Archive for பிப்ரவரி, 2009

இன்றைய சந்தை 27.02.2009

சிறு வேலை பளு காரணமாக இன்று விரிவாக  எழுதவில்லை, அவ்வாறு எழுதுவதற்கும் ஒன்றும் இல்லை.

இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் என்பதை போல டவ் ஜோன்சின் நிலை உள்ளது.   நமது வேலை நேரத்தில் 7300 ஐ நோக்கி பயணமாவதும்… அதன் பிறகு 7200 க்கு கீழ் நழுவதுமாக இருந்து வருகிறது. 

2800 க்கு மேல் நிலைப்பட்டால் அதிபட்சம் 2860 வரை செல்லலாம்…  2765 –  க்கு கீழ் நழுவினால் 2730/2700/2650 வரை செல்லலாம்.   

ஓகே  10000 இல் இருந்து 10,000,00 என்பதையும் 1 லட்சம் டூ 10 லட்சம் என்பதை பற்றியும் நாளை பதிவாக எழுதுகிறேன். 

எனது பதில் முடியும்….

எப்படி என்று சொல்வதை விட அதை செய்து நிருபிப்பதே நன்றாக இருக்கும் என்பதால்,  அவ்வாறு செய்திடவும் அதை இங்கு தொடர்ந்து அப்டேட் செய்திடவும் விரும்புகிறேன். 

இதை சவாலாக ஏற்று – அவ்வாறு செய்தால் நான் பாதி லாபத்தை தருகிறேன் என்று சகோதரி பிரியா முன் வந்துள்ளார்.   அவருடைய வணிக விவரத்தை இங்கு தொடர்ந்து PDF or Screen Image  ஆக பதிவு செய்வோம்.

கூடவே நாளைய பதிவில் –  டெக்னிகல் வகுப்புகள் – அதன் சாதக பாதகங்கள்.   Paid calls அதன் சாதக பாதகங்கள். என்ற விவரங்களையும்  எழுதுகிறேன்.   (எங்களின் குறைகளையும் ) ஆனால் கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல்லெறியும் செயலாக இருக்காது. 

நாளை சந்திப்போம்….

பின் குறிப்பு :-

இந்த வீர விளையாட்டை (10K to 1000 K )  மிகுந்த ஆர வாரத்துடன் இன்று இனிதே ஆரம்பித்துள்ளோம்.  

        Opening Amount 10800
        Closing Balance 15400
Date  Trade Option Entry  Qty Exit Profit
27-Feb 1st Trade 2700 PE  108 100 130 2200.00
  2n Trade 2700 CE 110 100 134 2400.00
             
        Total Profit   4600.00

இன்றைய சந்தை 26.02.2009

நமது வர்த்தக நேரத்தில்,  Dow Jones Future வர்த்தகத்தின் போக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.  நேற்றைய தினம் அவ்வாறே நிகழ்ந்தது.

கச்சா எண்ணை திடிரென்று 2$ வரை விலை உயர்ந்துள்ளது..   (தற்போதைய விலை 42.70$)

சரிவுகள் தள்ளிப்போடப்படுகின்றன…  மற்றபடி சொல்வதற்கு ஒன்றும் இல்லை.    

அதிக ஏற்ற இறக்கம் இல்லாமல் துவங்கியுள்ள ஆசிய சந்தைகள்…

FnO Expiry நாளுக்குறிய சிறிய மேடு பள்ளங்கள் காணப்படும்… 

2828 – 2795 – 2760 – 2740 2727 – 2710 – 2685 – 2650

============================================================================

மார்ச் மாதத்தில் இருந்து பங்குகளின்  FnO லாட் சைசுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது… இதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

எனது எதிர் பார்ப்பு   மாற்றியமைக்க பட்டுள்ள அளவுகளால் சிறு வணிகர்கள் அதிகம் Stock’s FnO வணிகம் செய்ய இயலாது.  ஆகையால் இண்டெக்ஸ் ப்யூச்சர் / ஆப்ஷனின் வர்த்தகம் அதிகமாகும். 

விவரங்களுக்கு….

http://www.nseindia.com/content/circulars/faop11720.htm

நண்பர் ஒருவர் அவருக்கு கிடைத்த தகவலின் படி ஆலோசனை கேட்டார்… எனக்கு கிடைத்த தகவல்களுடன் சரிபார்த்து இந்த ஆலோசனையை வழங்கிறேன். 

100% ரிஸ்க்   –   சில ஆயிரம் %  லாபமடைய வாய்ப்புள்ளது.

52 வார அதிக பட்ச விலை –  59     குறைந்த பட்சவிலை – 0.41

Cals Refineries-Bse Code-526652

இந்நிறுவன பங்கினை  தற்போதைய விலையான 🙂  45 பைசாவுக்கு
வாங்கலாம்.... ரிஸ்க் எடுக்க தயாராக உள்ளவர்கள் 10000 பங்குகளை
4500/- க்கு வாங்கலாம். 

 (இது ஒரு தகவலே..  இதனால் ஏற்படும் லாப நஸ்டத்திற்கு நான் பொறுப்பல்ல)

 

இன்றைய சந்தையின் போக்கு – 25.02.2009

அரசின் ஊக்க அறிவிப்புகள் பலவீனமாக துவங்கிய நமது சந்தையை தூக்கி நிறுத்தியது.   இச்சலுகைகள் போது மானதாக இருக்குமா.    வரிக்குறைப்பினால் உற்பத்தி செலவு குறையும் அதனால் சிறிய அளவில் பொருட்களின் விலையும் குறையும் ஆனால்  மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்குமா?    உதாரணத்திற்கு மாருதி உடனடி விலைகுறைப்பில் இறங்கியுள்ளது.. அப்படி என்றால் விற்பனை நிலையத்தில் உள்ள வாகனங்கள் அனைத்தும் விற்பனையாகும் என்று எதிர் பார்க்க முடியுமா… ? இங்கு உள்ள படங்களை பாருங்கள் உலகமெங்கும் விற்பனையாகாமல் குவிந்து கிடக்கும் வாகனங்களை.

1234

Imported cars stored at Sheerness open storage area awaiting delivery to dealers

12234

Newly imported cars fill the 150-acre site at the Toyota distribution centre in Long Beach , California

நன்றி – படங்கள் அனுப்பிய கார்த்தி / கரூர்.

நாம் எதிர் பார்த்த முதல் டார்கெட்டான 2650 ஐ தொட்டு விடும் தூரத்திற்கு (2675.15)  வந்த அண்ணன் அந்த இடத்தில் இருந்து மீண்டும் மேலேறி செல்வது பலவீனமான ஏற்றமே.  இன்னும் சிறிய அளவில் சரிவுகள் மீதமிருக்கின்றன… அந்த சிறு சரிவு பெரிய அளவிலான சரிவாக மாறவும் வாய்ப்புகள் உள்ளது. ( அதாவது இந்த சிறு சரிவு தாமதப்படுத்தப்பட்டால்)    அதை அடுத்து வரும் நாட்கள் முடிவு செய்யும்.

சிறிய அளவிலான டவ் ஜோன்சின் ஏற்றம், அதையடுத்து உற்சாகமாக தற்போது துவங்கியுள்ள ஆசிய சந்தைகள்.. இவற்றின் தாக்கம் நமது சந்தையிலும் இருக்கும்.   50   புள்ளிகள் வரை ஏற்றம் இருக்கலாம்.   

2828 – 2790 – 2765 – 2745 – 2727 – 2700 – 2675 – 2650

=============================================================================

நேற்றைய பதிவுக்கு போதிய உறுப்பினர்களின் (பின்னூட்டம்) வருகை / ஆதரவு இல்லாததால் அதைப்பற்றிய விவரங்களை எழுத வேண்டாம் அல்லது பிறகு எழுதலாம் என்று விட்டு விட்டேன்.  

=============================================================================

ஆஸ்கார் தமிழன் / இந்தியன் ஏ.ஆர் ரஹ்மான் அவர்களுக்கு நமது வாழ்த்துகள்.  அவரின் திறமைக்கு இது தாமதமான அங்கீகாரம் தான்.   இவ்விருது மட்டும் அவரின் வளர்ச்சிக்கு / திறமைக்கான அளவுகோல் இல்லை. 

ஆனால் மும்பை குடிசைப்பகுதியில் 5 ஆண்டுகள் வாழ்ந்தவன் 15 ஆண்டுகளாக அந்நகரத்துடன் எனது வாழ்க்கை இணைந்துள்ளது என்ற முறையில் அத்திரைப்படம் மிகவும் தவறாக இந்தியாவை குறிப்பாக மும்பையை பிரதிபலிக்கிறது என்பது தான் உண்மை.    இன்றைய உண்மை நிலைக்கு மாறான நிலையைத்தான் காட்டி உள்ளார்கள் மிகவும் மிகைப்படுத்தபட்ட கதை/காட்சிகள். 

============================================================================

 எங்களது பரிந்துரைகளின் Performance Report  (கிளிக் செய்யுங்கள்)

இன்றைய சந்தையின் போக்கு – 24.02.2009

அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்…

சபாஷ், சரியான போட்டி…. டவ் அண்ணாச்சி தினசரி புதிய (கீழ்நிலைகளை) சாதனையை நிகழ்த்தி வருகிறார்.   7000 ஐ உடைக்கும் நிலை வந்து விட்டது.

அவரை ஒரு தயக்கத்துடன் போட்டி போட்டு பின் தொடரும் நமது (ஆசிய) சந்தைகள்..

கடந்த வெள்ளியன்று நாம் எதிர்பார்த்ததை போல 2727 ஐ உடைத்து கீழே சென்ற சந்தை மீண்டும் ஒரு நம்பிக்கையுடன் / எதிர் பார்ப்புகளுடன் முடிவுற்றது ஆச்சரியம் !!!!!

இன்று நமது எதிர்பார்ப்பான 2650  / 2626  நிலைகளுக்கு வாய்ப்புகள் அதிகம் காணப்படுகிறது.

2650 – 2675 – 2690 – 2727 – 2745 – 2765 – 2790

 

வெளியூர் பயணத்தில் இருந்து வீடு திரும்பும் வழியில் இப்பதிவை எழுதுவதால் அதிகம் எழுதவில்லை.

============================================================================

முந்தைய பதிவான ”என்னை பார் யோகம் வரும்” கழுதையின் படம் தம்பி கார்த்தி /கரூர், மெயிலில் அனுப்பி இருந்தார்… நன்றாக இருக்கிறதே… என்று பதிவிட்டேன், மற்றபடி சந்தைக்கும் அதற்கும் தொடர்பில்லை.

முக்கியமான கேள்வி:

கடந்த வாரம் எனது நண்பர்கள் இருவருடன் (ஒருவர் டெக்னிகல் அனலிஸ்ட்) சந்தையை பற்றி பல விசயங்களை அலசிக்கொண்டிருந்தோம்.

அந்த சமயம் 3 வது நண்பர் கேட்ட கேள்வி….

பத்தாயிரம் ரூபாயை  10 லட்சமாக்க முடியுமா?  முடியாதா?  

ஒரு லட்சத்தை 10 லட்சமாக்க முடியுமா? முடியாதா?

முடியும் என்றால் =  என்ன செய்தால்? எப்படி செய்தால்?  அதற்கு செய்ய வேண்டியது செய்யக்கூடாதது என்ன?  எவ்வளவு காலம் ஆகும். 

முடியாது என்றால் = ஏன் முடியாது?  

இப்படி ஒரு கேள்வி வந்த உடன் பல காரண காரியங்களை அடுக்கினோம்… அலசினோம்…  அதன் விவரங்களை நாளை பதிவாக எழுதுகிறேன்.  அதற்கு முன்பு மேலே உள்ள கேள்விகளுக்கு உங்களுடைய பதில்களை விரிவாக எழுதுங்கள்.

============================================================================

எங்களது பரிந்துரைகளின் Performance Report   (கிளிக் செய்யுங்கள்)

ஒரு கழுதையின் எதிர் கால கனவு

12221

இன்றைய சந்தை 20.02.2009

நேற்றைய தினம் எழுதியதை இன்று தொடருகிறேன்….  

நாம் திங்கள் கிழமை பதிவில் குறிப்பிட்டது போலவே தங்கம் 988$ என்ற முதல் இலக்கை அடைந்து விட்டது.

கச்சா எண்ணை 40 $ ஐ தொட்டு விட்டது…

8000 ஐ தன் வசப்படுத்தி வைத்திருந்த அமெரிக்க சந்தைகள் தாக்குதல்களை சாமாளிக்க முடியாமல் 7800-700 7500 என்று பின் வாங்கி 7400 க்கே வந்து விட்டது. 

அவர்களையே அடி வருடும் ஆசிய சந்தைகள்.  

உலகளவில் ஊடகங்களின் இன்றைய விவாதப்பொருள் “டவ் அண்ணாச்சி 7000 ஐ உடைத்து 6000 க்கு செல்வாரா? இல்லை, 5000 க்கு செல்வாரா?” என்பது தான்.   அவ்வாறு நிகழ்ந்தால் இன்னும் அமெரிக்காவை நாட்டாமையாக நினைத்து செயல்படும் நம்மை போன்றவர்களுக்கு சிக்கல் தான்.  (தற்போதைய சூழ்நிலையில் அவர்கள் பொருளாதார வல்லரசு கிடையாது, ஆனால் இன்றும் அவர்கள் தான் ஆயுத வல்லரசு என்பதை மறுக்க முடியது).

கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கச்சா எண்ணை விலையேற்றம்,  அமெரிக்க சந்தை சரிவு, உள் நாட்டு பணவீக்க விகிதம் வரலாறு காணாத அளவில் உயர்ந்தது என்று பிரச்சினைகள் ஒரு சேர தாக்கியபோது வளரும் நாடுகள், பதறின ஆங்காங்கே சில சந்திப்புகள் மாநாடுகள் என்று விவாதித்தனர். ஆனால் பிரச்சினைகளின் வீரியம் குறைந்த உடன்,

அமெரிக்காவின் ஆட்சிமாற்றம் சில காட்சி மாற்றங்களை நிகழ்த்தும் என்ற நம்பிக்கையில் மெத்தனமாக இருந்து விட்டன.  அமெரிக்காவுக்கே பிரச்சினையின் ஆழம் தெரியவில்லை என்று அவர்களின் ஊடகங்களில் தற்போது வரும் செய்திகள் பூச்சாண்டி காட்டுகின்றன.

கடந்த ஒரு வருட உலக பொருளாதார சரிவுக்கு அமெரிக்கா தான் காரணம் என்றால் மிகையில்லை.  நமது நாட்டில் ஒரே ஒரு ”சத்ய” சோதனை தான் நிகழ்ந்து உள்ளது.  அதுவும் தொழில் ரீதியான சரிவு இல்லை, முறை கெட்ட நிர்வாகமும் அதோடு கூட்டணி சேர்ந்த நமது நாட்டின் சாபக்கேடான ஊழல் அரசியலும்  தான்.  மற்றபடி அஸ்திவாரத்தையே ஆட்டம் காணச்செய்யும் நிலையில் எந்த நிறுவனமும் இல்லை.  

இது போன்ற சூல்நிலையில் இன்னும் அமெரிக்காவை பின்பற்றும் நிலை ஏன்?    கிராமங்களில் அனைத்தையும் இழந்து தவிக்கும் சிலரை பண்ணையார் என்று அழைப்பார்கள்.  அது போலவே உள்ளது இன்னும் அமெரிக்காவை பெரிய அண்ணன் என்று அழைப்பது.  

2 நாட்களில் 200 புள்ளிகளுக்கும் அதிகமாக இழந்த நமது சந்தை அமெரிக்க சந்தைகள் மீளாதா என்று ஒரு நப்பாசையிலும், (நேற்றைய  தினம்  திடீரென்று  டவ் ப்யூச்சர் 70 புள்ளிகள் உயர்ந்த போது நமது சந்தையும் உயர்ந்ததை கவனித்திருக்கலாம்)  ரிசர்வ் வங்கி ஏதாவது வட்டி குறைப்பு போன்ற அறிவிப்புகளை வெளியிடாதா என்ற எதிர் பார்ப்பிலும்…  நிலைப்பெற்றது. கூடுதல் காரணம் ஒரு பெரிய சரிவினை தொடர்ந்து நிகழும் சார்ட் கவரிங்.    

3 நாட்கள் தொடர் விடுமுறை காரணம் வரும் திங்கள் மாஹாசிவராத்திரி. அன்றும் நமது சந்தைக்கு விடுமுறை.

  தற்போது சரிவுடன் துவங்கியுள்ளது ஜப்பான் / சீன சந்தைகள். 

 இப்படி பட்ட சூழ்நிலையில் துவங்கும் நமது சந்தை என்ன செய்யும் இன்னும் நம்பிக்கையுடன் செயல் பட முடியுமா.  சந்தேகம் தான்.  அதே நேரத்தில் 2745 – 2730 உடைக்காத வரை சரிவுகள் தள்ளிப்போடப்படலாம்.

எனது தனிப்பட்ட எதிர் பார்ப்பு…  2650 வரை தான்.. அந்த இடத்தில் உலக சந்தைகளில் ஒரு நம்பிக்கை ஏற்பட்டால்,  குறிப்பாக அமெரிக்க பங்காளி இழந்த மானம் மருவாதியை காப்பாற்றிகொள்ளும் முயற்சியில் இறங்கினால், அடுத்த வாரம்  சந்தை மேல் நோக்கி பயணமாகும்.  குறிப்பாக வங்கித்துறை பங்குகள்.

கடந்த 17.02.2009 அன்று நான் பரிந்துரைத்த.

ஹீரோ  ஹோண்டாவில் பெரிய மாற்றம் இல்லை.

போலாரிஸ் 48.50 என்ற விலையில் விற்றிருந்தால் 4/- லாபம் 2800 லாட் சைஸ் = 11200 லாபம். 

பயனாளிகள் பின்னூட்டமிடவும்.

நிலைகள் 2828 க்கும் 2727 க்கும் தான் போட்டி இதில் எந்த நிலை முதலில் உடை படுதோ அந்த பக்கம் செல்ல வேண்டியது தான். 

============================================================================

ரஹ்மான் – தங்கள் அளவுக்கு தரம் தாழ்ந்து என்னால் எழுத முடியும் என்றாலும் அது எனது சுபாவம் இல்லை என்பதால் நாகரீகமாகவே பதில் எழுதுகிறேன்.  

Jai hind  என்றும் indian  என்றும் போலியான ஈ.மெயில் தர வேண்டாம்… தாங்கள் முதல் பின்னூட்டம் எழுதிய போதே உங்களின் வீட்டு முகவரி /  தொலை பேசி எண் உட்பட அனைத்து தகவல்களையும் விசாரித்து விட்டோம்.  

முதலில் தங்களை யாரென்று எனக்கு தெரியாது, நீங்கள் யாருக்காக இப்படி வசைபாடுகிறீர்கள் என்றும் தெரியவில்லை.. உங்களுடைய எதிர் பார்ப்பு என்ன..? மனநிலை பாதிக்கபட்டவரா?

தங்கள் நோக்கம் என்னை கெட்ட வார்த்தைகளால் திட்டுவதும நான் எழுதுவதை நிறுத்த செய்வதும் என்றே அறிகிறேன்..  முதலில் விஜய குமார் என்பவரின் கட்டுரைகளை நான் மொழிபெயர்க்கிறேன் என்று சொன்னவர். அவரின் வெப்சைட் / மற்ற தகவல்களை கேட்டால்..  தற்போது பலரின் வெப்சைட்களில் இருந்து தகவல்களை திரட்டுகிறேன் என்று எழுதி உள்ளீர்கள்.   

முதல் பின்னூட்டம் படித்த போது கோபம் வந்தது உண்மையே ஆனால் நேற்றைய பின்னூட்டம் கண்டு சிரிப்பு தான் வந்தது.  காரணம் இதன் பின்னணியில் பதிவுலக நண்பர்களின் / தொழில் முறை போட்டியாளர்களின்  கை உள்ளது என்று தெரிவதால்,  பெரிய மனிதர்களுக்கு இது அழகல்ல. 

சரி உங்கள் ஆத்ம திருப்திக்காக உங்களின் குற்றச்சாட்டுகளை அனைவரின் பார்வைக்கும் வைக்கிறேன்.

நண்பர்களே….

1. சாய்-க்கு  டெக்னிகலே தெரியாது… அனலிஸ்டே கிடையாது.  

2. அடுத்தவரின் கட்டுரைகளை / கால்ஸ் களை மொழி பெயர்த்து போடுகிறார்.

3.  அவரை நம்பாதீர்கள்.

4. அவரே பல பெயர்களில் பின்னூட்டம் எழுதி கொள்கிறார்.

இதுதான் அவரின் குற்றச்சாட்டு கூடவே அவர் அவர்களுக்கு பிடித்த கெட்டவார்த்தைகளை சேர்த்து கொள்ளுங்கள்.

எனக்கு எந்த வருத்தமும் இல்லை.    நண்பர்களே இவருக்கு இந்த அளவு முக்கியத்துவம் தரதேவையில்லைதான்.  ஆனால் அவர்களின் நோக்கம் என்னை சலனப்படுத்துவது தான் அதை தவிர்க்கவே பதில் எழுதினேன்.   

இன்றைய சந்தையின் போக்கு – 19.02.2009

வர்த்தகத்தின் ஆரம்பத்திலேயே நல்லாத்தான் நேற்று குட்டைய குழப்பினார்கள்….   அதாவது முதல் 5 நிமிட வர்த்தகத்தில்  High  2915 (அதுவே day high)  low 2729, Volume – 20, 19050  என்று துவங்கியதை பார்த்து ஒரு நிமிடம் ஆடிப்போனோம்…  இதைப்பார்த்து ஏற்பட்ட குழப்பமும் சந்தை சரிவிலிருந்து தப்பியதற்கு ஒரு காரணம் என்று சொல்லலாம்.

அதே போல் Rate Cut அறிவிப்புகள் வர உள்ளது என்ற எதிர் பார்ப்பும் சரிவடைந்த வங்கித்துறை பங்குகள் மீள்வதற்கு உதவியது.

இன்றைய முக்கிய நிலை 2727  இதற்கு கீழே சென்றால் 2650 வரை செல்லும் என்று எதிர் பார்க்கிறேன். 

பின் குறிப்பு: –

பெரிய பதிவாக எழுதி வலையேற்றம் செய்யும் போது சில பகுதிகள் அழிந்து விட்டது 🙂 ஏன் என தெரியவில்லை.  நாளை விரிவாக எழுதுகிறேன்.