இன்றைய சந்தையின் போக்கு 12.01.2008


சத்யம் நிறுவனத்தின் நிர்வாகத்தை அரசு முடக்கி அதிரடியாக புதிய இயக்குநர்களை நியமித்து உள்ளது.   ஹெச் டி எப் சி வங்கியின் தீபக் பாரேக்,   நாஸ்காம் முன்னாள் தலைவர் கிரண் கார்னிக் மற்றும் செபி-யின் முன்னாள் உறுப்பினர் அச்சுதன்  ஆகியோரை முதல் கட்டமாக நியமித்துள்ளது. இவர்கள் கூடி புதிய தலைவர் மற்றும் மேலும் 10 இயக்குநர்களை தேர்ந்தெடுப்பார்கள் என்று தெரிகிறது.    இச்செய்தி சந்தையில் சின்ன நம்பிக்கையை ஏற்படுத்தும் .  ஆனால் கால தாமதமான முடிவு… இம்முடிவை பிரச்சினை வெளியாகிய புதன் அன்று இரவோ அல்லது அடுத்த நாளோ எடுத்திருந்தால் சரியாக அமைந்திருக்கும்.

தன் நிறுவனத்தின் வளர்ச்சியை தனது வளர்ச்சியாக நினைத்து – தொழில் ரீதியான போட்டியில் முன்னிலை பெறவேண்டும் என்ற பேராசையில் செய்த தவறு இன்று ராமலிங்க ராஜுவை கொண்டு சென்று உள்ள இடம் சஞ்சல குடா சிறைச்சாலை.    

ஏற்கனவே சத்யத்தின் முதலீட்டாளர்கள் அனைத்தையும் இழந்து விட்டார்கள்…  ஆனால் தற்போது மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளது சத்யத்தின் ஊழியர்கள்தான்.   இந்த மாதம் சம்பளம் போடப்படுமா…?   அல்லது வேறு வேலை பார்க்க வேண்டுமா…? என்று உச்ச கட்ட குழப்பத்தில் இருக்கிறார்கள்.   இச்சூழ்நிலையில் நாங்கள் சத்யத்தின் ஊழியர்களை வேலைக்கு எடுக்க மாட்டோம் அவர்கள் tainted peoples என்று ஒரு முன்னணி நிறுவனம் அறிவித்து உள்ளது மிகவும் கண்டிக்க தக்கது.  போட்டி நிறுவனத்தின் பிரச்சினையில் தான் குளிர் காய நினைப்பதும்… நிர்வாகத்தின் செய்த தவறுக்கு ஒட்டு மொத்த ஊழியர்களையும் இப்படி சொல்வதும் அந்த மனிதருக்கு அழகு அல்ல.    ஆனால், திரு. தீபக் பாரேக் இயக்குநர் ஆவதால் சம்பள பிரச்சினை இருக்காது…   என்ன புதிய நிர்வாகத்திற்கு பெரிய சிக்கல் ஊழியர்களை தக்க வைப்பதாகத்தான்  இருக்கும்.

நாடு பல சத்ய சோதனைகளில் இருந்து மீண்டு வந்துள்ளது…. தற்போது சந்தைக்கு வந்துள்ள சத்ய சோதனையில் இருந்தும் மீண்டு வரும் என்ற நம்பிக்கை உள்ளது.

பெரிய வணிகர்கள்  நீண்டகால முதலீடாக –  சத்யத்தின் பங்குகளை 1000 அல்லது 2000 என்று 25 -30 விலையில் வாங்கலாம்.. 100% ரிஸ்க் என்ற அளவில்.  

=============================================================================

சரி இன்றைய சந்தைக்கு வருவோம்….   எப்படி இருக்கும்..?

மீண்டும் சத்யத்திற்கு வருவோம்….   இன்று முதல் நிப்டி 50 யில் இருந்து இந்நிறுவனம் நீக்கப்பட்டு ரிலையன்ஸ் கேப்பிட்டல் இடம் பெறுகிறது.  அதன் தாக்கம்.

சத்யத்தின் FnO வர்த்தகம் நிறுத்தபட உள்ளதால்,  அனைத்து F&O Contracts ம் (ஜனவரி/ பிப்ரவரி/மார்ச்)  29/1/2009 அன்றே முடிவுறும்.

தற்போதைய சூழ்நிலையில் 2800 மிகவும் வலுவான சப்போர்ட்டாக உள்ளது அதை உடைத்தால் 2700/2680 வரை செல்லும். 

அவ்வாறு இல்லாமல் – 2890 /2910  என்ற மேல் நிலைகளை கடந்தால் 3060 வரை சந்தை மேலே செல்லும். 

2689,  2719, 2768,,2790, 2810,  2843, 2910, 2928, 2965, 2985, 3030 

பயணத்தில் இருப்பதால் விரிவாக எழுதவில்லை…

Advertisements

20 responses to this post.

 1. Posted by Bharathirohith on ஜனவரி 12, 2009 at 8:47 முப

  VANAKKAM SAI

 2. Sai, one small clarification…

  Narayana Murthy told that he will not buy a ‘tainted company’ like satyam… he did not mention the employees of satyam as ‘tainted’.

  And regarding the recruitment of satyam employees, here goes his quaote : “We have asked our recruitment staff not to poach anybody from Satyam. The company is in the middle of a crisis and people will jump ship,”. — Infosys Technologies HR, education & research and administration director TV Mohandas Pai.

  ஒரு software companyin பெரிய சொத்து அதன் employees தான். அப்படி இருக்க infosys நினைத்தால் satyam மின் சிறந்த ஆட்களை தனது நிறுவனத்திற்கு மிக எளிதாக மிகவும் குறைந்த சம்பளத்திற்கு ‘கடத்த’ முடியும். ஆனால் சத்யம் மின் இந்த இக்கட்டான நிலையில் குளிர் காயக் கூடாது என்ற எண்ணத்தினால் தான் சத்யம் employees ஐ infosys hire செய்யாது என கூறியுள்ளார். அனால் சத்யம் அடுத்த மாத சம்பளத்தினை தரவில்லை என்றால் இக்கட்டான சூழ்நிலை தான்.

  நன்றி.

 3. Posted by V.SURESH, SALEM on ஜனவரி 12, 2009 at 8:56 முப

  Good Morning sai sir and thank you very much for your views sir.

  Good Morning to everybody and wish you all a successful trading.

 4. Posted by சாய்கணேஷ் on ஜனவரி 12, 2009 at 9:54 முப

  dear senthil..

  thanks for your info..

  அவர் கம்பனியை மட்டும் சொல்லியிருந்தால் அது தவறில்லை… ஆனால் அதற்கு மேலும் பல கருத்துகளை அவர் சொல்வது தேவையற்றது என்பதே… எந்த ஒரு முதாலாலியும் (நான் உட்பட) அடுத்தவனை குறை சொல்ல முடியாது. அனைவருக்கும் தெரியும் நாம் என்ன செய்கிறோம் என்று… நான் சத்யத்துக்கு சப்போர்ட் செய்யவும் இல்லை அல்லது மற்றவர்களை குறை சொல்லவும் இல்லை…

  எனது வருத்தம் – ஊழியர்களின் மனநிலைமையை பற்றியது தான்.

  ஒரே துறையை சார்ந்தவர்கள் அடுத்தவர்களை குறை சொல்லும் போது அது சரியாகவே இருந்தாலும் தவறாகத்தான் தெரிய வரும்.

  தற்போது தேடியதில் கிடைத்த பதிவு – இதை எழுதியவரும்… கலந்துரையாடியவர்களும் ஐ டி துறையை சார்ந்தவர்களே என்று தெரிகிறது அதில் எது உண்மை எது தவறு என்று நீங்களும் சரி பார்த்து கொள்ளுங்கள்..

  எனக்கு அத்துறையில் உங்களை போன்ற ஒரு சிலரை தவிர அதிகம் தொடர்பு இல்லை… உங்கள் நண்பர்கள் பல நிறுவனங்களில் இருப்பார்கள் ஆகையால் அதிகமான் தகவல்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன்

  http://santhoshpakkangal.blogspot.com/2009/01/blog-post.html

  நன்றி…

 5. திரு சாய் மற்றும் நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம்

 6. இனிய காலை வணக்கம்

 7. வணக்கம் சாய் சார்…

  நான் தான் அப்போவே சொன்னேனே, நம்ம சந்தையை மட்டும் நம்பி ஏதும் செய்ய கூடாதுன்னு… இப்போ பார்த்தீங்களா, போதும் நிறுத்துன்னு சொன்னாலும் இல்ல நான் 2700 வந்து தான் நிப்பேன்னு அடம் புடிக்கிறான்.

  பாசக்கார பய…

 8. Posted by சாய்கணேஷ் on ஜனவரி 12, 2009 at 10:48 முப

  சிம்பா தப்பு… இந்த சந்தையை நம்பிதானே 2727 Fncy target சொன்னேன்..

  ஏற்கனவே நாம் எதிர்பார்த்த டார்கெட் தானே இது..

  மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன்..

 9. //நான் தான் அப்போவே சொன்னேனே, நம்ம சந்தையை மட்டும் நம்பி ஏதும் செய்ய கூடாதுன்னு… இப்போ பார்த்தீங்களா, போதும் நிறுத்துன்னு சொன்னாலும் இல்ல நான் 2700 வந்து தான் நிப்பேன்னு அடம் புடிக்கிறான்.

  பாசக்கார பய…//

  🙂 … paasam konjam overah thaan pongi vazhiyuthu…

 10. TODAY NIFTY WILL CLOSE AT 2705

 11. எத்தன நாளைக்கு தான் nifty will close at… என்று சொல்வது….

  இன்னைக்காவது nifty closed at…என்று சொன்னால்…

  today nifty closed at 2773.1 🙂

 12. அதுதான் சார்… நாம கொஞ்சம் அதிகமா நம்பிட்டோம். அதான் நாமலே வேண்டாம்டா ராசா என்று சொன்னால் கூட இன்னைக்கு ஒரே அடியா 2728 அடிச்சுட்டான்…

 13. ஆனா இதுக்கு கீழ எதுனா பான்சி இலக்கு ஏதும் வைக்காதீங்க… இருந்தத கவர் பண்ணிட்டேன்,,,

  அப்புறம் அழுதிருவேன்…

 14. இதனால் சகலமான நண்பர்கள் அனைவருக்கும் சொல்லிக்கொள்வது என்னவென்றால், நமது fancy இலக்கை நிப்டி இன்று அடைந்ததால், பொங்கல் பரிசாக அனைவரையும் தமது சொந்த செலவில்,,, நம்ம அண்ணன், குரு, நண்பர் திரு.சாய் கணேஷ் அவர்கள், கொடைக்கானல் அலைத்து செல்வார்.

  முன்பதிவு ஆரம்பம்…

 15. அருண்,

  என்ன இந்த 2727 டிசம்பரில் வந்து இருந்தால், சாய் அவர்களை கோவாவுக்கே அழைத்துச் செல்ல சொல்லி அடம் பிடித்து இருக்கலாம்..

  சென்ற மாதம் ஷார்ட் போய்..சாய் அவர்களின் ஆலோசனையின் பேரில் இந்த மாதத்துக்கு roll over செய்தவர்களுக்கு பேன்சி டார்கெட் achieve செய்த இந்த நாள் ஒரு இனிய நாள்!!

 16. vanakkam sai sir,

  nifty thangal ilakkinai adainthamaikku vaazhthukkal.

  nandri.

 17. ஆமாம் r.k சார்.. எப்படி பார்த்தாலும் ஒரு இருபது நாள் லேட். அதனாலென்ன… பாட்டில் உள்ள பிழைக்கு தகுந்த மாதிரி பரிசை குறைத்துக்கொண்டு மீதியை தாருங்கள் மன்னா என்று சொல்றது மாதிரி.. ஒரு சில சலுகைகளை குறைத்துக்கொள்ளலாம்…

  எப்படி நம்ம யோசனை????

 18. Hello

  Good Morning SAI Sir.

  Happy PONGAL to YOU, FAMILY & FRIENDS & for Fellow FEEDBACK Writers.

  With Regards…

  🙂

 19. வருகைக்கு நன்றி அண்ணா…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: