இன்றைய சந்தையின் போக்கு – 11.02.2009


//2880 வரை சந்தை கீழிறங்க வாய்ப்பு உள்ளது…  அவ்வாறு இறங்கும் போது 2870 க்கு கீழ் நழுவினால் ஒரு செல்லிங் பிரசர் ஏற்படும்.  //

இது போலவே…  2880 வரை வந்த சந்தை 2870 ஐ உடைக்காததை  /  உடைக்க விடாமல்  தடுத்ததை  கவனித்திருக்காலாம்..

10 புள்ளிகள் தான் வித்தியாசம்…  ஆனாலும் அதை உடைக்க வில்லை.. 2876 தான் நேற்றைய கீழ் நிலை…  

இன்றைய சந்தையை பற்றி சொல்ல என்னிடம் ஒன்றும் இல்லை…    இன்று எப்படி இருக்கும் டீக்கடையில் கூட பேசுகிறார்கள்.

நீண்ட நாட்களுக்கு பிறகு அமெரிக்கசந்தையை இரவு முழுவதும் கவனித்தேன்.  400 புள்ளிகள் சரிவுடன் கடையை சாத்திய பிறகே…  தூங்கினேன். தூக்கம் வாராமல் அதிகாலையில் ஒரு ஜாலி ரைடு / நடை, கூடவே ஒரு டீ சாப்பிடலாம் என்று  யுனிவர்சிட்டி வீதிக்கு  சென்றால் 6 மணிக்கே இரண்டு பேர்  ஒபாமாவையும் அமெரிக்க சரிவை பற்றியும் பேசிகொண்டிருந்தார்கள்..  இல்லை இல்லை திட்டி கொண்டிருந்தார்கள். அதிலேயே அவர்கள் எந்த அளவு ஏற்றத்தை எதிர் பார்த்து வாங்கியுள்ளார்கள் என்று தெரிந்தது.

வந்து ஆசிய சந்தையை பார்த்தால்… இங்கு ஹாங்செங்  550 புள்ளிகள் மேலே சரிவுடன் ஐயோ என்னை அடிக்கிறாங்க…  அடிக்கிறாங்க காப்பாத்துங்க என்று கதறுகிறது.    

2800 வரை அல்லது அதற்கு கீழும் சரியலாம் நமது சந்தையும்..   

=============================================================================

திரு இளங்கோ –  ஆப்ரேட்டர்கள் யார்…   உன்மைதான் இன்று என் போன்றவர்களால் தங்களின் தோல்வியை மறைக்க பயன் படுத்தப்படும் ஒரு அழகிய வார்த்தை “ஆப்ரேட்டர்கள் விளையாடி விட்டார்கள்”    ஆனால் என் பதிவுகளை தொடர்ந்து கவனித்து வந்தால் தெரியும் நான் என்றோ ஒரு நாள் சித்தர்கள் என்ற வார்த்தையை பயன் படுத்தி இருப்பேன்.   சில காரண காரியங்களால் தான்.   

சரி இவர்கள் யார்…  ?  பெரும்  தனக்காரர்கள்  சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்க நினைப்பர்கள்… அதாவது தெரிந்தே நஸ்டமடைந்து (சிறிய அளவில்) பெரிய அளவில் லாபம் பார்ப்பவர்கள்.  இவர்களின் பலம் –  சிறுவணிகர்களின் பேராசையும் / பயமும் தான்.   எத்தனை சிறு வணிகர்கள் ஓபன் இண்டரஸ்ட் ….  புட் ஆப்ஸன் / கால் ஆப்ஸன் விகிதங்களை கவனிக்கிறோம்.  

டெக்னிகல் …  புள்ளிவிவரங்கள்  கரடிக்கோ காளைக்கோ சாதகமாக இருந்தும் திடீர் உயர்வோ அல்லது சரிவோ… இவர்களின் பக்கம் பார்வையை திருப்புகிறது.    செய்திகளின் அடிப்படையில் சிறு வணிகர்கள் / முதலீட்டாளர்கள் செயல்படுவதும் இதற்கு காரணம்.     அமெரிக்க சலுகையால் அவனுக்கே சாதகமா? பாதகமா? என்று தெரியவில்லை கடந்த 3 நாட்களாக அங்கு எந்த சலனமும் இல்லை.. ஆனால் நாம் ?  

==============================================================================

கீழே உள்ள படத்திற்கும் இந்த பதிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை….    கடந்த வாரம்  நான் சென்று வந்த இடம்… செல்போனில் எடுத்த படம் நன்றாக உள்ளதே என்று பதிவிட்டேன்.  வாழப்பாடி அருகே தும்பல் அணைகட்டு.

Advertisements

12 responses to this post.

 1. உயர்திரு சாய் அண்ணா அவர்களுக்கு,

  இனிய காலை வணக்கம்.

  நேற்றைய தினம் தங்களுடைய கட்டுரையில் தாங்கள் கொடுத்த நிப்டி நிலைகள் அபாரம். 2880- க்கு கீழே சென்று 2870- யை உடைத்தால் சரிவு வேகத்துடன் துவங்கும் என்று கூறியிருந்தீர்கள்.

  சொன்னது போலவே 2870- யை உடைக்காமல் 2876 வரை வந்து விட்டு மேலே சென்வு விட்டது. மிகவும் அருமையான கணிப்பு. தாங்கள் கூறிய சரிவை சந்தையார் இன்று தருகிறார்.

  மேலும் சூதாடி சித்தர்கள் பற்றிய தங்களது விளக்கமும் மிகவும் அருமை. அனைவருக்கும் எளிதாக புரியும்படி கூறியிருக்கிறீர்கள்.

  “2800 வரை அல்லது அதற்கு கீழும் சரியலாம் நமது சந்தையும்..”- என்ற தகவலுக்கு மிக்க நன்றி.

  வாழப்படி அருகே தும்பல் அணைகட்டின் படம் மிகவும் அழகாக இருக்கிறது.

 2. good morning sai sir, i spoke to you yesterday evenig iam very happy to that. sir i want to thank you for giving that favour.

 3. GOOD MORNING SAI SIR……..

 4. சித்தர்களுக்கு அருமையான விளக்கம் 🙂

 5. // அமெரிக்க சலுகையால் அவனுக்கே சாதகமா? பாதகமா? என்று தெரியவில்லை கடந்த 3 நாட்களாக அங்கு எந்த சலனமும் இல்லை.. ஆனால் நாம் ? ///

  சரியான நெத்தியடி 😉

 6. Don’t make Promise when you are in joy, Don’t reply when you are sad.

  Don’t take decision when you are angry….. Think Twice…..Act Wise…

  Good Morning anna,,,,,

  Thank you for your information.

 7. உயர்திரு சாய் அண்ணா அவர்களுக்கு,

  இனிய காலை வணக்கம்.

  நேற்றைய தினம் தாங்கள் கூறிய நிப்டி நிலைகள் மிகவும் அருமை. 2880- க்கு கீழே சென்று 2870- ஐ உடைத்தால் சரிவின் வேகம் அதிகரிக்குமென கூறியிருந்தீர்கள். சரியாக 2876 வரை வந்துவிட்டு சந்தை மீண்டும் மேலே சென்றது. அருமையான நிப்டி நிலைகள்.

  தாங்கள் எதிர்பார்க்கும் சரிவை சந்தையார் இன்று வழங்குவாரென எதிர்பார்க்கிறோம். மற்றபடி சூதாடி சித்தர்கள் பற்றிய விளக்கம் அருமை.

  வாழப்பாடி அருகே தும்பல் அணைகட்டின் படம் மிகவும் அழகாக இருக்கிறது.

 8. Posted by கோவை சக்தி on பிப்ரவரி 11, 2009 at 11:02 முப

  சாய் சார்,
  பல பேர் ஒபாமாவை நினைத்து வீதிகளில் தூக்கம் இன்றி நடக்கிறார்கள் போல .அவர் இட போகும் திட்டங்களை நம்பி பல பேர் முதலீடு செய்துள்ளார்கள் .ஓபன் இண்டரஸ்ட் …. புட் ஆப்ஸன் / கால் ஆப்ஸன் விகிதங்களை எப்படி கவனிக்க வேண்டும், .கவனிக்க பட வேண்டிய விஷயங்கள் என்ன என்று கூறினால் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் சார் .
  நன்றி

 9. நன்றி

 10. தும்பல் அணைகட்டின் படம் மிகவும் அழகாக இருக்கிறது.
  நன்றி

 11. My prediction is that nifty will go up to 3000 level on or before 16th March 2008 and then it will fall.

 12. HOPE THERE IS BIG FALL? AND WHO IS BUYING AT SUPPORT LEVELS? FII OR DII OR RETAIL TRADERS ( WHO ALWAYS LOSE)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: