இன்றைய சந்தையின் போக்கு 12.02.2009


நேற்றைய தினம் டெக்னிகல் அல்லாமல் பொதுவாக 2800 என்று குறிப்பிட்டது உற்சாகம் மிகுதியால்…  அது தவறு தான்..    கொஞ்சம் முன் கூட்டியே சொல்லி வருகிறேன் இந்த முறையும்..   வரும் நாட்களில் 2626  எனது டார்கெட் / எதிர் பார்ப்பு என்பதில் எந்த மாற்றமும் இல்லை.  

2870 மிகவும் வலுவானதாக உள்ளது என்பது நேற்றும் நிருபிக்கபட்டது.  

சர்வதேச சந்தைகளின் போக்கிற்கு மாறாக நாம் செயல் படுவது / குறுக்கு சால் ஓட்டுவது  இது முதல் முறை அல்ல.  ஆனால் இது கொஞ்சம்  ஓவர்.   முந்தைய நிகழ்வுகளில் பார்த்தோமானால் இரவில் டவ் ஸ்பாட் அதிகம மாக விழுந்திருந்தாலும்.. காலையில் நமது சந்தை துவங்கும் முன்பாக ப்யூச்சரில் சரிவை மீட்டெடுக்க முன்னேறி இருக்கும்.  தற்போது அது போன்றும் அமைய வில்லை..    இன்றும் ஆசிய சந்தைகள் சரிவடைகின்றன.

கடந்த இரு தினங்களில் தங்கம் 40 – 45 $ வரை உயர்ந்துள்ளது.    இது போன்ற சூழ்நிலையில் சரிவுகள் தள்ளிப்போடப்பட்டால் மீண்டும் ஒரு சத்ய சோதனை தான்.   அதாவது அடி பலமாக இருக்கும்.

சரி நாம் சரிவை எதிர் பார்க்கிறோம் என்பதற்காக உடனடியாக சரியுமா என்ன.?     ஆனால் நிப்டியின் பங்குகள் அனைத்தும் ஒரு சரிவிற்கு தயாரான நிலையில் தான் உள்ளது.   எந்த ஒரு சின்ன செய்தியும் பின்னடைவை ஏற்படுத்தும்.  பின்நகர்ந்து முன்னேறுவது தான் சந்தைக்கும் நல்லது. 

கடந்த வாரம் பணவீக்கம் விகிதம் வெளியான அன்று வட்டி குறைப்பு இருக்கும் என்று எதிர் பார்த்தோம்..  அன்று 4250 இல் இருந்த பேங்க் நிப்டி அந்த எதிர்பார்ப்பால்  4600 வரை முன்னேறிவிட்டது. ஆனால் இன்னும் அறிவிப்பு இல்லை.    கூடவே 16.2 அன்று வெளி வர உள்ள மினி பட்ஜெட்டும்  கூடுதல் காரணம், சந்தை மேலே நிலைப்பெற. 

எனது ஆலோசனையின் பேரில் 2650-2700 நிலையில் யாராவது முதலீடு செய்திருந்தால் லாபத்தை உறுதி செய்யவும்.  

இன்றை முக்கியமான நிலைகள் 

2955  மற்றும் 2870,  2856  

==========================================================================

சரி இன்று தகவல் என்ற அடிப்படையில் ஒரு நிருபிக்கபட்ட டெக்னிகல் தகவலை பார்ப்போம்

கடந்த வாரம் பேங்க் நிப்டி 4200 இருந்த  போது 4250 உடைத்த உடன் 4600 என்றும்  மெக்டவல் 520 இல் இருந்த போது 550 உடைத்தால் 750 என்று சிம்பா மற்றும் ரவி உள்ளிட்ட நண்பர்களிடம் மட்டும் தெரிவித்தேன்.  🙂 நமது மருந்தை அடுத்தவர்கள் மீது தானே பரிசோதிக்கனும். 

 டார்கெட் என்ன அடிப்படையில் என்ற காரணம்  அவர்கள் கேட்டபோது சொல்லவில்லை.  பெரிதாக ஒன்றும் இல்லை.  நாட்களுக்கு இடையேயான இடைவெளி  தான்.   இதை உறுதிபடுத்த கூடுதலாக   சில சப்போர்ட்டிங் இண்டிகேட்டஸையும் பயன் படுத்த வேண்டும். 

இதை 10-15 முன்னனி பங்குகளில் 2 வருட டேட்டாவை ஆய்வுக்கு எடுத்து கொண்ட பிறகே இங்கு பதிவிடுகிறேன். குறுகிய கால முதலீட்டிற்கு 90-100%  பயன் உள்ளது.  ப்யூச்சருக்கு 80-90% பயன் தருகிறது.

mcdowell

 

bank-nifty

(இந்த இந்த பங்குகளில் இடைவெளி உள்ளது, என்று ஆர்வத்தில் யாஹுவில் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம்…  முடிந்தால் இங்கு பின்னூட்டமாக எழுதி மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.)

இன்னொரு விசயம் – நாம் சில காரணங்களுக்காகத்தான் யாஹுவில் invisble select செய்கிறோம் ஆனால் அதை கண்டு பிடிக்கவும் சில வெப்சைட்கள் உள்ளது என்று அதன் மூலம் ஒருவரை தொந்தரவு செய்வதும் ஒரு வகையில் Trespassing தானே.  நேற்றைய இரவில் ஒருவர் அவ்வாறு  ஹலோ சொன்னார் நான் பதில் தரவில்லை உடனே எனக்கு தெரியும் நீங்கள் ஆன்லைனில் உள்ளீர்கள் என்றார்.

15 responses to this post.

 1. நமது மருந்தை அடுத்தவர்கள் மீது தானே பரிசோதிக்கனும்.
  good mornig sir.anal neenga nalla doctor.

 2. anaivarukkum iniya kaalai vanakkam.

 3. Good Morning sir and Good Morning to everybody.

  Nifty will go up to 3000 level on or before 16th February 2008 and then it may come down.
  This is my prediction.

  Wish you all a successful trading.

 4. மதிப்பிற்குரிய சாய் அண்ணா அவர்களுக்கு,

  இனிய காலை வணக்கம்.

  சந்தை கீழே வரும் என்று தங்களுடன் சேர்ந்து நாங்களும் காத்திருக்கிறோம். ஆனால் நாங்கள் 2750 வரைதான் சந்தை கீழே வரும் என்று நினைத்திருந்தோம். தங்களுடைய கீழ் நிலை இலக்கான 2626- பார்த்ததும் சற்றே ஆனந்த அதிர்ச்சி.

  “சர்வதேச சந்தைகளின் போக்கிற்கு மாறாக நாம் செயல் படுவது / குறுக்கு சால் ஓட்டுவது இது முதல் முறை அல்ல. ஆனால் இது கொஞ்சம் ஓவர்.” – என்ற வரிகள் மிகவும் அழகான நகைச்சுவையான வரிகள்.

  ஒரு சிறிய சந்தேகம்…..இன்னும் ஓரிரு நாட்களில் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் வரப்போகிறது. அதில் சந்தைக்கு சாதகமான சில விஷயங்கள் வரப்போகின்றன. அதைப் பயன்படுத்தி சந்தை மேலேதானே செல்லும்? அதற்கு முன் சரிவு சாத்தியமா அண்ணா?
  இந்த கேள்விக்கு தவறாமல் பதில் அளிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

  தங்களுடைய கேப் பில்லிங் பற்றிய தகவலும் சார்ட்டும் அருமை.

  மிக்க நன்றி.

 5. SOMEBODY TELL DUE TO BUDJET MARKET MAY TOUCH ABOVE 3000 ? POSSIBLE?

 6. GOOD MORNING SAI SIR……

 7. good morning sai.nifty-யின் நிலைகளை குறைத்து விட்டீர்களே!.ஆனால் அதற்குள் தான் விளையாடுகிறது அதுவும். தொடர்ந்து இரண்டாவது நாளாய் உலகச் சந்தைகள் சரிவடைந்தும் நமது சந்தையில் பெரிய மாற்றமில்லாதது ஆச்சர்யமே! நீங்கள் சொல்வது போல் என்னமோ நடக்குது மர்மமா இருக்குது என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
  gap filling formula- வை மீண்டும் மீண்டும் proof பண்ணறீங்க. thank u so much.
  நேரம் கிடைக்கும் பொழுது இந்த மாதிரி சின்ன சின்ன techinical விஷயங்கள் சொல்லுங்கள். ரொம்ப useful-ஆ இருக்கிறது.

 8. There is a gap at Bharti Artl 5 minute intraday chart in the price range of 678 level.

 9. ஸ்பைஸ் மர்மம்!:

  இன்றைய பங்கு வர்த்தகம் டல்லடித்தாலும், ஒரு குறிப்பிட்ட நிறுவனப் பங்கு மட்டும் 40 சதவிகிதம் அதிக விலைக்கு கைமாறி வருகிறது. அது ஸ்பைஸ் கம்யூனிகேஷன்ஸ். ரூ.52.55 ஆக இருந்த இந்த நிறுவனத்தின் பங்குகள் இன்று ரூ.76-க்கும் அதிக விலைக்குக் கைமாறின. மொத்தம் 57 லட்சம் பங்குகள் இதுவரை இப்படி கைமாறியுள்ளது.

  காரணமே இல்லாமல் இப்படி அதிகவிலைக்கு, அதிக அளவு பங்குகள் கைமாறுவதால் செபிக்கு இந்த நிறுவனத்தின் மீது கடும் சந்தேகம் எழுந்துள்ளது.

  எனவே இந்த வர்த்தகம், பங்குகள் கைமாறிய விதம் குறித்து விசாரிக்க தனது புலனாய்வுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

  இன்சைடர் டிரேடிங் மூலம் விலையை இந்த நிறுவனம் ஏற்றுவிட்டு வருகிறதா என்ற விசாரணை நடக்கிறது

 10. Posted by விக்னேஷ்குமார் on பிப்ரவரி 12, 2009 at 6:33 பிப

  The following stocks has left some gap,their details r as follows,

  Asian Electronics – gaps at 25,25,28 CMP:23
  HDFC bank – gap at 961 CMP:933
  RECOM – gap at 180 CMP:172
  TAnla Solutions – gap at 72 CMP:28
  Jaicorp limited – gap at 79 CMP:76

  Sai sir,thank u so much for ur efforts.

 11. திரு.சங்கர் அவர்களுக்கு

  இந்த நிதி நிலை அறிக்கை, அடுத்த நிதி ஆண்டிற்கான முழு நிதி நிலை அறிக்கையாக இருக்காது. தற்போது காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பதவிக் காலம், இன்னும் சில மாதங்களில் முடிவடைகிறது. மக்களவைக்கான பொதுத் தேர்தல் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ளது. ஆதலால் இந்த நிதி நிலை அறிக்கை, முந்தைய பட்ஜெட்டை போல இருக்காது. மத்திய அரசுக்கு இடைப்பட்ட காலத்தில் திட்டம் சாரா செலவுகள், திட்ட செலவுகளுக்கு மக்களவையின் ஒப்புதல் பெறும் வகையிலேயே இருக்கும்.

  அதே நேரத்தில் வரும் பொதுத் தேர்தலை மனதில் கொண்டு மக்களை கவரும் அறிவிப்புகளும் இருக்கும்.

 12. Posted by நல்லசாமி தமிழ்செல்வன். கொச்சி on பிப்ரவரி 12, 2009 at 9:41 பிப

  வணக்கம்.
  எனக்கு இந்த கேப் ஃபில்லிங் ஃபார்முலா புரியவில்லை.மார்க்கெட் எப்பொழுதும் மேலும் கீழும் நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது. மார்க்கட் சரிந்து கேப் உண்டாகிறது என்றால் அது ஒரு கட்டத்தில் உயர்கிறது அல்லது மார்க்கட் உயர்ந்து கேப் உண்டாகும் பொழுதும் மார்க்கட் சரிகிறது.ஆகையால் மார்க்கட் மேலேயோ,கீழேயோ நகரும் பொழுது அந்த கேப்பை கடந்து சென்றே ஆக வேண்டும்.மார்க்கட் ஒரேயடியாக மேலேயோ அல்லது கீழேயோ சென்று விடுவதில்லை.இது இயற்கை தானே.இதில் டெக்னிக்கலாக சொல்வதற்க்கு என்ன இருக்கிறது என்று புரியவில்லை.இதை யாராவது விளக்கினால் அவர்களுக்கு புண்ணியம் கிட்டும்.

 13. திரு நல்லசாமி அவர்களுக்கு….

  சாய் சார் கொடுத்துள்ள சார்ட் இல் மேலே உள்ளது united spirit. பங்கினில் உள்ள இடைவெளி நேற்று நிரம்பியது… இன்று அந்த பங்கின் நிலையை பார்த்தால் உங்களுக்கு புரியும்.

  அந்த பங்கின் உண்மையான சரிவினை மேலே உள்ள இடைவெளி தடுத்து வந்தது… இன்றோ…

 14. இந்த கேப் பில்லிங் முறையை எனக்கு தெரிந்த வகையில் எளிதாக விளக்குகுறேன்…

  பொதுவாக எல்லோரும் super mario விளையாடி இருப்போம். அதாவது அந்த விளையாட்டை பொறுத்தவரை ஒவ்வொரு நிலையாக கடந்து செல்ல வேண்டும். சில இடங்களில் குறுக்கு வழியில் செல்ல வாய்ப்பு கிடைக்கும். அப்பொழுது ஒரு சில நிலைகளை நாம் தாண்டி செல்ல முடியும்.

  ஆனால் அவ்வாறு செல்வதால் நமக்கு கிடைக்க வேண்டிய தங்கமும், ஒரு சில power உம் கிடைக்காது… எனவே கடைசீ நிலைக்கு சென்றாலும் நம்மால் அந்த நிலையை கடக்க இயலாது. அது போல் தான்… வணிகத்திலும்… gap filling…

  மீண்டும் பழைய நிலைக்கு வந்து திரும்பி செல்வது அதனால் தான்…

  சாய் சார் நான் சொன்னது சரிதானா?

 15. Hi All

  Nearly within 10 trading days ago, spice chairman(!) said we are also interested in buying out satyam.

  I think, that happened to be a trigger, for upward movement.

  Look @ the link below

  http://finance.yahoo.com/q/ta?t=5d&s=SPICETELE.NS&l=on&z=l&q=l&c=%5Ensei

  spice was trading less than Rs.30 earlier.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: