இன்றைய சந்தையின் போக்கு 09.01.2009


வார நாட்களில் வரும் விடுமுறையானது…  சந்தையின் போக்கில் சில மாற்றங்களை ஏற்படுத்தும். நேற்றைய விடுமுறையும் ஒரு வேகத்தடையாக அமைந்தது.

சத்யத்தின் சரித்திரம் திருத்தி எழுதப்படுகிறது…  லட்சகணக்கான முதலீட்டாலர்களின் குடும்பங்கள்…  அந்நிறுவனத்தின் ஊழியர்கள் என்று பலரின் எதிர்காலம் கேள்விகுறியாகி உள்ளது.  தற்போது திருத்தி எழுதப்பட உள்ளது அவர்களின் எதிர் காலமும் தான்…   நல்லதாக அமையட்டும் என்று நாமும் பிராத்தணை செய்வோம்.

இப்பிரச்சினையால் அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதை போல தற்போது பல நிறுவனங்களின் மீது சந்தேகத்தை எழுப்பி அதை வதந்தியாகவும் பரப்பி வருகிறார்கள். 

சில தமிழ் செய்திகளில் தவறாக  தேசிய பங்குசந்தையில் இருந்து சத்யம் நீக்கபட்டதாக வெளிவந்த செய்தியால் சிலர் பதட்டம் அடைந்து தொலை போசியில் தொடர்பு கொண்டார்கள்.  அது தவறு.  Nifty யின் குறியீட்டின் ஏற்ற இறக்கம் குறிப்பிட்ட (NIFTY -50 ) ஐம்பது பங்குகளின் ஏற்ற இறக்கத்தை கொண்டு கணக்கிடப்படுகிறது.   அந்த 50 பங்குகளின் பட்டியலில் இருந்து தான் சத்யம் நீக்கப்பட்டு ரிலையன்ஸ் கேப்பிட்டல் வரும் திங்கள் முதல் சேர்க்கப்படவுள்ளது.

தற்போதைய நிப்டி 50 பங்குகளின் பட்டியல்

nifty501

 

 

 

 

 

சத்யத்தின் இடத்தை பிடிக்கும் ரிலையன்ஸ் கேப்பிட்டலால் திங்கள் அன்று மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். 

சரிவினை கண்டு பயம் கொள்ள தேவையில்லை 2850 க்கு மேலே ஒற்றை கல் சுவர் போலத்தான் சந்தையை போலியாக மேலே நகர்த்தினார்கள்…  எப்படியும் 2710 வரை சந்தை திரும்பும் சரிவுகளை கால தாமதபடுத்தப்பட்டால் அதன் வேகமும் அதிகரிக்கும் என்றும் நாம் ஏற்கனவே எழுதியது தான்.   அன்று நமக்கு சத்யத்தின் கதையும் தெரியாது,  அரசின் ஊக்கபரிசுகள் சலுகைகள் அறிவிக்கபட்ட அன்றும் நாம் எழுதியது சரிவுகள் உறுதி என்பது தான். 

இன்றும் சொல்கிறேன் சந்தையில் 2710-2680 (ப்யூச்சர்) வரை ஏற்கனவே உறுதிசெய்யபட்ட சரிவுகள் மீதம் இருக்கின்றன. அதை உடைத்து கிழே செல்ல தற்போது வாய்ப்பு இல்லை.  நேற்று வரை 3500-800 என்று சொன்னவர்கள் 2020 பற்றி பேசுகிறார்கள்.   

தேர்தல் நெருங்கி வரும் காலத்தில்…  முள் கிரீடத்தை விரும்பி ஏற்று கொண்டுள்ள பிரதமர் பெரிய சரிவுகளை விரும்ப மாட்டார். 

இன்றைய சந்தை எவ்வாறு அமையும்….

கடந்த இருதினங்களாக சரிவில் இருந்த டவ் ஜோன்ஸின் நேற்றைய முடிவு மீண்டும் மேல் நோக்கிய பயணத்திற்கு ஏற்றவகையில் அமைந்துள்ளது. 

புதன் கிழமை அன்று 2900 நிலையை உடைக்காமல் மூன்று மணிநேரத்திற்கும் அதிகமாக 2900-2930 நிலைகளில் வர்த்தகம் ஆன விதம் மற்றும் அன்றைய முடிவின் அடிப்படையிலும் சந்தை சிறிது அளவு மேலே செல்ல வாய்ப்புகள் உள்ளது.  (3000 – 3050 வரை. ) அதற்கு 2967 தடை கல்லாக அமையும் அதே போல் 2885-2870 உடைபட்டல் சரிவின் வேகம் அதிகமாகும்.

முக்கியமான நிலைகள் :-  அதே தான் கடந்த 30/12/2008 அன்று சொன்னது

//அடுத்து வரும் நாட்களில் முக்கியமான நிலைகள்….  

 

2689,  2719, 2768, 2784, 2852, 2901, 2951,2985,3034, 3118  //

ராஜ் –  Suzlon பங்கினை பற்றிய வதந்திகளுக்கு பதில் சொல்வது தவறு ஆனால் ஒருவர் தனது முழுசேமிப்பையும் ஒரே நிறுவனத்தில் முடக்குவதும் மிக பெரிய தவறே. 

உறுதி செய்ய படாத செய்திகளின் அடிப்படையில் நாம் ஒன்றும் சொல்ல முடியாது சொல்லவும் கூடாது. அதேபோல் இதில் முடிவு எடுக்க வேண்டியது உங்கள் சகோதரர் தான். எனது ஆலோசனை  குறைந்த பட்சம் பாதியாக குறைத்து கொள்வது நல்லது. அதை வேறு முதலீட்டிற்கு மாற்றலாம். 

Advertisements

9 responses to this post.

 1. Thank you sir !

 2. Good day to all,

  “அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதை போல தற்போது பல நிறுவனங்களின் மீது சந்தேகத்தை எழுப்பி அதை வதந்தியாகவும் பரப்பி வருகிறார்கள்”

  Really super comment.

  Thank you very much for your article Sir.

 3. Thanks Sai… please continue your efforts, which is very helpful to small investors/traders like me. Thanks.

 4. Posted by K. Mohanraj, Karur on ஜனவரி 9, 2009 at 9:52 முப

  உயர்திரு சாய் கணேஷ் அவர்களுக்கு,

  தாங்கள் கடந்த இரு வாரங்களுக்கு மேலாக கூறி வந்த சரிவை சந்தை புதனன்று சந்தித்தது. தாங்கள் கூறியது போலவே சரிவின் வேகமும் அதிகமாகவே இருந்தது.

  “தேர்தல் நெருங்கி வரும் காலத்தில்… முள் கிரீடத்தை விரும்பி ஏற்று கொண்டுள்ள பிரதமர் பெரிய சரிவுகளை விரும்ப மாட்டார். ” – என்ற தங்களின் வரிகள் யாராலும் மறுக்க முடியாத அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு நிஜம்.

  “அதற்கு 2967 தடை கல்லாக அமையும் அதே போல் 2885-2870 உடைபட்டல் சரிவின் வேகம் அதிகமாகும்.” – என்ற வரிகள் எங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.

  இனிய காலை வணக்கம்.

 5. Posted by R.D.Murthy, Vellore on ஜனவரி 9, 2009 at 12:48 பிப

  Nifty may close 2880

 6. Posted by ப்ரியா on ஜனவரி 9, 2009 at 1:08 பிப

  today nifty may close at 2852

 7. THANK YOU FOR YOUR GUIDANCE SAI SIR.

 8. Thanks for your suggestion. I convey the news to my brother.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: