இன்றைய சந்தையின் போக்கு 13.01.2009


3030 – 2929 – 2828-2727

 

 

இது பெரிய வெற்றி கிடையாது இருந்தாலும் வேடிக்கையாக நண்பர்களிடமும் வலை உலகில் பல இடங்களிலும் சொல்லிவந்தேன்  2727 வரும் வந்தால் இந்த அனைத்து எண்களிலும் கார் வாங்குகிறேன் என்று…  இது திமிரினாலோ ஆணவத்தாலோ அல்ல..

 

இந்த கணிப்பு தான் என்னை அதிகம் கவனிக்க வைத்தது.. கூடவே அதிகம் விமர்சனங்களையும் வாங்கி தந்தது.  என்ன கால தாமதம் ஆனது… இதனால்  ஆப்ஷன் வர்த்தகர்களுக்கு பயன் இல்லாமல் போய் இருக்கலாம்…ஆனால் ப்யூச்சர் வர்த்தகம் செய்பவர்களுக்கு நிச்சயம் பலனை தந்தது.

 

 

ஆகையால் இதை என்றும் நினைவில் கொள்ள 3030 மற்றும் 2727 என்ற இரு எண்களையும் முன் பதிவு செய்கிறேன்.

 

தம்பி சிம்பா.. கோவை சக்தி, குடந்தை விஜயன் மற்றும் சில நண்பர்கள் நேரில் சந்திக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கேட்டு வருகிறார்கள்.  நான் ஆஸ்கார் ரவிசந்திரன் போல என்றும் பின் சீட்டில் இருக்க விரும்பும் ஆள்…  ஆகையால் சந்திப்பை கடந்த ஆறு மாத காலமாக தள்ளி போட்டு வந்தேன்

 

அதிகம் வற்புறுத்தவும் சும்மா சொல்லி வைத்தேன் 2727 வந்தால் கொடைக்கானலில் சந்திப்போம் என்று.  

 

இனிமேலும் தள்ளி போட்டால், ஆட்டோவில் ஆள் வரும் என்று எச்சரித்துள்ளதால்… கொடைக்கானல் அல்லது பாண்டிச்சேரியில் ஒரு டீ பார்ட்டி (Official) யுடன் கூடிய சந்திப்பாக ஏற்பாடு செய்யலாம் என்று முடிவுசெய்துள்ளேன். அதற்கான ஏற்பாட்டை சிம்பா மற்றும் ஆர் கே அவர்கள் செய்வார்கள்.. இடம்… தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் பின்னர் அறிவிக்கப்படும்…

 

அடுத்து வரும் நாட்களில் டெக்னிகல் வகுப்புகளை எடுக்கவும் இச்சந்திப்பு ஒரு முன்னோடியாக இருக்கட்டும். 

 

 

இன்றைய சந்தை….   பொங்கல் வந்து விட்டது… மாட்டு பொங்கல் அன்று நடைபெறும்  பிரசித்தி பெற்ற காரைக்குடி-சிராவயல் மஞ்சு விரட்டிற்கு (ஜல்லி கட்டு வேறு மஞ்சு விரட்டு வேறு) அனைவரும் காளைகளை தயார் செய்து வருகிறார்கள்..  சரி நாமும் இன்று அல்லது நாளை காளைக்கு மாறுவோமா?   

 

நிப்டியின் அதிகமான பங்குகள் ஒரு ஏற்றத்திற்கு தயாரான நிலையில் உள்ளது சின்ன சாதகமான செய்திகள் வந்தாலும் சந்தையை மேலேடுத்து சென்றுவிடும்.

Positional Traders சார்ட் நிலைகளை தவிர்ப்பது நல்லது….  தினவர்த்தகம் ஓகே…  இன்று சந்தை சில பாதகமான செய்திகளை எதிர்பார்த்து நேற்றையதினம் 28 புள்ளிகள் வரை டிஸ்கவுண்டில் டிரேடு ஆகியுள்ளது… அப்படி பாதகமான செய்திகள் வராத சமயத்தில் Short Covering  வேகமாக இருக்கும்.  

 

26892719, 2768, 2790, 2810 2843, 2910, 2928

Advertisements

24 responses to this post.

 1. Posted by K. Mohanraj, Karur on ஜனவரி 13, 2009 at 9:29 முப

  உயர்திரு சாய் அவர்களுக்கு,

  இனிய காலை வணக்கம்.

  தாங்கள் கடந்த இரு வாரங்களாக கூறு வந்த நிப்டி நிலைகளை சந்தை நேற்று அடைந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. தாங்கள் அந்த எங்களில் கார் வாங்குவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தாங்கள் மீது சிலர் ஏற்படுத்திய விமர்சனங்களுக்கு சந்தை நேற்று பதில் கூறியிருக்கிறது. அவர்கள் இதனை உணர்ந்து கொண்டு இனிமேலாவது ஒழுங்காக நடக்க வேண்டும்.

  தங்களுடைய நடக்கப் போகும் சந்திப்பு குறித்து மிக்க மகிழ்ச்சி. தங்களிடம் இருந்து டெக்னிகல் வகுப்புகளை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறோம்.

  “Positional Traders சார்ட் நிலைகளை தவிர்ப்பது நல்லது” – என்ற வரிகளுக்கு மிக்க நன்றி. எங்களை பாதுகாக்கும் ஒரு கவசம் போல் மேற் சொன்ன வரிகள் இருக்கிறது. ஏனெனில் எனது நண்பர்கள் சிலர் சார்ட் நிலைகளில்தான் இருக்கிறார்கள். அவர்களை வெளிவர சொல்கிறேன்.

  2790, 2810- என்ற இரு நிப்டி நிலைகள் மிகவும் அருமை சாய்.

  அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு மற்றும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

 2. Posted by V.SURESH, SALEM on ஜனவரி 13, 2009 at 9:37 முப

  Good Morning sai sir and thank you very much for your views.

  Good Morning to everybody and wish you all a successful trading.

  Happy pongal to everyone.

 3. Posted by sankarankoil karadi arun on ஜனவரி 13, 2009 at 9:50 முப

  dear mr.sai . when will u arrange the meeting. pls inform me.

  enakku inform pannama meeting nadanda naan aluthiruven.hmmmmmmmmmmmmm.

  simba meeting varumbodu nalla sarakku vangi varavum

 4. hello sai sir happy pongal sir iam joined your party at kodai? please technical class start
  immediatly sir thanks

 5. வணக்கம்
  இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

 6. Hello

  Good Morning Sir.

  Happy PONGAL to YOU, FAMILY & FRIENDS & Fellow FEEDBACK writers.

  With Regards…

  🙂

 7. கண்டிப்பா வரும்னு தெரியும்..என்ன ஒரு 7 நாள் லேட்டா வந்துட்டார்..2727 னைதான் சொல்கிறேன்..வாழ்த்துக்கள்..எல்லோரும் 3200, 3600 ன்னு சொன்னப்ப..2929,2828,2727 ன்னு சொன்னீங்க..இப்ப எல்லோரும் 2600,2200,1800 ன்னு சொல்றப்ப, காளையா மாறுவோம்ங்கறீங்க..என்னமோ போங்க..ஒரே குயப்பமா இருக்கு!!!:)

  ஒரு வழியாக சந்திப்புக்கு ஒத்துகொண்டதற்க்கு நன்றி!!(ஆட்டோ அனுப்புவதாக சொன்ன நண்பர்களுக்கு ஒரு ஓ போட்டாச்சு!!!)..

 8. வணக்கம் சாய் சார்,

  இன்று பான்சி நிலைகள் என்று நீங்கள் கொடுத்துள்ளது கீழ் நோக்கி மட்டும் அல்ல… மேலே சந்தைகள் நகரும் போது இதே இலக்கினை கொண்டு செயல்படலாம் போல தெரிகிறது…

  சந்திப்பு நிகழ்ச்சியினை முகப்பு பக்கத்தில் போட்டதற்கு நன்றி.. (யாருப்பா அது, ஆட்டோவே ஆப் பண்ண சொல்லுப்பா). ஒரு பத்து அல்லது பதினைந்து நாட்க்களில் பயண விவரங்களை முடிவெடுப்போம்.

  தற்ப்பொழுது நீங்கள் நீல வண்ணத்தில் கொடுத்துள்ள நிலைகளுக்கு இடையில் சந்தைகள் ஊடாடுகிறது…

  எந்த நேரத்திலும் அமெரிக்கா அண்ணனிடம் இருந்து இனிப்பான செய்திகள் வரலாம்…

  நாமும் தயாராவோம்.

 9. Happy PONGAL to YOU, FAMILY & FRIENDS

 10. அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

 11. Thank you sir !!!

 12. dEAR SAI AND FRIENDS
  இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  MURUGESAN
  ABUDHABI

 13. Hello Sai sir.
  Why Don’t update winners club page?

 14. hello sir your fancy target 2727 achived happypongal next 2626

 15. Some intraday techniques(setups) are explained in the following link.Interested guys could visit: http://thepatternsite.com/setups.html

 16. வணக்கம் நண்பர்களே…

  இந்த பின்னூட்டம் இடுவதற்கு முக்கிய காரணம் சந்தைகள் 3000 நிலைகளில் இருக்கும் பொது இனி திரும்பி பார்க்கவே தேவை இல்லை என்று சொன்னவர்களுக்கு…

  இந்த நான்கு நாட்க்களில் நடந்த விஷயங்கள் அவர்களின் தலையை திருப்பியுள்ளது…

  நம்ம சாய் சார் எனக்கும் ஒரு சில நண்பர்களுக்கும் gap filling தியரி என்ற அருமையான ஒன்றை கற்றுக்கொடுத்தார். அதன் படி சுமார் ஒருமதங்களுக்கு முன்னர் கிடைத்த gap up என்ற வெற்று இடம் நிரப்பப்படாமல் இருந்தது… இன்று வரை… ஆனால் இன்று அந்த இடம் நிரப்பப்பட்டுள்ளது…

  இங்கு ஒன்றை என்னால் ஒருதிபட கூற முடியும். அதாவது மேலே 3600 நிலைகள் வரை சுமார் 6 நிரப்பப்டாத வெற்றிடம் உள்ளது… இந்த நிலைகளுக்கு கீழ் சந்தைகள் கண்டிப்பாக செல்ல வாய்ப்பு இல்லை…

  இதனை பற்றி பேசும் பொழுது ஒரு அநுபவஸ்தர் gap filling என்று எதுவும் இல்லை. அது வெறும் evacuated gap என்று சொல்லி நகையாடினார். இன்னும் சொல்லபோனால் இனி எந்த வித புரளி வந்தாலும் சந்தைகளின் திசை தீர்மானிக்கப்பட்டு விட்டது…

  இப்பொழுது நான் long position இல் இருக்கிறேன். இந்த மாதத்துக்குள் மீண்டும் சந்தையை 3000 நிலைகளுக்கு மேல் எதிர்பார்கிறேன். இதற்க்கு காரணம் நம்ம சார் குடுத்த ஒரு சில யுக்க்திகள் தான்…

  ஒரு சில பங்குகளின் மேல் வரும் வீணான புரளிகளை நம்பி உங்கள் கண்முன் இருக்கும் வாய்புகளை தவறவிட்டு விடாதீர்கள்….

  தை பிறந்தால் வழி பிறக்கும்.

  அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்.

 17. பாண்டி சந்திப்பு என்ன ஒரு இனிப்பான செய்தி. சரி எங்களை போல் வெளிநாடு வாழ்பர்களுக்கு யாரவது விடியோ எடுத்து You Tube, MSN அல்லது Yahoo video முலம் பகிர்ந்து கொள்ளமுடியுமா? நாங்களும் உங்களை சந்தி்ப்பை எதிர்நோக்கி காத்து இருக்கின்றோம். இதனை யாரவது சாய் அவர்களின் அணுமதியுடன் செய்தால் நான்றாக இருக்கும்.

  சிம்பா மற்றும் RK அவர்கள் இந்த வேண்டுகோளுக்கு சாய் அவர்களை இனங்க வைத்து உதவ வேண்டும்.

 18. அன்பு சாய் சார்,
  எங்கள் அன்புக்கு இணங்கி டூர் செல்ல சம்மதிரதரகு மிக்க நன்றி .இனிய பொங்கல் போனஸ் ஆக டெக்னிகல் வகுப்பு தொடங்க உள்ள செய்தி இன்ப அதிர்ச்சி மிக்க நன்றி ,
  அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

 19. Posted by ரவிகுமார் on ஜனவரி 13, 2009 at 6:35 பிப

  அன்புள்ள சாதனை சாய்க்கு,

  டிசம்பர் 5 ம் தேதி ஏற்பட்ட Gap ஐ இன்று Fill செய்து nifty ஐ மேலே செல்ல விட்டுவிட்டிர்கள் என்றால் மிகையாது.எல்லோரும் 3600, 3800 என்று சொல்லி வந்தபோது நீங்கள் மட்டும் 2727 என்றீர்கள்.இப்போது எல்லோரும் 2600, 2400 2000 என்று சொல்லும் போது நீங்கள் மட்டும் மேல் நோக்கி சொல்கிறீர்கள் அல்லது செல்கிறீர்கள்….சாதனைகள் தொடரும்…. என்பது மட்டும் நன்றாக தெரிகிறது்….தொடரட்டும் உங்கள் சாதனைகள்….

 20. happy pongal to all

 21. பைசல்,

  கண்டிப்பாக உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுகிறோம்..if video is not possible atleast few photos…

 22. வணக்கம்,

  //இந்த கணிப்பு தான் என்னை அதிகம் கவனிக்க வைத்தது.. கூடவே அதிகம் விமர்சனங்களையும் வாங்கி தந்தது. //

  உங்களுக்கு ஊக்கம் அளிக்கும்
  விமர்சனங்களை மட்டும்
  ஏற்றுக்கொள்ளுங்கள் அன்னப்பறவைபோல.
  தேவையற்ற விமர்சனங்களை எண்ணி வருத்தப்படாமல் விலக்குங்கள்.

  நீங்கள் nifty ஒரு திசையில் போகும்பொழுது அதற்க்கு எதிர் திசையில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் இலக்கினை நிர்ணயித்து சொல்லும்பொழுது நம்ப முடியாமல் விழி விரிய வைத்துவிட்டு பின் அந்த இலக்கினை அடைந்ததும் புருவம் உயர்த்தி பார்க்கச்செய்து விடுகிறீர்கள்.

  இதுதான் சாய் சார் பாணி போல.

  சாய் சார் அவர்களுக்கும்,
  அவரது குடும்பத்தினருக்கும் மற்றும்
  அனைவருக்கும்
  இனிய தமிழ் புத்தாண்டு மற்றும்
  பொங்கல் திருநாள்
  நல் வாழ்த்துக்கள்.

 23. Wish you all A HAPPY PONGAL

 24. எனது கோரிக்கைக்கு செவி சாய்த்த RK அவர்களுக்கு நன்றி !!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: