இன்றைய சந்தையின் போக்கு 23.01.2009


நாம் எதிர் பார்த்ததை போலவே சந்தையின் எதிர்பார்ப்புக்கு மேலாக  ரிலையன்ஸ் -ன் காலாண்டு முடிவுகள் அமைந்துள்ளன…   ஆனால் சந்தையில் expectations என்ற பெயரில் எந்த அளவு வதந்திகளை பரப்ப முடியுமோ அந்த அளவுக்கு  செய்து வைத்தார்கள்..  

அதைவிட கொடுமை என்ன என்றால் நேற்று முன் தின இரவு  ஒருவர் தொலை பேசியில் தொடர்பு கொண்டு அடுத்த சத்யம் ரிலையண்ஸ் ஆம் சார், நாளைக்கு சார்ட் செல்லிங் செய்து வையுங்க டார்கெட் 30-40% ன்னார்… என்ன கொடுமை இதுன்னு நொந்து கொண்டேன்.  இதன் வெளிப்பாடு தான் நேற்றைய பதிவின் முதல் வரி.

அமெரிக்க சந்தைகள்   ஐயா தர்ம துரை… என்று வெள்ளை மாளிகை வாசலில் ஓபாமாவின் அறிவிப்புகளுக்கு காத்திருக்கின்றன.    8000 ல் டவ் ஜோன்ஸ் நிலை கொண்டுள்ளது.  அவரின் சலுகை அறிவிப்புகள் வரும் வரை பெரிய மாற்றம் இருக்காது.   அவர் இன்னும் நம்ம அரசியல் வாதிகளிடம் நிறைய கற்று கொள்ள வேண்டும்.  பதவி யேற்ற அன்றே இந்த இலவச திட்டத்துக்கு கையெழுத்திட்டேன் என்று சொல்ல தெரியவில்லை…  முதலில் தொட்டது   ஆப்கான் பிரச்சினை…   இது தப்பு இல்லையா.. ? 

காலையில் எழுந்த உடன் எனக்கு ஒரு அதிர்ச்சியை தந்தது  SGX Nifty.  அங்கு என்ன நிலைமை என்று பார்க்கலாம் என்று பார்த்தால் 2 அதிர்ச்சி… முதலில் நம்ப வில்லை.   2-3 முறை Refresh செய்து பார்த்தேன்.   நீங்களே பாருங்கள். 

 screen1

1. முதல் அதிர்ச்சி 7.30 மணி அளவில்  எப்பொழுதும் 150-200 என்ற அளவில் தான் Volume  இருக்கும்,  இன்று  7000 க்கும் அதிகம்.   ஏன்.  ஏதவது தவறா?

2.  பிப்ரவரி மாத நிப்டி 242 புள்ளிகல் உயர்வுடன் 2924 ல் வர்த்தகம் ஆனது எப்படி?  

என்னமோ நடக்குது மர்மமா இருக்குது…  

பணவீக்கம் சிறிய அளவில் உயர்ந்துள்ளது…  5.6% versus 5.24%  (WoW).    Indranil Sengupta, Chief Economist, DSP Merrill Lynch.   வரும் மார்ச் 31 க்குள் பணவீக்க விகிதம் 2% அளவுக்கு வரும் என்று ஆருடம் கூறியுள்ளார்… அது அரசு எந்த அளவுக்கு பெட்ரோல் பொருட்களின் விலையை குறைக்கிறது என்பதை பொறுத்து தான் என்று நான் நினைக்கிறேன்.

செபி –  குறிப்பிட்ட சிலர் ஒரு சில பங்குகளை குறிவைத்து வதந்திகளை பரப்பி சரிவடைய செய்தார்களோ / செய்கிறார்களோ என்று விசாரிக்க உள்ளதாக The Economic Times   பத்திரிக்கை செய்தி தெரிவிக்கிறது.  என்ன செய்து என்ன புண்ணியம் இழந்தது இழந்தது தான். 

இன்றைய நிலைகள் – 2828- 2780-2750-2735 –  2710 –  2670 2655  

Advertisements

16 responses to this post.

 1. என்னமோ நடக்குது மர்மமா இருக்குது…

 2. அதே அதிர்ச்சி தான் எனக்கும் சாய் சார்,..

  இப்பொழுது அதன் வால்யும் பதினைந்து ஆயிரங்களை கடந்து செல்கிறது….

  இன்று எத்தனுக்கு சிறிய தம்பியானா ரிலையன்ஸ் communications காலாண்டு முடிவு…

  நடப்பதை வேடிக்கை மட்டும் பார்ப்போம்.

 3. Posted by சுரேஷ் குமார் வீ on ஜனவரி 23, 2009 at 9:32 முப

  சாய் சார், வணக்கம்.

  தாங்கள் கூறியது / கூறுவது முற்றிலும் உண்மை. என்னை பொறுத்தவரை இழந்தது இழந்தது தான். இனி இழப்பதற்கு ஒன்றும் இல்லை…..

 4. //அமெரிக்க சந்தைகள் ஐயா தர்ம துரை… என்று வெள்ளை மாளிகை வாசலில் ஓபாமாவின் அறிவிப்புகளுக்கு காத்திருக்கின்றன.//

  அருமை அண்ணாச்சி….

  SGX Nifty-i நானும் கவனித்தேன்… பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு…

 5. Good morning sai sir. thank u for your briefly views

 6. Posted by chandhrakumar on ஜனவரி 23, 2009 at 10:16 முப

  sai sir good morning

 7. Posted by MUNAWAR BASHA on ஜனவரி 23, 2009 at 11:05 முப

  GOOD MORNING SAI.

 8. Thank you sir !!!

 9. i hold 1000 rpl @ 180 avarage price. what should i do?

 10. hello sai sir

 11. Sir vanakkam…SGX NIFTY பார்ப்பதற்கான வலைத்தளம் எது?

 12. வணக்கம் திரு. சாய் சார்,

  பத்து புள்ள பெத்தவளுக்கு தலைப்புள்ளக்காரி வைத்தியம் சொன்னாலாம். அதுபோல, உங்களுக்கே டிரேடிங் காலா?

 13. Posted by MUNAWAR BASHA on ஜனவரி 26, 2009 at 9:42 முப

  குடியரசு தின வாழ்த்துக்கள்.

 14. குடியரசு தின வாழ்த்துக்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: