இன்றைய சந்தையின் போக்கு 23.12.2008


வணக்கம் நண்பர்களே,

நேற்றைய தினம் சரிவுகளுக்கான  வாய்ப்புகள் அதிகரித்தாலும் அதை 2 நாட்கள் தள்ளிபோடும் முயற்சி நடைபெற்றது, அம்முயற்சி இன்றும் தொடரும்…  எந்த அளவு சாத்தியம் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

இன்று நிக்கி / ஜப்பான் சந்தைக்கு விடுமுறை போல தெரிகிறது அதனால் தலை தப்பியது ஹாங்க் செங்க்  490 புள்ளிகள் வரை சரிவடைந்துள்ளது. மற்ற உலக சந்தைகளும்  ஓரளவு சரிவுடனே காணப்படுகிறது.

முக்கிய நிலைகள். 

3175, 3113, 3088,  3060, 3003,  2992,  2970, 2929

ப்யூச்சரில்  டாட்டா மோட்டார்ஸ் நிறுவன பாங்கினை சார்ட் போகலாம் லாபம் 10-15%  –  3 முதல் 5 நாட்களில். 

பின்னூட்டம் இல்லையே என்று கேட்ட பிறகு நிறைய பின்னூட்டங்கள் வந்துள்ளது..  நன்றி.   

அசோக் – கேப் அப் மற்றும் கேப் டவுன் பற்றிய கேள்விக்கு தாங்கள் கூறிய காரணங்கள் சரியே ஆனால் பிரதி மாதம் ஒரு குறிப்பிட்ட நாளில் அவ்வாறு கேப் அப் / கேப் டவுனாக துவங்குவதில்லை, முடிந்தால் அதை கண்டு பிடியுங்கள்.  

 கேப் அப் / கேப் டவுன் நிகழ்வுகளை முன்கூட்டிய சில டெக்னிகல் கூறுகள் தெரிவிக்கின்றன அதை பற்றிய ஆய்வினை மேற் கொள்ளும் போது தான் மேலே சொன்ன செய்தியும் கிடைத்தது.  அதனால் பெரிய பலன் இருக்கா இல்லையா என்பது தெரிய வில்லை ஆனால் ஆச்சரியம் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டும் அப்படி ஒரு நிகழ்வு நடைபெறுவது இல்லை என்பதே. அதற்கான காரணத்தை அறியவும் முயற்சிக்கிறேன்.    விரிவாக பிறகு எழுதுகிறேன்.

21 responses to this post.

 1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙂

 2. Posted by சாய்கணேஷ் on திசெம்பர் 23, 2008 at 9:21 முப

  வேலை பளு காரணமாக விரிவாக எழுத இயலவில்லை…

  இதை படித்து குழப்பம் அடைய வேண்டாம்… இப்படி பட்ட மாறு பட்ட கருத்துகளும் நிலவுகின்றன..

  http://www.moneycontrol.com/mccode/news/article/news_article.php?autono=371911

  உலக அளவில் பேசப்படும், இந்திய பங்குசந்தையில் தற்போதை காலகட்டத்தில் ஒரு தவிர்க்க முடியாத பிரபலம் இவர்.

  அவர் சார்ட் பார்ப்பதில்லையா?? அவரும் பார்க்கிறார் அனைவரும் பார்க்கிறோம். ஆனால் பார்க்கின்ற பார்வையிலும், எடுத்து கொள்கிற சப்போர்ட்டிங் எவிடென்ஸ் லும் தான் வித்தியாசம் இருக்கிறது.

  அவரை குறை கூற இங்கு சொல்ல வில்லை… எதற்கு சொல்கிறேன் என்றால்… சார்ட் தான் எல்லாம் ஆனால் அதை வைத்தே இதுவும் நடக்கலாம் அதுவும் நடக்கலாம் என்று எத்தனை மாறு பட்ட கருத்துகள் இருக்கின்றன என்பதை தெளிவு படுத்தவே.

  டெக்னிகல் பயில முயலும் நண்பர்கள்.. எப்பொழுதும் தனக்கென ஒரு பாதையை / பார்வையை வகுத்து கொள்ளுங்கள். அதை உறுதியாக நம்புங்கள். ஒரு பிரபலம் சொல்கிறார் என்பதால் உங்கள் முடிவுகளை மாற்றாதிர்கள். எந்த ஒரு விசயத்திலும் பலருடன் ஆலோசனை செய்யுங்கள் ஆனால் இறுதி முடிவு உங்களுடையதாக இருக்கட்டும். அந்த முடிவினால் வரும் வெற்றி தோல்விக்கு முழுப்பொறுப்பேற்று கொள்ளுங்கள்.

 3. மதிப்பிற்குரிய சாய் அவர்களுக்கு,

  இனிய காலை வணக்கம்.

  “நேற்றைய தினம் சரிவுகளுக்கான வாய்ப்புகள் அதிகரித்தாலும் அதை 2 நாட்கள் தள்ளிபோடும் முயற்சி நடைபெற்றது, அம்முயற்சி இன்றும் தொடரும்… ” – சந்தைகள் நேற்றே தனது இறங்க ஆரம்பித்ததால் இன்றிலிருந்து சரியத் தொடங்குமென எதிர்பார்த்தேன்.

  நல்லவேளை தங்களுடைய இந்த வரிகள் எச்சரிக்கை செய்து விட்டன. நன்றி சாய். தங்களுடைய கேப் அப் மற்றும் கேப் டவுன் பற்றிய கட்டுரைகளை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.

  டாட்டா மோட்டார்ஸ் பற்றிய பரிந்துரைக்கு மிக்க நன்றி. ஏற்கனவே கடந்த வாரத்தில் தாங்கள் அளித்த பரிந்துரைகள் மிகவும் நன்றாக work out ஆகின. Relcapital, chambelfert, போன்ற பங்குகள் நன்றாக கீழே இறங்கின.

  தங்களுடைய நிப்டி நிலைகளுக்கு மிக்க நன்றி.

 4. அனைவருக்கும் என் இனிய காலை வணக்கம்

 5. GOOD MORNING

 6. அனைவருக்கும் இனிய காலை வணக்கம் தங்களுடைய நிப்டி நிலைகளுக்கு மிக்க நன்றி

 7. //இறுதி முடிவு உங்களுடையதாக இருக்கட்டும். அந்த முடிவினால் வரும் வெற்றி தோழ்விக்கு முழுப்பொறுப்பேற்று கொள்ளுங்கள்.//YES IT IS TRUE.NO ONE CAN PREDICT THE MARKET CONDITIONS-THAT’S AN ASTROLOGERS JOB–

 8. வணக்கம் சாய் சார்.. 🙂

  டாட்டா மோட்டார் அருமையான தேர்வு சார்…

  காலையில் இருந்தே சரிவு ஏற்ப்பட்டுள்ளது… நிப்டி நிலைகள் அருமை… இருந்தாலும் கீழ் நிலைகளை மிகவும் சின்னதாக கொடுத்தது ஒரு வருத்தமே.. 😉

  மேலும் உங்களது பின்னூட்டத்தில் ஒரு பெரிய கோமாளியை பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள்.. ஆனால் அவரை போல் இல்லாவிட்டலும் பல, சில சிறிய கோமாளிகள் நமக்கு அருகிலேயே சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்..

  என்னதான் சிறிதாதாய் இருந்தாலும் அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவோ காரியங்களை செய்கிறார்கள்…

  எல்லாம் அவன் செயல். வாழ்க…

 9. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்

 10. good morning sir continue your service thanks

 11. THANK YOU FOR YOUR INFORMATION SAI SIR.

 12. //…டெக்னிகல் பயில முயலும் நண்பர்கள்.. எப்பொழுதும் தனக்கென ஒரு பாதையை / பார்வையை வகுத்து கொள்ளுங்கள். அதை உறுதியாக நம்புங்கள். ஒரு பிரபலம் சொல்கிறார் என்பதால் உங்கள் முடிவுகளை மாற்றாதிர்கள். எந்த ஒரு விசயத்திலும் பலருடன் ஆலோசனை செய்யுங்கள் ஆனால் இறுதி முடிவு உங்களுடையதாக இருக்கட்டும்…//

  ஹ்ம்ம்… என்னவோ போங்க…
  வரவர ரொம்ப அசத்துறீங்க…
  வாழ்த்துக்கள்…

  //…அந்த முடிவினால் வரும் வெற்றி தோல்விக்கு முழுப்பொறுப்பேற்று கொள்ளுங்கள்…//

  இது மேட்டர்-ரூ

  i tried over 6 times on the past 2 days… to download “e-book” but it stops @880/881KB.

  Anyway thanks for sharing a GOOD THING as USUAL.

  Good trading day to all.
  🙂

 13. Thank you so much for your views sir. அனைவருக்கும் வணக்கம். Business line னில் கடந்த ஆறுமாத காலமாக வெளிவந்த Technical analysis பாடங்களை தொகுத்து எனது வலைப்பக்கத்தில் வெளியிட்டு உள்ளேன். நேரம் கிடைக்கும் போது ஒரு விசிட் அடித்து படித்து பாருங்கள். மாற்றாம் தேவை இருந்தால் சொல்லுங்கள், நிரைவேற்றி விடலாம்.

 14. // அதை உறுதியாக நம்புங்கள். ஒரு பிரபலம் சொல்கிறார் என்பதால் உங்கள் முடிவுகளை மாற்றாதிர்கள்//

  மிக முக்கியமாக அனைவரும் பின்பற்ற வேண்டியது..

  அருண், பெரிய கோமாளியோ, சின்ன கோமாளியோ அனைவரும் இந்த மாதிரி நிலைகளை கூறி அலறிகொண்டிருப்பதன் காரணமே, அவர்களது பொஸிசன்களுக்கு மனோரீதியான வலுசேர்ப்பதுதான்..மேலும் இந்த மாதிரி கூச்சல் மூலம் முடிந்த அளவு நபர்களை அவர்களின் பொஸிசன்களை எடுக்க செய்வது..ஆத்தோட போனா நாம மட்டுமா போறோம் அதான் ஊரே இருக்கேங்கற நினைப்புதான் ..வேற என்ன..

  என்னதான் காட்டு கூச்சல் போட்டாலும், உதிக்கிற சூரியனின் திசையும் சந்தையின் திசையும் மாறப்போவதில்லை.

  அதனால், நீங்கள் சொன்னது போன்ற நம்மை சுற்றி கொண்டிருக்கும் கோமாளிகளிடம் நமது நண்பர்கள் கவனம் இழக்காதிருக்க வேண்டுவோமாக!!

 15. rk சார் சரியாக சொன்னீர்கள்.. நமது கண்களுக்கு தென்படும் (இன் சார்ட்ஸ்) அவர்களுக்கும் தெரிகிறது. ஆனால் இரு வேறு கருத்துக்கள்.. இருந்தாலும் சுயமான முடிவு எடுக்க தெரிந்தால் இவர்களை போல.. இன்னும் பெரிய கோமாளிகளை கண்டு நாம் வருத்தப்படவேண்டியதில்லை..

  சந்தைகள் எனும் ஒன்றை ஒரு மாய உலகமாகவே வைத்திருக்க விரும்பும் இவர்களில் ஆசையை என்னவென்று சொல்வது..

  ஒரு வேலை அவர்கள் எவ்வாறு அந்த நிலைகளை பற்றி குறிப்பிடுகிறார்கள் என்பதை வெளிப்படையாக கூறினால் நன்றாக இருக்கும்.

 16. மதிப்பிற்குரிய சாய் அவர்களுக்கு,
  தங்களுடைய சந்தை பற்றிய தகவல்களுக்கு
  மிகவும் நன்றி.
  தாங்கள் பரிந்துரைந்துள்ள பங்குகள் அருமை.
  மனமார்ந்த நன்றிகள்

 17. நன்றி சாய். தங்களுடைய கேப் அப் மற்றும் கேப் டவுன் பற்றிய கட்டுரைகளை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.

 18. Posted by ரவிகுமார் on திசெம்பர் 23, 2008 at 4:59 பிப

  அன்புள்ள சாய் அவர்களுக்கு,

  நன்றி என்று சொல்லி ஒரு வார்த்தையில் உங்கள் சேவையை எடை போட என் மனது இடம் கொடுக்கவில்லை.நான் இழந்ததைப்பற்றியும் அதனை எப்படி தங்கள் மூலம் மீட்டுக்கொண்டு இருக்கிறேன் அல்லது மீண்டு கொண்டு இருக்கிறேன் என்பதையும் இன்னும் ஓரிரு வாரங்களில் விரிவாக எழுத எனக்கு தேவையான இடத்தை இங்கு தருவீர்கள் என நம்புகின்றேன்.

 19. Posted by கோவிந்த் on திசெம்பர் 23, 2008 at 6:38 பிப

  IS THIS TIME IS GOOD FOR BUY SATYAM COMPUTERS.?

 20. It is heard that the World Bank has banned the Satyam company for 8 years due to data theft.

 21. WAIT AND WATCH BEFORE BUYING SATYAM COMPUTERS.
  BUT ONE CAN ACCUMULATE AT LOW LEVELS FROM NOW ONWARDS.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: