இன்றைய சந்தையின் போக்கு – 06.02.2009


கடந்த சில மாதங்கள் முன்புவரை தினசரி 300 – 500 புள்ளிகள் வரை ஏற்றம் கண்டுவந்த அமெரிக்க சந்தைகள் கடந்த ஒரு மாத காலமாக 100 – 150 புள்ளிகள் ஏற்ற இறக்கத்துடன் 8000 இல் நிலைகொண்டுள்ளது.   

இன்றும் சந்தையை பற்றி எழுத பெரிதாக ஒன்றும் இல்லை….   ஆகையால் நாம ஒரு டெக்னிகல் சார்ட் பார்ப்போம்..

கடந்த வாரம் Runnig Gap பற்றி சொல்லியிருந்தேன்….  அதை ஒரு சிலர் பின் தொடர்கிறார்கள் என்று தெரிகிறது…. சந்தோஷம். 

கடந்த இருதினங்களில் அதிகமாக  ஓட்ட இடைவெளி ஏற்படுகிறது…  யார்? யார்? கவனித்தீர்கள்?

ஆனால் நான் 2760 அருகில் இருந்த இடைவெளியை நேற்றையதினம் கவனிக்க தவறி  விட்டேன்.. 

gapfilling1

படத்தை பாருங்கள் மூன்று இடவெளிகளும் எவ்வாறு நிரப்பப்பட்டுள்ளது அது போலவே இரண்டு நாளின் துவக்கத்தில் ஏற்பட்ட கேப்-அப்  இடைவெளிகளும் நிரப்பப்பட்டதை பாருங்கள்.

இதை நான் சொன்னால் –  அப்படியொன்ன்று இல்லை அவன் உளருகிறான் என்ற கேலி பேசுபவர்களும் இருக்கிறார்கள்.  

சில நண்பர்கள் –  சந்தையின் புதிய கீழ் நிலை என்னவாக இருக்கும்?  புதிய மேல் நிலை என்னவாக இருக்கும் என்று என்னிடம் கேட்கிறார்கள்…..

நீங்கள் டிரேடராக இருக்கும் பட்சத்தில் சந்தையின் போக்கில் சென்று வர்த்தகம் செய்து பழகுங்கள்…   கீழ் நிலை/ உயர் நிலை பற்றி கவலை பட வேண்டியதில்லை.  

அதேபோல எப்படி நீங்கள் ஜனவரியின் சரிவு முடிவுற்றதாக சொல்லி வர்றீங்க?   என்ற கேள்வி..

முதலீட்டாளர்கள்  –  6-7000 புள்ளிகளில் பயம் கொள்ளவில்லை….  ஆனால் 2200 இல் பயப்படுகிறார்கள்.. 

“BE FEARFUL WHEN OTHERS ARE GREEDY & BE GREEDY WHEN OTHERS ARE FEARFUL”  – -Warren Buffett. 

 

இந்த வார்த்தைகளுக்கு இணங்கத்தான் அக்டோபர் 28ல் 7.50 லட்சத்திற்கு போர்ட்போலியோ போட்டேன்… அந்த சமயத்திலும் சிலர் ஆச்சரியமாகவும், சிலர் திட்டியவர்களும் உண்டு. ஆனால் நாம் அதை 30% லாபத்தில் விற்றும் வெளியேறினோம்.    அதற்கான காரணத்தை பாருங்கள்..

 

outsidebarbearishbullish

மேலே உள்ள படத்தை பாருங்கள்…  மாதந்திர நிப்டி சார்ட்..  2007 இல்    ஒரு தொடர் ஏற்றம் ஜனவரி மாதம் ஒரு பெரிய சரிவு  (1500 புள்ளிகள்)  இதை Outside Bar (Bearish)  என்று சொல்லலாம்… அதை அடுத்த மாதங்கள் உயரங்களை உடைக்காமல் சரிவடைந்ததை பாருங்கள்… அக்டோபர் 2008 இல் மீண்டும் ஒரு பெரிய சரிவு (1500 புள்ளிகள்)  இதை Outside Bar (Bullish)  என்று சொல்லலாம்..    அதை தொடர்ந்து கடந்த 3 மாதங்களாக ஏற்றத்தை தேடி சந்தை நகர்வதை பார்க்கலாம்..     

இதனால் நான் சந்தை மேலும் சரியாது என்று  சொல்லவில்லை….  ஜனவரி 2008 சரிவின் தொடர்ச்சி முடிவுற்றது…  தற்போது புதிய ஏற்றத்திற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளது.   2480 உடைபடாதவரை அது சாத்தியமே. 

சரி சந்தை க்கு வருவோம்..    கடந்த இரண்டு 3 நாட்களாக சொல்லி வருவது தான்…  இன்றாவது 2800க்கு மேல் நிலைப்பெறுகிறதா என்று பார்ப்போம்.  அதே லெவல்ஸ் தான்.

=============================================================================

ஒரு மாதத்திற்கு முன்பு திரு ரஹ்மான் என்பவர் என்னை தனிப்பட்டமுறையில் வசைபாடி சென்றிருந்தார்… நானும் அதற்கான விளக்கம் கேட்டிருந்தேன். இது வரை பதில் இல்லை.  அவரை பற்றி விசாரித்த வரையில் அவர் மதுரையை சேர்ந்தவர் என்று தெரிய வந்தது… அவராக செய்தாரா? இல்லை யாராவது நண்பர்களுக்காக செய்தாரா என்பது அவருக்கே வெளிச்சம்.  அவர் சொன்னது உண்மையாக இருந்திருந்தால் அதற்கான வெப்சைட் முகவரி போன்றவற்றை அன்றோ அல்லது அதற்கு அடுத்து நாம் கேட்ட பிறகு தெரிவித்திருக்கலாம்.

Advertisements

12 responses to this post.

 1. Good morning sai sir and thank you very much for your technical information.

  Good Morning to everybody and wish you all successful trading.

 2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்

 3. மதிப்பிற்குரிய சாய் அண்ணா அவர்களுக்கு,

  இன்றைய தினம் சந்தை நிகழ்வுகளை மட்டும் சொல்லாமல் கூடவே டெக்னிகல் சார்ட் பற்றி தாங்கள் விளக்கியிருக்கும் விதம் கல்யாண விருந்தில் கூடவே அருமையான சுவை கொண்ட பாயசம் வைப்பார்களே அதுபோல் அற்புதமாக இருக்கிறது.

  ரன்னிங் கேப் பற்றிய தங்களுடைய கருத்துக்கள் மிகவும் அருமையாக உள்ளன. தாங்கள் கூறியபடியே கேப் அப் மற்றும் கேப் டவுன் சிறப்பாக வேலை செய்கின்றன.

  தங்களுடைய தகவல்களுக்கு மிக்க நன்றி.

  இனிய காலை வணக்கம்.

 4. GOOD MORNING SAI SIR…..

 5. சிறிய இடைவெளிக்கு பிறகு, ஒரு சுவையான டெக்னிக்கல் பதிவு..நன்றாக உள்ளது..

  // ஆனால் நான் 2760 அருகில் இருந்த இடைவெளியை நேற்றையதினம் கவனிக்க தவறி விட்டேன்..//

  தங்களின் நேர்மையான ஒப்புமைக்கு நன்றி!! பெடரரே அப்பப்ப கோட்டை விட்டுடறார்…விடுங்க பார்த்துக்கலாம்..:)

  //படத்தை பாருங்கள் மூன்று இடவெளிகளும் எவ்வாறு நிரப்பப்பட்டுள்ளது அது போலவே இரண்டு நாளின் துவக்கத்தில் ஏற்பட்ட கேப்-அப் இடைவெளிகளும் நிரப்பப்பட்டதை பாருங்கள். இதை நான் சொன்னால் – அப்படியொன்ன்று இல்லை அவன் உளருகிறான் என்ற கேலி பேசுபவர்களும் இருக்கிறார்கள்//

  இந்த கூகுள் யுகத்தில் சிறிது முனைப்பும்,முயற்சியும் இருந்தால், யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளலாம்.அதனால்தான் இன்று வீதிக்கொரு டெக்னிக்கல் அனலிஸ்ட்கள் உருவாகி விட்டார்கள்.அவர்களை பொறுத்த வரை gap filling theory என்பது எங்கும் காணக்கிடைக்காததால், அப்படி என்ற ஒன்றே கிடையாது!!..ஆனால், நீங்கள் மீண்டும் மீண்டும் சோதனைகள் செய்து அடிக்கடி இந்த தியரியை நிரூபித்து வருகீறீர்கள்..professionals are meant to find/practice new techniques..and you are a professional..please ignore the amateur’s புலம்பல்ஸ்…:)

  ரஹ்மான் – மடமையின்/வயிற்றெரிச்சலின்/கையலாகதனத்தின் உச்சக்கட்ட வெளிப்பாடு அந்த பின்னூட்டம் என்பதற்க்கு அவரது அதன் பிறகான மெளனமே சாட்சி..

 6. தினந்தோறும் சந்தை பற்றிய தகவல்களை கட்டுரை வடிவில் தந்து ஒரு சேவையினை தாங்கள் செய்து கொண்டு இருக்கிறீர்கள்.

  இது என்றும் தொடர வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

  . மிக்க நன்றி.

  இனிய காலை வணக்கம்

 7. Thank you sir !!!

 8. வணக்கம் சாய்,
  எங்களைப்போன்ற புதியவர்களுக்கு உங்களின் டெக்னிகல் சார்ட் விளக்கம் பயனுள்ளது.அருமை.
  நம்மைப்பற்றி குறை சொல்லப்படும்பொழுது நாம் அதிகம் கவனிக்கப்படுகிறோம்.
  ரஹ்மான் விஷயம் நமக்கு கிடைக்கும் விளம்பரம்.
  இருந்து விட்டு போகட்டும்.
  நல்லது தான்.
  கேட்ட ஸ்கிரிப்ட் க்கு நிலைகளை உடனே கொடுக்கும் திறமையை பார்த்து வியந்திருக்கிறேன். அந்த நிலைகளும் நீங்கள் சொன்னது போலவே செயல்பட்டிருக்கும்.
  உங்களைப்பற்றி உங்கள் அருகில் இருக்கும் எங்களுக்கு நன்றாகவே தெரியும்.
  நன்றி.

 9. திரும்ப திரும்ப அதே நிலைகளை எழுதுவதை காட்டிலும் ஒரு புதிய technical class.
  it’s a fantastic idea. திரும்ப திரும்ப எதிர்பார்கிறோம். thanks a lot.

 10. THANK YOU SIR.

 11. Good evening Sir.

  As Mr.MUNAWAR BASHA said…

  //..உங்களைப்பற்றி உங்கள் அருகில் இருக்கும் எங்களுக்கு நன்றாகவே தெரியும்..//

  You are a NICE person (also an “EFFECTIVE” ANALYST).

  -= IGNORE “BASELESS” CRITICS ALWAYS =-

  🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: