இன்றைய சந்தையின் போக்கு 29.12.2008


அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்…. 

2008  பல கசப்பான அனுபவங்களுடன் முடிவடையும் தருவாயில் உள்ளது.   நல்லதோ கெட்டதோ இந்த ஆண்டினை பங்கு வணிகர்கள் உட்பட யாராலும் மறக்க முடியாது.  

1. நாடெங்கும் குண்டு வெடிப்புகள்..   2. அரசியல் நாடகங்கள்.. குதிரை பேரங்கள், பாரளுமன்றத்திலேயே கோடிகளை கொட்டிய சம்பவம்..,  ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்றவர்கள் இணைந்த சம்பவம்.  (ஒட்டவே ஒட்டாது என்று நினைத்தவர்கள் எதை வைத்து ஒட்டினார்கள் என்று பெவிகால் நிறுவனத்திற்கே ஆச்சரியமாம் என்பது கூடுதல் தகவல்)   4. அமெரிக்க பொருளாதார சரிவு, அவர்களுடன் அணு சக்தி ஒப்பந்தம். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமாவின் வெற்றி,  5 . ஏறிய விலைவாசி இறங்காது என்ற உலக விதியை  140$  -ல் இருந்து 35 $ க்கு குதித்து மாற்றி எழுதிய கச்சா எணணை.  6.  நம்ம அண்ணன் ஜனவரி மற்றும் அக்டோபர் மாதங்களில் அடித்த அந்தர் பல்டிகள்.  எவ்வளவு அடித்தாலும் தாங்கும் சக்தியுடைய நம்மை போன்ற நல்லவர்கள்.   7.  தாஜ் மற்றும் ஓபாராய் நட்சத்திர ஓட்டல்களில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதல் அதை தொடர்ந்து பக்கத்து வீட்டுகாரனுடன் போர் மேகம் சூழ்ந்துள்ள நிலமை என்று இந்த ஆண்டினை நினைவில் வைக்க நிறைய உள்ளன.

தகவல் தொடர்பில் ஏற்பட்ட புரட்சியால் ஆண்டுகள் ஓடுவதே தெரியவில்லை….  பரபரப்பான ஒரு தொடர் ஓட்டத்தில் நம்மை நாமே திணித்து கொண்டு விட்டோம்.  1999 இல் பரபரப்பாக பேசப்பட்ட Y2K  பிரச்சினை ஏதோ நேற்று பேசியதை போல உள்ளது.  ஆனால் அதன் பிறகு 9 ஆண்டுகள் ஓடி விட்டன. 

இந்த 2008ம் ஆண்டினை இனிதே வழியனுப்பி 2009 ஐ ஆரவாரத்துடன் வரவேற்போம்..   அனைவருக்கும் மகிழ்ச்சிகுறியதாக அமைய இறைவனை பிராத்திப்போம். 

அனைவருக்கும் என் சார்பாகவும் எனது குடும்பத்தினர் சார்பாகவும்

 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

Happy New Year 2009.

============================================================================

இன்றைய நமது சந்தையின் துவக்கம் ஆசிய மற்றும் உலக சந்தைகளின் அடியொட்டியே இருக்கும்.     

ஆனால்  ஆசிய சந்தைகள் மந்தமாக துவங்கியுள்ளது மற்றும் டவ் ஜோன்ஸ் ப்யூச்சர் 100 புள்ளிகள் வரை சரிவுடன் வர்த்தகமாவது ஆகியவை கரடிக்கு சாதகமான விசயங்களே.  

2772 க்கு கீழ் நழுவினால் நமது டார்கெட்டான 2727  எளிதில் சாத்தியமாகும்,  இன்றோ அல்லது நாளையோ நமது டார்கெட் கிடைக்க வாய்ப்புகள் அதிகம்   உள்ளது.

============================================================================

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும், அப்பொருள்        மெய்ப்பொருள் காண்பது அறிவு.

நேற்றைய தினம் ரஹ்மான் என்பவர் அல்லது அந்த பெயரில் யாரோ என்னை பற்றி சில தவறான தகவல்களை பின்னூட்டம் எழுதி சென்றுள்ளார். அதற்கு பதில் எழுத வேண்டாம் என்றே கருதினேன்.  ஆனால் அப்பின்னூட்டத்தினை  ஒரு சிலர் நண்பர்களும் படித்து உள்ளார்கள்.  ஆகையால் பதில் சொல்வது அவசியமாகிறது. 

 மாற்று கருத்துகள் இருக்கலாம் தவறில்லை… அதை நாகரிகமான முறையில் வெளிப்படுத்தலாம்ஆதாரத்துடன் நிருபிக்கலாம் ஆனால் அசிங்கமான வார்த்தைகளால் திட்டுவது என்பது,   ஏதோ உள் நோக்கத்துடன் செய்யப்பட்டதாகவே கருதுகிறேன்.  

நான் எப்படி பட்டவன் என்பதை நான் நிருபிக்க வேண்டியதில்லைஎன்னுடன் நெருங்கி பழகியவர்களுக்கு தெரியும்.

மன வருத்தம் தான் இருந்தாலும் “காய்த்த மரம் கல்லடி படும்” என்பார்கள்.. அப்படியே நானும் எடுத்து கொள்கிறேன். 

அவர் கூறிய குற்ற சாட்டினை ஆதாரத்துடன் நிருபிக்கவேண்டுகிறேன்.  அந்த விஜயகுமார் யார் அவரின் வெப்சைட் முகவரி என்ன. அவரின் கடந்த கால கட்டுரைகள்,  என்ன என்ற விவரங்கள் உடபட.  நான் அதை பதிவாக வெளியிட தயார்…  

 

 

Advertisements

17 responses to this post.

 1. dear sai
  thanks for your greetings.

  WISH YOU THE SAME

 2. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  Happy New Year 2009 🙂

 3. Dear Sai,

  Your information is very nice about the last year incidents. You have just brought all the important news.

  It is very useful to refresh our memory. And market is coming down as your thought. Great prediction Sai. What a wonderful job.

  Thank You very much about the market news.

  Sai, We are all always with your side ever. You are a teacher for all of us.

  We are very pleasure to have you and say a lot of hearty thanks to god to give such a wonderful person for us.

  Good Morning,,,,,,,

  Wish you very happy new year for you and all of our friends,,,,,,,

 4. Advanced happy New year 2009
  அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!:)

 5. dear mr.sai. as i have talked with u over phone and a regular reader of ur blogs we know about u. and what a gr8 thing u r doing. dont worry about those who try to damage ur image. we r always with us

 6. நாளை உலகை இறைவனுக்கு அளித்து நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு; உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்து பார்த்து நிம்மதி நாடு. -கவிஞர் கண்ணதாசன்
  MILES TO GO BEFORE WE SLEEP….

 7. வணக்கம் சாய் சார்,

  ஒரு வருட நிகழ்வுகள், அனைத்தையும் ஒரு பத்தியில்… நல்லா நல்லா….

  நிப்டி நிலைகளை மிகவும் சின்னதாக குடுதுடீங்க.. இலைக்கை நோக்கி போவதாலா…

  நம்ம உடன் பிறப்போ, இரத்தத்தின் ரத்தமோ அவ்வாறு செய்திகளை அடித்து வெளியிட்டு விட்டார்.. பொது இடங்களில் அவ்வாறு பேசுபவர்களை. நான் பைத்தியம் என்று தான் சொல்வேன்…

  இருந்தாலும் அரசியல் வாழ்கைல இதெல்லாம் சகஜமப்பா.. 🙂

 8. vanakkam sai sir,
  engal ellor sarbaga ungalukkum ungal family and friends kum puthandu valthukkal.,,, padigal endral mithipada thaan seium.annal padigal illamal oruvar meleh sella mudiyadu.pesubavar neeraga pesattum.u go ahead on ur right path.

 9. வாழ்க்கையில் வருத்தம், கவலையுடன் நெடுந்தூரம் பயனம் செய்ய முடியாது தயவு செய்து அவற்றை இறக்கிவைத்துவிட்டு உங்கள் பணி செய்யுங்கள் சாய்.. நீங்கள் யார் எவ்வாறு சேவை வழங்குகின்றீர்கள் என்பது எங்களுக்கு தெரியும்… அதற்கு உங்கள் நண்பர்கள் நாங்கள் சாட்சி.

 10. போற்றுவார் போற்றற்றும் தூற்றுவார் தூற்றற்றும். உங்களின் பணி தொடரட்டும். இந்த ஆண்டு பல நல்ல செயல்களை புரிந்த உங்களுக்கு ஆண்டவன் நீண்ட ஆயுளை வழங்க வேண்டும்.
  கனகராஜ்.

 11. அநாகரிகமான முறையில் பின்னூட்டம் இடும் நபர்களைப் பற்றி என்றும் கவலைப் பட வேண்டாம்.

  உங்களை பலவீனப் படுத்த அனுமதிக்காதிர்கள். உங்களுடைய வளர்ச்சி பிடிக்காமல் இவ்வாறு செய்கிறார்கள்.

  அவர்களை விட்டுத் தள்ளுங்கள். உங்கள் நலம் விரும்பிகள், உங்கள் நண்பர்கள் நாங்கள், என்றும் உங்களுக்கு பக்க பலமாய் இருப்போம்.

  உங்கள் சேவை தொடரட்டும்.

 12. போற்றுவார் போற்றற்றும் தூற்றுவார் தூற்றற்றும். உங்களின் பணி தொடரட்டும் .

 13. Dear Sai,

  Dont worry about the bad comments, “in politcs these are all natural”said by vadivel for commedy. So ignore the worst, give the best.
  Wish you and your family have very happy new year

  Murugesan
  Abudhabi

 14. Dear sir , we are with you don’t worry .you are the best , every one knows it.

 15. வணக்கம் சாய் சார்,

  இந்த இரவு நேரத்தில் வந்தது ஒரு காரணமாகத்தான். என்னான்னு கேக்கறீங்களா.. தினந்தோறும் நமது நண்பர்கள், மற்றும் உங்கள் உதவியால் என்னை போன்றவர்கள் தினவர்த்தகத்தில் எடுத்து வரும் லாபங்களை பற்றி தான்..

  இப்படி சொல்றதால லாபம் பத்தல என்று நினைத்து விடாதீங்க.. ஒவ்வொரு நாளும் ஓரளவு சுலபமாக நாம் எடுத்து வரும் லாபத்தினை அடைய மற்றவர்கள் எவ்வாறு சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று கீழே உள்ள இணைப்பை பார்த்தல் புரியும்..

  தோராயமாக பார்த்தால் தினமும் ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பதற்கு அவர்களின் முதலீடு ஐம்பது முதல் எண்பது ஆயிரம் வரை…

  ஆனால் இங்கு இருபது ஆயிரம் வைத்துள்ளவர்கள் கூட அதை விட அதிகமான வருமானம் ஈட்டுகின்றனர்..

  இதனை பேராசை என்று சொல்லலாமா, அல்லது உங்களை போன்றவர்களின் உழைப்பினால் ஏற்ப்பட்ட நம்பிக்கை என்று சொல்லலாமா??

 16. அந்த இணைப்பு இதோ…

  http://optionsperformance.blogspot.com/

 17. Very Very Good moning sir….. wish you happy new year…..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: