இன்றைய சந்தை 18.02.2009


16.02.2009 பதிவு…

//நாமும் 3100 ஐயும் அதற்கு மேலும் எதிர் பார்த்தோம் என்பது உண்மையே ஆனால் அதற்கான உடனடி சாத்தியங்கள் குறைய ஆரம்பித்து விட்டது.   தற்போது சிறிய ( குறைந்த பட்சம் 200-250) அளவில் சரிந்து மீள வேண்டிநிலையில் சந்தை உள்ளதை தொழில்நுட்ப பகுப்பாய்வுகள் காட்டுகிறது.//

இரண்டு நாட்களில் 200 புள்ளிகள் சரிவடைந்து விட்டது…  இன்னும் ஒரு 100 புள்ளிகள் எதிர் பார்க்கிறேன்.    அதன் பிறகு… ?? அண்ணன் அங்கு போகட்டும் பிறகு யோசிக்கலாம் அடுத்த கட்ட பயணத்தை….

2772 – 2762 – 2727 – 2662 – 2626

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரே நேரத்தில் உலக சந்தைகள் அனைத்தும் சிவப்பு கம்பளம் விரித்து உள்ளது. 

பட்ஜெட்டுகளும் எனது சந்தேகங்களும் :-

95 ஆயிரம் கோடிகள் உபரி நிதி கையிருப்பு இருக்கும் வகையில் செயல்பட்ட ரயில்வே அமைச்சகத்துக்கும்,  அமைச்சருக்கும் வாழ்த்துகள். 

ஆனால் 2%  கட்டண குறைப்பு என்பது எந்த வகையில் மக்களுக்கு பயன் படும் என்று தெரியவில்லை.  கடந்த சில வருடங்களாக கட்டணம் உயர்த்தபடாததே மிக்பெரிய மறைமுக கட்டண குறைப்பு தான். அப்படி இருக்கையில் இது தேவை இல்லாதது.  நீண்ட தூரம் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்யும் பயணிகளுக்கு ஐந்து ரூபாய், ஆறு  ரூபாய் என்பது பெரிய விசயமே இல்லை,  பயணத்தில் அதைவிட அதிகம் தண்ணீர் மற்றும் தரமில்லாத  உணவுக்கு அதிக விலை  தருகிறோம்.    இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு என்பது பல நூறு கோடி ரூபாய்.   இப்படி சிறிய சலுகையை  (மீனை) போட்டு பெரிய வருவாய் இழப்பை சந்திப்பதற்கு பதிலாக நல்ல குடி நீர் கிடைக்க வழி செய்யலாம்.   அல்லது நல்ல விசயத்துக்கு பயன் படுத்தலாம்.

சரி தமிழக பட்ஜெட்டிற்கு வருவோம் – MP3 , MP4 பிளேயர்கள்  மற்றும் ஐபாட் மீதான விற்பனை வரி 12% இல் இருந்து 4% சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.  இது ஆடம்பர பொருட்களா? அல்லது  அத்தியவசிய பொருளா?

3500 புதிய பேருந்துகள் வாங்கப்படும் – நல்லவிசயம் உடனே வாங்குங்கள் கொஞ்சம் தரமானதா வாங்குங்க. 

பெரிய சந்தேகம் – கூட்டுறவு கடன்களை  குறித்த காலத்தில் திருப்பிச்செலுத்தினால் வட்டி தள்ளுபடி செய்யப்படும்.    அப்ப கட்டாதவங்களுக்கு?   அசலா? 🙂  சரியா விளக்கம் சொல்லுங்க.

சரி நாளைக்கு சந்திப்போம்…

Advertisements

10 responses to this post.

 1. உயர்திரு சாய் அண்ணா அவர்களுக்கு,

  சந்தை பற்றி தங்கள் கூறிய தகவல் மிகவும் நன்றாக இருந்தது. மேலும் இன்றைய கட்டுரையில் சந்தையினை பற்றி மட்டும் அல்லாமல் சற்றே தமிழக நிதி நிலை அறிக்கை பற்றியும் ரயில்வே துறை பற்றியதுமான தங்களது பார்வை நன்றாக இருக்கிறது.

  தகவல்களுக்கு மிக்க நன்றி.

  இனிய காலை வணக்கம்.

 2. கூட்டுறவு கடன்களை குறித்த காலத்தில் திருப்பிச்செலுத்தினால் வட்டி தள்ளுபடி செய்யப்படும். அப்ப கட்டாதவங்களுக்கு? அசலா?

 3. The way of writing is marvelous.Very useful and timely too

 4. GOOD MORNING SAI SIR.

 5. //பெரிய சந்தேகம் – கூட்டுறவு கடன்களை குறித்த காலத்தில் திருப்பிச்செலுத்தினால் வட்டி தள்ளுபடி செய்யப்படும். அப்ப கட்டாதவங்களுக்கு? அசலா?//
  ஹஹஹ.. அது இப்ப இல்ல தேர்தலின் பொழுது.. எவன் வீட்டு காசு.. கஷ்டப்பட்டு வரி செலுத்துறவன் காசு தானே போயிட்டு போவுது..

 6. //பெரிய சந்தேகம் – கூட்டுறவு கடன்களை குறித்த காலத்தில் திருப்பிச்செலுத்தினால் வட்டி தள்ளுபடி செய்யப்படும். அப்ப கட்டாதவங்களுக்கு? அசலா? சரியா விளக்கம் சொல்லுங்க.//

  SAI,
  நல்லா கேட்டீங்க
  கேள்விய………………….

 7. feb 23 வரும் திங்கள் மஹா சிவராத்திரியை முன்னிட்டு வர்த்தக விடுமுறை.இன்னும் இந்த மாத கான்ராக்ட் முடிய 4 நாட்களே உள்ளன.

 8. Thanks PS.
  Is there any link available to know about F & O expiry date ?
  if any, please give.
  Thanks in advance.
  vimal

 9. sir i already ask u about the lot size increase from march it should lead the market or let down explain abt this in u r style sir all are waiting for u r reply

 10. வணக்கம் சார்,

  இன்று சந்தைகள் ஓரளவு நமது பக்கமும் இருந்தது…

  நிதிநிலை அறிக்கையை பொறுத்தவரை ஏதாவது பெரிதாக கை மாறி இருக்கும். ஆகவே தான் இந்த வித்தியாசமான அறிவிப்பு…

  கூட்டுறவு கடன்களுக்கு இப்படி ஒரு முறை இருப்பது எனக்கு மிகவும் தாமதமாக தான் தெரிந்தது…

  இது தெரியாம ஒரு நாலு அஞ்சு தடவ கடனை கட்டிப்புட்டமே என்று தான் வருந்தினேன்..:)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: