எனது பார்வையில் இன்றைய சந்தை 17.02.2009


சந்தையின் சப்போர்ட்டாக இருந்து வந்த பட்ஜெட்  நேற்றையதினம் திரு முகர்ஜியால் தாக்கல் இல்லை இல்லை தாக்குதல் செய்யப்பட்டது.   அத்தாக்குதலால் கடுமையான செய்கூலி (புரோக்கரேஜ்),  சேதாரம், நஷ்டங்களை  சந்தித்துள்ளனர் மேலே செல்லும் என்று நம்பிய வணிகர்கள்.   செய்கூலி இல்லை சேதராம் இல்லை கற்களுக்கோ விலையும் இல்லை என்ற விளம்பரம் போல 3100/3200 என்று சொன்ன மீடியாக்கள் என்ன பதில் வைத்துள்ளார்கள்.  

இப்பொழுது சொல்லுங்கள்… 2900 க்கு எடுத்து சென்றது சித்தர்களா? அல்லது எத்தர்களா?

கடந்த 20/1/2009 – அன்று முன்னணி பங்குகளில் முதலீடு செய்யுங்கள் என்றும், 12.02.2009 அன்று விற்று வெளியேறுங்கள் என்று சொல்லியிருந்தேன்…. யாராவது முதலீடு செய்தீர்களா?.  அவ்வாறு செய்திருந்தால் 10% வரை லாபம் அடைந்திருக்கலாம். உதராணத்திற்கு ரிலையண்ஸ் பங்கினை 1190 ல் வாங்கி 1400 இல் வெளியேறியிருந்தால் லாபம் 200/-  அதாவது 15-16%.   இப்ப சொல்லுங்க 20 நாளில் 15% மோசமா? .

சரி நேற்றைய சந்தையின் பாதை நாம் அறிந்திருந்தது தான்… இன்றைக்கு போகும் பாதை எங்கே என்று பார்ப்போம்…  வேற எங்கே போவார் அண்ணன் 2727 க்கு தான். இன்று சேனலை உடைத்து கீழே செல்ல முயற்சிக்கும்..  நாம் இதுவரை அழுத்தமாக சொல்லிவந்த 2500 சப்போர்ட் கூட வரும் நாட்களில் தாக்குதலுக்கு உள்ளாகலாம்.  இப்போது அதை உறுதி செய்யவில்லை 2650 வரை பயணம் இருக்கும் என்பது உறுதி.

பெரிய அண்ணனின் சந்தைகளுக்கு நேற்றையதினம் விடுமுறை என்பதால் ஒன்றும் நடக்கவில்லை..  இருந்தும் ப்யூச்சர் வர்த்தகம் 7825 இல் 150 புள்ளிகள் சரிந்து  7675  ல் வர்த்தகமாகிறது.

நாளைய தினம் அமெரிக்க அரசின் சலுகை திட்ட விவரங்கள் முழுமையாக வெளிவரும்.. அதில் எதிர்பார்த்த திருப்தி இல்லை என்றால் பல முன்னனி நிறுவனங்கள்  அல்வா கொடுக்க தயார் நிலையில் உள்ளதாக தகவல்.  

நிப்டியின் சார்ட்டில் ஒரு Island top என்ற அமைப்பு உருவாகியுள்ளது. 

இன்றை நிலைகள் – 

2929-2882 – 2868 – 2845-2828-2800-2772 – 2745 – 2727 -2700

இன்றைய பரிந்துரை – 

ஹீரோ ஹோண்டா / போலாரிஸ்  நிறுவனப்  பங்குகள் கீழ் நோக்கிய பயணத்திற்கு ஏற்ற நிலையில் உள்ளது ப்யூச்சரில் பயன் படுத்தலாம்.

அனைவருக்கும் இனிய வர்த்தக தினமாக அமைய வாழ்த்துகள்..

============================================================================

நேற்றைய பதிவுக்கு பின்னூட்டம் எழுதிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி…  ஆனால் அனைவரும் தவறாக புரிந்து கொண்டீர்கள்  நான் எழுதுவதை நிறுத்துவதாக சொல்லவில்லை. தற்போது  எழுதி வரும் முறையில் இருந்து   மாற குறிப்பாக அழுத்தமாக பதிவு செய்யும் முறையில் இருந்து மாற விரும்புவதையும்.. குறிப்பிட்டிருந்தேன்.  மேலும் எழுத ஆலோசனைகளையும் கேட்டிருந்தேன்.

இனிமேல் என்னுடைய திறமையை நிருபிக்க வேண்டியதில்லை… எனது  வாடிக்கையாளர்களுக்கு / நண்பர்களுக்கு அவர்கள் நஷ்டத்தில் இருந்து மீள உதவியாக இருந்தாலே போதும்.

ஒவ்வொரு முறையும் மற்றவர்களின் எண்ணங்களுக்கு மாறாக அழுத்தமாக எனது கருத்துகளை பதிவு செய்யும் போது ஏற்படும் விமர்சனங்களால் தேவை இல்லாத மன உளைச்சல் ஏற்படுகிறது.   ஏன் என்று எனக்கும் தெரியவில்லை நன்கு அறிமுகம் ஆனவர்களே தவறான விமர்சனங்களை செய்து வருகிறார்கள். கடந்த சனி கிழமை 5 பேரில் ஒரே IP இல் இருந்து தவறான பின்னூட்டம் எழுதி உள்ளார் ஒரு நண்பர்.    இவர்கள் யார் என்று தெரிந்து கொள்வதிலேயே நமது மனம் திசை திருப்பப்படுகிறது . இதை எல்லாம் தவிர்க்க இனி எனது கருத்துகளை ஆழமாக பதிவு செய்யாமல் இருப்பதே நலம் என்று முடிவு செய்தேன்.  ஆனால் திடீரென்று மாறுவது என்பது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பது தெரியவில்லை.

உங்களை என்னிடம் இணைத்தது இந்த பதிவுகள் தான்,   ஒவ்வொருவரிடமும் வீட்டில் ஒருவனாக மாற்றியதும் பல  புதிய  உறவுகளை எனக்கு தந்ததும் இந்த பதிவுகள் தான். ஆகையால் நானே விரும்பினாலும் எனது விரல்கள் எழுதுவதை  நிறுத்தாது. 

ஏற்கனவே ஒரு முறை நான் சொன்னது போல இந்த பதிவு போதை ஒரு வித சுகமானது.. நாங்கள் பப்புக்கும் போவதில்லை பாருக்கும் போவதில்லை பிளாக்ல தான் கிடப்போமுங்க என்று பல பதிவர்கள் உள்ளார்கள். 

 

Advertisements

11 responses to this post.

 1. sir gm nan marketl petrathi vida vittathey athiham but ungal blog nal eppolouthu than thelinthu kondullen ungalthu ennamum ezuthum ennum thodara vendum. atharkku ungal udalum manamum arokyamaga erukka erivanai pirathikkiren. vazthuhal.nandri.VITU VILAHATHIRHAL ENGALAI TOTTU ARAVANAITHU SELLUNGAL.

 2. Good. Your view about the Market is good Keep it up and Best wishes

 3. good morning sai anna

 4. wow! nifty come near to sai.vazhthukkal.romba romba santhosham.solvathatku varthai illai.
  congratue. keep it up.

 5. thank you sai

  idont know who is attacking, but i feel your analysis is very good and intersting.Only time and age will give good emotional iq untill then keep going

  Murugesan

 6. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்…….

 7. Posted by கனகராஜ் on பிப்ரவரி 17, 2009 at 11:08 முப

  island top கவனித்தேன். அதன் விளக்கம் தேவை. please.அதன் டிரெண்ட் குறித்தும் கூறினால் உதவியாக இருக்குமே.
  நன்றியுடன்

 8. இனிமேல் என்னுடைய திறமையை நிருபிக்க வேண்டியதில்லை… எனது வாடிக்கையாளர்களுக்கு / நண்பர்களுக்கு அவர்கள் நஷ்டத்தில் இருந்து மீள உதவியாக இருந்தாலே போதும். thank you sai

 9. Posted by கோவை சக்தி on பிப்ரவரி 17, 2009 at 11:17 முப

  அன்புள்ள சாய் சார்,
  இனிய காலை வணக்கம் ,தங்கள் கருத்துக்கள் அருமை .தாங்கள் எல்லோரையும் நண்பர்களாக பாவிக்கும் குணம் தான் உங்களிடம் எனக்கு பிடித்த குணம் . கருத்துக்கள் கூறுவது ஒருவருடைய தனிப்பட்ட உரிமை .அந்த கருத்துக்களை பின்தொடர்வது என்பது அவர் அவர் இஷ்டம் .தங்களுக்கு சிலர் தவறான பின்னுடம் இடுவதாக அறிகிறேன்.தாங்கள் அடையும் மன உளைச்சலயும் அறிகிறேன் .மிக வேதனை படுகிறேன் .தங்கள் கருத்துக்களால் லாபம் அடையும் போது ஏன் எல்லோரும் பாராட்டுவதில்லை.என்ன உதவி என்றாலும் தாங்கள் செய்ய தயாராக இருக்கும் போது தங்களிடம் நேரிடையாக கேட்கலாமே .தவறாக வசை படுவதை தவிர்க்கலாம்.என் தனிப்பட்ட கருத்தை கூறினேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

 10. சாய் அண்ணா,

  உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகின்றேன். என் அலுவலகத்தில் இவ்வளவு நாட்களாக வோர்ட்பிரஸ் பதிவுகளை தடை செய்திருந்தனர். இப்போது தான் அந்த தடை நீக்கப்பட்டது. கடந்த 2 மாதங்களாக உங்கள் பதிவுகளை வார இறுதியில், கணிணி மையத்தில் படித்து வந்தேன். இனி தினம்தோறும் படிக்க முடியும். இந்த மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஆனந்தம்.

  நீங்கள் டிசம்பர் 22 அன்று பரிந்துரைத்த Hindustan Dorr Oliver and Hindustan Motors பங்குகளை நீங்கள் குறிப்பிட்ட விலைக்கு வாங்கி வைத்துள்ளேன். அந்த பங்குகளை நீங்கள் சொல்லும் பொழுதே விற்கலாம் என்று இருக்கிறேன்.

  நன்றி.

 11. dear sai
  you are 100% correct.
  ” நாங்கள் பப்புக்கும் போவதில்லை பாருக்கும் போவதில்லை பிளாக்ல தான் கிடப்போமுங்க என்று பல பதிவர்கள் உள்ளார்கள்”

  after my retairment my only hobby is spending time with my computer.
  losing money in share
  (but still i am sure iWILL get back all my money from the same share.)

  with regards
  mugham.m

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: