இன்றைய சந்தையின் போக்கு – 05.01.2009


வணக்கம் நண்பர்களே…

வருடத்தின் முதல் பதிவு…    போலியான காளையின் ஆதிக்கத்தில் வருடத்தை துவக்கியுள்ளனர்.. எந்த ஒரு உலக சந்தையினையும் பின்பற்றாமல்,   என் வழி தனி வழி என்று சென்று கொண்டிருக்கிறது, நமது சந்தை.   இப்படி தனி வழி போன கடந்த காலத்தை பார்த்தால் தெரியும் எப்படி திடீர் பல்டி அடித்தார்கள் என்று. 

பணவீக்க விகிதம் – அது தானா ஏறியது,   தானா இறங்கியது காரணம் கச்சா எண்ணை தான்.. ஆனால் அது ஏறும் போது அதன் பாரத்தை சாமானியர்கள் முதுகில் ஏற்றிவைத்தவர்களுக்கு.. இறக்கி வைக்க இன்னும் மனம் வர வில்லை.   தேர்தல் சமயத்தில் அவர்கள் சவாரிக்கு அந்த முதுகு தேவைப்படும் போது ஒரு வேளை பெட்ரோல் பாரத்தை இறக்கி வைக்கலாம்.

புலி வருது புலி வருது கதையாக – ஒரு வழியாக பொருளாதார ஊக்க பரிசுகளும் அதன் கூடவே இனிமேல் எந்த அறிவிப்பும் இருக்காது என்று தெளிவாக அறிவித்தமைக்கு மிக்க நன்றிகளை தெரிவிக்க வேண்டும் அதுவும் வெள்ளிகிழமை மாலை அறிவித்தற்கு,   இரண்டு நாட்கள் ஆற அமர அலசி ஆராய மக்களுக்கு நேரம் கிடைத்தது.   வார நாட்களில் வந்திருந்தால் தொல்லை காட்சி நிறுவனங்கள்.. ஆஹா ஓஹோ என்று கூச்சலிட்டு இருப்பார்கள். 

அறிவிப்புகள் எதிர் பார்ப்புகளை பூர்த்தி செய்ய வில்லை…  பொதுமக்களுக்கு பெரிய பயன் இருப்பதை போல தெரிய வில்லை.    வருமானத்திற்கு வழி தெரியவில்லை ஆனால் கமர்ஷியல் வாகனங்களை வாங்கினால் 50%  மதிப்பு குறைவு என்பது பெரிய போக்கு வரத்து நிறுவனங்கள் பயன் அடைய உதவும், கூடவே அவ்வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பயன் அடையும்.. இதற்கு பதில் அதிக பட்சமாக டீசல் விலையை குறைத்திருந்தால் வாகன விற்பனை, போக்குவரத்து நிறுவனங்கள்,   மற்றும்  பொதுமக்களும்  கட்டணம்/ வாடகை குறைப்பால்  பயன் அடைந்திருப்பார்கள்.  

மொத்தத்தில் பெரும் தனக்காரர்களை மகிழ்விக்கும் அறிவிப்புகளே..     அதுவும் முழு அளவில் இல்லை.

பொதுமக்களிடம் பணபுழக்கம் இல்லாமல் என்னதான் வங்கிகளின் கையிப்புகளை அதிகரித்தாலும் அதனால் பெரிய பலன் இருக்க போவதில்லை. 

உதராணத்திற்கு சில நிறுவன பங்குகளை ஜன-2008 ல் 500 க்கும் 1000 க்கும் வாங்க போட்டி போட்ட மக்களால் இன்று அதையே 50 க்கும் 200 க்கும் வாங்க முடியவில்லை காரணம் பயம் மற்றும் கையிருப்பு இல்லாததே.  

சிறு முதலீட்டாளர்கள் இல்லாமல் வெறும் உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களால் சந்தை உயராது.    கடந்த 5 ஆண்டுகளில் சந்தை உச்சாணி கொம்பில் ஏறியதற்கு முக்கிய காரணம் அதிக அளவில் சிறு முதலீட்டாளர்கள்தான் அதற்கு  I T போன்ற துறைகளில் கிடைத்த வேலை வாய்ப்பும் / வருமானமும் உதவியது.    இவர்களின் முதலீட்டை குறி வைத்து வேண்டுமானால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உள்ளே ”வந்தார்கள்.. வென்றார்கள்… சென்றார்கள்”  என்று சொல்லலாம். 

அடுத்து வரும் அறிவிப்புகள அனைத்தும் Vote Bank குறிவைத்ததாகத்தான் இருக்கும்.

நாம் ஆகஸ்ட் 2008 இல் விவாதித்த அமெரிக்காவின் கிரெடிட் கார்டு பிரச்சினை எந்த நேரத்திலும் வெடிக்கலாம்.  அதனால் ஏற்பட போகும் தாக்கம் எத்தகையாதாக இருக்கும் என்பது தான் இந்த வார சர்வதேச செய்தி நஷ்ட கணக்கு 70 பில்லியன் அமெரிக்க $. 

============================================================================

சரி இன்றை சந்தை…  எப்படி இருக்கும்..   அதை பற்றி பார்க்கும் முன்பாக…

டிசம்பர் முதல் வாரம் வரை வர்த்தகத்திற்கு ஏற்ற வகையில் இருந்து வந்த சந்தை கடந்த 15-20 நாட்களாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டிருப்பதை போல 2900-3050 க்கு இடையில் தான் இருந்து வருகிறது.   ஆகஸ்ட்க்கு பிறகு தற்பொழுது தான் சந்தை ஒரு குறிபிட்ட எல்லைக்குள் நீண்ட நாட்களாக நிலை கொண்டு வருகிறது.    மேலே செல்லவும் இல்லை என்னை போன்றவர்களின் எதிர்பார்ப்பை போல கீழ் நிலைகளுக்கும் செல்லாமல் கண்ணாமூச்சி ஆடி வருகிறது.  1/1/2009 சந்தையின் Turnover இரண்டு ஆண்டுகளின் மிக குறைவான தொகையே ஆனாலும் சந்தை மேலே நிலை கொண்டது.  

சரி….

இன்று உற்சாகத்துடன் துவங்கிய ஆசிய சந்தைகள் அந்த உற்சாகத்தை தக்க வைக்க இயலாமல்..  புத்தாண்டு கொண்டாட்டத்தில் தள்ளாடியவர்களை போல தள்ளாடுகிறது. 

டவ் ஜோன்ஸ் கடந்த வெள்ளியன்று High Jump சாம்பியனாக இருந்தார்… ஆனால் பங்காளி இன்று டைவ் ஜோன்ஸ் சாம்பியன் ஆக தயார் ஆவார் போல தெரிகிறது.  ப்யூச்சர் 8900 க்கு கீழ் நழுவுகிறது. 

 அரசின் சலுகை.. ஊக்கம் மற்றும் ஆசிய சந்தைகளின் உற்சாக தள்ளாட்டம் இதனிடையே ஆட்டத்தை துவங்க உள்ள அண்ணன் என்ன செய்வார்..    

கேப் அப் ஆக 3090 -3100-3110 என்ற நிலையில் துவங்கலாம் அங்கிருந்து கீழே நழுவலாம் அந்த இடத்தில் தடுமாறினால் 3085 இல் பெரிய அளவில் Profit Booking வரலாம்.  அதன் வேகமும் அதிகரிக்கும்.   

3120-30 மிகவும் வலுவான நிலை அதை கடந்து செல்வது கொஞ்சம் சிரமான செயலாக இருக்கும். 

2009 ன் முதல்  பரிந்துரை

NAVABHARAT VENTURES Ltd.   பங்கினை  129/- விலையில் வாங்கலாம்  TARGET 160-185  ஸ்டாப் லாஸ் – 95/- குறுகிய கால முதலீடாக செய்யலாம்.   வலுவான Technical / Funtamental மற்றும் சில செய்திகளின் அடிப்படையில் இதை பரிந்துரைக்கிறேன்.

If you’re heading in the wrong direction

you are allowed a U-turn!

Advertisements

13 responses to this post.

 1. Posted by V.SURESH, SALEM on ஜனவரி 5, 2009 at 9:28 முப

  Good Morning sai sir and thank you very much for your views.

  Good Morning to everybody and wish you all a happy and profitable trading.

  market may rise for 2 to 3 days but selling pressure/profit booking will emerge by week end or early next week and market will test 9000 level(sensex)again.

 2. Good analysis.
  thank you sir.
  vimal

 3. Posted by Dhanam - Ramnad on ஜனவரி 5, 2009 at 9:32 முப

  vanakkam sai sir, varudathin muthal pathivu vaayppugal peruga vaalthukkal.

 4. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்

 5. Good morning Sai and everyone..
  Thanks for your nice analysis.

 6. காலை வணக்கம்

 7. Good Morning Sai,

  Thanks for your delivery based recommendation, NB
  Ventures ltd….

 8. Good Morning Sai Sir…

  One More NICE Posting From U.

  Thank U.

  Let this day be another PROFITABLE TRADE DAY for US…

  🙂

 9. hello sai sir good morning

 10. Posted by K. Mohanraj, Karur on ஜனவரி 5, 2009 at 10:10 முப

  மதிப்பிற்குரிய சாய் அவர்களுக்கு,

  தங்களுடைய கட்டுரையின் தகவல்கள், அதை தாங்கள் வெளிபடுத்தியுள்ள விதம்,,,,,ஆஹா, அபாரம் சாய். ஒரு தேர்ந்த எழுத்தாளரைக் காண்கிறோம்.

  இன்று சந்தையின் அனைத்து பக்கங்களையும் ஆராய்ந்து மிகவும் சிறப்பாக தகவல்களை அளித்துள்ளீர்கள்.

  சந்தை ஆரம்பமாகும் நேரம் என்பதால் பின்னூட்டம் விரிவாய் இட இயலவில்லை.

  இனிய காலை வணக்கம்,,,

 11. இனிய காலை வணக்கம்

 12. Posted by snkarankoil karadi on ஜனவரி 5, 2009 at 11:03 முப

  இவர்களின் முதலீட்டை குறி வைத்து வேண்டுமானால் வெளிநாட்டு முதலீட்டாலர்கள் உள்ளே ”வந்தார்கள்.. வென்றார்கள்… சென்றார்கள்” என்று சொல்லலாம். .really super comment

 13. Posted by பாரதி on ஜனவரி 5, 2009 at 4:20 பிப

  சாய் சார் நான் தினமும் உங்களுடைய கட்டூரைகளை படித்துவருகிறேன் எனக்கு பொதுவாக ஒரு சந்தேகம் தயவு செய்து உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் – வாங்கிய பங்குகளை விலை ஏறும் போது எந்த level-ல் விற்பது என்று எனக்கு தெரியவில்லை பல தடவை நான் பங்குகளை இலாபத்தில் விற்ற பிறகும் அதன் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே செல்கிறது. இதை எப்படி சரிசெய்வது, அதாவது எந்த விலைவரை காத்திருப்பது என்று தீர்மானிக்க ஏதாவது வழிமுறை உண்டா…!

  உங்களுடைய உதவி தேவை

  நன்றி

  பாரதி.B

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: