இன்றைய சந்தையின் போக்கு 03.02.2009


இரண்டு நாட்களாக சிறிய வேலைப்பளு மற்றும் அலைச்சல் காரணமாக பதிவுகளை விரிவாக எழுத இயலவில்லை…

அண்ணன் கிட்ட கோப்பையை குடுத்து ஒரு டீ சாப்பிட்டு உற்சாகம் அடைவார் என்று பார்த்தால் அவர் கோப்பையிலே என் குடி இருப்பு, என்று அதை எடுத்து கொண்டு பாண்டிச்சேரி போய்ட்டார்… அதன்  விளைவே 2727 கிடைத்தது.

இன்று அங்கிருந்து மீள முயர்ச்சிப்பார்… என்று எதிர் பார்க்கிறேன்.

2715 நல்லதொரு சப்போர்ட்டாக உள்ளது….   அதே போல் 2820 வேகத்தடையாக இருக்கிறது. 

///2828க்கு கீழ் நழுவினால் 2727 / 2626 வரை எதிர்பார்க்கலாம்..   நான் எதிர் பார்ப்பது சரிவுகளை…    இப்படி மட்டும் மொட்டையா சொல்லிட்டா எப்படி///

சிம்பா மொட்டையா எங்க சொன்னேன்…   2870-40 களில் துவங்கும் என்றேன் துவங்கியதோ 2835….. 2828 உடைத்த உடன் 2727 வரை எதிர் பார்க்கலாம் என்றேன் 2728 நேற்றைய கீழ் நிலை.  இதற்கு மேல் என்ன சொல்வது ஏற்கன்வே ஒரு சில நண்பர்கள் நிப்டி லெவல்களை தவிருங்கள் என்கிறார்கள்..  

ஆனால் என்ன – உடல் நலக்குறைவு மற்றும் நேற்றையதினம் காலையில்  நான் சில BAR களை தவற விட்டதால் (Data Feed Updation Prblme)  என்னால் அண்ணனின் இந்த பார்ட்டியை  அனுபவிக்க  முடியாம போச்சு…

நேற்றைய பதிவில் –  உள்ள சார்ட்டில் …. Triple Top,  Double Top மற்றும் Cup and Handle என்று மூன்று அமைப்புகள் உள்ளதை கவனிக்கலாம்.   19/1, 29/1 மற்றும் 30/1 ஆகிய மூன்று நாட்களில் 2860 ஐ உடைத்து மேலே செல்ல முயன்றாலும் அதை தக்கவைக்க இயலவில்லை.    அதற்கு ஏற்றார் போல பெரிய பங்காளி அமெரிக்காவும் சரிவடைகிறார்…   ஒபாமா இது உனக்கே நியாயமா? என்று அவரின் அறிவிப்புகளுக்கு சந்தைகளும் காத்து கிடக்கின்றன.    

சரி நம்ம அண்ணனின் உடனடி அடுத்த கட்ட பயணதிட்டம் என்ன என்றால் அவர்  இரண்டு ஊர்களுக்கு டிக்கெட் ரிசர்வ் செய்துள்ளார்…     ஒன்று 2626-50  இரண்டாவது 2865-2900   இதில் முதலில் எங்கு செல்வார் என்பது தான் கேள்வியே?

தற்போது துவங்கியுள்ள ஆசிய சந்தைகள் சிறு உற்சாகத்துடன் துவங்கியுள்ளன… இது தொடர்ந்தால்… நமது சந்தையும் 50 புள்ளிகள் வரை பச்சை வண்ணத்தில் பயணம் செய்யும்.

=============================================================================

அனைவரும் –  சம்பாதிப்பது…. கஷ்டபடுவது நிம்மதியான… சுவையான சாப்பட்டிற்காகத்தான்… சமைக்க நல்ல நல்ல குறிப்புகளை நமது வலைப்பூ வாசகி கல்பனா என்பவர் அறுசுவை உணவு என்ற பெயரில் பதிவெழுத துவங்கியுள்ளார்.   நீங்களும் படித்து, சமைத்து, ருசித்து பாருங்கள். 

Advertisements

15 responses to this post.

 1. Thanks sai sir.

 2. நமது சந்தையும் 50 புள்ளிகள் வரை பச்சை வண்ணத்தில் பயணம் செய்யும்
  Thank you Sai sir Good morning;)

 3. அவர் இரண்டு ஊர்களுக்கு டிக்கெட் ரிசர்வ் செய்துள்ளார்… ஒன்று 2626-50 இரண்டாவது 2865-2900 sai naama enge porathukku ticket vaanganum.thanks u r coments

 4. Yesterday you have said about the market fall. As your thought,the market felt down. Excellent Sai anna.

  Today’s article is rocking. Thank you.

  Good Morning.

  Have a nice day.

 5. THANKING YOU SAI SIR …..

 6. சாய் அண்ணா காலை வணக்கம்,

  என் வலைப்பூ பற்றிய அறிவிப்புக்கு மிக்க நன்றி

  பங்குசந்தை குறித்த இன்றைய கட்டுரை மிகவும் அருமை super சாய் அண்ணா தொடரட்டும் உங்கள் சேவை

 7. Posted by கோவை சக்தி on பிப்ரவரி 3, 2009 at 10:35 முப

  அன்புள்ள சாய் சார்,
  உங்கள் லெவல்ஸ் அருமை எல்லாம் பான்சி எண்களாக தேர்வு செய்து உள்ளிர்கள் .உங்கள் பயணத்துடன் உடல் நிலையும் கவனித்து கொள்ளவும் .

 8. thank u for ur briefly comments

 9. vanakkam sai sir,

  eppadiyo escape aagiteenga.. irunthalum vida matom. opening call arumai… again a blast in rel infra…

 10. Posted by Venkatasubramaniam on பிப்ரவரி 3, 2009 at 12:40 பிப

  அன்பு சாய் அவர்களுக்கு,
  தங்களது இன்றைய கட்டுரை அருமை.
  அண்ணன் நிஃப்டியார் மேல் நோக்கிய பயணத்திற்கே டிக்கெட் எடுப்பாரென நான் நினைக்கிறேன்.
  ஜனவரி இரண்டாம் வாரத்திலிருந்து இன்றைய நாள் வரையிலான நிஃப்டியாரின் பயணத்தை Reverse Head and Shoulder pattern என கருதலாமா?
  தங்களுடைய கருத்துகளுக்காக காத்திருக்கிறேன்.

 11. THANK YOU SAI

  MURUGESAN

 12. அண்ணா…

  கலக்கறீங்க அண்ணா.
  sudden down க்கு 5 நிமிசத்திற்கு முன்னாடி call option ல exit ஆக சொல்லி,put option ல enter ஆகச்சொன்னீங்க..really great anna…

  I surprised about your knowledge and timely calls anna..

  Thanks a Lot anna

  -ப்ரியா

 13. Dear Sai,
  Thanks for kalpana’s blog. I too read about one cooking blog in vikatan. I update the blog name 2morrom. Blog updated by Tirupur ( My City) person. Thatswhy I post this.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: