இன்றைய சந்தையின் போக்கு 14.01.2009


 

 untitled1

பால் பானைப் பொங்க! பொங்க

சீதேவி நின்னடங்க

மூதேவி முறிஞ்சோட

பொங்கலோ பொங்கல்…

பொங்கலோ பொங்கல்…..

 

 

===========================================================================

இன்றைய சந்தை –   தினசரி ஒரு பங்கினை குறிவைத்து வதந்திகள் பரப்பபட்டு… அதில் ஒரு கும்பல் குளிர் காய்கிறது..   இரண்டு தினங்களுக்கு முன்பாக DLF…  நேற்றையதினம் அவர்களுக்கு சிக்கியது ROLTA…. அரசும் இதை கட்டு படுத்த வேண்டிய அமைப்புகளும் கை கட்டி வேடிக்கை பார்த்து வருகிறது.   இது நாட்டின் வளர்ச்சிக்கும் நல்லதல்ல்…  ஒரு வணிகருக்கு ஏற்படும் நஸ்டம் பெரிய விசயம் இல்லை… இன்று போனால் நாளை எடுத்து கொள்ளலாம் என்ற மனம் பக்குவ பட்டவர்கள்…  ஆனால் அப்பாவி  சிறு முதலீட்டாலர்கள் என்ன பாவம் செய்தார்கள்..  10-20% லாபம் கிடைக்கும் என்று ஆசைப்பட்டு இங்கு முதலீடு செய்தால் ஒரு நாளில் 60-70% சரிவடைந்தால் என்ன செய்வார்கள்…  இது போல தொடர்ந்து அவர்கள் தண்டிக்க பட்டால் அவர்கள சந்தையை விட்டு ஒதுங்குவதை தவிர வேறு வழி இல்லை.  நிறுவனங்களின் உன்மை நிலை என்ன என்று தெரிவிக்காமல் தினம் ஒரு வதந்திக்கும் வித்திட்டால் வெளிநாட்டு முதலீட்டாலர்களும் உள்ளே வர யோசிப்பார்கள்… என்னடா நாமதான் நாடு நாடா போய் கொள்ளை அடித்தோம் ஆனால் இப்ப இவங்களே கிளம்பிட்டய்ங்க என்று…

சத்யம் நிறுவனத்தின் பங்கு 225 இல் இருந்து 25 க்கு வந்தபோது கேட்ட கூச்சல் யுனிடெக் போன்ற பங்குகள் – 400-500  என்ற விலையில் இருந்து 25 க்கு எப்படி? ஏன் குறைந்தது?  அந்த  சமயம் யாரும் கேள்வி கேட்க வில்லை ஏன்?    இவர் ஓபானா தான் செய்ததை ஒப்பு கொண்டதாலா?  

கேள்விகள் ஆயிரம் ஆனால் பதில்கள்  லேது

தற்போது நடக்கும் செயல்கள் அனைத்தும் நம்ப வைத்து கழுத்தறுக்கும் செயல் தான்….   2200 என்று ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி  3100 க்கு எடுத்து சென்றார்கள்….அந்த இடத்தில் 3600 – 3800 என்று கூச்சலிட்டு இந்த இடத்தில் நிற்கவைத்தார்கள்…. தற்போது 1600 வரை சத்தம் கேட்கிறது.   இதை நம்ப வைத்து எங்கே கொண்டு செல்ல உள்ளார்களோ?   

// சந்தையில் 2710-2680 (ப்யூச்சர்) வரை ஏற்கனவே உறுதிசெய்யபட்ட சரிவுகள் மீதம் இருக்கின்றன.//

 

இதை கடந்த ஒரு மாதத்தில் 10-15 முறையாவது எழுதி இருப்பேன்…

 

அதேபோல எதிர்பார்க்கபட்ட அந்த இலக்கும் நேற்று கிடைத்து விட்டது….  அடுத்து என்ன?    ஏற்றமா சரிவா?…

சரிவுக்கு சான்ஸ் இருக்கா  –  சிறிதளவு இருக்கு…  3140 களில் இரண்டு டாப் கள் அந்த அமைப்பில் பார்த்தால் முதல் டார்கெட் கிடைத்து விட்டது அடுத்த டார்கெட்  2600 வரை செல்ல வேண்டும் ஆனால் அதற்கு எதிராக பல தொழில் நுட்ப குறியீடுகள் இருக்கின்றன….  வாய்ப்புகள் குறைவே..

ஏற்றம் என்றால் – எந்த ஒரு நல்ல செய்தியும் 2820 ஐ கடக்க செய்தால் 3060 வரை எளிதாக நகர்த்த வாய்ப்பு உள்ளது…. 3100 ஐ உடைத்தால் இம்முறை அதிகபட்சம் 3300 வரை கொண்டு செல்ல வாய்ப்பு இருப்பதாகவே கருதுகிறேன்.  இது ஒரு யூகம் தான் ஆனால் குறைந்த பட்சம் இந்த இடத்தில் இருந்து 200 புள்ளிகள் மேலே செல்லும் என்பதில் ஐயம் இல்லை..   இதற்கு இருக்கும் வில்லன் தற்போது பரப்பபடும் வதந்திகள் தான்… அதில் உன்மை இருக்கலாம்..  ஆனால் அதை எப்படி சரி பார்ப்பது என்பது தான் நம் முன் இருக்கும் கேள்வி…   அதற்கான கால அவகாசமும் இல்லை….  5-10 நிமிடத்தில் அவர்கள் பல லட்சம் மக்களின் ஜோலியை சத்தமில்லாமல் முடித்து விடுகிறார்கள்.. (டி எல் எப் – ரோல்டா)…

சிம்பா –  2710 என்று சொல்ல கேப் மட்டும் காரணம் இல்லை…. இன்னும் சில கூடுதல் காரணங்களும் இருந்தது…    அதே போல கேப் பற்றி அதிகம் எழுதி உள்ளார்கள்… ஆனால் அந்த இடைவெளிகள் நிரப்பபடுவதை பற்றி யாரும் அதிகம் எழுதவில்லை ….  இந்த வித்தை நான் சுயமாக கற்றறிந்த ஒன்று தான்…  டெக்னிகல் பார்வையில் எதுவும் காரணம் காரியம் இல்லாமல் நடப்பதில்லை…. கடந்த 6-7 வருட டேட்டாவினை அலசி பார்த்ததில் எனக்கு தெரிந்த முதல் விசயம் எந்த இடைவெளியும் நிச்சயம் நிச்சயம் நிச்சயம் நிரப்பபடும்… அதில் சந்தேகம் வேண்டாம்… ஆனால் அதை எப்போது என்று சொல்வது தான் கடினமாக இருக்கிறது… இந்த விதி பங்குகளுக்கும் பொருந்தும். கடந்த 4 தினங்களில் சில முன்னனி நிறுவன பங்குகள் பல இது போல இடைவெளியை விட்டு இறங்கி வந்துள்ளன… கவனியுங்கள்…. 

இன்னும் நான் முழுதாக எனது அலசலை முடிக்க வில்லை இன்னும் தொடருகிறது…    3600 வரை இல்லை 4290 வரை ஏகப்பட்ட இடத்தை புக் பண்ணி வைத்துள்ளார் நம்ம அண்ணன் நிப்டியார் நிச்சயம் செல்வார் ஆனால் கால தாமதம் ஆகும்.    தற்போது அவர் செல்ல வெண்டிய இடம் 2856.  அந்த இடத்தி 6 புள்ளிகள் இடைவெளி வைத்துள்ளார்.. 

அதே போல சாதனைகள் என்றும் நிரந்தரம் இல்லை அது சச்சினுக்கும் பொருந்தும் சந்தைக்கும் பொருந்தும்..   சந்தை அடுத்து வரும் ஆண்டுகளில் பழைய உயரங்களை உடைத்து புதிய உயரங்களை தொடும்.

நேற்று முன் தினம் – 25 புள்ளிகள் வரை டிஸ்கவுண்டில் வர்த்தகம் ஆன நிப்டி நேற்றையதினம் நாள் நெடுகில் அதை குறைத்து 4 புள்ளிகள் அளவில் முடிவடைந்துள்ளது. 

இன்றுவரும் ஹெச்டிஎப்சி வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் காலாண்டு பரீட்சை முடிவுகள் மற்றும் சத்யத்திற்கு அரசு 2000 கோடிகள் உதவி செய்ய உள்ளதாக வரும் தகவல்கள்….  நாளையதினம் வரும் பணவீக்கம் மற்றும் பெட்ரோல் விலை குறைப்பு நடவடிக்கைகள் போன்றவை உயர்வுக்கு உதவும்.

இன்றைய முக்கிய நிலை      2813. 

 

மீண்டும் ஒரு முறை நினைவூட்டுகிறேன் – நான் இங்கு எழுதுவதை தகவல் என்ற அளவில் மட்டும் எடுத்து கொள்ளவும்…  ஏதோ எனக்கு தெரிந்த சின்ன சின்ன விசயங்களை பகிர்ந்து கொள்கிறேன்….  கற்றும் வருகிறேன்.   Thats All…

நண்பர்கள் சிலர் எப்பொழுது ஒரு வித அவ நம்பிக்கையுடன் பேசுகிறார்கள்… அதை முதலில் தவிருங்கள்..   நல்ல நம்பிக்கையை வளர்த்து கொள்ளுங்கள் முதலில் அது தான் வெற்றிக்கு முதல் படி…
ரண்டு தினங்களுக்கு நண்பர் ஒருவர் கீழ் கண்ட பின்னூட்டத்தை எழுதி இருந்தார்… மெயின் பதிவில் குறிப்பிடவேண்டும் என்று நினைத்தேன்…. இன்று எழுதுகிறேன்…

 

 

// hi sai, as your adv , i got profit Rs 49000. but my invest is 10500 only . iam soo happy. i am very confident now that i will recover my 11.5 lks prior lost. again thanks to you. – NATARAJAN//  இவர் லாபம் பார்த்தது ஆப்ஷனில்.

சந்தோஷம்…. இங்கு நான் சொல்ல வருவது இது போன்று 20-25 வாய்ப்புகள் வருடத்தில்  நிச்சயம் நமக்கு கிடைக்கும் ஆனால் நம்மில் எத்தனை பேர் அவ்வாறு வாய்ப்புகளுக்கு காத்திருக்க தயார்…. அனைவரும் எதிர் பார்ப்பது இது போன்ற லாபத்தை தினந்தோறும் அங்கு தான் பிரச்சினை என்ற முதலை வாயில் நாம் சிக்குகிறோம்.    வாழ்த்துகள் நடராஜ். பொறுமை முக்கியம்.

 

அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

 

Advertisements

21 responses to this post.

 1. Posted by ரவிகுமார் on ஜனவரி 14, 2009 at 9:02 முப

  பொறுத்திருந்தால் பூமியை ஆளலாம் என்பதை அழகாக சொல்லி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் சாய். அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

 2. Hi Sai Ganesh,

  Wishing you a very happy pongal.
  keep up the goood work…

  Thanks,
  Kumar

 3. வணக்கம் சாய் சார்,
  தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும். . .
  இன்றைய பதிவு நன்றாக உள்ளது.
  வாழ்த்துக்கள் நடராஜன் சார். …

 4. சாய் சார் அவர்களுக்கும், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

  வாழ்த்துக்கள் Mr.NATARAJAN.

 5. Posted by Dhanam - -Ramnad on ஜனவரி 14, 2009 at 9:31 முப

  அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

 6. Posted by K. Mohanraj, Karur on ஜனவரி 14, 2009 at 9:34 முப

  உயர்திரு சாய் அவர்களுக்கு,

  மிகவும் அழகாக இன்றைய கட்டுரையையும் கொடுத்துள்ளீர்கள். தகவல்கள் அனைத்தும் மிகவும் பயனுள்ளவை.

  “தற்போது அவர் செல்ல வெண்டிய இடம் 2856. அந்த இடத்தி 6 புள்ளிகள் இடைவெளி வைத்துள்ளார்.. ” – என்ற சுட்டிக்காட்டல் அற்புதம் சாய்.

  உங்களுக்கும் உங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  மற்றும் நமது நண்பர்கள் திரு பைசல் , திரு சிம்பா, திரு PS ,திருமதி ஜான்சி ராணி, திரு RK, திரு சுரேஷ் சேலம் , ஆகியோருக்கும் மற்ற அனைத்து நண்பர்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  இனிய காலை வணக்கம்.

 7. அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

 8. வணக்கம் சாய்,
  தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும். . .

 9. அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

 10. HAPPY PONGAL TO ALL !!!

 11. Wish you Happy Pongal to Sai sir & all friends

 12. நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்!!

  சிறிய இடைவெளிக்கு பிறகு, மிக நல்ல கட்டுரை..நமது கணிப்புகள் நடந்தேறுவது என்றுமே மிகுந்த சந்தோஷத்தை அளிக்கும்..அதுவும், அது நடக்கே வாய்ப்பே இல்லை என்ற நிலையில் இருந்து கணித்து, பின் அது நடந்தேறினால் அது மிகவும் விசேசஷமான சந்தோஷத்தை தரும்..நேற்றைய 2710 நிலைகள் அத்தகைய சந்தோஷத்தை உங்களுக்கு அளித்து இருக்கும் என்பது நிச்சயம்…இது உங்களது தன்னம்பிக்கைக்கு மேலும் உரம் சேர்க்கும்..

  // நண்பர்கள் சிலர் எப்பொழுது ஒரு வித அவ நம்பிக்கையுடன் பேசுகிறார்கள்… அதை முதலில் தவிருங்கள்.. நல்ல நம்பிக்கையை வளர்த்து கொள்ளுங்கள் முதலில் அது தான் வெற்றிக்கு முதல் படி//

  முழுமையான தங்களை ஓரிடத்தில் ஒப்படைத்தால் மட்டுமே வெற்றி கிட்டும். அது எந்த இடம் என நிறைய முறை யோசிக்கலாம், நிறைய சோதனைகள் செய்து பார்க்காலாம்.ஆனால், ஒரு தடவை முடிவெடுத்து விட்டால் தடுமாறக் கூடாது..100% நம்பிக்கை வைத்து செயல்பட்டால், நல்ல பலனை அறுவடை செய்யலாம். இது ஏகப்பட்ட தகவல்களை நமக்குள் திணிக்கும் உலகம். ஒருசமயம் எல்லாமே நல்லதாய் தெரியும், ஒரு சமயம் எல்லாமே நமக்கு எதிராய் தெரியும்..நாம் பல இடங்களில் இருந்து தகவல்களை பெற்று அதன் மூலம் பயன் பெறலாம் என நினைத்தால் தடுமாற்றமும் வேதனையுமே மிஞ்சும்..அதனால்தான் சொல்கிறேன்..நம்பிக்கை முக்கியம்..

 13. dear sai market march 3ku 3700 varai pokalammunnu nenaikkurom if i take only long long long long

 14. இன்று பொங்கல்.. நாளை மாட்டுப்பொங்கல்… சரி ஜலிக்க்ட்டு காளைகளை தயார் செஞ்சுட்டங்களா என பார்க்க சென்றேன்.. அங்க போனா… அண்ணே நேத்தே எல்லா காளைகளை அவுத்து விட்டாச்சு என்று சொன்னாங்க…

  அம்புட்டு பயலுவளும் கொம்பு சீவி விட்டதுங்க.. பொல்லாத பயலுவ..மக்கா கொஞ்சம் சூதானமா இருந்துக்கோங்க…

  தனி முதல் நாள் வணக்கம் சாய் சார்…

  பொங்கல் வேளையில் இருந்ததால் சற்று தாமதம்… அங்கே சர்க்கரை பொங்கல். சந்தையிலோ அதற்கும் மெல். இன்றைய கட்டுரை அருமையாக இருந்தது…

  நிப்டி நிலைகளை பற்றி நாம் பேச ஒன்னும் இல்லை.. அது பாட்டுக்கு போய்க்கிடே இருக்கும்…

  இனி non stop கொண்டாட்டம் தான்…

  திருப்பூர் மாநகர மக்கள் சார்பாக இங்கு இன்று வருகை தரும் அஞ்சா நெஞ்சன் அண்ணன் திரு.சாய் கணேஷ் அவர்களை வருக வருக என்று அன்புடன் வரவேற்கிறோம்.

 15. Posted by Moneybharati.M.சரன் on ஜனவரி 14, 2009 at 12:09 பிப

  “டாப்10ஷேர்ஷ்” ஆசிரியர் திரு.சாய்கனேஷ் மற்றும் வாசகர்கள் அணைவருக்கும் பொங்கல் வழ்த்துக்கள்!

 16. Posted by சாய்கணேஷ் on ஜனவரி 14, 2009 at 12:34 பிப

  அருண் –

  அஞ்சா நெஞ்சன் எல்லாம் இல்லை…… பார்க்க நரேஷ் குப்தா மாதிரி தான் இருப்பேன் …… பார்த்துட்டு அவனா நீன்னு கேட்டுடாதிங்க

 17. Posted by V.SURESH, SALEM on ஜனவரி 14, 2009 at 12:44 பிப

  Happy pongal to sai sir.

  Happy pongal to everybody.

 18. today my nifty close level @2814

 19. Posted by MUNAWAR BASHA on ஜனவரி 14, 2009 at 2:50 பிப

  சாய் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய
  தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.

 20. அனைவருக்கும் என் இனிய பொங்கல், தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: