கட்டுரைகளை நான் மொழிபெயர்க்கிறேன் என்று சொன்னவர். அவரின் வெப்சைட் / மற்ற தகவல்களை கேட்டால்..  தற்போது பலரின் வெப்சைட்களில் இருந்து தகவல்களை திரட்டுகிறேன் என்று எழுதி உள்ளீர்கள்.   

முதல் பின்னூட்டம் படித்த போது கோபம் வந்தது உண்மையே ஆனால் நேற்றைய பின்னூட்டம் கண்டு சிரிப்பு தான் வந்தது.  காரணம் இதன் பின்னணியில் பதிவுலக நண்பர்களின் / தொழில் முறை போட்டியாளர்களின்  கை உள்ளது என்று தெரிவதால்,  பெரிய மனிதர்களுக்கு இது அழகல்ல. 

சரி உங்கள் ஆத்ம திருப்திக்காக உங்களின் குற்றச்சாட்டுகளை அனைவரின் பார்வைக்கும் வைக்கிறேன்.

நண்பர்களே….

1. சாய்-க்கு  டெக்னிகலே தெரியாது… அனலிஸ்டே கிடையாது.  

2. அடுத்தவரின் கட்டுரைகளை / கால்ஸ் களை மொழி பெயர்த்து போடுகிறார்.

3.  அவரை நம்பாதீர்கள்.

4. அவரே பல பெயர்களில் பின்னூட்டம் எழுதி கொள்கிறார்.

இதுதான் அவரின் குற்றச்சாட்டு கூடவே அவர் அவர்களுக்கு பிடித்த கெட்டவார்த்தைகளை சேர்த்து கொள்ளுங்கள்.

எனக்கு எந்த வருத்தமும் இல்லை.    நண்பர்களே இவருக்கு இந்த அளவு முக்கியத்துவம் தரதேவையில்லைதான்.  ஆனால் அவர்களின் நோக்கம் என்னை சலனப்படுத்துவது தான் அதை தவிர்க்கவே பதில் எழுதினேன்.   

Advertisements

23 responses to this post.

 1. your views are excellent. Keep it up sir.

  Good Morning to everybody and wish you all a successful trading.

 2. மதிப்பிற்குரிய சாய் அண்ணா அவர்களுக்கு,

  தங்களுடைய கட்டுரைகளை நண்பர்கள் அனைவரும் பல மாதங்களாக தொடர்ந்து படித்து வருகிறோம். ஆரம்பம் முதலே தங்களுடைய கட்டுரைகளை படித்து வருவதால் தங்களுடைய திறமை பற்றியும் சந்தை பகுப்பாய்வு திறன் பற்றியும் நன்றாக அறிவோம்.

  தங்களுடைய கட்டுரைகளை படித்துவிட்டு பின்னர் மனநிலை குழம்பிய நபர் போல பின்னூட்டம் இடுபவர்களை கண்டு வேதனைதான் ஏற்படுகிறது. பதிவுலகிலும் அரசியலுலகைப் போல் அநாகரீகம் ஓடுவது மிகுந்த வருத்தத்திற்குரியது. சம்பந்தப்பட்ட நபர்கள் இனிமேலாவது தங்களை மாற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

  தங்களுடைய இன்றைய கட்டுரை மிகவும் பிரமாதம். சந்தையின் மீதான விசாலமான பார்வை எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. தங்களுடைய கருத்துக்களை மிகவும் அழகாக கூறியுள்ளீர்கள்.

  மிக்க நன்றி.

  இனிய காலை வணக்கம்

 3. Mathavanga paththi neenga ean worry pannanum. yaar pesinalum naanga first unga blog paththuttu than marketkullaye varrom. Tamil_la share market paththi ezhuthura tharamana blog ithu. Ethai pathiyum kavalai padatheenga. Ungal vasagargal niriya per irukkom. Evaro(no) oruththan(r) vendum enre saikiraar. We(Vasagargal) are always with you.

 4. எப்பவும் போல எங்களை வழிநடத்தும் கட்டுரை இன்றும் அபாரம்.நீங்கள் குடுக்கும் கால்ஸ் மற்றும் டெக்னிகல் குறித்து தாங்கள் அடிக்கடி பதிவேற்றும் விஷியங்களுமே தாங்கள் டெக்னிகலில் எந்த அளவு இருக்கிறீர்கள் என்பதற்கு அத்தாட்சி.அதை உங்களிடம் ஆலோசனை பெறும் அனைவரும் அறிவர்.உங்களின் வளர்ச்சியை பிடிக்காத பொறாமை குணம் கொண்டவர்களின் வார்த்தைகளை காதிற்க்குள் கூட நுழைய விட கூடாது.அதை நீங்கள் மனதிற்குள் நுழைய விட்டு வருத்த வேண்டாம் என்பது உங்களால் பயன் பெறுவோரின் விருப்பம். 🙂

 5. சாய் சார்,

  சூரியனை பார்த்து நாய் குலைத்தால் யாருக்கு நஷ்டம் ?

  நாங்கள் அனைவரும் உங்கள் பக்கம் இருக்கும் போது நீங்கள் ஏன் வருதபடுகிறீர்கள் ?

  இந்த மாதிரி வரும் விமர்சனகளை கண்டு வருத்தம் கொள்ள வேண்டாம்.

  நன்றி

  விமல்

 6. தங்களுடைய திறமை பற்றியும் சந்தைதிறன் பற்றியும் நன்றாக அறிவோம்.இந்த மாதிரி வரும் விமர்சனகளை கண்டு வருத்தம் கொள்ள வேண்டாம்.உங்கள் தன்னலமற்ற சேவைஎல்லோருக்கும் பயனுள்ளது…வாழ்த்துக்கள்

  இந்த மாதிரி வரும் விமர்சனகளை கண்டு வருத்தம் கொள்ள வேண்டாம்.

  GR CHANDHRAKUMAR………
  COIMBATORE

 7. U R ANALYSIS ARE EXCELLENT . NIFTY HIT U R LEVEL 2727 EXCATLY TODAY BU 10.05AM

 8. DEAR SIR,
  DONT FEEL ABOUT THIS TYPE OF PERSONS. AND AVOID THEM, DONT REPLY, BECAUSE THESE TYPE OF PERSONS WANTS SOME POPULARTITY ALSO. I AM ALSO HAVING THIS TYPES OF COMMENTS IN MY WEBSITE. SO NEGALATE THEM. YOU ARE BETTER TECHNICAL ANALIST THERE IS NO NECESSITY TO PROOVE THIS TO THIS KIND OF PERSONS.
  VICOTRY IS IN YOUR HAND. WE ARE ALL IN YOUR SIDE.
  CHEER UP.
  WITH LOVE,
  DAYTRADINGPRINCE

 9. Posted by நல்லசாமி தமிழ்செல்வன் கொச்சி on பிப்ரவரி 20, 2009 at 10:44 முப

  நல்ல நெல்மணிக் கதிர்களில் பதர்கள் இருக்கத்தான் செய்யும். அவற்றை களைந்து விட்டு தரமான அரிசியை உலகத்திற்க்கு அளிப்பவனே நல்ல விவசாயி.அவனே உலகிற்க்கு படி அளப்பவன்.

 10. thank you sai
  இன்று கட்டுரை மிகவும் அருமை
  இசைக்கு ரஹ்மான் என்றால், வசைக்கு இந்த ரஹ்மான்.உரசிப் பார்த்தல் தங்கம் ஒளிருமே தவிர மங்கிப்போகாது.சூரியனை பார்த்து குரைத்தால்,குரைப்பவனுக்குத் தான் நட்டம்.
  அகையால் எது எப்படி அகிலும் எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு ,வழக்கம் போல் எழுதவும்,கவலேயே இல்லாமல்

  Murugesan
  Abudhabi

 11. உங்களின் வளர்ச்சியை பிடிக்காத பொறாமை குணம் கொண்டவர்களின் வார்த்தைகளை காதிற்க்குள் கூட நுழைய விட கூடாது.இந்த மாதிரி வரும் விமர்சனகளை கண்டு வருத்தம் கொள்ள வேண்டாம்.

 12. வணக்கம் சாய் சார்,

  போலாரிஸ் பரிந்துரை மிகவும் அருமை.. அதுவும் இன்றைய நாள் முடிவினில் பார்க்கும் பொழுது அருமையான லாபம் கிடைத்திருக்கும்.

  ரெஹ்மான் என்ற மனிதரை பொறுத்தவரை அவரிடம் உண்மை இல்லை.. அவரது தொலைபேசி எண் மற்றும் வீட்டு முகவரி கிடைத்த பின்னரும் அதனை வெளியிடாமல் இருப்பது உங்களின் மனதை வெளிப்படுத்துகிறது..

  அதே போல் இவ்வாறு தொடர்ந்து ரெஹ்மான் கூறி வரும் கருத்துக்கள் அவரது எதிர்மறை சிந்தனைகளை பறைசாற்றுகிறது.. அதாவது ஒருவருக்கு அடிபட்டு காயம் எனில் அவருக்கு உதவாமல் அந்த காயத்தில் விரல் விட்டு விளையாடும் சைக்கோ போல எதுவோ உளறி வருகிறார்..

  உங்களது calls வாங்கும் வாடிக்கையாளர்களில் ஒருவரே இவ்வாறு செய்யலாம் என்ற சந்தேகம் எனக்கு எழுகிறது.. அதே நேரத்தில் நண்பர்களில் யாரை சந்தேகிப்பது.. இவ்வாறு ஒரு வகையான மன உளைச்சலை ஏற்ப்படுத்தி உங்களது இயல்பை பாதிப்புக்குள்ளாக்குவதே அவரின் நோக்கம் என்று தெரிகிறது..

  இதற்க்கு சட்ட ரீதியான நடவடிக்கையே சிறந்தது.. இப்பொழுதாவது உங்கள் நண்பர் CBI INSPECTOR அவரின் ஆலோசனை கேட்டு அதன் படி ஆவன செய்ய வேண்டும்.

  ஆனா அந்த ஆளு மதுரை என்று சொன்னீங்க பாருங்க.. அதான் ரொம்ப வருத்தமா இருக்கு. முதுகுல குத்துற பழக்கம் மதுரக்காரங்களுக்கு இல்ல..

  so அவன் மதுரைக்காரன் இல்ல.. பொதுவா சொன்னா அவன் மனுசனே இல்ல…

 13. Sai Sir,

  We are Know that, you are very good person and good technical analysist. They do not know your market experience and your strong technical know ledges.
  Do not worry about these types of nonsense comments. Just ignore it. You no need to prove to them.
  The nonsense type of guys requires some popularity. Just you follow your style and walk your way. Don’t bother about this nonsense. They are jealous. That is the reason split these types of words…

  We are always with you. Do not worry Sir Sir.

  Warm regards,
  Muthu.

 14. Dear Sai,

  I request that don’t waste the time like this matters. We are awaiting for ur valueable works. go ahead in your way.

 15. 1. சாய்-க்கு டெக்னிகலே தெரியாது… அனலிஸ்டே கிடையாது.
  பங்குவணிகம் சரிந்த கிடைக்கும் இந்த நிலையில் சிரிக்கும் அளவுக்கு ஜோக்கு அடிக்கிறாங்கப்பா…. 15 வருடம் துறையில் இருக்கும் நபரைபார்த்து கேட்கும் கேள்வியா இது போங்கப்பா போயி வேற வேலை இருந்த பாருங்க….
  2. அடுத்தவரின் கட்டுரைகளை / கால்ஸ் களை மொழி பெயர்த்து போடுகிறார்.
  நமக்கு பின்னுடமே நல்ல தமிழ்லா எழுத முடியல? நல்ல தமிழ் நல்ல விசயத்தை நாலு பேருக்கு புரியும் படி, தாய்மொழியில் எழுதுகின்றவரை என் இப்படி சுத்தி சுத்தி அடிக்கிறாங்க என்று புரியலா.
  நானும் தினசரி பல விசயம் மற்ற மொழியில் படிக்கின்றேன் ஆனா என் தாய்மொழியில் படிக்கும் போது புரிவதை விட வேறு எதிலும் அதிகம் புரியவதுதில்லை.
  3. அவரை நம்பாதீர்கள்.
  சரி அப்படின்னா? யார நம்பரது (முகவரி மறைந்த்து எழுதும்) உங்களையா?
  4. அவரே பல பெயர்களில் பின்னூட்டம் எழுதி கொள்கிறார்.
  எனக்கு தெரிந்து (சிம்பா, முத்து, ஜாபர், பிரியா, கார்த்திக், Suresh, டாக்டர் சார். ரோஜா காதலன், முருகேசன் மற்றும் பலர் தங்களின் கருத்துகளை பதிவு செய்கின்றார்கள். இதில் உண்மை என்ன வென்றால் பாதிக்கு மேல் வளைப்பதிவு வைத்துள்ளவர்கள்.
  ரஹ்மான் (நீங்க இஸ்லாமினாக இருந்தால்) உங்களுக்காக
  நபிமொழி
  ஒரு மனிதன் இறந்துவிட்டால் மூன்று செயல்களைத்தவிர மற்றவை அவனை விட்டு அறுந்துவிடுகின்றன. 1. நிலையான தர்மம், 2. பிறருக்கு பயன்தரக்கூடிய கல்வி, 3. தன் தந்தைக்காக பிரார்த்திக்கும் நற்பிள்ளை.
  நபியவர்கள் மேலும் கூறியுள்ளாரகள் நீ உலகில்
  1.) கல்வியைக் கற்றுகொள்பவனாக இரு 2.) கல்வியைக் கற்று, பிறருக்கும் கற்றுக் கொடுப்பவன இரு 3.) அல்லது மேல் கூறியவற்றிக்கு உதவுகின்றவனாக இரு.
  இதில் எதுவும் இல்லாம் இருந்துவிடதே என்று கூறியுள்ளாரகள்.

  நீங்கள் யேசியுங்கள் இதில் நீங்கள் எங்கு என்று.

  நன்றி!!!

 16. வணக்கம் சாய்,

  இன்றைய சந்தை அலசல் அற்புதம்.
  இப்படி நீங்க நல்லா எழுதறதே உங்களுக்கு போட்டி பொறாமையை ஏற்படுத்தி எதிரியை உருவாக்குது.உங்களோட குறுகிய கால அசுர வளர்ச்சியை பார்த்து பயம் வந்திருக்கணும்னு நினைக்கிறேன். உங்க கவனத்தை சிதறடிச்சு உங்கள் செயல்பாட்டு பாதையில் இருந்து திசை திருப்பி விடப்பார்க்கறாங்க.
  நீங்க அசைஞ்சு கொடுக்காதீங்க உங்க பின்னால் நாங்க இருக்கிறோம்.
  உங்களை மன உளைச்சல் அடைய வைக்கறது தான் அவங்க நோக்கம்.
  அதுக்கு நீங்க இடம் கொடுக்க வேண்டாம்.உங்க திறமையை பற்றி எங்களுக்கு நல்லாவே தெரியும்.பதிவுலகத்திலும் பாலிடிக்ஸ் நடக்குது.
  //இதற்க்கு சட்ட ரீதியான நடவடிக்கையே சிறந்தது.. இப்பொழுதாவது உங்கள் நண்பர் CBI INSPECTOR அவரின் ஆலோசனை கேட்டு அதன் படி ஆவன செய்ய வேண்டும்.//

 17. சாய் உங்களிடம் உள்ள தகவல் வைத்து அவர் மேல் மனஉளச்சல் மற்றும் மான நஷ்ட வழக்கு தொடர முடியுமா?

 18. Dear Sai sir

  Intha maathiri ellorum poramai padara maathiri neenga nalla level irukomnu santhosa padunga sir..Rahman maathiri namaku comment vantha athai tonic maathiri postivea nenaichu neenga unga vazhila eppavum pola ponga sir..

  If you growing more in your field, like these guys will scold you always. So don’t consider this nonsense comments..

  Please don’t bother about the Rubbish comments. We are in the market because of your confidential words. We are all know your knowledge about the market.

  All the best for your future achievements.. Do well sir..

  Regards,
  sekar, bangalore

 19. DEAR GURU JI ,BECAUSE OF THIS INCIDENT I HAVE DESIDED TO SUBSCRIBE YOUR TIPS FROM NEXT MONTH TO SHOW THAT I STRONGLY BELIVE IN YOUR VIEWS.YOUR ARE UNIQUE IN THE ANALYSIS.(I USED TO READ MANY BLOGS OF THE STOCK MARKET)… YOU ARE THE BEST AND TOP AMONG ALL.SO DONE WORRY WE ARE WITH YOU AND WE LOOOOOVE YOU !!!!! Warm regards,
  DAVID RAJA J

 20. சாய்,

  யார் உங்கள் மேல் குற்றம் சொன்னாலும், உங்களின் முன்னேற்றத்தையும் நட்புவட்டத்தையும் இறைவன் தன் அருளால் நிரப்புவார் !
  உங்களுக்கு தொல்லை தருபவர்களின் உள்ளத்திலும் அவரே நல்ல எண்ணங்களையும் விதைப்பார் !

  மென்மேலும் உங்கள் பணி சிறந்து ஒளிவீச வாழ்த்துக்கள் !!!

 21. Really its usefull for me
  Thanks for the views in Tamil

  Thanks
  Kalyan

 22. dear sai
  pls concentrat your knowledge -mind power-and thoughts only in share market. your sight – aim – must be only at technical analysis-like Arjunan’s aim.

  we are expecting more from you.

  with regards
  mugham.m

 23. இந்த மாதிரி வரும் விமர்சனகளை கண்டு வருத்தம் கொள்ள வேண்டாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: