திக்குமுக்காடிய உடுமலை மாணவன்


kovai

நேற்றைய பதிவில் பத்திரிக்கை செய்தியில் படித்ததாக   நாம் குறிப்பிட்ட மாணவன் பிரபுவுக்கு கோவை டி.ஐ.ஜி திரு சிவனாண்டி உட்பட பலர் உதவியுள்ளனர்.  கடந்த 1 வருடத்திற்கும் மேலாக கடன் வழங்காமல் இழுத்தடித்த வங்கி நேரில் சென்று காசோலையை வழங்கியுள்ளனர்…. உதவி மழையில் திக்கு முக்காடும் மாணவனின் எதிர்காலம் இனி பிரகாசமாக அமையும்… வாழ்த்துவோம் நாமும்.   ஒருவரின்  செயல்கள் நியாயமாக இருக்கும் பட்சத்தில் பலருக்கு தெரிய வந்தால் நிச்சயம் உதவி கிடைக்கும் என்பதற்கு இது உதாராணம்.  ஆகையால் மனம் தளராமல் போரடினால் எதிலும் வெற்றி நிச்சயம். 

ஆனால் இது போன்று ஒவ்வொரு ஏழை மாணவனும் பத்திரிக்கை செய்தியானால் தான் கடன் கிடைக்கும் என்ற வங்கிகளின் மன நிலை மாறவேண்டும். நேற்று வரை கடன் வழங்க அவனிடம் என்ன தகுதியில்லையென்று அவர்கள் நிராகரித்தார்கள்.  இன்று எதன் அடிப்படையில் தேடிச்சென்று உதவினார்கள்?   இது போன்று எத்தனையோ மாணவர்கள் பல ஊர்களில் பல கிராமங்களில் வங்கிகளுக்கும் கல்லூரிக்கும் நடையா நடக்கிறார்களே அவர்களுக்கு என்ன பதில்.

நன்றாக படிக்கும்,  ஏழை அதுவும் முதல் தலைமுறையாக கல்லூரியில் கால் வைக்கும் மாணவர்களுக்கு உடனடியாக உதவி கிடைக்க ஆவணம் செய்ய வேண்டும். அதற்கு கல்வி கடனை வங்கியின் கிளை மேலாளரின் நேரடி பொறுப்பில் இல்லாமல் – கலெக்டர் அலுவலகம் மூலாமாக பரிந்துரைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.  சிறந்த உதாரணம் சென்ற ஆண்டு கல்வி கடன் முகாம் நடத்திய ஈரோடு மாவாட்ட கலெக்டர்.

நமது நண்பர்கள் பலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவ முன்வந்தார்கள்…  மிக்க நன்றி.   தக்க சமயத்தில் உங்களின் உதவிகளை உரியவர்களுக்கு முறையாக கொண்டு  சேர்க்கும் வகையில் பயன் படுத்திக்கொள்கிறேன்.

 “எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்  – என்பார்கள் நாம் அந்த அளவுக்கு உயர வேண்டாம்.  இந்த சம்பவத்தை ஆரம்பமாக வைத்து நாம் தொடர்ந்து ஒரு சிலருக்கு சிறு சிறு  உதவிகளை செய்யலாம்.    நான் இதற்காக மாதம்தோறும் ஒரு சிறு தொகையை செலவிட தயார்…   நண்பர்கள் தக்க ஆலோசனை வழங்கவும்.  நன்றி. 

நன்றி – புகைப்படம்- தினமலர்.

5 responses to this post.

 1. Posted by Dhanam - -Ramnad on ஜனவரி 30, 2009 at 8:57 முப

  அனைவருக்கும் காலை வணக்கம், நல்ல சிந்தனை வாழிய பல்லாண்டு வாழ்த்துக்களுடன் தனசேகரன்

 2. நன்று. ஒவ்வொரு மாதமும் ஒரு அநாதை இல்லம் அல்லது முதியோர் இல்லத்தைத் தேர்ந்தெடுத்து (சிறிதளவு) உதவி செய்யலாமே.

 3. Posted by S. Karthi, Karur on ஜனவரி 30, 2009 at 9:52 முப

  very happy for the news.

 4. அனைவருக்கும் வணக்கம்

 5. Posted by Venkatasubramaniam on ஜனவரி 30, 2009 at 12:34 பிப

  அன்பு நண்பர்களுக்கு,
  ஒரு registered charitable trust ஆரம்பித்து இது போன்ற உதவிகளை மேற்கொள்வது நல்லதென நினைக்கிறேன். இது accountability, transparency ஆகியவற்றுக்கு வழிவகுக்கும். இதனால் நன்கொடை அளிப்பவர்கள் வரி விலக்கும் பெற முடியுமென்பதால் உதவி செய்ய விரும்புபவர்களுக்கும் இது ஊக்கமளிப்பதாக இருக்கும்.

  நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: