இன்றைய சந்தையின் போக்கு 30.12.2008


காலை வணக்கங்கள்,

நேற்றைய சந்தை உலக சந்தைகளை பின்பற்றியது என்றால் மிகை இல்லை…  காலையில் டவ் ஜோன்ஸ் ப்யூச்சரின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்றவாறு நமது நிப்டியின் நிலையும் அமைந்தது.

அதே போல நேற்றைய உயர்நிலையான 2950 முதல் 5 நிமிட வர்த்தகத்திலேயே தீர்மானிக்க பட்டது.   மதியம் சந்தை உற்சாகமாக உயர்ந்தாலும் அந்த உயர்நிலையான 2950 உடைக்காததை கவனிக்கலாம்.    நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படி ஒரு சித்தர்களின்  விளையாட்டை பார்க்கிறேன்.   கடந்த 10-15 நாட்களில் 4-5  முறை மிக பெரியதொரு கேப் டவுனை எதிர் பார்த்து சந்தையை முடிக்கிறார்கள் ஆனால். உலக மற்றும் ஆசிய சந்தைகள் அதற்கான வாய்ப்புகளை தட்டி விடுகின்றன.  ( 12/11 அன்று ஏற்பட்ட கேப்டவுனை போல)

சிறிய வேலை பளு காரணமாக பதிவெழுதுவதில் தாமதம் மற்றும் அதிகம் எழுத வில்லை. 

அடுத்து வரும் நாட்களில் முக்கியமான நிலைகள்….  

2689,  2719, 2768, 2784, 2852, 2901, 2951,2985,3034, 3118  

இதில் கீழ் நிலைகளை இன்னும் வலுவாக எதிர் பார்க்கிறேன்…  

 தங்களின் மேலான அன்பிற்கும்,  ஆதரவுக்கும் மிக்க நன்றிகள்…. 

கடந்த முறை நிப்டியின் முடிவு என்ன போட்டியில் வென்ற அனைவருக்கும் பரிசாக ஒரு மாத ஆலோசனைகள் அனுப்பி விட்டோம்.   திரு செந்தில் / ஹைதராபாத் அவர்கள் மட்டும் தற்போது வேலை பளு காரணமாக வர்த்தகம் செய்வதில்லை பிறகு பெற்று கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.   

 மீண்டும் அப்போட்டியினை  ஜன 1  2009 ல் இருந்து ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்.   மேலும் அதை சிறப்பாக செய்ய போட்டி விதி முறை மற்றும் பரிசு போன்றவற்றில் என்ன மாற்றம் செய்யலாம் என்பதை நண்பர்கள் ஆலோசனை கூறினால் நன்றாக இருக்கும்.   

Advertisements

18 responses to this post.

 1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙂

 2. Good Morning and thank you very much for your views sir.

  Good Morning to everybody and wish you all happy and profitable trading.

 3. dear sai
  very good morning.
  thanks for your announcement. i am sure once again i will win.
  with regards
  mugham.m

 4. மதிப்பிற்குரிய ஆசான் திரு சாய் அவர்களுக்கு,

  இனிய காலை வணக்கம்,,,,,,

  கடந்த பல மாதங்களாக தங்களுடைய கட்டுரையின் வாயிலாக எங்கள் அனைவரையும் சந்தையின் தாறு மாறான ஓட்டங்களில் இருந்து மிகவும் பாதுகாப்பாக வலி நடத்திக் கொண்டு இருக்கிறீர்கள்..

  உண்மையில் தங்களது கட்டுரை மட்டும் எங்களுக்கு இல்லாவிட்டால் நிலைமை கவலைக் கிடம்தான். நிறைய குழம்பி போய் இருப்போம்.

  தங்களது கட்டுரை மூலம் கருத்துக்களை பெற்று நாங்களும் ஒரு ஆய்வாளன் அளவுக்கு சந்தை பற்றி சொல்ல ஆரம்பித்து விட்டோம்.

  அந்த பெருமை யாவும் தங்களுக்கே சேரும்.

  மனமார்ந்த நன்றிகள்,,,,,,,,,,,,,

 5. வணக்கம் சாய் சார், எங்களுடைய கருத்துக்களை விரைவில் தெரிவிக்கிறோம்.
  யோசிங்கப்பா எல்லாரும்!!!!
  அனைவருக்கும் இனிய காலை வணக்கங்களுடன் தனசேகரன்

 6. There may be buying activity in morning session and selling pressure will be after 1.30 p.m.(as per view from websites ). May be useful for intraday traders.

 7. Thank you sir !!!

 8. காலை வணக்கம்.உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும்,நண்பர்கள் அனைவருக்கும்.எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

 9. வணக்கம் சாய் சார்,

  சந்தைகள் பெரிய அளவில் gap உப உடன் துவங்குவதற்கு வாய்ப்புகள் இல்லை என்றே நினைக்கிறேன்,,

  நாளில் நெடுகில் வர்த்தகத்தின் போக்கினை இந்திய europe சந்தைகள் முடிவு செய்யலாம் என்பது எனது கருத்து…

  நண்பர்களுக்கு இனிய வர்த்தக தினமாக அமைய வாழ்த்துக்கள்..

 10. புத்தம் புதிதாய் பூக்கப்போகும் புத்தாண்டே
  அகிலத்தை ஆளும் ஆண்டவனால்
  சகலத்தையும் சரிசெய்யமுடியும்
  அனைவரையும் அன்போடும் மகிழ்வோடும்
  சிறப்போடும்வாழ எல்லாம் வல்லவனை
  அனைவரும் வேண்டுவோமாக…………..
  …………..

 11. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

 12. Hello Sir,

  HAPPY NEW YEAR – For u and all reader.

 13. நேற்றைய மற்றும் இன்றைய இரு பதிவுகளுக்குமான பின்னூட்டம் இது,

  நீங்கள் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறீர்கள் மற்றும் உங்களால் அனைவரும் அடையும் பலன்களின் அளவும் அதிகரிக்கிறது என்பதற்க்கு திருவாளர்.ரஹ்மான் அவர்களின் பின்னூட்டமே சான்று. இந்த மாதிரி கீழ்த்தர செயல்கள் எல்லாம், தங்களின் வளர்ச்சி தாங்க முடியாமல், தங்கள் மீது சேறு பூச நினைக்கும் முயற்சியே!!

  எப்பொழுது, தன்னை வெளிப்படுத்தி கொள்ளாமல், புனைப்பெயரில் விமர்சனம் வருகிறதோ, அப்போதே அது நம்பகதன்மையை இழந்து விடுகிறது.

  இது போன்ற கேவலமான மனச்சிதைவின் வெளிப்பாடால் வரும் விமர்சனங்களுக்கு உங்களின் உண்மையான நண்பர்களும்,பயனாளர்களும் சிறிதும் மதிப்பளிக்க மாட்டார்கள்..

  மறப்போம் இது போன்ற அறிவிலிதனத்தை!! தொடர்வோம் நமது வெற்றிப்பயணத்தை!!!

  மீண்டும் போட்டி – வரவேற்கதக்க முடிவு..

 14. sai sir, your views are helping us to make profit and not only profit more than that. I would appreciate if you contiue your service to the needful persons like us and donot consider the worst comments.

 15. சாய் சார் அவர்களுக்கு,

  உங்களை மதிக்கும் நாங்கள் என்றும் என்றென்றும் மோசமான விமர்சனங்களுக்கு செவி சாய்க்க மாட்டோம்.

  உங்கள் சேவையினை பெறும் அடிப்படை கூட தெரியாத எங்களைப்போன்றோர்க்கு தாயைப்போல் வழிநடத்தும் பாங்கு எங்களை போன்றவர்களுக்குத்தான் தெரியும்.

  நண்பர் திரு ஆர்.கே. கூறிய கருத்துக்கள் அனைத்தும் நிதர்சனம்.

  தேவை இல்லாத விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் இந்த வருடத்துடன் இத்துடன் இதற்க்கு முற்றுபுள்ளி வைப்போம்.

  இனிய புத்தாண்டை இன்முகத்துடன் வரவேற்ப்போம்.

 16. மதிற்பிற்குரிய சாய் அவர்களுக்கு,

  பரிசினை நான் பேராரததை குறிப்பிட்டதற்கு நன்றி. ஜனவர்யில் இருந்து களத்தில் மீண்டும் குதிக்கலாம் என்று முடிவேடுதுள்ளேன். தங்களின் அன்பிற்கு நன்றி.

  போட்டியைப் பற்றி இச்சிரியவனின் சில ideas:
  ௧. nifty 50 யில் உள்ள பங்குகளில் எது அதிகளவு % உயர்வடையும் …

 17. எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சாய் சார் அவர்களூக்கு என்றூம் உங்கள் ப்ரியமுடன்

  பி.முத்து

 18. “உங்களில் யார் அடுத்த சாய்” என்ற பட்டம் வேண்டுமா…….

  போட்டிக்கான விதிமுறைகள் என்ன சொல்லலாம் என நினைத்த போது என் மனதில் உதித்தவை….

  (1)ஐரோப்பிய சந்தைகள் துவங்கும் முன் முடிவுகள் சொல்லியாக வேண்டும்…அதாவது மதியம் 12.30 மணிக்குள் நிபிட்டி ஸ்பாட் முடிவு முழு தசம திருத்தமாக இருக்க வேண்டும் ….(2865,2780 இது போல), இந்த நிலை சரியாக இருந்தால் தான் பரிசு…

  பரிசு ஒரு மாத பங்கு பரிந்துரை இலவசம் ……

  (2)ஒருவரே வாரத்தின் ஐந்து நாட்களிலும் தொடர்ச்சியாக வென்றால் மூன்று மாத பங்கு பரிந்துரை இலவசம் ……

  (3)போட்டியில் வென்றவர்கள் மீண்டும் கெஸ்ட் ரோல்களில் பங்கு பெறலாம்…..ஆனால் அவர்களின் முடிவுகள் மீண்டும் பரிசு முடிந்த பிறகு தொடங்கும் நாளில் இருந்து தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்…….

  (4)2009 ம் வருடம் முழுவதும் யார் அதிகபடியாக வெல்கிறார்களோ (கெஸ்ட் ரோல்களில் நீங்கள் வென்றால் இந்த பட்டத்திற்கு அதுவும் கணக்கில் எடுத்து கொள்ளப்படும்) அவர்களுக்கு “உங்களில் யார் அடுத்த சாய் ” என்ற பட்டம் 01.01.2010 அன்று வழங்கப்படும்

  புது வருட புது வரவாக இருக்க வேண்டுமென்று 12.00AM க்கு பதிவிடுகிறேன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: