இன்றைய சந்தையின் போக்கு 10.02.2009


மந்தமான ஆசிய சந்தைகள்…  டவ் ப்யூச்சர்  – 130   என்ற நிலை…  ஐரோப்பிய சந்தைகளின் மிதமான துவக்கம்..  இப்படி பட்ட சூழ்நிலையில் நமது சந்தையை குறைந்த வால்யூம் கொண்டு 2900 வரை எடுத்து சென்றுள்ளார்கள் சித்தர்கள்.

மதியம் 1 மணி வரை 10-15 புள்ளிகள் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட சந்தை அதன் பிறகு 70 புள்ளிகள் கடந்து சென்றது ஆச்சரியம்.  

பணவீக்கம் குறைந்த அன்று  கூட ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வில்லை.. 

இன்றைய சந்தை மந்தமாகத்தான் இருக்கும்… 

2880 வரை சந்தை கீழிறங்க வாய்ப்பு உள்ளது…  அவ்வாறு இறங்கும் போது 2870 க்கு கீழ் நழுவினால் ஒரு செல்லிங் பிரசர் ஏற்படும்.  

ஒபாமாவின் சலுகைகளால் இந்திய நிறுவனங்களுக்கு மறைமுகமாகவும் பயன் இல்லை என்பது தெரிய வரும் வரை நம்பிக்கையுடன் நமது சந்தையை முன்னெடுத்து செல்பது போல சித்தர்கள் நன்றாக பயன் படுத்துவார்கள்.   

============================================================================

சிம்பா  – உன்மை தான் என்னால் இந்த ஏற்றத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனது வருத்தம் தான்.  

2860 உடைபடும் போது எனக்கும் தெரியும் சந்தை மேலே செல்லும் என்று…  நமது நண்பர்கள் அதிகம் ஆப்ஷனில் தான் உள்ளார்கள் என்பதால்…  லாஸ் புக் செய்வதை விட ஆவரேஜ் செய்வது தான் நல்லது என்று லாங் செல்வதை…   தவிர்த்து விட்டேன். 

05.02.2009 அன்று நாம எழுதியது. …

//அடுத்து வரும் நாட்களில் 100-150 புள்ளிகள் வரை சரிவு மற்றும் ஏற்றம் இரண்டிற்கும் சரி சமமான வாய்ப்புகளை கொண்ட மதில் மேல் பூனையாகயாகத்தான் சந்தை உள்ளது..  //

அதே போல் 150 புள்ளிகள் ஏற்றம் கண்டு விட்டன சந்தைகள்…    வெள்ளிகிழமை முடிவில் நாம் சரிவினை எதிர் பார்த்தது உன்மைதான் அதை தொடர்ந்து நேற்றைய தினமும் சரிவிற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளதாக எனது பார்வை…

இன்றும் அந்த நிலையில் மாற்றம் இல்லை….. இரண்டொரு நாளில் பெரியதொரு சரிவினை எதிர் பார்க்கிறேன்…

ஜனவரி மாதம் நமது NTPC ஆப்ஷன் எப்படி செயல் பட்டது என்பது உங்களுக்கே தெரியும்..  ஆனால் நாம வாங்கிய உடன் பொறுமையை எந்த அளவு சோதித்தது…   தங்களின் சுட்டி காட்டலுக்கு நன்றி…  குறைகளை சுட்டி காட்டினால் தான் மேம்படுத்த உதவும்.  தொடரட்டும் தங்களை போன்றவர்களின் ஆக்கப்பூர்வமான கருத்து பரிமாற்றங்கள்.   

பின்னூட்ட பகுதியை தங்களின் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளவும் தங்களுக்கு தெரிந்த விசயங்களை அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்… விவாத மேடையாக பயன் படுத்துங்கள் என்று பலமுறை வேண்டு கோள் விடுத்தும் அது தடை பட்டு போனது வருத்தமே..  

Advertisements

9 responses to this post.

 1. விவாத மேடையாக பயன் படுத்துங்கள் என்று பலமுறை வேண்டு கோள் விடுத்தும் அது தடை பட்டு போனது வருத்தமே..

 2. மதிப்பிற்குரிய சாய் அண்ணா அவர்களுக்கு,

  கடந்த வாரம் தாங்கள் குறிப்பிட்டது போலவே சந்தை தற்போது மேல்நோக்கிய பயணத்தில் 150 புள்ளிகள் வரை மேலே வந்துள்ளது.

  “இன்றும் அந்த நிலையில் மாற்றம் இல்லை….. இரண்டொரு நாளில் பெரியதொரு சரிவினை எதிர் பார்க்கிறேன்…” – என்ற வரிகள் எங்கள் அனைவரையும் ஆவலுடன் சந்தையை கவனிக்க வைக்கின்றன.

  குறைவான வால்யுமுடன் மேலே செல்லும் சந்தையில் எங்கள் அனைவரையும் கவனமாக இருக்க வைக்கின்றன தங்களுடைய கட்டுரைகள்.

  மிக்க நன்றி.

  இனிய காலை வணக்கம்.

 3. GOOD MORNIG SIR.

 4. இன்றும் அந்த நிலையில் மாற்றம் இல்லை….. இரண்டொரு நாளில் பெரியதொரு சரிவினை எதிர் பார்க்கிறேன்…

  Thank you Sai sir
  me also holding lot of puts and waiting for the down

 5. இனிய காலை வணக்கம்
  சாய் அண்ணா ……….

 6. thank you sir.

 7. Posted by இளங்கோ on பிப்ரவரி 10, 2009 at 1:28 பிப

  திரு சாய் அவர்களே,
  எனக்கு ஒரு ஐயம் பெரும்பாலும் வர்த்தக ஆலோசகர்கள், Technicals மற்றும் Chart Patterns அடிப்படையில் சந்தையின் போக்கினை கூறுவார்கள். அதிலிருந்து விலகும்போது, சூதாடி சித்தர்களின் விளையாட்டு என்று கூறுகிறார்கள். யார் அந்த சூதாடி சித்தர்கள்? அவர்கள் எந்த அடிப்படையில் வர்த்தகம் செய்கிறார்கள்???

  நன்றி

 8. வணக்கம் சாய் சார்…

  தன்னிலை விளக்கம் அருமை… இருந்தாலும் பயணங்களில் திசை நாளை நிர்ணயிக்கப்படும். உங்கள் எண்ணம் நாளை நிறைவேறும் போல் தான் இன்று பெரிய அண்ணன் வணிகம் ஆகிறார்..

  நண்பர்களிடம் ஒன்றை பணிவாக கேட்டுக்கொள்கிறன். நம்ம சாய் சார் குடுக்கும் calls ஸ்டாப் லாஸ் உடைத்தால் உடனே வெளியேறி விடுங்கள், அல்லது எதிர் திசையில் செல்லுங்கள். மீண்டும் அவரிடம் கேட்டால் நஷ்டத்தை தவிர்க்க ” வேண்டாம் ” என்ற வார்த்தை தான் அவரிடம் இருந்து வரும். இத்தனை அவரின் அருகில் இருந்து பார்த்ததால் சொல்கிறேன்.

  நாம் எந்த நிமிடமும் தயாராக இருக்க வேண்டும். அதற்க்கு positional சென்று மாட்ட வேண்டாம். தின வணிகம் செய்வதற்கு capital அவசியம். எனவே ஸ்டாப் லாஸ் கண்டிப்பாக பின்பற்றுங்கள்.

  ஒரு சில நண்பர்களுக்காக நம்ம சாய் சார், சில சமயங்களில் அவருக்கு எளிதாக படுகின்ற வணிகத்தை கூட தர இயலவில்லை. ஏன் என்றால் positional and day trade வித்த்யாசம் தெரியாமல் சில நண்பர்கள் confuse ஆகிறார்கள்.

  நாளைய நாள் நமதாக அமைய ஆண்டவனை வேண்டுவோம்.

  நன்றி…

 9. Good morning SAI Sir.

  //..ஒபாமாவின் சலுகைகளால் இந்திய நிறுவனங்களுக்கு மறைமுகமாகவும் பயன் இல்லை என்பது தெரிய வரும் வரை நம்பிக்கையுடன் நமது சந்தையை முன்னெடுத்து செல்பது போல சித்தர்கள் நன்றாக பயன் படுத்துவார்கள்..//

  unga kaattula inikku pei mazhai-nu ninaikkiren.

  🙂 🙂 🙂

  PATTAIYA KELAPPUNGA.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: