சந்தையின் போக்கு 16.02.2009


அனைவருக்கும் இனிய காலை வணக்கம்..

சந்தை குழப்பமான மனநிலையில் வர்த்தகர்களை வைத்துள்ளது என்பது தான் உண்மை.. சர்வதேச சூழ்நிலைகள் கவலை தரும் நிலையில் உள்ளபோதும் நாம் மாறுபட்டு இருக்க காரணம் பட்ஜெட் மற்றும் அதீத எதிர் பார்ப்பு தான்…   நாமும் 3100 ஐயும் அதற்கு மேலும் எதிர் பார்த்தோம் என்பது உண்மையே ஆனால் அதற்கான உடனடி சாத்தியங்கள் குறைய ஆரம்பித்து விட்டது.   தற்போது சிறிய ( குறைந்த பட்சம் 200-250) அளவில் சரிந்து மீள வேண்டிநிலையில் சந்தை உள்ளதை தொழில்நுட்ப பகுப்பாய்வுகள் காட்டுகிறது.

சந்தையின் போக்கை மாற்றும் வெளிக்காரணங்களை பார்ப்போம்….

அமெரிக்க சந்தை கடந்த 4 மாதமாக 8000 நிலையை வலுவான சப்போர்ட்டாக கொண்டு செயல் பட்டு வருகிறது. ஆனால் இன்று அந்த சப்போர்ட்டை உடைத்து புதிய கீழ் நிலையை உருவாக்க கூடிய பரிதாப / கவலை தரக்கூடிய நிலையில் Dow Jones  உள்ளது. 

இதற்கு முன் 7450 வரை சரிந்திருந்தாலும் 7900 க்கு கீழ் வாராந்திர (சார்ட்டில்) அடிப்படையில் முடிவடைந்தது இல்லை. ஆனால் சென்ற வாரம் 7825 இல் முடிவடைந்துள்ளது..  இதோ தற்போது 7750 ல் வர்த்தகமாகிறது..

தகதகக்கும் தங்கம்:- 

தங்கத்தின் விலை சிகரத்தை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறது..  முந்தைய உயரத்தையும்(988$) … வரலாற்று உயரத்தையும் (1032$) உடைத்து முன்னேறினாலும் ஆச்சரியம் இல்லை. 

கச்சா எண்ணை – 4 $ வரை விலை உயர்ந்துள்ளது இதிலும் வாராந்திர சார்ட்டில் ஏற்றத்திற்கான சாத்தியங்கள் தெரிகிறது. 

உள்நாட்டு நிலவரம்:

கடந்த ஒரு வாரமாக சந்தையின் சப்போர்ட்டாக இருந்து வந்த பட்ஜெட் இன்று தாக்கல் ஆகும்.

ஆட்சியின் இறுதிகாலத்தில் நிதியமைச்சகத்தை (காலம் கடந்து) தனது பொறுப்பில் எடுத்த  நிதியமைச்சர் / பிரதமர் ஓய்வில் இருக்கிறார்.  இடைக்கால பொறுப்பு ஏற்றிருக்கும் திரு முகர்ஜி தாக்கல் செய்ய உள்ளார். 

அடுத்த சில மாதங்களில் தேர்தல் வர உள்ளதால்… ஓட்டு போடாத மேல் தட்டு மக்களுக்கு என்ன செய்வார்கள்… ஓட்டு வங்கியை குறிவைத்து தான் சில சலுகைகள் வெளியிடலாம்.   அந்த மாதிரியான அறிவிப்புகள் எந்த வகையில் சந்தைக்கு உதவும்…?  கூடவே கூட்டணி குழப்பங்கள்.   திரு சரத்பவாரை பிரதம வேட்பாளராக முன்னிறுத்தும் புதிய கூட்டணி என்ற ஆளுங்கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் புதிய தலைவலி என்று பேரங்களுக்கு வழிவகுக்கும் புதிய முயற்சிகளில் இறங்கி இருக்கும் மாநில கட்சிகள்.  இப்படி பட்ட சூழ்நிலையில் தாக்கல் செய்யும் பட்ஜெட் எந்த மாதிரியான புரட்சியை ஏற்படுத்தும்.. அவ்வாறே தொழில் துறைக்கு சலுகைகள் இருந்தாலும் சர்வதேச ஒத்துழைப்பு இல்லை என்றால் சந்தையின் 3800 -2200  காலகட்டத்தில் சந்தைக்கு திருப்பி விடபட்ட வங்கிகளின் பணம் கானல் நீரான நிலைதான் ஏற்படும்.

நாளையும் எதிர் நிலை எடுக்க முடியுமா? என்றால் முடியாது என்பதே எனது பதிலாக இருக்கும்

மார்ச் மாத 2500 / 2200 புட் ஆப்ஸன் மிகவும் ஆக்டிவாக உள்ளது…

டவ் ப்யூச்சர் – 7750 துவங்கியுள்ள சூழ்நிலை….

ஆசிய சந்தைகள் சரிவுடன் இருக்கும் போது SGX NIFTY மட்டும் அமைதியாக இருக்க பட்ஜெட்டை தவிர வேற காரணம்  இல்லை. 

 2870 – 2890 – 2929 -2945-2965

=============================================================================

சந்தையை பற்றி நான் இங்கு எழுதிவருவது என்னுடைய தனிப்பட்ட பார்வையில் ஏற்படும் எதிர்பார்ப்புகளே..   இவை எந்த வகையிலும் வர்த்தக ஆலோசனை இல்லை. சிறிய கண்ணோட்டமே…  தங்களுக்கு கிடைக்கும் பலதரப்பு தகவல்களில் இதுவும்  ஒன்று என்றளவில்  மட்டும் எடுத்து கொள்ளுங்கள்.  ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை இருக்கும்.. அனைவரும் ஒரே சமயத்தில் ஒத்து போக முடியாது.. எல்லோருடைய பார்வையும்  ஒரே நேரத்தில் சரியாகவும் அமைய முடியாது. 

ஏற்கனவே நான் சொன்னது போல இங்கு நான் பகிர்ந்து கொள்ளும் நான்கு வரி செய்தியால் யாருக்கும் எந்த ஒரு லாபமோ நஸ்டமோ ஏற்பட வாய்ப்பு இல்லை.   இதை நமது பதிவை தொடர்ந்து பின் தொடர்பவர்கள் நன்கறிவர்.  இந்த கிறுக்கல்களை நம்பி எடுக்கும் எந்த ஒரு வர்த்தக முடிவினால் ஏற்படும் லாப நஷ்டத்திற்கு நான் பொறுப்பல்ல.     

குறிப்பாக இங்கு வருகை தரும் புதியவர்கள்,   முடிந்தால் எனது பழைய பதிவுகளை (ஜூலை -செப்டம்பர்)  முழுமையாகவோ அல்லது ஒரு சில பதிவுகளையோ  படித்து பாருங்கள். 

ஆங்கிலத்தில் கொட்டி கிடக்கும் தகவல்களுக்கு முன்னே நாங்கள் செய்வது பெரிய விசயமே இல்லை…   ஆனால் தாய் மொழியில் கிடைக்கும் சின்ன சின்ன செய்திகளும் ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மறுக்க முடியாது.    அதன் வெற்றியே…  தினகரன் – தினத்தந்தி யில் வெளிவரும் ஒரு பக்க வணிக செய்திகள்.  ஆங்கிலத்தில் கிடைக்கும் தகவல்களை போல தமிழில் இல்லையே,   இந்த வணிகம் குஜராத்திகளும் மார்வாடிகளுக்கும் உரிதாக இருக்கிறதே என்று அனைவருக்கும் ஏற்படும் ஆதங்கம் எனக்கும் உண்டு.  எந்த ஒரு விசயத்திலும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எல்லோரும் நினைத்தாலும்… அடுத்த நிமிடத்தில் நமக்கு ஏற்படும் வேலை பளு மற்றும் வேறு பல காரணங்களால் ஒன்றும் செய்யாமலே இருந்து விடுகிறோம்.  ஒரு சிலரே முன்னின்று அதை செய்கிறார்கள்.  அந்த வகையில் பங்குவணிகம் திரு சரவணகுமார் அவர்கள் தமிழில் ஒரு முன்னோடி என்றால் மிகையில்லை,   முழு நேர வணிகர் அல்லாத ஒருவர் தொடர்ந்து எழுதிவருவது பெரிய விசயம்..   அவரை தொடர்ந்து இன்று பலரும் எழுதி வருகிறோம். 

ஆனால் அனைவரும் சந்தையின் லெவல்களையும் அன்றாட ஊசலாட்டத்தையும் பற்றி எழுதும் போது படிப்பவர்களுக்கு சலிப்பும்.. குழப்பமும் ஏற்படுகிறது. 

அடுத்த சில நாட்களில் 2600 என்ற எனது இலக்கை அடைந்த உடன் தினசரி கட்டுரையை தவிர்க்க விரும்புகிறேன்.   Trend Reversal ஏற்படும் போது மட்டும் அதை எழுதலாம் என்று நினைக்கிறேன்.   வேறு என்ன மாதிரியான தகவல்களை எழுதலாம் என்று யோசிக்கிறேன்.. நீங்களும் ஆலோசனை சொல்லலாம்.

============================================================================

 

Advertisements

21 responses to this post.

 1. // Trend Reversal ஏற்படும் போது மட்டும் அதை எழுதலாம் என்று நினைக்கிறேன். //
  Very good idea !!! thank you!!

 2. //ஆங்கிலத்தில் கொட்டி கிடக்கும் தகவல்களுக்கு முன்னே நாங்கள் செய்வது பெரிய விசயமே இல்லை… ஆனால் தாய் மொழியில் கிடைக்கும் சின்ன சின்ன செய்திகளும் ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மறுக்க முடியாது. //

  சாய் மிக அழகாக உங்களின் இந்த வார்த்தையை யாரலும் மறுக்க முடியது எனது தாய்மொழியில் நான் படிக்கும் போது அது என் மனதில் ஆழப்பதிகின்றது… உங்களின் சேவையால் நான் நஷ்டம் அடையாமல் இருக்கின்றேன் என்று சொன்னால் அதுமிகையாகது.

 3. TRADING FORMULA / DO’S AND DON’T IN SHAREMARKET/ எழுதலாம்

 4. Posted by கனகராஜ் on பிப்ரவரி 16, 2009 at 10:41 முப

  நான் மிகவும் பின்னோட்டம் எழுதாவிட்டாலும் உங்கள் கட்டுரையை தொடர்ந்து வாசிப்பவன். மிக அதிக அளவிலும் மார்கெட் செய்வதில்லை. உங்கள் கருத்துக்களை படிக்காமல் போனால் ஏதோ இழந்தது போல் இருக்கும்.ஆகவே தொடர்ந்து எழுதுங்கள்.எங்களுக்கு வழிகாட்டியாக இருங்கள்.நீங்கள் கூறியது போல் தமிழில் இந்த முயற்சி அதிக அளவில் இல்லாததால் நீங்களும் நிறுத்திவிட்டால் அந்த இடைவெளி நிரப்பமுடியாது போய்விடும்.
  நன்றியுடன்

 5. Sai sir,
  please write about sectors and its expectations twice in a week. Like leading stocks in that sector and expected growth of the sector, which ll help the investors to hold. And more if you write columns like buy/sell will also do .

 6. வணக்கம் சாய்.
  //அனைவரும் சந்தையின் லெவல்களையும் அன்றாட ஊசலாட்டத்தையும் பற்றி எழுதும் போது படிப்பவர்களுக்கு சலிப்பும்.. குழப்பமும் ஏற்படுகிறது. //
  top10shares மட்டும் படிப்பவர்களின் நிலைமை என்னாவது?
  எங்களைப் போன்றவர்களின் நிலைமையையும் கருத்தில் கொண்டு யோசிக்க வேண்டுகிறேன்.

 7. மதிப்பிற்குரிய சாய் அண்ணா அவர்களுக்கு,

  தற்போதைய குழப்பமான சூழ்நிலையில் சந்தை பற்றிய தங்களது விசாலமான பார்வையினை மிகவும் அழகாகவும் அற்புதமாகவும் பதிவேற்றி இருக்கீறிர்கள்.

  சதை கடந்த பல தினங்களாகவே பெரிய ஏற்றமும் இறக்கமும் இல்லாமல் சிறிது சிறிதாக ஏறவும் இறங்கவுமாக இருக்கிறது. இதுபோன்ற தினங்களில் ஒரே மாதிரியாக கட்டுரைகளை படிப்பது எங்களுக்கு சலிப்பை ஏற்படுத்தாது என்றாலும் நிச்சயம் தொடர்ந்து ஒரே மாதிரியாக எழுதுவது தங்களுக்கு சலிப்பை ஏற்படுத்தும்.

  எனவே இந்த மாதிரியான நேரங்களில் சிறிது இடைவெளி அரோக்கியமான விசயம்தான்.

  எனினும் Trend Reversal என்பது பல நாட்கள் இடைவெளியில் அல்லவா ஏற்படுகிறது. அவ்வளவு இடைவெளியில் தங்களது கட்டுரைகளை படிக்காமல் இருப்பது எங்களுக்கு பெரிய இழப்புதான். எனவே இந்த முடிவை தயவு செய்து மறுபரிசீலனை செய்யவும்.

  இனிய காலை வணக்கம்.

 8. முடிவை தயவு செய்து மறுபரிசீலனை செய்யவும்.

 9. வணக்கம் சாய்,

  //Trend Reversal ஏற்படும் போது மட்டும் அதை எழுதலாம் என்று நினைக்கிறேன்.//

  ஏன் இந்த முடிவு?

  தினம் நீங்கள் இப்பொழுது தரும் செய்தியுடன் மற்ற தகவல்களையும் கொடுங்கள்.அதாவது நீங்கள் அதிகம் எழுதுவதைத்தான் விரும்புகிறோம் எதிர்பார்க்கிறோம்.

  // அனைவரும் சந்தையின் லெவல்களையும் அன்றாட ஊசலாட்டத்தையும் பற்றி எழுதும் போது படிப்பவர்களுக்கு சலிப்பும்.. குழப்பமும் ஏற்படுகிறது. //

  அனைவரும் எழுதினாலும் உங்கள் கண்ணோட்டத்தினை தெரிந்துகொள்ள விழைகிறோம்.இதில் எங்களுக்கு எந்த சலிப்பும் குழப்பமும் கிடையாது.

  ஆங்கிலத்தில் தகவல்கள் கொட்டி கிடந்தாலும் உங்கள் டாப் டென் ஷேர்ஸ் படிக்கும்பொழுது ஏற்படும் மன நிறைவு சொல்லில் அடங்காது.
  தமிழில் அவரவர் பாணியில் பலரும் இந்த சேவையினை அளித்து வந்தாலும் உங்களுகென்று ஒரு தனித்தன்மை மற்றும் தனி இடம் உள்ளது.
  உங்கள் பாணியே அலாதி.

  உங்களின் வேலைபளுவினிடையே தினம் இந்த கட்டுரையினை கொடுக்கும் சிரமத்தினை நன்கு அறிவோம்.

  தொடர்ந்து நீங்கள் வழங்கிவரும் இந்த பணியினை நீண்ட இடைவெளியில் கொடுக்க முயற்சிக்க வேண்டாம்.உங்கள் அளிப்பில் மாற்றங்களை வேண்டுமானால் உருவாக்கிகொள்ளுங்கள்.தினம் உங்கள் வழிகாட்டுதலை பார்வையிட்டு பழகிவிட்டோம்.

  தயவு செய்து சாய் இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளவும்.

 10. GOOD MORNING SAI SIR………

 11. thank you sai , write daily at least one sentance that is good for many tamil people

  Thanks
  Murugesan

 12. முடிவை தயவு செய்து மறுபரிசீலனை செய்யவும்.

 13. reconsider,please.

 14. Trend Reversal என்பது பல நாட்கள் இடைவெளியில் அல்லவா ஏற்படுகிறது. அவ்வளவு இடைவெளியில் தங்களது கட்டுரைகளை படிக்காமல் இருப்பது எங்களுக்கு பெரிய இழப்புதான். எனவே இந்த முடிவை தயவு செய்து மறுபரிசீலனை செய்யவும்.

 15. Thiru Sai avargalukku,

  Naan athigam pinnoottam ittathu illai.
  Aanaal thodarnthu padithu varugiren.
  Ungalin intha mudivu varuthamaaga ullathu.
  Work load iruppin ungal pathivinai atharkkeatraar pol pathividavum.
  ithu en humble request.

 16. SAI ANNA,
  UNGAL MUDIVINAI THAYAVU SEYTHU MARUPARISEELANAI SEYYAVUM.

 17. முடிவை தயவு செய்து மறுபரிசீலனை செய்யவும்.

  plz sai anna……………….

 18. Give intraday techniques, sector analysis alongwith post and pre-market analysis. This will this blog more attractive and for you also it will be quite interesting.

  your pre-market and post-market analysis is quite interesting. Please donot stop this.

 19. வணக்கம் சாய் சார்,

  தாங்கள் குடுக்கும் நிப்டி நிலைகள் ஒரு சில சமயங்களில் அடைவதற்கு தாமதமானாலும் கண்டிப்பாக அடைந்தே தீரும். நமது எதிர்பார்ப்பு இன்றும் நிறைவேறியுள்ளது…

  பொதுவாக பலர் படிக்கும் வலைபூவினில் ஒரு கருத்தை சொல்ல பலவையான ஆராய்ச்சிகளும் தன்னம்பிக்கையும் வேண்டும். அவ்வாறு குறிப்பிடுவது தங்களது இயல்பை பாதிக்கிறது என்றே நினைக்கிறேன்..

  தற்ப்பொழுது உங்களுக்கு வேலை பளு கூடி வருகிறது.. ஆகவே தங்களது முடிவை மறு பரிசீலனை செய்ய சொல்ல போவதில்லை.. ஆனால் ஒரு சில மேலோட்டமான கருத்துக்களை மட்டுமாவது தினந்தோறும் பதிவிட வேண்டும்.

  தங்களின் பரிந்துரையில் 2800 put option ரூபாய் 50 விலையில் average செய்தவர்களுக்கு இன்று வெகு சிறப்பான நாளாக அமைத்திருக்கும்.

 20. as simba said….

  //தற்பொழுது உங்களுக்கு வேலை பளு கூடி வருகிறது.. ஆகவே தங்களது முடிவை மறு பரிசீலனை செய்ய சொல்ல போவதில்லை.. ஆனால் ஒரு சில மேலோட்டமான கருத்துக்களை மட்டுமாவது தினந்தோறும் பதிவிட வேண்டும்.//

  please sai sir.

 21. நான் மிகவும் பின்னோட்டம் எழுதாவிட்டாலும் உங்கள் கட்டுரையை தொடர்ந்து வாசிப்பவன்.உங்கள் கருத்துக்களை படிக்காமல் போனால் ஏதோ இழந்தது போல் இருக்கும்.ஆகவே தொடர்ந்து எழுதுங்கள்.எங்களுக்கு வழிகாட்டியாகஇருங்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: