இன்றைய சந்தையின் போக்கு 19.01.2009


கடந்த ஒரு வாரத்தில் கஜினி முகமது-வை போல் 5 முறை 2820 ஐ உடைத்து மேலே செல்ல முயற்சித்து உள்ளார்… நமது அண்ணன் நிப்டியார்… ஒவ்வொரு முறையும் 2821 -20 இல் பின் வாங்குகிறார்.   ஏன் இந்த பின் வாங்கல் என்று தான் தெரியவில்லை..

வெள்ளி கிழமை அன்றும் 2826 வரை சென்று 2816 இல் முடிவடைந்துள்ளார்..    பார்ப்போம் இன்று என்ன செய்கிறார் என்று.  

வெள்ளியன்று ரிலையன்ஸ் எதிர் பார்த்ததை போலவே அருமையாக ஆதரவளித்தது காளையின் ஆட்சிக்கு.  

எனது நிலைகள் –     

2992 – 2882 – 2855 –  2835 – 2810 –  2772 – 2750-2745

இந்த வாரத்திற்கான பிவோட் நிலைகள்

3064 – 2957 -2891 – 2784 – 2718 – 2611-2545.

முதலீட்டிற்கு ஏற்ற பங்குகள் 

ADLAPS   –  ASHOK LEYLAND  – ONGC – குறைந்த பட்சம் 10% லாபத்தை எதிர்பார்த்து முதலீடு செய்யலாம்.  (டெக்னிகல் பரிந்துரை)

 சென்ற வாரம் அதிகம் லாபம் தந்த சில பரிந்துரைகள் –

 Rocket Call –  Renuka Sugars  –  67  இல் பரிந்துரைத்தது டார்கெட் – 72   லாபம் 25000/-  per Lot.

Renuka sugars 70 கால் ஆப்ஷன் 2.90 இல் பரிந்துரைத்தது – டார்கெட் – 5.00  –  10000/ per lot.

NTPC  –  170 call option   – 6.50   tgt 12.00   target achieved

NTPC –   180 Call option –  3.00   tgt 5.00   tgt achieved

Nifty  2900 call option –  32  – tgt 57.00   tgt achieved

கடந்த வார கொங்கு நாட்டு பயணம் இனிதே அமைந்தது…. 

பெரிய வணிகர்களுக்கு ( 3 –  5 லட்சத்திற்கும் அதிகமாக டிரேடிங் கேப்பிட்டல் )  தனிப்பட்ட சிறப்பு சேவையை துவங்கியுள்ளதால்.  அது விசயமாக திருப்பூர் சென்றேன். 

ஆனால் –  கடந்த ஆறு மாத காலமாக ஒரு நண்பர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய சொன்ன நண்பரை (ஆர்கே) சந்திக்காமலா திருப்பூர் செலவது என்று முதலில் கரூர் சென்றேன்.   அருமை நண்பர் ஆர் கே அவர்களின் விருந்தோம்பல் மிகச்சிறப்பாக அமைந்தது. இந்த நட்பு என்றும் தொடர ஆண்டவனை பிராத்திக்கிறேன்.  

 திருப்பூரில் – அருண் மற்றும் கோவை, திருப்பூர் நண்பர்களை ஒரே இடத்தில் சந்தித்தோம்.. 

திரு மோகன் ராஜ் / கார்த்தி / திரு பெருமாள் ஆகியோரை அவர்களின் அலுவலகத்தில் சந்தித்தேன்.   இந்த சந்திப்பு நிகழ்வுகள் அனைத்தும் மிகுந்த மனநிறைவை தந்தது.   குறிப்பாக கோவை நண்பர்களின் அன்பினை மறக்க முடியாது.    உங்களின் அன்பினையும் ஆதரவையும் என்றும் தக்கவைத்து கொள்ள மேலும் என்னை மேம்படுத்தி கொள்ளவேண்டும்.

Advertisements

16 responses to this post.

 1. Thank you sir !!!

 2. Posted by V.SURESH, SALEM on ஜனவரி 19, 2009 at 9:23 முப

  Good Morning sir.

  Good Morning to everybody and wish you all a successful trading.

 3. கடந்த இரு வாரங்களாக கம்ப்யூட்டர் சர்வீஸ் பிரச்சனையால் பதிவுகளை பார்க்க இயலவில்லை.நேற்று, விட்டுப்போன அனைத்து பதிவுகளையும் பார்த்தேன் …..ஆஹா..butterfly award வாழ்த்துக்கள் சாய்.எனக்கும் award.மிக்க நன்றி.எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.நன்றி.
  ‘NOTHING IS AS DIFFICULT AS IT APPEARS ,AT FIRST , WHEN VIEWED FROM THE OUTSIDE’இது உண்மை. Trading பற்றி கற்றுக்கொடுத்தவர் சாய் தான்.எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே….

 4. CONGRATS

  MURUGESAN

 5. Posted by chandhrakumar on ஜனவரி 19, 2009 at 9:54 முப

  good morning sai sir……..

 6. வணக்கம் சாய் சார்,

  இன்று பெரிய அண்ணனின் சந்தைகள் விடுமுறை.. ஆகவே எவ்வளவு அரைக்க முடியுமோ அவ்வளவு அரைப்பார் என்று நினைக்கிறேன்.

  இந்த வாரத்திற்கான குறிப்புகள் அருமை..

  முதலீடு பற்றிய விவரங்களை இன்னும் சிறிது விவரமாக குடுத்திருக்கலாம்..

  மறுபடி வருகிறேன்.

 7. Posted by sankarankoil arun on ஜனவரி 19, 2009 at 11:07 முப

  அண்ணனின் சந்தைகள் விடுமுறை.. ஆகவே எவ்வளவு அரைக்க முடியுமோ அவ்வளவு அரைப்பார் என்று நினைக்கிறேன்.

  இந்த வாரத்திற்கான குறிப்புகள் அருமை..

  முதலீடு பற்றிய விவரங்களை இன்னும் சிறிது விவரமாக குடுத்திருக்கலாம்..

  மறுபடி வரு

 8. மதிப்பிற்க்குறிய திரு. சாய்கணேஷ் அவர்களுக்கு,

  தாங்கள் முடியும்போது எனது புதிய வலைப்பக்கம் http://sharedirect.blogspot.com க்கு வருகை புரியவும். மோதிரக்கையால் குட்டு பட ஒரு வாய்ப்பு தரவும்.

  அன்பு நண்பர்களும் இந்த வலைப்பக்கத்திற்க்கு வருகை தந்து, உங்கள் விமர்சனத்தை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  என்றும் அன்புடன்,
  Jaffer

 9. வணக்கம் சாய் சார்,

 10. எனது விருப்பத்துக்கு மதிப்பளித்து கரூர் வந்து சென்றதற்க்கு நன்றி!! என்றும் இந்த நட்பு தொடரும் என்ற உறுதியான நம்பிக்கை உள்ளது..

 11. Posted by MUNAWAR BASHA on ஜனவரி 19, 2009 at 12:30 பிப

  thank you for your view sir.
  yenga oor pakkam eppa varringa sir?
  aavaludan kaathirukkirom.

 12. Hello SAI Sir,

  Nifty Jan Futures Close @ 2851.

  Parinduraigalukku nandri.

 13. வணக்கம் சாய் சார் உங்களை சந்திததில் மிக்க மகிழ்ச்சி உங்கள் கோவை வருகைக்காக நான் & நமது நண்பர்கள் அனைவரும் வெயிட் செயகேறோம்
  நன்றி . ஹலோ சிம்பா வணக்கம்

 14. வணக்கம் சாய் சார்,
  தங்கள் கொங்கு நாட்டு பயணம் இனிதே அமைந்தது மகிழ்ச்சி.
  சேலம் எப்பொழுது வருகை?
  எதிர் பார்க்கிறோம்.
  நன்றி.

 15. Your views are really helping us. Thanks for the for good job done..

 16. Posted by K. Mohanraj, Karur on ஜனவரி 19, 2009 at 7:05 பிப

  மதிப்பிற்குரிய சாய் அவர்களுக்கு,

  தாங்கள் பயணத்தை முடித்துக் கொண்டு பாதுகாப்பாக ஊர் சென்று சேர்ந்திர்களா? தங்களுடைய கொங்கு நாட்டு பயணம் இனிதே அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி.

  தாங்கள் எங்களுடைய அலுவலகத்திற்கு விஜயம் செய்தது எங்களின் பெரும் பாக்கியம். உங்களுடைய பேச்சிலும் முகத்திலும் ஒரு சாந்தமும் அமைதியும் திகழ்ந்தது. அதுதான் உங்களின் வெற்றிக்கு அடிப்படையாக இருக்குமென எண்ணுகிறோம். மேலும் நமது உரையாடலின் போது தங்களின் கூர்ந்த அவதானிப்பு எங்களை வியக்க செய்தது. இந்த கூர்ந்த அவதானிப்பும் உங்களின் வெற்றிக்கு அடிப்படையாக இருக்கலாம். மேலும் உங்களுக்கு நுண்ணுணர்வு அதிகம்.

  நாங்கள் முதலில் தங்களை பார்த்த உடன் பேச்சை எங்கிருந்து ஆரம்பிப்பது, எப்படி ஆரம்பிப்பது என்று தயங்கிக் கொண்டிருந்த பொழுது தங்களின் இயல்பான அன்பான பேச்சு எங்களை மிகவும் கவர்ந்தது.

  எங்களுக்கு ஒரே வருத்தம் என்னவெனில் உங்களை சாப்பிட வைக்காமல் அனுப்பியதுதான். மன்னிக்கவும்.

  அடுத்த முறை வரும் பொழுது அவசியம் எங்களுடன் உணவருந்த வேண்டும்.

  நட்புடன்,
  கே. மோகன்ராஜ், பெருமாள்,கார்த்தி
  கரூர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: