மாலை வணக்கம்


அறிவித்த படி போட்டி ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பரிசு மற்றும் விதிமுறைகள் முடிவு செய்யும் முன்பாக அவசரமாக ஆரம்பிக்க பட்ட போட்டிக்கு முதல் நாளே நல்ல வரவேற்பு. 

ஏற்கனவே போட்டியில் வென்ற திரு சுரேஷ்குமார் அவர்களே மீண்டும் ஒரு முறை வெற்றி பெற்றுள்ளார்.   வாழ்த்துகள் திரு சுரேஷ். 

நண்பர்களே –  அசோக் மட்டும் தான்  போட்டிக்கான விதிமுறைகளுக்கான சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.  அனைவரிடம் இருந்தும் ஆலோசனைகளை எதிர் பார்க்கிறேன்.  

=============================================================================

நமது புதிய வலைப்பதிவுகள் 

தமிழ் வர்த்தகம்  – சகோதரி பிரியா தினசரி வணிக செய்திகளை தொகுத்து வருகிறார்.

ஆங்கில பதிவு – தம்பி சிம்பா (எ) அருண் அவர்கள் முழுமையாக வடிவமைத்து தந்துள்ளார். 

இங்கு நீங்கள் கலந்துரையாடலாம், தங்களுக்குள் கருத்து பரிமாறி கொள்ளலாம்.  தயவு செய்து புதிய விசயங்களை கற்று கொள்ளவும் பகிர்ந்து கொள்ளவும் பயன்படுத்துங்கள்.    நாம் சம்பாதிக்க வேண்டும் வழமையான எதிர் காலத்திற்கு திட்டமிட வேண்டும் அதற்காக திட்டமிடுங்கள்.. அவரவருக்கு தெரிந்த செய்திகளை விசயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தெரியாததை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்…   யாரையும் காயப்படுத்தவும்… வெட்டி அரட்டைக்கும் பயன் படுத்த வேண்டாம்.

எனக்கு நேரடி அரசியல் அனுபவம் உண்டு, ஆனால் பதிவுலகிலும் அரசியல் இருக்கு என்பது இப்பொழுது தான் அறிகிறேன். இது எனக்கு புதுசு ஆனால் நமக்கு அதில் ஆர்வமும் இல்லை நேரமும் இல்லை,  ஆகையால்  ஆரம்பத்திலேயே சில விதிமுறைகள் அனுசரிக்க உத்தேசித்து, அப்பொறுப்பை அருண் உள்ளிட்ட சில நண்பர்களிடம் ஒப்படைத்துள்ளேன்.  மேலும் உங்கள் ஆதரவு மற்றும் சாட்டிங் பாக்ஸ் பயனுள்ளதாக இருக்கிறதா என்ற தகவல்களை பொறுத்து அதை Shout Box ஆக மேம்படுத்தபடும். 

கசப்பான விமர்சனத்தை அடுத்து எனக்கு ஆதரவு நல்கிய அனைத்து நல் உள்ளங்களும் மிக்க நன்றி..  நான் கவலை படவோ அதை பெரிது படுத்தவோ இல்லை…   

 

Never explain.

Your friends do not need it

and your enemies will not believe it.

 

நண்பர்களே,

விசேஷ நாட்களில் மற்றும் தேர்தல் நாட்களில்  அதிகம் SMS சேவை பயன் படுத்த படுவதால், கடந்த 2 நாட்களாக கடுமையான காலதாமதம் ஏற்படுகிறது.  அதை தவிர்க்க வரும் நாட்களில் Yahoo Messenger இல் வழங்க முடிவு செய்துள்ளேன்.  எனது யாஹு ஐடி top10sai@yahoo.com  ,  வழக்கம் போல் எஸ் எம் எஸ் சேவையும் உண்டு. 

===========================================================================

பதிவு போதை

என்னை மேம்படுத்தி கொள்ளவும், எனது சிறு சிறு தவறுகளை அடையாளம் காணவும் தான் இங்கு (மும்பை) வந்துள்ளேன்.   ஆனால் கடந்த 2 நாட்களாக பதிவு எழுதாமால் இருக்க முடியலை.. அப்பொழுது தான் இந்த போதை எப்படி பட்டது என்பதை  உணர்ந்தேன்… இந்த போதையை ருசித்த யாராலும் இதை தவிர்க்க முடியாது என்பதை புரிந்து கொண்டேன்.   சுகமான சுமை தான்.

=============================================================================

Advertisements

9 responses to this post.

 1. Posted by MUNAWAR BASHA on ஜனவரி 1, 2009 at 8:51 பிப

  வெற்றி பெற்ற திரு.சுரேஷ் குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  சகோதரி பிரியா மற்றும் தம்பி அருண் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  சாய் சார் உங்களின் புதிய உருவாக்கத்திற்கு எங்களிடம் வரவேற்ப்பு எப்பொழுதும் உண்டு.

  தங்களுக்கு பதிவு போதை குறையாமல் அதிகரித்துக்கொண்டு இருக்க வேண்டும் என தங்களிடம் வேண்டிகேட்டுக்கொள்கிறேன்.

  மிக்க நன்றி.

 2. Posted by SENTHIL KUMARAN M on ஜனவரி 1, 2009 at 9:53 பிப

  சார், உண்மையிலேயே இது போதை மாதிரிதான் இருக்கு. திங்கள் கிழமை வரை கட்டுரை வராது என நீங்கள் சொல்லியும், கம்பூட்டரை ஆன் பண்ணியவுடன், நம்ம பதிவில் ஏதாவது செய்தி இருக்காதா என மனம் ஏங்குகிறது. எங்களது ஏக்கத்தின் தாக்கம் தங்களையும் தாக்கி உள்ளது என இப்பொழுது புரிந்தது. தாகத்தை தீர்த்த குரு அவர்களுக்கு நன்றி.

 3. வணக்கம் சாய் சார்..

  பொதுவாக விதியையும், விதிமுறையையும் நம்பாத ஆள் நான். விதிமுறைகள் அனைத்தும் மீரப்படுவதர்க்கே.. 🙂 (சும்மா சும்மா)…

  அதனால் பொதுவாக ஒரு சில விசயங்களை மட்டும் சொல்கிறேன்.. வெற்றி பெற்ற ஒருவரே மீண்டும் மீண்டும் வர வாய்ப்பு உள்ளது.. நமது தளத்தில் அதற்க்கு எந்த விதமான கட்டுப்பாடுகளும் இல்லை.. மேலும் ஒருவரே பல பெயரில் வர வாய்ப்பு உள்ளது.. இதற்க்கு ஏதாவது கட்டுப்பாடுகள் வேண்டும்.

  பரிசினை பொறுத்தவரை அது என்றும் மறையாத ஒன்றாக இருக்க வேண்டும். பொதுவாக கல்வியே ஒருவருக்கு என்றும் அழியாத செல்வம். ஆகையால் புத்தகங்களை பரிசாக அளிக்கலாம்.

  அவளோதான்…

 4. அடுத்த பத்திக்கு..

  ப்ரியா அவர்களை போல் நான் உழைப்பாளி இல்லை.. இருந்தாலும் தங்களது ஒரு சின்ன ஆசையாய் என்னால் நிறைவேற்ற முடிந்தது என்ற மகிழ்ச்சி எனக்கு மனநிறைவை தருகிறது..

  உங்களுடன் செல்லும் ஒவ்வொரு நாளும் எனக்கு பொன்னான நாட்கள்.. இது அனைவருக்கும் கிடைக்காது.. இந்த வலைப்பூவை உருவாக்க நான் பெரிதாக ஒன்றும் செய்வவில்லை..

  இதற்க்கு தாங்கள் அளித்த அங்கீகாரத்துக்கு மிகவும் நன்றி..

 5. உங்களுக்கு பதிவு போதை போல எங்களுக்கும் தினமும் பதிவை படிக்கும் போதை . இல்லை என்றால் 3 நாட்களுக்கு பதிவு இல்லை என்று படித்தபோதும் தினம் 4 முறை open செய்து பார்போமா?.

 6. Posted by சுரேஷ் குமார் வீ on ஜனவரி 2, 2009 at 12:25 முப

  அனைவருக்கும் வணக்கம்.

  என்னை இந்த வருடத்தின் முதல் நாளி்ல், இந்த போட்டியின் வெற்றியாளனாக அறிவித்ததில் மிக்க மகிழ்ச்சி. அனைருவருக்கும் நன்றி… நான் திரு சாய் சாரின் Paid Subscription Service -லும் மெம்பர் ஆக இருக்கிறேன் என்று கூறிக்கொள்வதிலும் பெருமை அடைகிறேன்.

  நன்றியுடன்

  சுரேஷ் குமார் வீ

 7. THANK YOU SAI

  KICK IS THE CAKE ,HAVE IT BUT WE WILL TASTE THAT.
  EXPECTING YOUR DAILY BLOG

  MURUGESAN

 8. Posted by muthu veerappan on ஜனவரி 2, 2009 at 11:22 முப

  vanakkam sai… mudal muraiya ullae varukiraen…. idaipattavargalai kadainthedukkavae varugiraen… pazlutha maram than sayee kalladi padum… piragu enna kavalai… kavalai enna kai kulanthaiya … kaiyil thooki thiriya…. dhinamum varalama neengal dhan solla vendum… indru ungal anumadhi illamalae …

 9. சாய் சார்,
  தினமும் உங்க பதிவை ரீடரில் படித்தாலும் எப்பொழுதாவது தான் பின்னூட்டம் இடுவேன் :)..

  //பதிவு போதை//
  பதிவு வாழ்கையில இதெல்லாம் சாதாரணமப்பா.. எனக்கு தெரிந்து நிறைய பேருக்கு பதிவு போடாவிட்டால் பைத்தியம் பிடித்தது போல் ஆகிவிடும்.. ஒரு விதமான அடிக்ஷன் போல இது..:)) உங்க டிப்ஸை தொடருங்க..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: