இன்றைய சந்தையின் போக்கு 21.01.2009


தவமாய் தவமிருந்து – அமெரிக்க அதிபராக பதவியேற்று விட்டார்…  திரு பராக் ஒபாமா.  மூன்று மாதங்களுக்கு முன்பே வெற்றி பெற்றிருந்தாலும்…  பதவியேற்பு என்ற சம்பிரதாயம் நேற்று இனிதே நிறைவடைந்தது.   அவர்களது சந்தைகளும் சிவப்பு கம்பளம் விரித்து அவரை வரவேற்றுள்ளன.  ( ஆமா சம்பிரதாயத்தை மீறக்கூடாது இல்லையா?) 

இது வரை வாய்ச்சொல் வீரர் ஆக இருந்தவர் செயல் வீரர் ஆக மாற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.   அதேபோல்    மீடியா மற்றும் உலக நாடுகளின் “கறுப்பர்” என்ற அனுதாபத்தை இனி மேலும் அனுபவிக்க முடியாது.   “அமெரிக்க அதிபர்” என்ற பெரிய அண்ணன் பிராண்ட் இமெஜ் க்கு உண்டான அனைத்து விமர்சனங்களையும் எதிர் கொள்ளவேண்டும்.

அடுத்து வரும் நாட்களில் உலக நாடுகள் குறிப்பாக உலக சந்தைகள் அனைத்தும் அமெரிக்காவை உன்னிப்பாக கவனிக்கும் என்றால் மிகையில்லை.   ஈராக் / ஆப்கானிஸ்தான் மற்றும் பொருளாதரம் பிரச்சினைகளில் அவர் எடுக்க உள்ள முடிவுகள் என்ன என்று தெரிந்து கொள்வதற்கு.    இல்லை அவரும் நமது அரசியல் வாதிகளை போல  “ என் கையில் எந்த மந்திரகோலும் இல்லை என்று சொல்ல போகிறாரா?”  என்று பார்க்க வேண்டும்.  

வாரன் பப்பட் –  Don’t expect miracles from Obama. that is going to take time.  என்று சொல்லி உள்ளார். 

நாமும் சிறிய அளவில் – சிவப்பு கம்பள வரவேற்பு அளிப்போம்… என்ன தான் இருந்தாலும் அவர் பெரிய அண்ணன் ஆச்சே!

சந்தை செய்திகள் –  பல துறைகளில் தனக்கென முத்திரை பதித்த L&T நிறுவனம் ஏன் இதுவரை மென்பொருள் துறையில் பெரிய அளவில் வரவில்லை என்ற சந்தேகம் எனக்கு உண்டு.  தற்போது சத்யத்தை வாங்க உள்ளார்கள் என்ற செய்திகள் வருகிறது.    சத்யத்தின் மறு பெயராக எல் அண்ட் டி இருக்கும் என்று  நம்பலாம்.  நம்பிக்கைக்கு குறிய நிறுவனம் ராணுவம் சம்மந்தப்பட்ட பல ஆராய்ச்சி/தயாரிப்புகளில் அவர்களது பங்களிப்பு உள்ளது.  போக்ரான் சோதனையில் அவர்களது பங்களிப்பை நேரடியாக சொல்லாமல் “எங்களது தயாரிப்பு இந்தியாவை பெறுமையடைய செய்யும்”  என்று அவர்களது அனைத்து பஸ்களிலும் ஒரு வரி செய்தி எழுதி இருந்தார்கள்.  என்னை கவர்ந்த மனிதர்களில் எல் அண்ட் டி CEO திரு நாயக் கும் ஒருவர்.

Montek Singh Ahluwalia, Deputy Chairman, Planning Commission.   அரசு மேலும் சில ஊக்கப்பரிசுகளை / சலுகைகளை / உதவிகளை  வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.  இது சந்தை சரிவடைவதை பிரதமர் அலுவலகம் விரும்பவில்லை என்பதையே தெரிவிக்கிறது.  

குறுகிய கால முதலீடாக –  சுஸ்லான் பங்குகளை வாங்கலாம்  தற்போதை விலை 51/-  டார்கெட் 60 – 65/-

Educomp Solutions   –  பங்கினை வரும் நாட்களில் கவனித்து வரவும்..

டவ் ஜோன்ஸ்  –   7870 வரை கீழே சென்று மீண்டு வந்துள்ளது… தற்போது 8020 இல் வர்த்தகமாகிறது.  ஆசிய சந்தைகளும் துவக்கத்தில் ஏற்பட்ட பெரிய சரிவுகளில் இருந்து மீண்டு வருகிறது. 

இன்றைய நிலைகள் 

2833  –  2815 – 2789 – 2760 – 2745 – 2734 – 2718 – 2689

திரு.ஜாஃபர் அவர்கள்  http://sharedirect.blogspot.com/  என்ற பதிவினை துவக்கியுள்ளார்…  வாழ்த்துவோம் வரவேற்போம்.  தமிழில் இது போன்று இன்னும் பலரை எதிர்பார்க்கிறேன்.  அனைவரும் ஒரே மாதிரி எழுதாமால் தனக்கென புதிய பாதையை வகுத்து கொள்ளவேண்டும். 

வாழ்த்துகள் நண்பரே…

நானும் வெறும் லெவல்களை தருவதில் இருந்து மாறு பட விரும்புகிறேன்…  நண்பர்கள்  வேறு என்ன எழுதலாம் என்று ஆலோசனைகள் வழங்க வேண்டுகிறேன்.

============================================================================

நேற்றைய சாதனைகள்  🙂

3000 புட் ஆப்ஷன்  – 200 இல் திங்கள் அன்று பரிந்துரைத்தது- 260 டார்கெட் Achieved  –  3000/- லாபம் ஒரு லாட்டிற்கு.

2800 கால் ஆப்ஷன் – 57 இல் பரிந்துரைத்தது 75 டார்கெட் Achieved –   1000/-  Profit per lot.

Renuka Sugars ப்யூச்சர் 70.50 இல் பரிந்துரைத்தது 1st டார்கெட் 72 Achieved –  7500/- per lot.

 

 

Advertisements

18 responses to this post.

 1. Thanks sai sir

 2. அவர்களது சந்தைகளும் சிவப்பு கம்பளம் விரித்து அவரை வரவேற்றுள்ளன. ( ஆமா சம்பிரதாயத்தை மீறக்கூடாது இல்லையா?)
  Well said !!!

 3. Posted by V.SURESH, SALEM on ஜனவரி 21, 2009 at 9:39 முப

  Sai sir,

  Give some sector analysis every week or once in two days.

  dos and donts for intraday traders/freshers in stock market( intraday traders/investors) atleast once in a week.

  These things make this blog more interesting.

 4. Thinamum kaalaiyil thangaludaiya pathivinaip padiththa piragae marra vaelaikalai thovungugiraen… mikavum payanullathaagavum matrum swarasyamaagavum thangaludaiya valaip poo ullathu. thodarattum thangalidaiya ezhuththu pani. nanri Sai.

  ps: enna idea kodukkalam enru yosiththuk kondirukkiraen.

 5. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்

 6. Good Morning sai sir and good morning to everybody.

 7. I AM EXPECTING A PORTFOLIO LIKE YOU GAVE IN DEEPAVALI TIME

 8. Thank you sir !!!

 9. வாருவதற்கு அளவுகோல் எதுவும் உண்டோ…

  வணக்கம் சாய் சார்…

  சந்தைகள் செய்தி அருமை.. educomp பற்றி எழுதியுள்ளீர்கள்.. எந்த திசையில் பயணம் என்று சொல்லியிருந்தால் நண்பர்கள் பயனடைவர்…

  நிலைகளை தவிர்த்து குறிப்பிட்ட பங்குகளில் நடைபெறும் சுவையான செய்தி எதுவும் குறிப்பிடலாம்..

  அடுத்த மாதம் முதல் தேர்தல் வேளையில் இறங்கலாம்.. 🙂

  இன்று நமக்கான பச்சை விளக்கு வழி தெரிவது போல் உள்ளது…

 10. good morning sai sir

 11. sai sir, intraday dos and donts pathi sonna nalla irukum. Future positions pathina comments daily kodukalam. Portfolio updates matrum kuripita sila pangugal pathi weekly once updtae pannunaneengana romba usefulla irukum sir. Ithanal Ungal velai palu adhigam than endralum, engaluku romba usefulla irukum sir.

 12. THANK YOU VERY MUCH SAI SIR.

 13. இன்று நமக்கான பச்சை விளக்கு வழி தெரிவது போல் உள்ளது… simba sir..??????

 14. நிசார் அந்த வரி நமது சந்தைகளின் opening நகர்வுக்கு மட்டுமே… இப்படி 3.33 க்கு வந்து குண்டக்க மண்டக்க கேக்க கூடாது… 🙂

 15. I think L&T InfoTech has been sold off to somebody, few years ago.

  Why RELIANCE, ITC, HLL(HUL) Doesn’t have STARTED during late 90’s for “S/w service/product companies”, unlike WIPRO?

  For Some reason (or LACK of VISION ?) these PIONEERS have left that option.

  😐

  மாலை வணக்கம் சாய் சார்.

  //..சிவப்பு கம்பளம் விரித்து அவரை வரவேற்றுள்ளன. ( ஆமா சம்பிரதாயத்தை மீறக்கூடாது இல்லையா?) ..//

  ஒபாமா அழுதுருவாப்ல… விட்டுருங்க !!

  //..என் கையில் எந்த மந்திரகோலும் இல்லை என்று சொல்ல போகிறாரா?”..//

  கையே இல்லைன்னு சொல்லுவார், கொஞ்ச நாள்ல…

  //..Educomp Solutions – பங்கினை வரும் நாட்களில் கவனித்து வரவும்..//

  இன்றைக்கே நொர நொரை தாள்ளீருச்சு !!

  //..இன்றைய நிலைகள்

  2833 – 2815 – 2789 – 2760 – 2745 – 2734 – 2718 – 2789 ..//

  யானைக்கும் அடி சறுக்கும் ??

  //.. குறுகிய கால

  //.. குறுகிய கால முதலீடாக – சுஸ்லான் பங்குகளை வாங்கலாம் தற்போதை விலை 51/- டார்கெட் 60 – 65/-..//

  இந்த வார நாணயம் விகடன் படித்தீர்களா ?

  எனது யூகம்:
  ============
  ஒபாமா பதவி காலம் முடியும் முன்னரே ராஜினாமா செய்திடுவார் (பொருளாதார இடியாப்ப சிக்கலின் தன்மை அப்படி !!).

  குறைந்த பட்சம் திரு. கிளிண்டன்-இன் நிர்வாக சாதுர்யம்/சாமர்த்தியம் இல்லை என்றால், நிச்சயம் அவரால் ஏதும் செய்ய முடியாது.

  மேலும் எதிர்பார்ப்பின் “அழுத்தம்” முன் எப்போதும் இல்லாத அளவு மிக அதிகம்.(Media, People & World Leaders)

  I Have a Dream: Martin Luther King
  http://www.indiainfoline.com/news/innernews.asp?storyId=90747&lmn=1&cat=19

 16. Posted by சாய்கணேஷ் on ஜனவரி 21, 2009 at 5:07 பிப

  திரு ராம்பிரசாத்….

  ஓஓஓஓஓஓஓ 2789 தவறு தான்

  அது 2689 🙂 நன்றி…

  நாணயம் விகடன் நான் வாங்குவதில்லை… ஏன் ஏதாவ்து செய்தியா.. 15 ரூபாய்க்கு பெரிதாக ஒன்றும் இல்லை…

  கூடுதலாக … மாதம் இருமுறை என்பது இன்றைய கால கட்டத்திற்கு சரியா இருக்காது..

 17. Posted by வரன் on ஜனவரி 21, 2009 at 6:31 பிப

  ராம்பிரசாத்,

  நாணயம் விகடனில் என்ன சுவாரஸ்யமா இருக்கு…?

  வரன்…

 18. Posted by தண்டபாணி ராஜகோபால் on ஜனவரி 21, 2009 at 11:48 பிப

  Educomp Solutions பற்றி தாங்களின் கருத்து உடனே தெரிந்துவிட்டதே. சரியான கழுகு பார்வை. நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: