Archive for ஜனவரி, 2009

இன்றைய சந்தையின் போக்கு. 30.01.2009

நீ முன்னாலே போனால்  நான் பின்னாலே வாரேன் கதையாக தற்போது உலக சந்தைகளை பின் தொடர்கிறது நமது சந்தை.  சென்ற மாதம் மட்டும் விதிவிலக்காக நாம் முன்னால் சென்றோம்.

புலி வருது புலி வருது கதையாக – அமெரிக்க சந்தைகளும் பெயில் அவுட் திட்டத்திற்கு காத்து கிடக்கின்றன.

சாதரணமாக அங்கு நிலவும் ஏற்றம் இறக்கம் கூட இல்லாமல் 8000 நிலையில் உயிர் ஊசலாடுகிறது.   ஆனால் Dow il கவனிக்க வேண்டிய ஒரு விசயம் 8000 நிலையை அக்டோபர் மாதம் முதல் முறையாக தொட்ட சந்தை இன்று வரை 8000 நிலைகளில் தான் நிலை கொண்டுள்ளது.  இந்த கால கட்டத்தில் அனைத்து மோசமான நிகழ்வுகளையும் / செய்திகளையும் சந்தித்து விட்டது.  அதையும் மீறி 8000 ல் நிலை பட்டு வருவது நல்ல விசயம் தான். 

அதே போல் நமது சந்தையும் அக்டோபர் இறுதியில் இருந்து 2600-3000 என்ற எல்லைக்குள் தான் பயணிக்கிறது. 

நேற்றைய தினம் F&O Expiry மற்றும் Dow Future il ஏற்பட்ட சரிவு அதை தொடர்ந்து மக்கள் லாபத்தை உறுதி செய்ய முனைந்ததால் சந்தையால் உயரங்களை தக்க வைக்க இயல வில்லை.

இன்றையதினம் 2765-2735 ஆகிய நிலைகளை உடைத்தால் 2630 வரை எளிதாக எடுத்து செல்லும்.. 

மேலே செல்ல 2828 – 2845 ஆகிய நிலைகளை கடக்க வேண்டும்.

பின்னூட்டம் இல்லையே என்று கேட்டதை அடுத்து சில் புதிய நண்பர்களின் முகம் தெரிய வந்துள்ளது… அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.

டாக்டர் சார்  :- GCI இல் உங்களுக்கு தேவையான உலக இண்டக்ஸ் களை கவனிக்க முடியும்..  தொலைபேசியில் அல்லது யாஹூவில் தொடர்பு கொள்ளுங்கள்.. உதவுகிறேன்.

திக்குமுக்காடிய உடுமலை மாணவன்

kovai

நேற்றைய பதிவில் பத்திரிக்கை செய்தியில் படித்ததாக   நாம் குறிப்பிட்ட மாணவன் பிரபுவுக்கு கோவை டி.ஐ.ஜி திரு சிவனாண்டி உட்பட பலர் உதவியுள்ளனர்.  கடந்த 1 வருடத்திற்கும் மேலாக கடன் வழங்காமல் இழுத்தடித்த வங்கி நேரில் சென்று காசோலையை வழங்கியுள்ளனர்…. உதவி மழையில் திக்கு முக்காடும் மாணவனின் எதிர்காலம் இனி பிரகாசமாக அமையும்… வாழ்த்துவோம் நாமும்.   ஒருவரின்  செயல்கள் நியாயமாக இருக்கும் பட்சத்தில் பலருக்கு தெரிய வந்தால் நிச்சயம் உதவி கிடைக்கும் என்பதற்கு இது உதாராணம்.  ஆகையால் மனம் தளராமல் போரடினால் எதிலும் வெற்றி நிச்சயம். 

ஆனால் இது போன்று ஒவ்வொரு ஏழை மாணவனும் பத்திரிக்கை செய்தியானால் தான் கடன் கிடைக்கும் என்ற வங்கிகளின் மன நிலை மாறவேண்டும். நேற்று வரை கடன் வழங்க அவனிடம் என்ன தகுதியில்லையென்று அவர்கள் நிராகரித்தார்கள்.  இன்று எதன் அடிப்படையில் தேடிச்சென்று உதவினார்கள்?   இது போன்று எத்தனையோ மாணவர்கள் பல ஊர்களில் பல கிராமங்களில் வங்கிகளுக்கும் கல்லூரிக்கும் நடையா நடக்கிறார்களே அவர்களுக்கு என்ன பதில்.

நன்றாக படிக்கும்,  ஏழை அதுவும் முதல் தலைமுறையாக கல்லூரியில் கால் வைக்கும் மாணவர்களுக்கு உடனடியாக உதவி கிடைக்க ஆவணம் செய்ய வேண்டும். அதற்கு கல்வி கடனை வங்கியின் கிளை மேலாளரின் நேரடி பொறுப்பில் இல்லாமல் – கலெக்டர் அலுவலகம் மூலாமாக பரிந்துரைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.  சிறந்த உதாரணம் சென்ற ஆண்டு கல்வி கடன் முகாம் நடத்திய ஈரோடு மாவாட்ட கலெக்டர்.

நமது நண்பர்கள் பலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவ முன்வந்தார்கள்…  மிக்க நன்றி.   தக்க சமயத்தில் உங்களின் உதவிகளை உரியவர்களுக்கு முறையாக கொண்டு  சேர்க்கும் வகையில் பயன் படுத்திக்கொள்கிறேன்.

 “எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்  – என்பார்கள் நாம் அந்த அளவுக்கு உயர வேண்டாம்.  இந்த சம்பவத்தை ஆரம்பமாக வைத்து நாம் தொடர்ந்து ஒரு சிலருக்கு சிறு சிறு  உதவிகளை செய்யலாம்.    நான் இதற்காக மாதம்தோறும் ஒரு சிறு தொகையை செலவிட தயார்…   நண்பர்கள் தக்க ஆலோசனை வழங்கவும்.  நன்றி. 

நன்றி – புகைப்படம்- தினமலர்.

இன்றைய சந்தையின் போக்கு 29.01.2009

உலக சந்தைகளை பின் தொடரும் நமது சந்தை….

அமெரிக்க சந்தையில் மையம் கொண்டுள்ள புயல் மேலும் 200 புள்ளிகள் வரை வடக்கு திசையில் முன்னேறி உள்ளது.   அதன் காரணமாக உலக சந்தைகள் அனைத்திலும் லேசான அல்லது மிதமான இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

நமது சந்தையில் இந்த மழை வாய்ப்பை பெட்ரோல் பொருட்களின் விலை குறைப்பு அதிகரிக்க செய்யும். 

இரண்டொரு நாளில் ஒபாமா அரசின் 816$ பில்லியன் அளவிற்கான சலுகை திட்டங்கள் வெளிவரலாம் என்று எதிர் பார்க்கப்படுவதால், அதுவரை  தற்போதைய உற்சாகம் தொடரும்.

இந்த உற்சாகம் பெரிய அளவில் சந்தையை உயர்த்தாது…   

தற்போதைய சந்தை நிலைமை கடிகாரத்தின் பெண்டுலம் போல ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் ஊசலாடும் நிலைமையில் தான் உள்ளது.  (3100-2680).    அப்ப கீழே வருமா? நிச்சயம் வரும்!….. வரணும்!  

இதை சரியாக பயன்ப்படுத்தி முதலீட்டாலர்கள் பயன் அடையலாம்….

உதராணத்திற்கு ரிலையன்ஸ் நிறுவன பங்குகளை தீபாவளி சமயத்தில்  1075 க்கு பரிந்துரைத்தேன்.   அது அதிக பட்சமாக 1500 வரை சென்றது.

குறைந்த பட்சம் 300 லாபத்தில் விற்றிருந்தால்….   அதை அடுத்து 2 முறை 1100 என்ற விலைக்கு கிடைத்து உள்ளது.  ஒவ்வொரு முறையும் 300 லாபம் ஈட்டியிருந்தால்.

1100 முதலீட்டிற்கு   –  900  லாபம்..     81% லாபம் 4  மாதங்களில்.

சொல்லுங்கள்  இந்த சந்தையில் சம்பாதிக்க முடியுமா இல்லையா என்று…?   சரியாக செய்தால் இதை விட வேறு நல்ல தொழில் இல்லை.  நீண்ட கால முதலீட்டிற்கு உகந்த நிலையில் சந்தையும் இல்லை 5-10 வருடம் காத்திருக்கும் மன நிலையில் நாமும் இல்லை.   குறுகிய கால சாகுபடி தான் சிறந்தது.  அந்த குறுகிய கால சாகுபடியால் வரும் லாபத்தில் ஒரு பகுதியை நீண்ட கால முதலீடாக செய்யுங்கள். 

இன்றைய நிலைகள் : 2965  2945  – 2915-  2885-2865 –  2835 – 2828 – 2805 – 2785

சின்ன வருத்தம் :-   எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல் என்னை மேம்படுத்தி கொள்ளத்தான் இந்த பதிவினை எழுதிவருகிறேன்.   நிறை குறைகளை சுட்டி காட்டினால் தான், எனது எழுத்து சிலருக்காவது பயன் படுகிறதா என்று அறிய முடியும்,  மேலும் மேம்படுத்த உதவும்.   ஆனால் பலருக்கு சின்னதாக ஒரு பின்னூட்டம் எழுத கூட நேரமில்லை.   Gci – மென்பொருளை 245 க்கும் அதிமானவர்கள் கிளிக் செய்துள்ளனர்.. அப்படி என்றால் குறைந்தது 100 பேராவது அதை டவுன் லோட் செய்திருப்பார்கள்.  ஆனால் அது பயன்படுகிறது என்று சொன்னவர்கள் ஒரு சிலர்தான். 

===========================================================================

ஆர்-கே –  பிப்ரவரி 2 வது வராத்திற்கு பிறகு நண்பர்கள் சந்திப்பிற்கு நான் தயார்..  எங்கே எப்படி சந்திக்கலாம் என்று சொல்லுங்கள்.  இடம், நேரம், செலவு மற்றும் கலந்து கொள்பவர்கள் ஆகியவற்றை சரியாக முன் கூட்டியே திட்டமிட்டால் நன்றாக இருக்கும்.

இன்று என்னை பாதித்த –  2 செய்திகள்…

1.இன்றைய இலங்கை சூழ்நிலையில் இந்தியா இலங்கையில் கிரிக்கெட் ஆட சென்றது தவறு..

   சிம்பா கொஞ்சம் ஹாட்டா ஒரு பதிவு போடுப்பா… புழுதிகாட்டில். 

2.  கோவை மாவட்டம், உடுமலை அருகேயுள்ள குடிமங்கலத்தை சேர்ந்த பிரபு என்ற மாணவன் பி.இ படிப்பிற்கு கல்விகடன் கிடைக்காததால் இரண்டாம் ஆண்டு படிப்பை நிறுத்தி விட்டு தனது தந்தையின் சவரத்தொழிலுக்கு திரும்பிய அவலம் (தினமலர் செய்தி)  அரசு பள்ளியில் படித்தவன் +2 வில் 851 மதிபெண்களும்,  முதலாம் ஆண்டு பி.இ செமஸ்டரில் 75%  ம் வாங்கியுள்ளதாக செய்தி.   நண்பர்களே சொல்லுங்கள் நாம் ஏதாவது செய்யலாமா?

இன்றைய சந்தையின் போக்கு 28.01.2009

அமெரிக்க சந்தைகளில் மையம் கொண்டுள்ள புயல் வடக்கு நோக்கி மெதுவாக நகர்ந்து வருகிறது.    இதே திசையில் நகர்ந்து கரையை கடந்தால் மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்…   மாறாக தெற்கு நோக்கி நகர்ந்தால்  உலக சந்தைகள் அனைத்தும் ஒரு வித அவதிக்குள்ளாகும் என்பதில் மாற்று கருத்து இல்லை. அதிக வாய்ப்புகள் / எதிர் பார்ப்புகள் வடக்கு நோக்கி உள்ளது.

ஐரோப்பிய நாடுகளும் சில சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்கவும் / பொருளாதார சலுகைகள் வழங்கவும் முன் வந்துள்ளது. 

 நேற்றைய தினம் எதிர் பார்த்ததை போலவே 2750 வரை எளிதாக சென்று போராடி அதை தக்கவைத்தது.

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த பொறுப்பற்ற அரசு அதிகாரிகளை நினைந்து விட்டால்.

 என்று  தான் இவர்கள் திருந்துவார்களோ?   சந்தையின் வேலை நேரத்தில் பொருளாதாரம் சம்மந்தபட்ட முடிவுகளை ஏன் அறிவிக்கிறார்கள்.  

ரிசர்வ் வங்கியின் முடிவினை அடுத்து 30 புள்ளிகள் ஒரு நிமிடத்தில் விழுகின்ற போது ஒரு சிறு வணிகர் நஷ்டத்துடன் வெளியேறுவதை தவிர என்ன தான் செய்ய முடியும்.  

இன்றைய தினம் அமைதியாக துவங்கும் சந்தை – எவ்வாறு 2800-2810 நிலைகளை கடந்து அதை தக்க வைக்கிறதோ  பொறுத்தே அடுத்த கட்ட நகர்வுகள் அமையும்.

இன்றைய நிலைகள் –  2865 – 2828 – 2800 – 2798 – 2765 – 2745 – 2727 – 2695

இன்றைய சந்தையின் போக்கு 27.01.2009

மூன்று நாட்கள் தொடர் விடுமுறைகளுக்கு பிறகு துவங்கும் சந்தை….  எவ்வாறு இருக்கும்.   இந்த 3 நாட்களில் உலக சந்தைகளில் பெரிய அளவில் மாற்றம் இல்லை.

பெரிய அண்ணன் டவ் ஜோன்ஸ் 7900-8000-8100 என்ற நிலைகளில் புயல் சின்னம் போல நிலை கொண்டிருக்கிறார்..    என்றைக்கு கரையை கடக்கும் என்று தெரியவில்லை.

2 நாட்களாக ஆசியா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் ஒரு வித உற்சாகம் காணப்படுகின்றது.. நமது சந்தையில் அதன் தாக்கம் துவக்கத்தில் இருக்கும்.  

கடந்த சில மாதங்களில் பலவித வதந்திகளுக்கு ஆளான ஐசிஐசிஐ வங்கியின் காலண்டு முடிவுகள் நன்றாக உள்ளது.   கூடவே எஸ் பி ஐ -யின் முடிவுகளும்.   இவற்றின் தாக்கத்தையும் இன்று காண முடியும்.

புதிய முதலீடு ஏதும் இல்லாமல் தின வர்த்தகர்களின் கையில் சிக்கி தவிக்கும் நமது சந்தையில் இன்று என்ன நடக்கலாம். 

2750 வரை சந்தை மேலே செல்லலாம்… ஆனால் அதை தக்கவைக்க மிகவும் போராட வேண்டி வரும்.

2828 -2775 -2737 – 2727 – 2710 – 2695- 2665 – 2640 – 2630 

குறுகிய கால முதலீட்டிற்கு LIC Housing Finance ஏற்ற நிலையில் உள்ளது டார்கெட் 245-265.

சத்யத்தின் விலை –  38 ஆக L&T  தயவால் உயர்ந்துள்ளது…  நாம் 25 இல் பரிந்துரைத்தோம்.

SGX NIFTY  – விவரங்களை இந்த தொடர்பில் பார்க்கலாம்… இன்றையதினம் 8.00 மணிவரை 400-500 லாட்வரை மட்டுமே வர்த்தகமாகியுள்ளது.   கடந்த வெள்ளி கிழமை நடந்தது என்ன?

 

உலக சந்தைகளின்  இண்டெக்ஸ் மற்றும் தங்கம்கச்சா எண்ணை உள்ளிட்டவற்றின்  Real Time  Data  / Technical Software யை இங்கு டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். எனக்கு இத்தகவலை அனுப்பி அனைவருக்கும் பயன் படட்டும்சார் பதிவாக எழுதுங்கள் என்று சொன்ன திருப்பூர் சீனிவாசன் அவர்களுக்கு நன்றி.

Down Load செய்ய –  Gci MT4

gci

 

இந்த வாரம் ஆத்தூர் மற்றும் சேலம் சென்றிருந்தேன்…   இந்த பயணமும் நன்றாக அமைந்திருந்தது.  நல்ல வரவேற்பு அளித்த  நண்பர்கள் ரவி மற்றும் முன்னாவர் பாஷா உட்பட அனைவருக்கும் மிக்க நன்றிகள். அடுத்த வாரம் எங்கே போகலாம்?

இன்றைய சந்தையின் போக்கு 23.01.2009

நாம் எதிர் பார்த்ததை போலவே சந்தையின் எதிர்பார்ப்புக்கு மேலாக  ரிலையன்ஸ் -ன் காலாண்டு முடிவுகள் அமைந்துள்ளன…   ஆனால் சந்தையில் expectations என்ற பெயரில் எந்த அளவு வதந்திகளை பரப்ப முடியுமோ அந்த அளவுக்கு  செய்து வைத்தார்கள்..  

அதைவிட கொடுமை என்ன என்றால் நேற்று முன் தின இரவு  ஒருவர் தொலை பேசியில் தொடர்பு கொண்டு அடுத்த சத்யம் ரிலையண்ஸ் ஆம் சார், நாளைக்கு சார்ட் செல்லிங் செய்து வையுங்க டார்கெட் 30-40% ன்னார்… என்ன கொடுமை இதுன்னு நொந்து கொண்டேன்.  இதன் வெளிப்பாடு தான் நேற்றைய பதிவின் முதல் வரி.

அமெரிக்க சந்தைகள்   ஐயா தர்ம துரை… என்று வெள்ளை மாளிகை வாசலில் ஓபாமாவின் அறிவிப்புகளுக்கு காத்திருக்கின்றன.    8000 ல் டவ் ஜோன்ஸ் நிலை கொண்டுள்ளது.  அவரின் சலுகை அறிவிப்புகள் வரும் வரை பெரிய மாற்றம் இருக்காது.   அவர் இன்னும் நம்ம அரசியல் வாதிகளிடம் நிறைய கற்று கொள்ள வேண்டும்.  பதவி யேற்ற அன்றே இந்த இலவச திட்டத்துக்கு கையெழுத்திட்டேன் என்று சொல்ல தெரியவில்லை…  முதலில் தொட்டது   ஆப்கான் பிரச்சினை…   இது தப்பு இல்லையா.. ? 

காலையில் எழுந்த உடன் எனக்கு ஒரு அதிர்ச்சியை தந்தது  SGX Nifty.  அங்கு என்ன நிலைமை என்று பார்க்கலாம் என்று பார்த்தால் 2 அதிர்ச்சி… முதலில் நம்ப வில்லை.   2-3 முறை Refresh செய்து பார்த்தேன்.   நீங்களே பாருங்கள். 

 screen1

1. முதல் அதிர்ச்சி 7.30 மணி அளவில்  எப்பொழுதும் 150-200 என்ற அளவில் தான் Volume  இருக்கும்,  இன்று  7000 க்கும் அதிகம்.   ஏன்.  ஏதவது தவறா?

2.  பிப்ரவரி மாத நிப்டி 242 புள்ளிகல் உயர்வுடன் 2924 ல் வர்த்தகம் ஆனது எப்படி?  

என்னமோ நடக்குது மர்மமா இருக்குது…  

பணவீக்கம் சிறிய அளவில் உயர்ந்துள்ளது…  5.6% versus 5.24%  (WoW).    Indranil Sengupta, Chief Economist, DSP Merrill Lynch.   வரும் மார்ச் 31 க்குள் பணவீக்க விகிதம் 2% அளவுக்கு வரும் என்று ஆருடம் கூறியுள்ளார்… அது அரசு எந்த அளவுக்கு பெட்ரோல் பொருட்களின் விலையை குறைக்கிறது என்பதை பொறுத்து தான் என்று நான் நினைக்கிறேன்.

செபி –  குறிப்பிட்ட சிலர் ஒரு சில பங்குகளை குறிவைத்து வதந்திகளை பரப்பி சரிவடைய செய்தார்களோ / செய்கிறார்களோ என்று விசாரிக்க உள்ளதாக The Economic Times   பத்திரிக்கை செய்தி தெரிவிக்கிறது.  என்ன செய்து என்ன புண்ணியம் இழந்தது இழந்தது தான். 

இன்றைய நிலைகள் – 2828- 2780-2750-2735 –  2710 –  2670 2655  

இன்றைய சந்தையின் போக்கு 22.01.2009

சத்ய -த்தின் சோதனைக்கு பிறகு சந்தையை..  வதந்திகள் தான் வழி நடத்துகின்றன என்றால் மிகையில்லை. 

தினவர்த்தகத்திற்கு குறிப்பாக சிறு வணிகர்களுக்கு ஏற்ற நிலையில் சந்தை இல்லை..  சந்தை எங்கும் செல்லாது..  நமது கையிருப்பை இழக்காமல் இருந்தால் நாமும் சந்தையில் இருக்கலாம் என்பதை உணர்ந்து சில நாட்களுக்கு ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்ப்பது நல்ல பயன் தரும்.

இன்று இழந்து விட்டு நல்ல வாய்ப்பு கிடைக்கும் போது தவற விட்டோமே என்று வருந்த கூடாது இல்லையா? 

நேற்றையதுவக்கம் சரியாக அமைந்தது…. ஆனால் அங்கிருந்து மீண்டு வந்ததும்…. 3.00 மணிக்கு பிறகு ஏற்பட்ட சரிவும் டெக்னிகலுக்கு எதிரான செயல் தான்… சித்தர்களின் திட்டமிட்ட சித்து வேலை தான். 

எஜுகம்ப் சொல்யூசன்ஸ் –   கடந்த 19 மற்றும் 20 தேதிகளில் இதன் Volume இரட்டிப்பாக இருந்தது கூடவே சில நம்ப தகுந்த செய்திகளின் அடிப்படையிலேயே  கவனிக்க சொல்லியிருந்தேன்,  ஆனால் அது ஒரே நாளில் கவனிக்க வைக்கும் என்று எனக்கு தெரியாது. 

ப்யூச்சர் வேல்யூம்

==============

சராசரியாக – தினசரி 10 -12 லட்சம் என்ற அளவில் இருந்து வந்தது.

19.01.09   –  14  லட்சம்

20.01.09  –   28 லட்சம்

21.01.09  –    32 லட்சம்.

அவர்களின் காலாண்டு முடிவுகள் 27ம் தேதி அன்று வெளியாக உள்ளது அதன் தொடர்ச்சி ஒரு ஏற்றம் அமையும் என்றும் எதிர் பார்க்கிறேன்.

இது அருமையான ஸ்டாக் – ப்யூச்சர் வணிகத்திற்கு.  சரியாக பாலோ செய்தால் இதில் நல்ல ப்யூச்சர் அமைத்து கொள்ளலாம்.      கடந்த 3 மாதத்தில் 3 முறை 2900 இல் இருந்து 1500 க்கும்  2 முறை 1500 இல் இருந்தும் 3000 க்கும் பயணித்து உள்ளது.  சரியான பக்கத்தில் இருக்க வில்லை என்றால்

 சில நாட்களுக்கு முன்பு ஒரு நண்பர் தொலைபேசியில் பேசும் போது தங்களை பற்றி சொல்லுங்கள் என்றேன்…   நகைச்சுவையாக சில பங்குகளின் பெயரை சொல்லி –

இவற்றின்   Future ல் தனது Future ஐ தொலைத்தவன் என்றார்.  அது போல் ஆகிவிடும்.  

stimulus மற்றும் bails out   என்ற வார்த்தைகள்  மிக சாதாரணமாகிவிட்டது…  தற்போது 2012 ஒலிம்பிக் போட்டி   திட்டங்களுக்கு  பெயில் அவுட் அறிவித்து உள்ளார்கள்.  

இன்று வரும் ரிலையன்ஸ் காலாண்டு முடிவு நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். ஹீரோ ஹோண்டா,  எல் ஐ சி,   மற்றும் யூ பி குரூப் ஆகிய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் திருப்திகரமாக அமைந்துள்ளது.

தற்போது உள்ள ஒரு மந்த நிலை மாத இறுதியில் அல்லது முதல் வாரத்தில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம். 

=============================================================================

தற்போதைய உலக சந்தைகளின் உற்சாகம் தொடரும் பட்சத்தில் நமது சந்தை 2820 வரை எளிதாக நகரும்..    அடுத்து ஓரிரு நாட்களில் ஒரு பெரிய ஏற்றத்தினை எதிர் பார்க்கிறேன். 

இன்றைய நிலைகள்

2820  –  2810 – 2780 – 2760 – 2740 – 2735 2710 – 2689– 2669.

ஜான்சி அக்கா –  தீபாவளி போர்ட் போலியோவில் டி எல் எஃப் / யுனிடெக் போன்ற பங்குகளை தவிர்த்து மற்ற பங்குகளில் முதலீடு செய்யலாம்.

இன்றைய சந்தையின் போக்கு 21.01.2009

தவமாய் தவமிருந்து – அமெரிக்க அதிபராக பதவியேற்று விட்டார்…  திரு பராக் ஒபாமா.  மூன்று மாதங்களுக்கு முன்பே வெற்றி பெற்றிருந்தாலும்…  பதவியேற்பு என்ற சம்பிரதாயம் நேற்று இனிதே நிறைவடைந்தது.   அவர்களது சந்தைகளும் சிவப்பு கம்பளம் விரித்து அவரை வரவேற்றுள்ளன.  ( ஆமா சம்பிரதாயத்தை மீறக்கூடாது இல்லையா?) 

இது வரை வாய்ச்சொல் வீரர் ஆக இருந்தவர் செயல் வீரர் ஆக மாற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.   அதேபோல்    மீடியா மற்றும் உலக நாடுகளின் “கறுப்பர்” என்ற அனுதாபத்தை இனி மேலும் அனுபவிக்க முடியாது.   “அமெரிக்க அதிபர்” என்ற பெரிய அண்ணன் பிராண்ட் இமெஜ் க்கு உண்டான அனைத்து விமர்சனங்களையும் எதிர் கொள்ளவேண்டும்.

அடுத்து வரும் நாட்களில் உலக நாடுகள் குறிப்பாக உலக சந்தைகள் அனைத்தும் அமெரிக்காவை உன்னிப்பாக கவனிக்கும் என்றால் மிகையில்லை.   ஈராக் / ஆப்கானிஸ்தான் மற்றும் பொருளாதரம் பிரச்சினைகளில் அவர் எடுக்க உள்ள முடிவுகள் என்ன என்று தெரிந்து கொள்வதற்கு.    இல்லை அவரும் நமது அரசியல் வாதிகளை போல  “ என் கையில் எந்த மந்திரகோலும் இல்லை என்று சொல்ல போகிறாரா?”  என்று பார்க்க வேண்டும்.  

வாரன் பப்பட் –  Don’t expect miracles from Obama. that is going to take time.  என்று சொல்லி உள்ளார். 

நாமும் சிறிய அளவில் – சிவப்பு கம்பள வரவேற்பு அளிப்போம்… என்ன தான் இருந்தாலும் அவர் பெரிய அண்ணன் ஆச்சே!

சந்தை செய்திகள் –  பல துறைகளில் தனக்கென முத்திரை பதித்த L&T நிறுவனம் ஏன் இதுவரை மென்பொருள் துறையில் பெரிய அளவில் வரவில்லை என்ற சந்தேகம் எனக்கு உண்டு.  தற்போது சத்யத்தை வாங்க உள்ளார்கள் என்ற செய்திகள் வருகிறது.    சத்யத்தின் மறு பெயராக எல் அண்ட் டி இருக்கும் என்று  நம்பலாம்.  நம்பிக்கைக்கு குறிய நிறுவனம் ராணுவம் சம்மந்தப்பட்ட பல ஆராய்ச்சி/தயாரிப்புகளில் அவர்களது பங்களிப்பு உள்ளது.  போக்ரான் சோதனையில் அவர்களது பங்களிப்பை நேரடியாக சொல்லாமல் “எங்களது தயாரிப்பு இந்தியாவை பெறுமையடைய செய்யும்”  என்று அவர்களது அனைத்து பஸ்களிலும் ஒரு வரி செய்தி எழுதி இருந்தார்கள்.  என்னை கவர்ந்த மனிதர்களில் எல் அண்ட் டி CEO திரு நாயக் கும் ஒருவர்.

Montek Singh Ahluwalia, Deputy Chairman, Planning Commission.   அரசு மேலும் சில ஊக்கப்பரிசுகளை / சலுகைகளை / உதவிகளை  வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.  இது சந்தை சரிவடைவதை பிரதமர் அலுவலகம் விரும்பவில்லை என்பதையே தெரிவிக்கிறது.  

குறுகிய கால முதலீடாக –  சுஸ்லான் பங்குகளை வாங்கலாம்  தற்போதை விலை 51/-  டார்கெட் 60 – 65/-

Educomp Solutions   –  பங்கினை வரும் நாட்களில் கவனித்து வரவும்..

டவ் ஜோன்ஸ்  –   7870 வரை கீழே சென்று மீண்டு வந்துள்ளது… தற்போது 8020 இல் வர்த்தகமாகிறது.  ஆசிய சந்தைகளும் துவக்கத்தில் ஏற்பட்ட பெரிய சரிவுகளில் இருந்து மீண்டு வருகிறது. 

இன்றைய நிலைகள் 

2833  –  2815 – 2789 – 2760 – 2745 – 2734 – 2718 – 2689

திரு.ஜாஃபர் அவர்கள்  http://sharedirect.blogspot.com/  என்ற பதிவினை துவக்கியுள்ளார்…  வாழ்த்துவோம் வரவேற்போம்.  தமிழில் இது போன்று இன்னும் பலரை எதிர்பார்க்கிறேன்.  அனைவரும் ஒரே மாதிரி எழுதாமால் தனக்கென புதிய பாதையை வகுத்து கொள்ளவேண்டும். 

வாழ்த்துகள் நண்பரே…

நானும் வெறும் லெவல்களை தருவதில் இருந்து மாறு பட விரும்புகிறேன்…  நண்பர்கள்  வேறு என்ன எழுதலாம் என்று ஆலோசனைகள் வழங்க வேண்டுகிறேன்.

============================================================================

நேற்றைய சாதனைகள்  🙂

3000 புட் ஆப்ஷன்  – 200 இல் திங்கள் அன்று பரிந்துரைத்தது- 260 டார்கெட் Achieved  –  3000/- லாபம் ஒரு லாட்டிற்கு.

2800 கால் ஆப்ஷன் – 57 இல் பரிந்துரைத்தது 75 டார்கெட் Achieved –   1000/-  Profit per lot.

Renuka Sugars ப்யூச்சர் 70.50 இல் பரிந்துரைத்தது 1st டார்கெட் 72 Achieved –  7500/- per lot.

 

 

இன்றைய சந்தையின் போக்கு 20.01.2009

//தற்போது அவர் செல்ல வெண்டிய இடம் 2856. ///

இப்படி நாம் சொன்னது 14.01.2009 அன்று.   எதிர் பார்த்ததை போலவே  நேற்றைய தினம் அதிக பட்சமாக 2858 வரை சென்று திரும்பி விட்டார்.   மீண்டும் 2820 களில் முடிவடைந்து உள்ளது.

இன்று 2800 க்கு கீழ் நழுவினால் 2720 வரை செல்லலாம்.    அதன் தொடர்ச்சியாக ஒரு ஏற்றம் அமையும் என்று எதிர் பார்க்கிறேன்.  

உலகமே ஒபாமாவின் பதவியேற்பை எதிர் பார்த்து இருக்கிறது…   அதனால் பெரிய மாற்றம் நிகழுமா என்பது சந்தேகமே…    அவர் தேர்தலில் வெற்றி பெற்ற தினத்திலும் இது போன்ற ஒரு எதிர் பார்ப்பு இருந்தது குறிப்பிடதக்கது.    அவரின் செயல் பாடுகள் அனைத்தும் இந்திய அரசியல் வாதிகளை போலவே இருக்கிறது.  வெறும் அறிக்கை புலியாக இருக்காமல்,  ஏதாவது அவர்கள் நாட்டிற்கு செய்தால் சரி.    அதை விடுத்து பதவி யேற்பு அன்றே ”அவுட் சோர்சிங்” போன்ற விசயங்களை அவர் பேசினாலும் நமக்கு பாதகம் தான். 

3000 புட் ஆப்ஸனை நேற்று வாங்கிய நமது நண்பர்கள் இன்று  பயனடைவர்… 

இன்றைய நிலைகள் –   2860 – 2810 – 2780 – 2720

நண்பர்களே –  கூடு மானவரை “ what about tmmrow market ? ”  என்ற கேள்வியை யாஹூவில் கேட்பதை தவிருங்கள்.  தினசரி இந்த கேள்வியை 20-30 க்கும் மேற்பட்டவர்கள் மாலை நேரத்தில்  கேட்கிறார்கள்… அது உங்களுக்கு முதல் கேள்வி ஆனால் எனக்கோ 10 அல்லது 20 வது கேள்வி.  சந்தை மட்டும் அல்ல நமது வாழ்க்கை..  24 மணி நேரமும் சந்தையை பற்றி நினைவாக ஒரு சிலர் இருக்கிறார்கள்.   அது தவறு.    கூடுமானவரை தாங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பின்னூட்டமாகவோ அல்லது மெயில் வாயிலாக கேளுங்கள.  

நன்றி – சாய்கணேஷ்.  

குறுகிய கால முதலீட்டாலர்கள் இன்றைய கீழ் நிலைகளில் முதலீடு செய்து  – 3100-3200 களில் விற்று வெளியேறலாம்.

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு :- 

கடந்த 10-15 நாட்களாக வேலை பளு காரணமாக அதிகமான் பரிந்துரைகளை வழங்க வில்லை குறிப்பாக – தினவர்த்தகர்களுக்கு.  எனவே 10-15 நாள்வரை நீட்டிப்பு செய்ய பட்டுள்ளது விவரம் நேரடியாக SMS மூலம் தெரிவிக்க படும்.   அதே போல் SMS கிடைப்பதில் உள்ள கால தாமதத்தை தவிர்க்க மேலும் ஒரு மென்பொருளை சோதனை ஓட்டமாக எடுத்து உள்ளேன்.   சோதனையில் உள்ள போது அந்த நிறுவனத்தின் பெயர் வரும் பிறகு அதை நீக்கி விடலாம்.    

இன்றைய சந்தையின் போக்கு 19.01.2009

கடந்த ஒரு வாரத்தில் கஜினி முகமது-வை போல் 5 முறை 2820 ஐ உடைத்து மேலே செல்ல முயற்சித்து உள்ளார்… நமது அண்ணன் நிப்டியார்… ஒவ்வொரு முறையும் 2821 -20 இல் பின் வாங்குகிறார்.   ஏன் இந்த பின் வாங்கல் என்று தான் தெரியவில்லை..

வெள்ளி கிழமை அன்றும் 2826 வரை சென்று 2816 இல் முடிவடைந்துள்ளார்..    பார்ப்போம் இன்று என்ன செய்கிறார் என்று.  

வெள்ளியன்று ரிலையன்ஸ் எதிர் பார்த்ததை போலவே அருமையாக ஆதரவளித்தது காளையின் ஆட்சிக்கு.  

எனது நிலைகள் –     

2992 – 2882 – 2855 –  2835 – 2810 –  2772 – 2750-2745

இந்த வாரத்திற்கான பிவோட் நிலைகள்

3064 – 2957 -2891 – 2784 – 2718 – 2611-2545.

முதலீட்டிற்கு ஏற்ற பங்குகள் 

ADLAPS   –  ASHOK LEYLAND  – ONGC – குறைந்த பட்சம் 10% லாபத்தை எதிர்பார்த்து முதலீடு செய்யலாம்.  (டெக்னிகல் பரிந்துரை)

 சென்ற வாரம் அதிகம் லாபம் தந்த சில பரிந்துரைகள் –

 Rocket Call –  Renuka Sugars  –  67  இல் பரிந்துரைத்தது டார்கெட் – 72   லாபம் 25000/-  per Lot.

Renuka sugars 70 கால் ஆப்ஷன் 2.90 இல் பரிந்துரைத்தது – டார்கெட் – 5.00  –  10000/ per lot.

NTPC  –  170 call option   – 6.50   tgt 12.00   target achieved

NTPC –   180 Call option –  3.00   tgt 5.00   tgt achieved

Nifty  2900 call option –  32  – tgt 57.00   tgt achieved

கடந்த வார கொங்கு நாட்டு பயணம் இனிதே அமைந்தது…. 

பெரிய வணிகர்களுக்கு ( 3 –  5 லட்சத்திற்கும் அதிகமாக டிரேடிங் கேப்பிட்டல் )  தனிப்பட்ட சிறப்பு சேவையை துவங்கியுள்ளதால்.  அது விசயமாக திருப்பூர் சென்றேன். 

ஆனால் –  கடந்த ஆறு மாத காலமாக ஒரு நண்பர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய சொன்ன நண்பரை (ஆர்கே) சந்திக்காமலா திருப்பூர் செலவது என்று முதலில் கரூர் சென்றேன்.   அருமை நண்பர் ஆர் கே அவர்களின் விருந்தோம்பல் மிகச்சிறப்பாக அமைந்தது. இந்த நட்பு என்றும் தொடர ஆண்டவனை பிராத்திக்கிறேன்.  

 திருப்பூரில் – அருண் மற்றும் கோவை, திருப்பூர் நண்பர்களை ஒரே இடத்தில் சந்தித்தோம்.. 

திரு மோகன் ராஜ் / கார்த்தி / திரு பெருமாள் ஆகியோரை அவர்களின் அலுவலகத்தில் சந்தித்தேன்.   இந்த சந்திப்பு நிகழ்வுகள் அனைத்தும் மிகுந்த மனநிறைவை தந்தது.   குறிப்பாக கோவை நண்பர்களின் அன்பினை மறக்க முடியாது.    உங்களின் அன்பினையும் ஆதரவையும் என்றும் தக்கவைத்து கொள்ள மேலும் என்னை மேம்படுத்தி கொள்ளவேண்டும்.