இன்றைய சந்தையின் போக்கு 24.12.2008


காலை வணக்கம்,

நேற்றைய தினம் எதிர் பார்த்ததை போலவே பெரிய சரிவுகளை தள்ளி போட முயற்சி செய்து ஓரளவு அதில் வெற்றியும் பெற்றார்கள்.   இன்றும் அம்முயற்சி மதியம் வரை தொடரும். நண்பகல் வரை மந்தமான சூழ்நிலையில் வைத்திருக்க விரும்புவார்கள்.   காரணம் இம்மாதத்தின் ஆப்ஸன் பிரிமியத்தை நீர்த்து போக செய்யத்தான்…   பிற்பகலில் சந்தை வேகமாக  சரிவடைய வாய்ப்புகள் உள்ளது.   

முக்கிய நிலைகள்  3090 – 3060 – 3030 –  2992  –     2929    

இரண்டு நாள் சரிவை கண்ட உடனே 2200,  2000 1700 என்று நேற்றே புலம்ப ஆரம்பித்து விட்டார்கள்.

ஆனால் தற்போதைய எனது எதிர் பார்ப்பு 2700/680 இல் மீண்டும் ஒரு எழுச்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது.  ஒரு வேளை 2680 க்கு கீழே 2 நாட்களுக்கு மேல் நிலை கொண்டால் அதிக பட்ச சரிவு 2500 வரை இருக்கலாம்.  

அனைவரும் 2200 ஐ பாட்டம் என்று எடுத்து கொள்கிறார்கள்.  ஆனால் (என் அளவில்) அது டெக்னிகல் ரீதியாக பாட்டம் இல்லை.     27/10/2008 அன்று சந்தை மார்ஜின் பிரஸர்,  ஸ்டாப் லாஸ் ஹிட் போன்ற காரணங்களால் டெக்னிகல் கட்டுபாட்டை இழந்து 2220 வரை சென்று 2520 இல் முடிவுற்றது.  சந்தை 2500 க்கு கீழ் ஒரு நாள் கூட (Closing Basis) நிலை கொண்டிருந்தது இல்லை, ஆகையால் 2500 ஐ தான் நான் பாட்டமாக எடுத்து கொள்கிறேன்.

nifty24122008

நேற்றைய டாட்டா மோட்டார்ஸ் பரிந்துரை அபாரம்….  182 இல் சார்ட் செய்திருந்தால் கூட 10/- லாபம்.  லாட் சைஸ் 425  x 10 = 4250.00  இதற்கு முதலீடு (மார்ஜின்)  தோராயமாக 21000 /- முதலீட்டிற்கு எதிரான லாப கணக்கு பார்த்தால்  20%.   யாராவது பயன் அடைந்திருந்தால் சொல்லுங்கய்யா.

சத்யம் பற்றி சிலர் கேள்வி கேட்டிருந்தார்கள்…  எரிகிற வீட்டில் எடுத்தவரை லாபம் என்பார்கள் ஆனால் அது சிலநேரம் நம்மை காயப்படுத்தவும் வாய்ப்பு உள்ளதால். தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பதே நல்லது.   அடுத்து அடுத்து வரும் செய்திகள் (உலக வங்கி தடை) அனைத்தும் பாதகமாகவே உள்ளது.

ரவி – என் இதயத்தில் இடம் தருகிறேன் என்று சொல்லும் அளவுக்கு 🙂 எனக்கு பெரிய மனசு இல்லை என்றாலும்,  பின்னூட்டத்தில் என்ன மெயின் பதிவிலேயே இடம் உண்டு.  தங்களை போன்றவரின் அங்கிகாரத்தில் தான் எனது வெற்றி அடங்கி உள்ளது.

சிம்பா – நாம் யாரையும் குறை சொல்ல வேண்டாம்… நமது செயல்கள் நம்மை பற்றி பேசட்டும்.    “நடந்ததும் நடப்பதும் நன்மைக்கே….. எல்லாம் அவன்” செயல்

Advertisements

19 responses to this post.

 1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.மற்றும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்

 2. சந்தை பற்றிய தங்களின் நிலைகள் இதுவரை பொய்க்கவில்லை ,இனியும் அப்படி ஒரு நிலை வர வாய்ப்பில்லை வாழ்த்துகளுடன் தனசேகரன்

 3. மதிப்பிற்குரிய சாய் அவர்களுக்கு,
  தங்களுடைய சந்தை பற்றிய தகவல்களுக்கு
  மிகவும் நன்றி.
  தாங்கள் பரிந்துரைந்துள்ள பங்குகள் அருமை.
  மனமார்ந்த நன்றிகள்

 4. GOOD MORNING SIR AND THANK YOU VERY MUCH FOR YOUR VIEWS.

  GOOD MORNING TO EVERYBODY AND WISH YOU ALL A HAPPY AND PROFITABLE TRADING.

 5. அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்,,,,,,,

  சாய், வர வர தங்களுடைய கட்டுரைகள் மிகவும் அழகாக இருக்கின்றன. எழுத்து நடைகள், கருத்துக்கள், தாங்கள் சில இடங்களில் உபயோகிக்கும் நகைச்சுவையான வார்த்தைகள் என சொல்லிக் கொண்டே போகலாம். பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

  தங்களுடைய இன்றைய கட்டுரையும் எங்களை இந்த சந்தையின் தாறுமாறான போக்கிலிருந்து காப்பாற்றிக் கொள்ளவும் லாபம் செய்யவும் கற்றுக் கொடுக்கின்றன.

  தங்களுடைய நிப்டி வரைபடம் அருமை. 2500 என்ற சப்போர்ட் நிலையை குறிப்பிட்டு காட்டி இருக்கின்றீர்கள்.

  “நண்பகல் வரை மந்தமான சூழ்நிலையில் வைத்திருக்க விரும்புவார்கள். காரணம் இம்மாதத்தின் ஆப்ஸன் பிரிமியத்தை நீர்த்து போக செய்யத்தான்… “- என்ற வரிகள் சந்தையில் காலம் காலமாய் சூதாடிசித்தர்கள் செய்யும் வேலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

  பொதுவில் Option- இல் வணிகம் செய்வது என்பது கூர்மையான கத்தியின் மேல் ஒரு டன் பாரத்தை ஏற்றிக் கொண்டு நடப்பதை விட அதிக risk உள்ள ஒரு வேலை.

  ஆனால் தாங்களோ அதில்தான் கலக்கிக் கொண்டு இருக்கிறீர்கள். உண்மையில் நான் எனது நண்பர்கள் option trade- இல் வெற்றி பெற்றதை விட அடி வாங்கியதுதான் அதிகம்.

  இந்த விஷயத்தில் நீங்கள் எங்களை வியக்க வைக்கிறீர்கள்.

  வாழ்த்துக்கள்,,,,,,,

  இனிய காலை வணக்கம்,,,,,,,,,

 6. இனிய காலை வணக்கம்.
  நமது செயல்கள் நம்மை பற்றி பேசட்டும். “நடந்ததும் நடப்பதும் நன்மைக்கே….. எல்லாம் அவன்” செயல்-அருமை.
  வாழ்த்துகளுடன் – ravishankar

 7. இனிய காலை வணக்கம்,,,,,,,,,சாய், வர வர தங்களுடைய கட்டுரைகள் மிகவும் அழகாக இருக்கின்றன

 8. Happy happy Christmas, merry merry Christmas

 9. மதிப்பிற்குரிய சாய் அவர்களே,

  தங்கள் பரிந்துரைகளை நான் செயல்படுத்தினேன். அவற்றின் விபரங்கள் :

  Sun TV – Buy @ 135.5, Sell @ 157
  Powergrid – Buy @ 79, Sell @ 84
  Unitech – Buy @ 29, Sell @ 38.5
  IFCI – Buy @ 18, Not yet Sold

  என்னைப் போன்றவர்களையும்(சந்தைக்கு புதியவர்கள், சிறு முதலிடு செய்பவர்கள்) வெற்றி பெற வைக்கும் உங்களை பாராட்ட என்னிடம் வார்த்தைகள் இல்லை. உளம் கனிந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் !

  உங்களின் பழைய பதிவுகளை படித்து முடித்தபின், நீங்கள் குறிப்பிட்டுள்ள “அள்ள அள்ள பணம் – 1” புத்தகத்தை வாங்கி, படித்து வருகிறேன்.

 10. தென்னாடுடைய சிவனே போற்றி, என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி…

  சாய் அய்யா, நம்ம கையில் எதுவும் இல்லை.. எல்லாம் அவன் செயல்.. அடுத்த நிமிடத்தில் என்ன நடப்பது என்பது நமக்கு தெரியாது ஆகையால், நாளையை பற்றி நமக்கு என்ன கவலை…

  நேற்று நடந்தது கடந்து போனது.. அதை நினைத்து வருந்துவதில் ஏதும் இல்லை…

  அதுக்காக 2700 வரும்னு சொன்னது கடந்த காலம். அத மறந்துவிடு தம்பின்னு சொல்லாதீங்க.. தேடி வந்து கடிச்சிருவேன். 🙂

  tata motors பங்கினில் நான் வணிகம் செய்யவில்லை. ஆனால் அதனை இந்த நிமிடம் வரை கண்காணித்து வருகிறேன். அதே போல் bank nifty தங்கள் சொன்ன இலக்கை நோக்கி வேகமாக சரிந்து செல்கிறது.. 5190 இல் short போகலாம் என்றீகள். இப்பொழுது 4833…..

  வாழ்க நின் சேவை….

 11. இனிய காலை வணக்கம்

 12. வணக்கம் சாய்(ர்),

  உங்கள் பரிந்துரைகள் அனைத்தும் அருமை…!! பங்கு வணிகத்தின் Nostradamus நீங்கள் தான் என தோன்றுகிறது…!!!

  நன்றியுடன்,
  வரன்…!!

 13. Posted by சாய்கணேஷ் on திசெம்பர் 24, 2008 at 11:34 முப

  நன்றி திரு வரன், சார் வேண்டாமே நான் சின்ன பையன் தான். வயசு ஆகலை இப்ப தான் 16..

 14. என் மதிப்பு மட்டுமல்ல, என் போன்ற ஆயிரக்கணக்கானவர்களின் பெரு மதிப்பிற்கு உரியவர் தாங்கள்..அதனால் தான்…! வயதா பெரியதா…மனம் தான்…என்னைப் பொருத்தமட்டில்…!!

  எப்படி சாய் உண்மை வயதை சொல்லிவிட்டீர்கள்…பொது மேடையில்…!! ):

 15. திரு.சாய் மற்றும் பின்னூட்ட நண்பர்கள் அனைவருக்கும் மதிய வணக்கம்.

  சந்தை துவங்கும் முன்னே அதிரடியாக Tata motors short செய்யலாம் என்று சொன்ன விதம்… உங்களுக்கு இருக்கும் தெளிவை பறைசாற்றியது.

  //..சத்யம் பற்றி சிலர் கேள்வி கேட்டிருந்தார்கள்… எரிகிற வீட்டில் எடுத்தவரை லாபம் என்பார்கள் ஆனால் அது சிலநேரம் நம்மை காயப்படுத்தவும் வாய்ப்பு உள்ளதால். தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பதே நல்லது. அடுத்து அடுத்து வரும் செய்திகள் (உலக வங்கி தடை) அனைத்தும் பாதகமாகவே உள்ளது..//

  நயமான சுட்டி காட்டல்.

  திரு.K. Mohanraj, Karur அவர்களின் பின்னூட்டமும் உங்கள் பதிவைபோல… சிறப்பாக வெளிப்படுத்துகிறார்.

  ஆச்சர்யம்:
  ////பொதுவில் Option- இல் வணிகம் செய்வது என்பது கூர்மையான கத்தியின் மேல் ஒரு டன் பாரத்தை ஏற்றிக் கொண்டு நடப்பதை விட அதிக risk உள்ள ஒரு வேலை.////

  ஆப்ஷன் பற்றிய எனது கருத்து “சாமுராய் கத்தி போன்றது, கழுத்தை வெட்டினால் ரெத்தம் வெளியே கசியும் முன் உயிர் போய்விடும்”.

  இரண்டும் ஒன்றுபோல இருப்பது வியப்பை அளிக்கிறது.

  Option is a GOOD THING, better than FUTURES… but only in VOLATILE MARKET.

  As we know Every TOOL has its own advantage & drawbacks… It all depends on how a PERSON uses it.

  Note:-

  Personally I feel TATA MOTORS & TATA STEEL are more Vulnerable stocks… because of M&A of JLR & Corus. Both may STABILIZE or CRACK-DOWN in coming years… depending on International Scenario…

 16. Dear Friend Mr. Ramprasad.V

  Thank you for your comments. I go with Your concept about the option trading.

  “Option is a GOOD THING, better than FUTURES… but only in VOLATILE MARKET.”- true lines.

  But Sai sir doing in option trading very well. We have to learn a lot (like sea level) from Sai.

  Good Evening and Happy Christmas for all of our friends,,,,,

 17. சாய் சார்..

  இன்று தங்களின் நிப்டியைன் லெவல்ஸ் அருமை
  எப்படி சார் லெவல்ஸ் தர்றிங்க கிரேட்

  2929 தான் கீழ் நிலை என்று

  எங்களுக்கும் சொல்லுங்க…

 18. என்னமோ தெரியல இன்னைக்கு சந்தைகள் பண்ணின கூத்துல நம்ம அன்னாசி கொஞ்சம் confuse ஆகிட்டார் போல… முதல்ல 36 என்று மறந்து போட்டு விட்டார்.. நல்ல வேலையா நான் அவருக்கு அழைத்து, அய்யா தயவு செய்து தங்களது உண்மையான வயதை குறிப்பிடவும் என்று கூறினேன்…

  ஆனால் இந்த பத்து வயது பாலகனின் கோரிக்கையை வேறு மாதிரி நிறைவேற்றி விட்டார்…

  இந்த கொடுமைய கேக்க ஆளே இல்லையா 😉

 19. கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: