சத்யத்தினால் வந்த சத்திய சோதனை


இப்படி ஒரு சரிவு (ஒரே நாளில் 250 புள்ளிகள் வரை) நிச்சயம் உண்டு என்று தெரியும், அதைத்தான் கரடியாக கத்தி வந்தேன்.. ஆனால் அது சத்யம் வழியாக வரும் என்று சத்தியமாக தெரியாது. 

கரடி கட்சி தலைவருக்கும் அதை ஆதரித்த அனைத்து நண்பர்களுக்கும் இன்று நல்ல விருந்து குறிப்பாக புட் ஆப்ஷனில்.   

3000 புட் 89 இல் இருந்து 200 பிளஸ்

2800 புட்  30 இல் இருந்து 120 பிள்ஸ்

நாம் செவ்வாய் அன்று டெக்னிகல் அடிப்படையில் பரிந்துரைத்த சத்யம் 170 புட் ஆப்ஷன் 12 இல் இருந்து 118 இல் லாபம் பார்த்தோம்.

நினைவூட்டல் …. 

கடந்த 24/12/2008 அன்று சத்யம் பற்றி நான் சொன்ன கருத்துகளும், அதற்கு நண்பர் ராம் பிராசாத் அவர்கள்.. நயமான சுட்டிகாட்டல் என்று பாராட்டி இருந்தார் அன்று மலிவாக கிடைக்கிறதே என்று வாங்கியவர்கள் கையை  சுட்டு கொண்டார்கள்.

//சத்யம் பற்றி சிலர் கேள்வி கேட்டிருந்தார்கள்…  எரிகிற வீட்டில் எடுத்தவரை லாபம் என்பார்கள் ஆனால் அது சிலநேரம் நம்மை காயப்படுத்தவும் வாய்ப்பு உள்ளதால். தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பதே நல்லது.   அடுத்து அடுத்து வரும் செய்திகள் (உலக வங்கி தடை) அனைத்தும் பாதகமாகவே உள்ளது.///

என்னதான் நாம் லாபம் அடைந்தாலும் ஒரு நடுநிலையாளனாக சத்யத்தின் நிலைமையை ஜீரணிக்க முடியவில்லை. எப்படி 53000க்கும் அதிகமானவர்கள் வேலை பார்க்கும் ஒரு சர்வதேச நிறுவனத்தில் இப்படி ஒரு நிலைமை.   கணக்குகளில் இப்படி ஒரு தில்லு முல்லு செய்ய முடியும் என்றால்,   என்ன சொல்வது.

இன்னும் யார் யார் எல்லாம் இப்படி இருக்கிறார்களோ…  சமீப காலத்தில் அசூர வளர்ச்சி அடைந்த நிறுவனங்களை சந்தேகிக்க வேண்டியது அவசியம் ஆகிறது.  எந்த புற்றிற்குள் எந்த பாம்பு இருக்கிறதோ தெரியவில்லை.  

கடந்த 10-15 நாளாக நான் தூக்கத்தை தொலைத்தேன் என்றால் மிகையில்லை… அந்த அளவு கடுமையான விமர்சனங்கள் கேலி பேச்சுக்கள்.   ஆனால் மீண்டும் ஒரு முறை தின வர்தகர்கள் கரடியின் ஆதிக்கத்தில் தான் அதிகம் லாபம் பார்க்க முடியும் என்று சந்தை நிருபித்து உள்ளது.    கடந்த ஆறு நாட்களில் காளை கண்ட ஏற்றத்தினை இன்று ஒரே நாளில் தட்டி பறித்து விட்டது. . 

சந்தை இறங்கும் இறங்கும் என்று தொடர்ந்து எழுதியதை கண்டு சிலர் எரிச்சல் அடைந்திருப்பீர்கள் அதனால் பெரிய லாபம் இல்லை என்றாலும் தக்க நேரத்தில் எச்சரிக்கை செய்தோம் அதனால் ஒரு சிலருக்காவது பயன் இருந்திருக்கும் என்ற திருப்தி எனக்கு இன்று ஏற்பட்டுள்ளது.

கடந்த 10-15 நாட்களாக எனக்கு துணை இருந்து தொடர்ந்து உற்சாகப்படுத்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் குறிப்பாக  திரு ரவி,  திரு அருண் மற்றும் ஆர்கே உள்ளிட்ட நண்பர்கள் அனைவருக்கும்  நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.  

பின்குறிப்பு :- 

சந்தை இன்னும் முழுமையாக வலுவிலக்கவில்லை….  ஒரு நிறுவனத்தின் போக்கால் ஒட்டு மொத்த சந்தையும் பாதிப்படைய கூடாது… சரிவின் வேகத்திற்கு ஏற்றவகையில் ஒரு சிறிய அளவில் அதாவது 3000-3050 வரை செல்லவும் இன்னும் வாய்ப்பு இருக்கிறது. 

29 responses to this post.

 1. சந்தையில் உயரத்தை நோக்கி பயணம் எவ்வளவு கடினமானது என்பது இன்று புலனானது… சாய் சார் நீங்கள் சொல்வது போல் ஆறு நாட்கள் அல்ல.. கிட்ட தட்ட இருபது நாட்களாக நீடித்து வந்த ஆட்டம் இன்று நிறைவுக்கு வருவதாக எடுத்தொக்கொள்ளலாம்..

  ஐ. டி நிறுவனங்களின் காலாண்டு முடிவு வரும் இந்த நேரத்தில் இவ்வகையான ஒரு சோதனையை சந்தைகள் தாங்கிக்கொள்ளுமா என்பது சந்தேகமே..

  மேலும் இத்தனை நாட்கள் பொறுமையாக காத்திருந்த அனைத்து நண்பர்களுக்கும், நேற்று அல்லது இன்று காலையில் இருந்து கரடிகளின் முதுகில் சவாரி செய்தவர்களுக்கு இன்று மறக்க முடியாத நாள்..

  இந்திய நாட்டின் அடிப்படை இன்று மீண்டும் ஒரு முறை சோதனைக்கு உள்ளாகியுள்ளது..

  இந்த நிலையிலாவது உண்மையான செய்திகளை அரசாங்கம் வெளியிட வேண்டும். மேலும் சத்யம் நிறுவனத்தை மீட்டு அதன் ஊழியர்களுக்கு வாழ்வளிக்க வேண்டும்.

  இதே போல் வேறு ஒரு செய்தி காற்று வாக்கில் பறந்து கொண்டு இருக்கிறது… பார்போம். இந்த கிணற்றில் எத்தனை பூதங்கள் என்று…

 2. Posted by ப்ரியா on ஜனவரி 7, 2009 at 4:08 பிப

  //இன்னும் யார் யார் எல்லாம் இப்படி இருக்கிறார்களோ… சமிப காலத்தில் அசூர வளர்ச்சி அடைந்த நிறுவனங்களை சந்தேகிக்க வேண்டியது அவசியம் ஆகிறது. எந்த புற்றிற்குள் எந்த பாம்பு இருக்கிறதோ தெரியவில்லை. // இதெல்லாம் பார்த்தால் கம்முன்னு Intraday Trade செய்து அந்தந்த நாள் கணக்கை அந்தந்த நாளே முடித்துக்கொண்டால் தான் நிம்மதியா தூங்கமுடியும் போல..அண்ணா உங்களோட compare பண்ணும் போது blog ல் என் பேர் போடும் அளவிற்கு நான் எதும் செய்யல அண்ணா….:)

 3. Posted by ப்ரியா on ஜனவரி 7, 2009 at 4:10 பிப

  //ஐ. டி நிறுவனங்களின் காலாண்டு முடிவு வரும் இந்த நேரத்தில் இவ்வகையான ஒரு சோதனையை சந்தைகள் தாங்கிக்கொள்ளுமா என்பது சந்தேகமே.///
  நீங்கள் சொல்வது சரி தான் சிம்பா..
  பார்க்கப்போனா இந்த காலாண்டு முடிவு அவ்வளவு சுவாரஸ்யமா இருக்காது போல.எந்த நிறுவனத்தின் காலாண்டு அறிக்கையும் நம்பி அதில் முதலீடி செய்ய கண்டிப்பாக நம் மக்கள் யோசிப்பார்கள்..

 4. ஒரு தனிமனிதர் (ராமலிங்க ராஜீ) சந்தையை 750 points வரை கீழே தள்ள முடியும் என்ற சந்தையில்தான் நாம் வர்த்தகம் செய்கிறோம் என நினைக்கும் போது வேதனை ஒரு பக்கம் இருந்தாலும் சாய் என்ற நண்பரின் குடையில் கீழ் இருக்கிறோம் என்ற நினைப்பு எந்த சந்தையையும் தாங்கும் மனவலிமையை தந்துள்ளது..

  திசம்பர் மாத கடைசி வாரத்தில் இருந்து இன்று வரை ஊதிக்கொண்டே போன, எவ்வளவோ எதிர்மறை செய்திகளுக்கு செவி சாய்க்காத சந்தை, இன்று உடைந்துள்ள்து..

  //சந்தை இறங்கும் இறங்கும் என்று தொடர்ந்து எழுதியதை கண்டு சிலர் எரிச்சல் அடைந்திருப்பீர்கள்.அதனால் பெரிய லாபம் இல்லை என்றாலும் தக்க நேரத்தில் எச்சரிக்கை செய்தோம்//

  என்னதான் அனுபவம் இருந்தாலும், இது போன்ற கணிப்புகள்,கருத்துகளுக்காகதான் உங்களை போன்ற சந்தை அனலிஸ்ட்களிடம் தஞ்சம் அடைகிறோம்..ஆதலால் எரிச்சல் கிடையாது..

  நமது வெற்றிப் பயணம் தொடரட்டும்!!!

 5. முதலீடு என்ற வார்த்தையே இங்கு எடுக்க கூடாது ப்ரியா.. இத்தனை நாட்கள் சந்தைகளின் ஏற்றத்தை நுட்ட்ப்ப கூறுகள் அடிப்படையிலான ஒன்று எனவும் 3400 மற்றும் 3600 நிலைகள் தொடும் தூரத்தில் தான் என்று கூறி அந்த இலக்கை நோக்கி பயணம் செய்த மக்கள் இன்று திரும்பிப்பார்க்க கூட சந்தர்ப்பம் குடுக்காமல் துவைத்து எடுத்தது…

  அப்போ ஒரே நாளில் நம்ம நாட்டு அடிப்படை மாறி விட்டதா.. இல்லை கரடிகள் புதிதாக குட்டி போட்டு உருவெடுத்ததா..

  குள்ளநரிக்கு சாயம் போட்டு சிங்கம் ஆக்கிவிட்டார்கள்.. இன்று பெய்த மலையில் அதன் சாயம் வெளுத்து விட்டது…

  அவளோதான்..

 6. சத்யம் செய்த சோதனையால் பெரும் பண முதலைகளான FII & DII’S இழப்பு என்றால் ஒன்றும் தெரியாது…. இதனால் எத்தனை சிறு முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்தார்களோ என்று என்னும் போது நெஞ்சம் பதபதைக்கிறது ….அவர்களுக்கு ஆறுதல் கிடைக்க இறைவனை வேண்டுவோம்!!!

 7. SAI SIR,
  YOUR VIEWS ARE VERY MUCH APRICIATED, BUT IF TECHNICAL IS GOOD THE NEWS COME FORM ANYSIDE IS THE BASIC OF TECHNICALS. SO SATYAM NOT ONLY A MAIN CRITERIYA FOR TODAY, MARKET AT OVERBOUGHT ZONE. SO IT CAME DOWN. THAT IS ALL.THANK YOU FOR YOUR VOICE AT RIGHT TIME.

 8. SAI SIR
  HAPPY GOOD EVENING
  I THINK THIS IS THE END OF SATHIYA SOTHANAI FOR ALL YOUR CLIENDS. YOU SAID FOR THE LAST 20 DAYS DOWN DOWN MARKET DOWN……….I THINK TODAY IS THE STARTING DAY FOR THAT. I THINK BABAJI HAS SEEN YOU FROM TODAY ONLY . ANY WAY THANK YOU FOR YOUR MARKET VIEW. IT HELPS A LOT FOR US.
  MY ADVANCED HAPPY PONGAL TO YOU AND YOUR FAMILY

 9. Posted by ரவிகுமார் on ஜனவரி 7, 2009 at 6:15 பிப

  அன்புள்ள சாய் அவர்களுக்கு,

  எனக்குள் நம்பிக்கையை எற்படுத்திய நம்பிக்கை நட்சத்திரம் நீங்கள்.இன்று உங்கள் வழியை பின்பற்றி 60000/- எடுத்து உள்ளேன். கூடிய விரைவில் முதன்மை பக்கத்துக்கு வருவேன்.எழுதுவேன்.. எழுதுவேன்…..

 10. Posted by ப்ரியா on ஜனவரி 7, 2009 at 6:19 பிப

  நான் முதலீடு என்ற வார்த்தையை மறந்து பல நாட்கள் ஆகி விட்டது சிம்பா.

  //சந்தை இறங்கும் இறங்கும் என்று தொடர்ந்து எழுதியதை கண்டு சிலர் எரிச்சல் அடைந்திருப்பீர்கள்.அதனால் பெரிய லாபம் இல்லை என்றாலும் தக்க நேரத்தில் எச்சரிக்கை செய்தோம்//

  rk சொன்னதை போல பலூன் கதை தான்.காளையார் கொஞ்சமா காத்து ஊதியிருந்தா பரவாயில்லை.ரொம்ப ஊதிட்டார்.கொஞ்சமா காத்து இருக்கும் சின்ன பலூன்னா வெடிக்கும் போது குறைவான சத்தமே(பாதிப்பே) இருந்திருக்கும்.பலூன் விரிஞ்சுக்கிட்டே போனா எப்படி இருக்கும்….இப்படித்தான்….

  இதனால் நஷ்டம் அடைந்த சிறு முதலீட்டாளர்கள் நிலைமை???

 11. Posted by ப்ரியா on ஜனவரி 7, 2009 at 6:26 பிப

  DayTradingPrince சொல்வதும் சரி தான்…ஆனால் OverBought Zone லேயே சில நாட்கள் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்திருப்பதும் நடந்திருக்கு.

  இந்த இறக்கத்திற்க்கு நிஃப்டியார் எந்த காரணத்தை பிடிக்கலாம்னு இருந்த நேரத்தில் வந்தது இந்த வாய்ப்பு.உன்னை விட்டேனா பார்னு ஒரேயடியா பிடிச்சிட்டார்……..

 12. சந்தை இன்று கீழே சென்று கொண்டிருந்த போது நம்ம பெட்ரோலியத் துறை அமைச்சர் டீசல்,பெட்ரோல் விலை விரைவில் குறைக்கப்படும் என கூறினார்.உடன் சந்தை 50 பாயிண்டுகள் மீண்டன.அதைப் பார்த்து சிறு முதலீட்டார்கள் உள்ளே வந்திருந்தால். . . அவர்களது பணம்……?
  டெக்னிகலாகவும்,செய்தி அடிப்படையிலும் சரியும் சந்தையை மீட்கிறேன் பேர்வழி என அப்பாவி சிறு முதலீட்டார்களின் பணத்துக்கு வேட்டு வைக்கும் இது போன்ற செயல்களை அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்……..

 13. வால்யும் குறைவான சந்தை நீன்டநாள் மேலே போகாது என்று கடந்த மாதம் முதல் எச்சரி்த்து எங்களை லாபம் அடைய செய்யத சாய் அவர்களுக்கு நன்றி… நன்றி…

  சந்தை இறங்கும் என்ற உங்களின் முடிவில் 15 நாட்கள் ஆகியும் நீங்கள் மீண்டும் மீண்டும் கூறியது என்னை பொறு பொறு என்று அமைதி படுத்தியது. மேலும் எச்சரித்தது காப்பற்றியது அதலால் நாங்கள் எரிச்சல் அடையவில்லை.

  காத்துஇருந்த நாள் இன்னும் வரவில்லை சந்தை இன்னும் கீழ் நோக்கி போகும் என்று நீங்கள் கூறியுள்ளதாள். மீண்டும் இது போல் (முன்பு) இழந்ததை மிட்க காத்துருக்கின்றேன்.

 14. hi sai, as your adv , i got profit Rs 49000. but my invest is 10500 only . iam soo happy. i am very confident now that i will recover my 11.5 lks prior lost. again thanks to you.

 15. thank you sai

  53000 employees of satyam, realy very pathatic.i have 3100 put option, today i come out 50% ,thank you for the repeated caution.

  murugesan

 16. ‘Technical analyst’ இற்கு current news/tips/insider information போன்ற செய்திகளெல்லாம் தேவை இல்லை, உண்மையை கண்டுபிக்க chart மட்டுமே போதும் என்பர். அது உங்களுக்கு முற்றிலும் பொருந்தும். Satyam scandal பற்றிய செய்தி வெளிவர ஒரு நாள் முன்பே satyam chart இன் technical கூறுகளை ஆராய்ந்து ‘SELL’ கால் கொடுத்த உங்களின் திறமைக்கு எவ்வளவு பாராட்டினாலும் தகும். 🙂 .

 17. sebi announced that it will removes satyam from nifty on 12-th january’2009.

  சத்யம் ஸ்டாக் வைதுள்ளர்வர்களின்
  கதி என்ன ?

 18. Posted by சாய்கணேஷ் on ஜனவரி 8, 2009 at 11:07 முப

  விமல்…

  தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள்….

  தேசிய பங்கு சந்தை குறியீட்டை கணக்கீடு செய்யும்

  நிப்டி 50 என்ற பங்குகளின் பட்டியலில் இருந்து சத்யம் நீக்கப்பட்டு ரிலையன்ஸ் கேப்பிட்டல் வரும் 12/1/2008 இல் இருந்து இடம்பெரும்.

 19. Posted by ப்ரியா on ஜனவரி 8, 2009 at 11:13 முப

  பயந்தே போயிட்டேன்….விமல் கதி கலங்க செய்து விட்டீர்கள் சத்யம் பங்கு வைத்திருப்பவர்களை 😉

 20. Posted by K. Mohanraj, Karur on ஜனவரி 8, 2009 at 11:40 முப

  மதிப்பிற்குரிய சாய் அவர்களுக்கு,

  தாங்கள் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக வலியுறுத்தி வந்த சரிவை சந்தை நேற்று சந்தித்தது. மூன்று வாரங்களாகவே நாங்கள் யாரும் சந்தையில் long position – ல் இல்லை. ஏனென்றால் சந்தை சரியும் என்ற தங்களின் கருத்தினால் மட்டுமே நாங்கள் இன்று பாதுகாப்பாக இருக்கிறோம்.

  தங்கள் வழிகாட்டுதல் மட்டும் எங்களுக்கு இல்லையேல் நேற்றைய சரிவிற்கு கையை சுட்டுக் கொண்டு இருந்திருப்போம். ஏனென்றால் கடந்த பதினைந்து நாட்களாகவே சந்தையினை சிறிதும் கீழே இறக்காமல் அனைவரின் கவனத்தையும் காளையின் பக்கமல்லவா கொண்டு சென்று விட்டார்கள். ஆனால் பொறுமைக்கு என்றுமே வெற்றி உண்டு என்பதற்கு இந்த சரிவினை சொல்லலாம். தாங்கள் முதலிலேயே சந்தை கீழே வரும் என்று சொல்லி விட்டதால் நாங்களும் பொறுமையாகவே இருந்தோம், இன்னமும் இருக்கிறோம்.

  தங்களின் கட்டுரை மட்டுமே எங்களுக்கு என்றும் ஒரு பாதுகாப்பு அரணாக இருந்து வருகிறது என்பதனை இக்கணத்தில் பெருமையுடன் சொல்லிக்கொள்ள கடமை பட்டிருக்கிறேன்.

  எனவே தாங்கள் என்றும் இந்த மாபெரும் சேவையினை தொடர்ந்து எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  இனிய காலை வணக்கம்.

 21. நன்றி சாய்கணேஷ் சார்.

 22. சாய்கணேஷ் சாரின் பதிலால் என்னுடைய சந்தேகம் தீர்ந்தது.

  நன்றி சாய்கணேஷ் சார் மற்றும் பிரியா மேடம்

 23. dear sai sir,
  please give your views about the following details.
  —————–
  Taken from rediff
  In an hour-long chat on rediff.com on Wednesday, market expert Pranav Sanghavi offered some valuable tips to our readers.

  01. v@rediff.com asked, is unitech is nex t followed by satyam
  PRANAV SANGHAVI answers, There are doubts on various large, midcap and smaller companies about their honesty and integrity. Unitech could now be scrutinized minutely.

  02. laxmikant asked, I have purchase Unitech at 42.what will be the status in the present scenario
  PRANAV SANGHAVI answers, Unitech going the Satyam way was the rumour floating around the markets and the stock tanked heavily today.

  03.babu asked, Hi i ve suzlon, Unitech and Rs 100 and above per share what should i do
  PRANAV SANGHAVI answers, They have taken a beating as there are rumors they will also go the Satyam way. If there is no such fraud in these companies one should not be worried. If you hold with a long term view
  —————–

  please give your views about the above details.

 24. சாய் சார்,

  சத்யம் ஸ்டாக் போலவே
  suzlon மற்றும் unitech
  ஸ்டாக் problem உள்ளது
  என்று சில வலை தளங்களில்
  சொல்வது பற்றி தங்கள்
  கருத்துக்களை கூறுங்கள்

 25. உதவி வரைத்தன்று உதவி உதவி
  செயப்பட்டார் சால்பின் வரைத்து.

  தங்களுடைய வழிக்காட்டுதலுக்கு மிக்க நன்றி சாய் சார்.

  உங்கள் சேவை பெருக இறைவன் அருள் தங்களுக்கு பெருகட்டும்….

 26. குருவே சரணம் !

 27. Hi Sai,
  I dam need of your help. Is SUZLON having problem now. Because my brother working in this company and he invested all his life time saving in this company shares alone. He donnt have much experience in Share market. So he donnt know much about diversification. i came to know when it was 40. So i ask him to hold for another 6 months to sell half of his shares(Any way he is holding this for the past 2-3 years). Is it danger to hold or shall i ask him to sell at 50-60 range. Please advise me. Because i stop him from selling at mid 40. i will really feel guilty if it goes beyond that.
  Thanks in advance

 28. Posted by சாய்கணேஷ் on ஜனவரி 8, 2009 at 10:23 பிப

  dear raj… just let me know about your brothers tottal investment on suzlon and wht is the current value of the same… is it in profit or loss.. if it is in loss what is the % of loss .. thanks and b.rgdsSaiganesh

 29. He is having 25,000 shares at average around Rs.60 per share he bought it on 2004. He didnt know much about the market and just did as long term investment. He didnt mind holding for another 6 month or 1 year. But we afraid if this turn out to be an another SATYAM.

  Thanks,
  Raj

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: