இன்றைய சந்தையின் போக்கு 29.01.2009


உலக சந்தைகளை பின் தொடரும் நமது சந்தை….

அமெரிக்க சந்தையில் மையம் கொண்டுள்ள புயல் மேலும் 200 புள்ளிகள் வரை வடக்கு திசையில் முன்னேறி உள்ளது.   அதன் காரணமாக உலக சந்தைகள் அனைத்திலும் லேசான அல்லது மிதமான இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

நமது சந்தையில் இந்த மழை வாய்ப்பை பெட்ரோல் பொருட்களின் விலை குறைப்பு அதிகரிக்க செய்யும். 

இரண்டொரு நாளில் ஒபாமா அரசின் 816$ பில்லியன் அளவிற்கான சலுகை திட்டங்கள் வெளிவரலாம் என்று எதிர் பார்க்கப்படுவதால், அதுவரை  தற்போதைய உற்சாகம் தொடரும்.

இந்த உற்சாகம் பெரிய அளவில் சந்தையை உயர்த்தாது…   

தற்போதைய சந்தை நிலைமை கடிகாரத்தின் பெண்டுலம் போல ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் ஊசலாடும் நிலைமையில் தான் உள்ளது.  (3100-2680).    அப்ப கீழே வருமா? நிச்சயம் வரும்!….. வரணும்!  

இதை சரியாக பயன்ப்படுத்தி முதலீட்டாலர்கள் பயன் அடையலாம்….

உதராணத்திற்கு ரிலையன்ஸ் நிறுவன பங்குகளை தீபாவளி சமயத்தில்  1075 க்கு பரிந்துரைத்தேன்.   அது அதிக பட்சமாக 1500 வரை சென்றது.

குறைந்த பட்சம் 300 லாபத்தில் விற்றிருந்தால்….   அதை அடுத்து 2 முறை 1100 என்ற விலைக்கு கிடைத்து உள்ளது.  ஒவ்வொரு முறையும் 300 லாபம் ஈட்டியிருந்தால்.

1100 முதலீட்டிற்கு   –  900  லாபம்..     81% லாபம் 4  மாதங்களில்.

சொல்லுங்கள்  இந்த சந்தையில் சம்பாதிக்க முடியுமா இல்லையா என்று…?   சரியாக செய்தால் இதை விட வேறு நல்ல தொழில் இல்லை.  நீண்ட கால முதலீட்டிற்கு உகந்த நிலையில் சந்தையும் இல்லை 5-10 வருடம் காத்திருக்கும் மன நிலையில் நாமும் இல்லை.   குறுகிய கால சாகுபடி தான் சிறந்தது.  அந்த குறுகிய கால சாகுபடியால் வரும் லாபத்தில் ஒரு பகுதியை நீண்ட கால முதலீடாக செய்யுங்கள். 

இன்றைய நிலைகள் : 2965  2945  – 2915-  2885-2865 –  2835 – 2828 – 2805 – 2785

சின்ன வருத்தம் :-   எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல் என்னை மேம்படுத்தி கொள்ளத்தான் இந்த பதிவினை எழுதிவருகிறேன்.   நிறை குறைகளை சுட்டி காட்டினால் தான், எனது எழுத்து சிலருக்காவது பயன் படுகிறதா என்று அறிய முடியும்,  மேலும் மேம்படுத்த உதவும்.   ஆனால் பலருக்கு சின்னதாக ஒரு பின்னூட்டம் எழுத கூட நேரமில்லை.   Gci – மென்பொருளை 245 க்கும் அதிமானவர்கள் கிளிக் செய்துள்ளனர்.. அப்படி என்றால் குறைந்தது 100 பேராவது அதை டவுன் லோட் செய்திருப்பார்கள்.  ஆனால் அது பயன்படுகிறது என்று சொன்னவர்கள் ஒரு சிலர்தான். 

===========================================================================

ஆர்-கே –  பிப்ரவரி 2 வது வராத்திற்கு பிறகு நண்பர்கள் சந்திப்பிற்கு நான் தயார்..  எங்கே எப்படி சந்திக்கலாம் என்று சொல்லுங்கள்.  இடம், நேரம், செலவு மற்றும் கலந்து கொள்பவர்கள் ஆகியவற்றை சரியாக முன் கூட்டியே திட்டமிட்டால் நன்றாக இருக்கும்.

இன்று என்னை பாதித்த –  2 செய்திகள்…

1.இன்றைய இலங்கை சூழ்நிலையில் இந்தியா இலங்கையில் கிரிக்கெட் ஆட சென்றது தவறு..

   சிம்பா கொஞ்சம் ஹாட்டா ஒரு பதிவு போடுப்பா… புழுதிகாட்டில். 

2.  கோவை மாவட்டம், உடுமலை அருகேயுள்ள குடிமங்கலத்தை சேர்ந்த பிரபு என்ற மாணவன் பி.இ படிப்பிற்கு கல்விகடன் கிடைக்காததால் இரண்டாம் ஆண்டு படிப்பை நிறுத்தி விட்டு தனது தந்தையின் சவரத்தொழிலுக்கு திரும்பிய அவலம் (தினமலர் செய்தி)  அரசு பள்ளியில் படித்தவன் +2 வில் 851 மதிபெண்களும்,  முதலாம் ஆண்டு பி.இ செமஸ்டரில் 75%  ம் வாங்கியுள்ளதாக செய்தி.   நண்பர்களே சொல்லுங்கள் நாம் ஏதாவது செய்யலாமா?

25 responses to this post.

  1. thank you Sai,
    good levels 2865 in blue.
    we can do help for kovai student ,please give the planning i can send money

    Murugesan

  2. Thanks Sai Sir.

  3. Posted by Dr Chandramohan on ஜனவரி 29, 2009 at 9:32 முப

    Your articles are superb and i am trying to use GCI sw –it is minimise my search before entering in Share market daily.And i would be grateful if u could inform real time World Market indices link if u have.
    Thanking you
    Dr chnadramohan
    Salem

  4. Posted by V.SURESH, SALEM on ஜனவரி 29, 2009 at 9:34 முப

    Good Morning sai sir.

    your views are excellent. If i get profit rs.2000/- in intraday, i used buy stocks worth in small quanities to the extent of Rs.500/- for long term investment. One can use this technique to build up their portfolio for long term purpose.

  5. Hai Saiganesh,
    உங்கள் தளத்தை சமீபகாலமாக தொடர்ந்து பார்வை இடுகிறேன். பின்னூட்டம் எழுதக்கூடாது என்று இல்லை. நான் பங்கு வணிகத்திற்கு வெகு புதியவன்.அதனால் என்ன சொல்வது என்று தெரிவதில்லை! பங்கு வணிகத்தை புரிந்து கொள்ள உங்கள் வலை பதிவு மிகவும் உதவுகிறது.
    கோவை மாணவனுக்கு கண்டிப்பாக ஏதாவது செய்ய வேண்டும்.உங்கள் முயற்சியை முன்னெடுத்து செல்லுங்கள்.

  6. Posted by Muthu from Singapore on ஜனவரி 29, 2009 at 9:49 முப

    Hi sai sir,
    We needs to help the Kovai student. Please arrange the planing and let us know the details.

  7. Posted by Venkatasubramaniam on ஜனவரி 29, 2009 at 9:50 முப

    அன்பு சாய் அவர்களுக்கு,

    வாழ்க வளமுடன்.
    நான் தங்களுடைய இந்த வலைத்தளத்தை கடந்த ஒன்றரை மாதங்களாக வாசித்து வருகிறேன். மிகவும் பயனுள்ளதாக உள்ளது நீங்கள் இங்கு பதிவிடும் தகவல்களும், எழுதும் விதமும். தங்கள் எழுத்துநடை மிக சுவாரஸ்யமாகவும், எளிதாக புரியும்படியாகவும் உள்ளது. நன்றிகள் பல.

    நிறைய முறை பின்னூட்டமிட எண்ணியிருந்தும் சோம்பலினால் முடியாமல் போய்விட்டது. மன்னிக்கவும்.

    தங்களுடைய இந்த பணி என்றும் தொடர்ந்திட வேண்டும்.

    அன்புடன்,
    வெங்கடசுப்ரமணியம்

    [GCI தரவிறக்கம் செய்துள்ளேன். இன்னும் உபயோகித்து பார்க்கவில்லை. மேலும் என்னுடைய பங்குச் சந்தை பற்றிய புரிதல் மிகவும் குறைவாக இருப்பதால் இப்பொழுது தான் கற்று வருகிறேன். தங்கள் பதிவுகள் மூலமாகவும், வேறு சிலரின் வலைத்தளங்கள் மற்றும் வலைப்பக்கங்கள் மூலமாகவும்.
    இனிமேல் தவறாமல் என்னுடைய கருத்துகளையும், சந்தேகங்களையும் பின்னூட்டமிடுகிறேன்.]

  8. Thank you sir !!!

  9. அனைவருக்கும் வணக்கம், எனது ஊரும் உடுமலைக்கு அருகில்தான் உள்ளது, விசாரித்து வெகு விரைவில் சொல்கிறேன்

  10. Thank you sir !!!

  11. சாய்,

    கோவை மாணவனுக்கு எப்படி உதவலாம்….?

    தங்கள் மறுமொழிக்காக காத்திருக்கும்,

    வரன்….

  12. Posted by chandhrakumar on ஜனவரி 29, 2009 at 10:16 முப

    GOOD MORNING SAI SIR……..

  13. Thank You Sai Sir

  14. பின்வரும் கருத்துகளுக்கு, நண்பர்கள் பதிலளிக்கலாம்..

    1.மார்ச் 1ம் தேதி சந்திப்புக்கு சரியாக வருமா எனக் கூறுங்கள்.

    2.எந்த மாதிரியான சந்திப்பு இது? சந்திப்பா அல்லது வகுப்பா ? ஒரு பொதுவான நோக்கம் இருந்தால், அதற்கான தயாரிப்போடு அனைவரும் கலந்து கொள்ள உதவியாக இருக்கும்.

    3.மலைவாசஸ்தலம் போகலாம்தான்…ஆனால் ஒருநாள் நிகழ்ச்சியாக இருந்தால் அனைவருக்கு பயணம் திட்டமிடலில் சிரமம் இருக்கும்..தூரம் மற்றும் நேரம் காரணமாக…அதனால் அனைவருக்கும் முடிந்த அளவு குறைந்த தூர பயணத்தில் அடைவது போன்ற ஒரு ஊரினை நண்பர்கள் பரிந்துரைக்கலாம்..

    4.நான் ரெடி கோவை மாணவனுக்கு உதவ..நண்பர்களுக்கு இங்கே பின்னூட்டத்தில் தொகையை தெரிவிக்க தயக்கம் இருக்கலாம்..எனக்கு இருப்பதை போல..எனவே சாய் அவர்களுக்கு மெயில் அனுப்பினால்,அவர் உடனே உதவியை செயல்படுத்த ஏதுவாக இருக்கும் என நினைக்கிறேன்..முதல் மெயில் என்னுடையது..

  15. Posted by S. Karthi, Karur on ஜனவரி 29, 2009 at 11:25 முப

    மதிப்பிற்குரிய சாய் அண்ணா அவர்களுக்கு,

    இனிய காலை வணக்கம்.

    சந்தை பற்றிய தங்களுடைய தங்களது தகவல்கள், அதனை தாங்கள் அருமையான நடையில் எங்களுக்காக தொகுத்து வழங்கும் முறை, மற்ற உலக சந்தைகளின் தகவல்கள் என தங்களது கட்டுரை மிகவும் அற்புதமாக உள்ளது.

    ஒபாமா அரசின் 816$ பில்லியன் அளவிற்கான சலுகை திட்டங்கள் தரும் உற்சாகம் சந்தையினை பெரிய அளவில் உயர்த்தாது என்கிற தகவல் தின வணிகர்கள் மட்டுமின்றி சந்தையில் இருக்கும் அனைவருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும்.

    சந்தை தாங்கள் குறிப்பிட்டது போலவே ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே பயணித்துக் கொண்டிருக்கிறது. எனினும் ஒருவித பயத்துடனேயே சந்தையில் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. ஏனெனில் கடந்த முறை சந்தை மேலே 3160 என்ற நிலையினை அடைந்த பொழுது சந்தை கீழே வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்தோம். சந்தையும் எதிர்பார்த்த அளவைவிட கீழே வந்தது. எனினும் சந்தை அதற்கு எடுத்துக் கொண்ட நாட்கள்தான் வணிகர்களின் மனதில் கலக்கத்தை ஏற்படுத்தியது.

    இந்த மாதிரியான இக்கட்டான பல தருணங்களில் தங்களது கட்டுரைகள்தான் எங்களது பயத்தை போக்கி தைரியத்தை தந்துகொண்டு இருக்கிறது.

    சந்தை பற்றி பெரிய அளவில் ஏதும் விஷயம் அறியாத எங்களைப் போன்ற பல வணிகர்களுக்கு தங்களது கட்டுரைதான் ஒரு கலங்கரை விளக்கம். தாங்கள் செய்து வரும் இந்த அளப்பரிய சேவையினை பாராட்ட எங்களுக்கு வார்த்தைகள் இல்லை.

    தாங்கள் அளித்திருந்த GCI MT4 என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்துவிட்டேன். எனினும் இணையத்தின் வேகக்குறைவு காரணமாக உபயோகிக்க முடியவில்லை. எனினும் தங்களது பரிந்துரைக்கும் தரவிறக்கம் செய்ய உதவியதற்கும் நன்றிகள் பல உரித்தாகுக.

    அதுபோல் தாங்கள் தினந்தோறும் அளித்துவரும் நிப்டி நிலைகளை ஒரு தாளில் எழுதி வைத்துக் கொண்டுதான் சந்தைக்குலேயே நாங்கள் நுழைகிறோம். மிகவும் அருமையாக உதவிகரமாக இருக்கிறது. தயவும் செய்து அதனை ஒருபோதும் நிறுத்திவிட வேண்டாமென தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    மற்றபடி குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு தங்களின் கட்டுரைகளில் எந்தவிதமான குறைகளும் இல்லை. தங்களின் கட்டுரையில் குறை சொல்லும் அளவுக்கு எனக்கு வயதும் இல்லை.

    அவ்வபொழுது தாங்கள் சிறு முதலீட்டாளர்களுக்கு அளித்து வரும் பரிந்துரைகள் மிகவும் அற்புதம். தங்களது பயணத்தினை என்றும் தொடர்ந்திட வேண்டும். நாங்கள் அனைவரும் உங்களுடனேயே எப்பொழுதும் வருவோம்.

    கோவை மாணவன் பற்றிய தகவல்கள் வருத்தத்திற்குரியவை. அவருக்கு முடிந்த உதவிகளை செய்யலாம் என்ற தங்களுடைய நல்ல மனதிற்கு இறைவன் வேண்டிய அனைத்தையும் வழங்க வேண்டும்.

    இதுபோன்ற நிறைய மாணவர்கள் நம் நாட்டில் உள்ளனர். அரசியல்வாதிகள் இலவசம் என்ற பெயரில் அழிக்கும் கோடிக்கணக்கான ரூபாய் மக்களின் வரிப் பணங்களை ஏழை மாணவர்களின் படிப்பிற்கு பயன்படுத்தினால் நம் நாட்டில் கல்வித் தரம் எங்கேயோ சென்று விடும். ஆனால் எங்கே செய்யப் போகிறார்கள் சுயநலவாதிகள். அவர்களைப் பற்றி பேச ஆரம்பித்தால் வீண் மன உளைச்சல்தான்.

    சிறு குறிப்பு: வேலைப்பளு காரணமாக பின்னூட்டம் இடமுடியவில்லை என்பதனை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அலுவலகத்தை முதல் மாடியில் இருந்து இரண்டாம் மாடிக்கு இடமாற்றம் செய்கிறோம். அது சம்பந்தமான பணிகளை கவனித்துக் கொண்டிருப்பதினால் சற்றே வேலைப் பளு அதிகமாக உள்ளது. அதனால்தான் பின்னூட்டம் இட முடியவில்லை. மன்னிக்கவும்.

  16. hello sai sir goodmorning ur feb 2800ce superrrrrrrrrr iam book profit today we can do help for kovai student ,please give the planning i can send money thank u

  17. மதிப்பிற்குரிய சாய் அண்ணா அவர்களுக்கு
    வணக்கம்,
    கோவை மாணவன் பற்றிய தகவல்கள் வருத்தத்திற்குரியவை. அவருக்கு முடிந்த உதவிகளை செய்யலாம் தங்களுடைய நல்ல மனதிற்கு இறைவன் வேண்டிய அனைத்தையும் வழங்க வேண்டும்.
    நான் கோவை மாணவனுக்கு உதவ ரெடி

  18. Posted by SAIKRISHNAMURARI on ஜனவரி 29, 2009 at 6:28 பிப

    //இன்றைய இலங்கை சூழ்நிலையில் இந்தியா இலங்கையில் கிரிக்கெட் ஆட சென்றது தவறு..// YES SIR YOU’RE CORRRCT.INDIAN GOVT NEVER MINDS TAMILS FEELINGS.

  19. நன்றி உங்கள் மனிதாபிமானத்திற்கு !

    “இன்றைய இலங்கை சூழ்நிலையில் இந்தியா இலங்கையில் கிரிக்கெட் ஆட சென்றது தவறு..”

    உங்கள் நீண்ட கால வாசகன் …..

    எல்லாளன் கனடா

  20. Posted by V.SURESH, SALEM on ஜனவரி 29, 2009 at 7:14 பிப

    What we can do for kovai student. please inform us.

  21. “”உங்கள் தளத்தை சமீபகாலமாக தொடர்ந்து பார்வை இடுகிறேன். பின்னூட்டம் எழுதக்கூடாது என்று இல்லை. நான் பங்கு வணிகத்திற்கு வெகு புதியவன்.அதனால் என்ன சொல்வது என்று தெரிவதில்லை! பங்கு வணிகத்தை புரிந்து கொள்ள உங்கள் வலை பதிவு மிகவும் உதவுகிறது””

    GCI MT4 என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்துவிட்டேன். உபயோகிக்க முடியவில்லை.

    I can’t register because of server failure.

    Most of your blog’s are informative but it is beyond my knowledge. Just following to get something.

    If you have any suggestion to register GCIMT4 Please inform us.

  22. மதிப்பிற்குரிய சாய் அண்ணா அவர்களுக்கு
    வணக்கம்,
    கோவை மாணவன் பற்றிய தகவல்கள் வருத்தத்திற்குரியவை. அவருக்கு முடிந்த உதவிகளை செய்யலாம் தங்களுடைய நல்ல மனதிற்கு இறைவன் வேண்டிய அனைத்தையும் வழங்க வேண்டும்.
    நான் கோவை மாணவனுக்கு உதவ ரெடி

  23. வணக்கம் சாய் சார்…

    இடைவிடாது சில பணிகள் காரணமாக ஒரு சில நாட்கள் பின்னூட்டம் இட இயலவில்லை… ஆனால் இன்றைய உங்களது கட்டுரை மிகவும் அருமை.. குறைகளை சுட்டிக்காட்டும் நோக்கில் உங்கள் வலைத்தளத்தை பார்வையிட யாரும் வருவதில்லை..

    ஆனால் ரிலையன்ஸ் trade மிகவும் அருமை… நண்பர்கள் சந்திப்பு இனிதே நிறைவேற வேண்டும். இப்பொழுது கோடைக்காலம் தொடங்க உள்ளதால் மலை மேல் சந்திப்பு எனக்கு உகந்ததாக படுகிறது…

    இப்பொழுது அந்த மாணவனை பற்றி.. ஒரு வருடம் கடன் தந்த வங்கி இந்த வருடம் கடன் தராமல் இருக்க வாய்ப்பு இல்லை.. ஒரு வேலை அப்படியே இருந்தாலும் அந்த மாணவரின் மூன்று வருட செலவை நம்மால் திரட்ட முடியுமா என்று தெரியவில்லை..

    இந்த நிகழ்வுக்கு என்ன காரணம் என்று ஆராய்ந்து, ஒரு வேலை அதற்க்கு வங்கி தான் காரணம் என்றால் நான் நேராக உடுமலை சென்று அந்த மாணவர் மற்றும் வங்கி அதிகாரியை சந்திக்க தயாராக உள்ளேன்…

    நமது நண்பர் இந்த பிரச்சனையின் முழு விவரத்தினை ஆராய்ந்து சொல்வதாக வாக்களித்துள்ளார்.. அவரின் முடிவுக்காக காத்திருப்போம்.

    வாய்ப்பு கிடைத்தும் படிக்க முடியாமல் இருக்கும் தவிப்பு மேலும் பலருக்கு வேண்டாம்…

  24. Posted by ஆத்தூர் ரவி on ஜனவரி 29, 2009 at 10:02 பிப

    அன்புள்ள சாய்க்கு,
    மனதை திறந்து சொல்கிறேன். உங்கள் நண்பர்கள் பட்டளாம் ஏராளம். ஆனால் என்னையும் ஒரு நல்ல நண்பனாக உறவினன் ஆக நினைத்து என் இல்லதுக்கு வருகை செய்தமைக்கு நன்றி…..இந்த சின்ன வயதில் உங்களுக்கு உள்ள் சமுதாய சிந்தனை…..really great….10ம் வகுப்பு படிக்கும் (குறிப்பாக govt school)நல்ல மாணவர்களுக்கு உதவ இங்கு இருக்கும் அனைவரும் கடமை பட்டு உள்ளோம்… தயவு செய்து நாளைய பின்னுட்டத்தில் இதனை பதிவு செய்யவும்…

  25. your website is good

பின்னூட்டமொன்றை இடுக