பட்டாம் பூச்சி விருது


சின்ன வயசுல பாப்பாத்தி (பட்டாம் பூச்சி) பிடித்து விளையாடியது,   ம்ம்ம்ம் அது ஒரு கனாக்காலம். 

ஆனா இன்று திடீருன்னு எங்க டாக்டர் கிட்ட இருந்து போன் வந்தது..  சாய் உங்களுக்கு பட்டாம் பூச்சி பிடித்து வைத்திருக்கேன், வந்து  வாங்கி கொள்ளுங்கள் என்று சொல்லி வைத்து விட்டார். எனக்கு ஒன்றும் புரியவில்லை… பிறகு அவர் பதிவு தமிழ்த்துளி – யை பார்த்த உடன் தான் புரிந்தது.  

இந்த பதிவு எழுதுவது எனது மனைவி மற்றும் சகோதரி க்கு தான் தெரியும்… அவர்களுக்கு அடுத்த படியாக   எனது பதிவையும் முகத்தையும் அறிந்த ஒரே  நண்பர் டாக்டர்  T.M. தேவகுமார் அவர்கள் தான். அவர் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர், அவரது மனைவியும் மருத்துவரே…  எளிமையான தம்பதியர் அவர்கள் இருவரும் எனக்கு ஒரு விருதினை வழங்கியது ஒரு மகிழ்ச்சியே….  நன்றி தேவா சார்…  

விதி வலியது நம்மகிட்ட அறிமுகம் ஆன பிறகு பங்கு சந்தைக்கு வரவில்லை என்றால் எப்படி டாக்டர் அடுத்த வாரத்தில் பங்கு சந்தையில் தனது முதல் ஆப்ரேஷனை துவங்க உள்ளார். வருக வருக என்று வரவேற்போம்.

சரி பட்டாம் பூச்சியை நம்மகிட்ட வைத்துகொள்ளகூடாது நாமும் அதை சிலருக்கு பறக்க விடுவோம் என்றால் யாருக்கு அனுப்புவது? 

நாம என்ன கலைமாமனி அவார்டா கொடுக்கிறேம் எல்லோருக்கும் கொடுக்க?   இது தேசிய விருது…

பட்டாம் பூச்சி விருதினை திரு பைசல் மற்றும் தம்பி சிம்பா ஆகியோருக்கு வழங்குகிறேன்..  நண்பர்களே இந்த பட்டாம் பூச்சியை டவுன் லோட் செய்து கொள்ளுங்கள்.

butterfly_award2

 

 

1. திரு பைசல் –  படியுங்கள்! சுவையுங்கள்!!  என்ற பதிவை எழுதிவருகிறார்…   சிங்கப்பூர் வாழ் இந்தியர்/தமிழர்.  பல தகவல் தொழில் நுடபங்களை எளிய தமிழில் எழுதி வருகிறார்.  இந்த பதிவுலகம் எனக்கு தந்த அருமை நண்பர்களுள் ஒருவர்..  அவர் பங்கு வர்த்தகர் அல்ல ஆனாலும் நமது பதிவினை தொடர்ந்து படித்து ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருபவர். வாரம் ஒரு முறையாவது தொலைப்பேசியில் பேசுபவர்.

2. பார்க்க இயக்குநர் மனோ பாலா (எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்)  மாதிரி இருந்தாலும்  மனதில் பட்டதை நெத்தியடியாக அடிக்கும் மாவீரன் தம்பி சிம்பா என்ற அருண் புழுதிக்காடு என்ற பதிவை எழுதிவருகிறார். 

============================================================================

சரி என்ன பதிவு எழுதுறவங்களுக்கு மட்டும் தான் விருது வழங்க வேண்டுமா..  ?  

சிறந்த தின வர்த்தகர் விருது  –   திருமதி ஜான்சி ராணி அவர்களுக்கும்

சிறந்த விமர்சகர் –   இந்த விருதினை ஒரே ஊரை சேர்ந்த இருவர் பங்கிட்டுக்கொள்கிறார்கள் அவர்கள் திரு மோகன் ராஜ்  –  எனது பதிவை மற்றவர்கள் எதிர் பார்க்கும் அளவிற்கு நான் எதிர் பார்ப்பது,  திரு மோகன் அவர்களின் பின்னூட்டங்களை..

திரு ஆர் கே –  மிக அருமையான நண்பர்…  பின்னூட்டம் அதிகம் எழுதவில்லை என்றாலும் ஈ.மெயில் வாயிலாகவும், தினசரி தொலைப்பேசி வாயிலாகவும் குறை நிறைகளையும் சுட்டி காட்டி ஊக்கப்படுத்தி வரும் நமது பதிவின் வாசகர்.

 

Advertisements

13 responses to this post.

 1. ஒரே துறையை சார்ந்து, அதுவும் தினந்தோறும் பதிவு எழுவது என்பது மிகவும் சிரமான ஒன்று.. அதனை மிகவும் நேர்த்தியாக செய்து வரும் உங்களுக்கு இந்த விருது அல்லது பரிசு மிகவும் பொருந்தும் சாய் சார்..

  இது தங்களது உழைப்பிற்கு கிடைத்த ஒரு சிறந்த பரிசு…

  பெருமையிலும் பெருமை அந்த பரிசை எனக்கு பரிந்துரைத்தது.. குருவிடம் இருந்து ஒரு சிறந்த மாணவனாக கிடைக்கும் பரிசை தவிர உயர்ந்தது வேற எதுவும் இல்லை..

  அவ்வாறு நீங்க எனக்கு குடுத்த பரிசு ஒரு பொங்கல் பரிசு.. 🙂

  மேலும் திரு. பைசல் அவர்கள் மிக சிறந்த தேர்வு.. அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

  நம்ம துறையை சேர்ந்த ஜான்சி அக்காவுக்கு மற்றும் திரு.மோகன் ராஜ், திரு.ஆர் கே அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  இந்த விருது யோசனை மிகவும் அருமை சார்..

 2. வாழ்த்துக்கள் தங்களுக்கும் தங்களிடமிருந்து பெற்றவர்களுக்கும்.

 3. வணக்கம் சாய் சார்,

  தங்களுக்கும்,

  திரு.பைசல் அவர்களுக்கும்,

  தம்பி சிம்பா அவர்களுக்கும்,

  திருமதி.ஜான்சி அவர்களுக்கும்,

  திரு.மோகன் ராஜ் அவர்களுக்கும்

  மற்றும்

  திரு. ஆர்.கே. அவர்களுக்கும்

  வாழ்த்துக்கள்…………

 4. காலை வணக்கம் சாய்!!!

  ஒரு பதிவே போட்டுட்டீங்க!!
  பட்டாம்பூச்சி விருதுக்கு
  உங்களை விட சிறந்த நபர்
  இல்லை-இது எல்லோருக்கும்
  தெரியும்!!!!

  உங்கள்
  குழு
  சிம்பாவுக்கு
  நானே கொடுக்கலாம்
  என்று
  நினைத்தேன்!

  நீங்களே
  கொடுத்து
  விட்டீர்கள்!!

  பொங்கல்
  வாழ்த்துக்கள்!!!
  தேவா…

 5. வாழ்த்துக்கள் தங்களுக்கும் தங்களிடமிருந்து விருது பெற்றவர்களுக்கும்.

 6. விருது பெற்று பெருமை பெற்று இருக்கும் அனைவருக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் .பங்கு சந்தை உலகத்திற்கு வருகை தரும் திரு.தேவா ஐயா, அவர்களை சாய் சார் அவர்கள் சார்பாகாஉம் நமது நண்பர்கள் எல்லோர் சார்பாகாஉம் வரவேற்கிறோம்

 7. சிம்பா, ஜான்சி அக்கா, திரு.மோகன் ராஜ், திரு.ஆர் கே அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  சிறந்த நண்பர் என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளது எனக்கு கிடைத்த மிகப் பெரிய விருது அதைவிட நீங்கள் கூடுதலாக பட்டாம் பூச்சி விருது (எனது பிறந்த நாள் பரிசாக) வழங்கி அசத்திவிட்டிர்கள். மிக்க நன்றி சாய்.

 8. Dear Sai,

  My pongal wishes to you and your family,
  congrats to the winner’s and my pongal wishes to all our blog frindes

  Regards,
  Murugesan
  Abudhabi

 9. Dear sir,

  தான் பெற்ற விருதை அதாங்க பட்டாம் பூச்சியை தன்னிடம் அடைத்து வைக்காமல் மற்றவரிடமும் பறக்க விடுவிட்ட சாய் சார்க்கு வாழ்த்துக்கள்….. நன்றிகள்…..

  //சாய் கணேஷ்-நல்ல சின்சியரான பதிவர். பங்குச்சந்தைப் புலி!!இனிமையாக பழகக்கூடியவர்! இவரை மாதிரி ஒருத்தரைப் பார்ப்பது அரிது!//
  டாக்டர் T.M. தேவகுமார் தமிழ்துளி-யில் படித்தது.
  உண்மை….உண்மை….உண்மை….

  திரு பைசல். சாய் சார் முலம் அறிமுகமானவர்…அருமை நண்பர்….பட்டாம் பூச்சி விருது பெற்றதர்க்கு வாழ்த்துக்கள்…. பிறந்த நாள் வாழ்த்துக்கள்…..

  திரு.சிம்பா என்ற அருண் உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்…. உங்களுடைய புழுதிகாடு பதிவு
  அருமை…

  திருமதி.ஜான்சி அவர்களுக்கும்,

  திரு.மோகன் ராஜ் அவர்களுக்கும்

  மற்றும்

  திரு. ஆர்.கே. அவர்களுக்கும்

  வாழ்த்துக்கள்!!!!!!!

 10. வாழ்த்துக்கள் சாய் சார்,
  தங்களுக்கும் தங்களிடமிருந்து விருது பெற்றவர்களுக்கும்.

 11. வாழ்த்துக்கள் பட்டாம்பூசிகளே!!!!!!!

 12. ஒரு சிறந்த நண்பரிடம் பகிர்ந்து கொள்வது போல்தான் தங்களிடம் அனைவருமே பழகி வருகிறோம்..அந்த அளவுக்கு நீங்கள் ஒவ்வொருவரின் மீதும் தனிப்பட்ட அக்கறை எடுத்து வருகிறீர்கள்.. இந்த பகிர்தலுக்கு விருதெல்லாம் கொடுத்து எங்களை பெரிய ஆளாக்க வேண்டாம் 🙂

  தொடந்து சாய் அவர்களுக்கு ஊக்கம் அளித்து வரும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!!

 13. Posted by K. Mohanraj, Karur on ஜனவரி 12, 2009 at 7:25 பிப

  எனதுயிர் நண்பர் திரு சாய் அவர்களுக்கு,

  கடந்த மூன்று நாட்களாக வலைத்தளைத்தை (இணையத்தையே) சுவாசிக்க இயலவில்லை. இன்று காலையிலும் கிடைத்த ஐந்து நிமிடத்தில் தங்களது சந்தை சார்ந்த தகவல்களை மட்டும் படித்து விட்டு நேராக சந்தைக்கு சென்றுவிட்டேன். பின்னூட்டம் கூட இட இயலவில்லை.

  தற்போதுதான் சற்றே இணையத்துடன் நேரத்தை செலவழிக்க வாய்ப்பு கிடைத்தது. இணையத்திற்குள் நுழைந்தவுடன் நான் நேராக இறங்கியது தங்களது வலைத்தளத்தில்தான்.

  தங்களுக்கு பட்டாம்பூச்சி விருது கிடைத்திருப்பது கண்டு மனம் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறது. நேரம் காலம் பார்க்காது, மிகுந்த வேலைப் பளுவுக்கு இடையிலும் எங்களுக்கு சந்தை சார்ந்த தகவல்களை வழங்கி வரும் தங்களது கடுமையான உழைப்பிற்கு கிடைத்த வெற்றி.

  தங்களது வெற்றியை பார்த்து பொறாமையால் உள்ளம் நொந்து தங்களை காயப்படுத்த முயற்சித்த மனிதர்களின் செயல்களுக்கு இந்த பட்டாம்பூச்சி விரித்து சரியான சவுக்கடி. (ஆட்சேபனை எனில் இவ்வரிகளை நீக்கி கொள்ளவும்)

  சந்தை எனும் கடும் மழையும் புயலும் நிறைந்த பேராழியில் எங்களை பாதுகாப்பாக அரவணைத்துச் செல்வது தங்களுடைய கட்டுரைகள் மட்டும்தான். இவை வெறும் வார்த்தைகளுக்காக சொல்பவை இல்லை என்பதை தங்களுடைய வலைத்தளத்தை நீண்ட நாட்களாக வாசிக்கும் நமது நண்பர்கள் அனைவரும் அறிவர்.

  ஒரு சிறந்த நண்பனாக இருந்து சந்தை பற்றிய அனைத்து விசயங்களையும் எங்களுக்கு விளக்கியதுடன் மட்டும் நில்லாமல் சந்தையின் “Technical indicators (double bottom, double top, two key bar reversal, hammer)” போன்ற பல விசயங்களை எங்களுக்கு எளிதாக புரியும்படி தகுந்த படங்களுடன் விளக்கிய தங்களது செயலை பாராட்ட எங்களிடம் வார்த்தைகள் இல்லை.

  தங்களுடைய “Technical Analysis” பற்றிய இரண்டு புத்தகங்களும் மிகவும் நன்றாக இருக்கின்றன. இது போன்ற பதிவுகளை எங்களுடன் பகிந்து கொள்ளும் மிகப் பெரிய மனது தங்களுக்கே உரித்தானது. உண்மையில் நாங்கள் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள், தங்களுடைய நட்பு எங்களுக்கு கிடைத்ததால். அந்த இறைவனுக்கு இவ்வேளையில் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன், நான் மட்டுமல்ல நமது வலைத்தள நண்பர்கள் அனைவரும்.

  மேலும் சிறந்த விமர்சகர் விருதை எனக்கும் திரு ஆர் கே அவர்களுக்கும் வழங்கி உள்ளீர்கள். மிகுந்த மகிழ்ச்சி. ஒரு விமர்சகன் என்றால் நிறைகள் மட்டும் அல்லாது குறைகளையும் சுட்டிக் காட்ட வேண்டும். ஆனால் தங்கள் விஷயத்தில் தேடிப் பிடித்தாலும் கிடைப்பதில்லை குறைகள்.

  திரு ஆர் கே அவர்களுக்கும் திரு பைசல் மற்றும் திரு அருண் (சிம்பா) அவர்களுக்கும் திருமதி ஜான்சி ராணி அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  மற்றும் பாராட்டு தெரிவித்திருக்கும் அனைத்து நாள் உள்ளங்களுக்கும் நன்றிகள் பல உரித்தாகுக.

  பின்குறிப்பு: தங்களது இந்த கட்டுரையினை மிகவும் தாமதமாக பார்த்து பின்னோட்டம் இடுவதால் மனது வருந்துகிறது. தாமதத்திற்கு வருந்துகிறேன் சாய்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: