இன்றைய சந்தையின் போக்கு 22.12.2008


நண்பர்களே,

கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்…

கடந்த வாரம் ஆச்சரிய வாரமாக அமைந்தது..    உலக சந்தைகள் அனைத்தும் ஒரு தேக்க நிலை/ மந்த நிலையில் காணப்பட்டது,  கமாடிட்டி வர்த்தகமும் சரிந்திருந்தது.   ஐஐபி டேட்டா மிக அருமையாக ?? 🙂 இருந்தது.  அண்டை நாட்டுடன் பதட்டம் ..  இதை எல்லாம் மீறி இந்திய சந்தைகள் மட்டும் எதிர் நீச்சல் போட்டது,  அதுவும் 10% அளவில் உயர்ந்துள்ளது. 

 கடந்த 10 நாட்களின் சந்தை நிலவரங்களை கவனித்தோம் என்றால்  டவ்வில் பெரிய மாற்றம் இல்லை டிசம்பர் மாத முதல் வாரத்தின் உயர்நிலையில் இருந்து 150 புள்ளிகளுக்கு மேல் சரிவுடன் முடிந்துள்ளது.  நிக்கியின் நிலையும் அதே தான்.   டாக்ஸ்-சின் நிலையும் அதே. 

ஆனால் சென்செக்ஸ் 850-950 புள்ளிகளும்,  நிப்டி 300 புள்ளிகளும் உயர்ந்துள்ளன.   இதற்கு காரணம் என்ன?  

தற்போது இரண்டு நிகழ்வுகள் நடக்கவேண்டும் 1. உலக நாடுகள் நமது சந்தைகள் அளவிற்கு மேலேறி வர வேண்டும்.   அல்லது 2. நாம் அவர்களை பின் தொடர வேண்டும். 

இரண்டு ஒரு நாட்களில் நமக்கு ரிசல்ட் தெரிய வரும்.

இந்த வருடத்தின் முதல் மாதம் அதிரடியாக அநேக வணிகர்களை சூறையாடியது.. வருடத்தின் இறுதி மாதம் சைலண்டாக வணிகர்களை சூறையாடிவருகிறது.    கடந்த வாரம் சார்ட் போனவர்களை,  இந்த வாரம் யாரை துகிலுறிக்க காத்திருக்கிறது??

வெள்ளி கிழமை சந்தை உயரத்தில் தக்க வைக்க காரணம் –  சார்ட் நிலையில் இருந்த  சிறு வணிகர்கள் வியாழன் ஏற்றத்தை கண்டு  ஒரு வித பயத்திற்கு ஆளானார்கள்.  வெள்ளி கிழமை ஒரு கேப்டவுனாக துவங்கும் அதில் வெளியேறி விடலாம் என்ற ஆசையும் பொய்த்த உடன் Short Covering செய்ய ஆரம்பித்தார்கள் அதுதான் 3080-3100 இல் நிலை கொள்ள உதவியது.  Short Covering செய்தவர்களுக்கு விற்றவர்கள் (Short அல்லது Profit Booking  செய்தவர்கள் ) யார்?  சித்தர்களா?  அதிகம் குழப்புகிறேனா? 

இந்த வாரம் 4 வர்த்தக தினங்கள் தான் உள்ளது..  அதிலும் FNO Expiry  புதன் கிழமை என்பதால் சந்தை சில அதிர்ச்சிகளை தரலாம். 

ஈரானுடன் வர்த்தக தொடர்பு கொண்டுள்ள ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்-க்கு அமெரிக்காவின் ஏற்றுமதி – இறக்குமதி வங்கி (EX-IM) அளித்து வரும் உதவிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று அந்நாட்டு எம்பிக்கள் கோரிக்கை விடுத்துள்ள செய்தி – தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது தெரியவில்லை.  கடன் உதவியின் மொத்த மதிப்பு 900 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது குறிப்பிடதக்கது.

இன்றைய முக்கிய நிலைகள்  –  3060, 2980      –  3120,  3175, 

முதலீட்டிற்கு

ஹிந்துஸ்தான் டோர் ஓலிவர் – பங்கினை 38 விலையில் வாங்கலாம்  டார்கெட் 55-64.  ஒரு வருட உயர் நிலை 196.00   கீழ் நிலை – 26.00 .

ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் – பங்கினை 14 விலையில் வாங்கலாம்  டார்கெட் 26-29. ஒரு வருட உயர் நிலை 95.00   கீழ் நிலை – 9.50.       

நேற்றைய தினம் ஒரு இன்டி கேட்டர் (TTO –  top ten’s oscillator) என்று ஒன்றை உருவாக்கி அதை வைத்து Back testing டெஸ்டிங் செய்த போது இந்த இரண்டு பங்குகளும் சிக்கின. 

மேலும் கடந்த மூன்று மாதமாக சில வருடத்தின் பழைய டேட்டாவை வைத்து சில நிகழ்வுகளை அலசி வருகிறேன் – அதில் கேப் அப் கேப் டவுன்  பற்றிய சில ஆச்சரியம் தெரிய வந்தது. அதை பற்றி நாளை விரிவாக எழுதுகிறேன். அதுவரை கேப் அப் அல்லது கேப் டவுன் எப்ப எல்லாம் நாடக்கலாம் எதனால் நடக்கலாம் என்று பின்னூட்டம் எழுதுங்கள்.  

எனது சேமிப்பில் இருக்கும் ஒரு டெக்னிகல் புத்தகத்திற்கு ஒரு இணைப்பு (தனிபதிவாக) தந்துள்ளேன்.   இதுவரை 76 நபர்கள் டவுன் லோட் செய்துள்ளார்கள்..   மகிழ்ச்சி   🙂    

ஆனால் பின்னுட்டம் எழுத நேரம் கிடைக்க பெற்றவர்கள்  7 நபர்கள் தான் 😦     

 

 

 

 

Advertisements

23 responses to this post.

 1. GOOD MORNING AND WISH YOU ALL A HAPPY AND PROFITABLE TRADING.

 2. மதிப்பிற்குரிய சாய் அவர்களுக்கு,

  தங்களுடைய சந்தை பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்றி. உலக சந்தைகளை விட்டு விட்டு நமது சந்தை மட்டும் முன்னே வந்து விட்டது. அனால் இது நல்லதா அல்லது கெட்டதா என்றுதான் தெரியவில்லை.

  “இந்த வாரம் 4 வர்த்தக தினங்கள் தான் உள்ளது.. அதிலும் FNO Expiry புதன் கிழமை என்பதால் சந்தை சில அதிர்ச்சிகளை தரலாம். ” – தங்களுடைய இந்த வரிகள் எங்களை எச்சரிக்கை செய்கின்றன. மிகவும் நன்றி.

  தாங்கள் முதலீட்டிற்கு பரிந்துரைந்துள்ள பங்குகள் அருமை. சிறு முதலீட்டாளர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்.

  மேலும் கேப் அப் பற்றிய தங்களுடைய தகவல்களும் தாங்கள் தரப் போவதாய் கூறியிருக்கும் மிகுந்த suspence வைக்கின்றன. ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

  இனிய காலை வணக்கம்.

  நண்பர்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்…

  தங்களுடைய “charting-made-easy” என்ற கட்டுரையை நானும் download செய்து விட்டேன். இன்னும் படிக்க ஆரம்பிக்க வில்லை.

  இந்த கட்டுரையை தங்களது வலைத்தளத்தில் ஏற்றி எங்களுக்கு அளித்ததற்கு மனமார்ந்த நன்றிகள்.

 3. இனிய காலை வணக்கம்.

  நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

 4. கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல…
  உன்னை தூங்கவிடாமல் பண்ணுவது எதுவோ அதுவே இலட்சியக் கனவு..
  ஆம்! ! கனவு காணுங்கள்!

  -சொன்னவர் டாக்டர். அப்துல் கலாம்

 5. சாய் அவர்களுக்கு,

  இனிய காலை வணக்கம்.

  நண்பர்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்…

  தங்களுடைய “charting-made-easy” என்ற கட்டுரையை நானும் download செய்து விட்டேன்.

  மிகவும் உபயோகமாக உள்ளது. , இந்த கட்டுரையை தங்களது வலைத்தளத்தில் ஏற்றி எங்களுக்கு அளித்ததற்மிக்க` நன்றி !!!!!!

 6. Hi sai sir,

  Just i downloaded the soft copy of “Charting-made-easy”. I have not start to study yet. Thanks for your great service.

 7. வணக்கம் சாய் சார்,

  மறுபடியும் ஒரு இனிய காலை பொழுது… எந்த வித சலனமும் இல்லாமல் தொடங்கியுள்ள சந்தைகள்… இதன் தொடர்ச்சி இவ்வாறே இருக்குமா…

  முதலீடு சம்பந்தமாக நீங்கள் கொடுத்துள்ள பரிந்துரைகள் அருமை…

 8. சாய் தங்களின் வார்த்தைகளை வைத்து விளையாடி கடந்த 10 நாட்களின் சந்தை நிலவரங்களை புட்டு புட்டு வைத்துள்ளீர்கள்…

  பரிந்துரை மற்றும் எச்சரிக்கைக்கு நன்றி…

 9. dear sai
  f&o expiry day whether wednesday or thursday pl clarify.

 10. Posted by சாய்கணேஷ் on திசெம்பர் 22, 2008 at 2:02 பிப

  This is to inform everyone, Dec 2008 expiry will take place on 24Dec 2008, Wednesday

 11. dear sai
  thanks for your information.
  in the chart the exp date comes as 25-12-08.
  that is why i have raised the question.
  thanks for your immediate reply

  with regards
  mugham.m

 12. பரிந்துரைந்துள்ள பங்குகள் அருமை. நன்றி…

 13. dear sai
  i have downloaded the book. But for the past few days we could not impliment the chart rules. Each trading day is unic.every day we have to find a new way – not to gain but to reduce the loss!!
  with regards
  mugham.m

 14. hello sai sir & freinds good evening

 15. Posted by திருநெல்வேலி சீமையிலிருந்து அசோக்... on திசெம்பர் 22, 2008 at 6:43 பிப

  “”கேப் அப் அல்லது கேப் டவுன் எப்ப எல்லாம் நாடக்கலாம் எதனால் நடக்கலாம் என்று பின்னூட்டம் எழுதுங்கள்.””

  கேப் அப் மற்றும் கேப் டவுன் என்பது மொத்த சந்தைக்கும் மற்றும் குறிப்பிட்ட பங்குக்கும் பொருந்தும்….

  (1)உலக சந்தைகள் நல்ல வலுவான நிலையில் இருந்தால் நமது சந்தை கேப் அப் ஆக துவங்கும்…இல்லை என்றால் கேப் டவுன் ஆக துவங்கும்….

  (2) கேப் அப் மற்றும் கேப் டவுன் DEMAND AND SUPPLY இவற்றை பொருத்தும் அமையும் …..

  (3) NSE OPEN INTREST டேட்டா கொண்டும் கேப் அப் மற்றும் கேப் டவுன் தொடரும் நிலையினை முடிவு செய்யலாம் …..உதாரணமாக
  கேப் அப் ஆக துவங்கி புட் ஆப்சன் OPEN INTREST அதிகமானால் இறங்க வாய்ப்பு உண்டு ,மேலும் கேப் டவுன் ஆக துவங்கி கால் ஆப்சன் OPEN INTREST அதிகமானால் ஏற வாய்ப்பு உண்டு…..(இது நிப்ட்டி மற்றும் தனி பங்குகளுக்கும் பொருந்தும்…)

 16. Posted by திருநெல்வேலி சீமையிலிருந்து அசோக்... on திசெம்பர் 22, 2008 at 6:45 பிப

  SAI SIR,
  Your comments please…..Whether am i right or not?????

 17. Thank you for your writing. please continue….

 18. Posted by திருநெல்வேலி சீமையிலிருந்து அசோக்... on திசெம்பர் 22, 2008 at 6:51 பிப

  Sai Sir,

  Already i had that book(CHARTING MADE EASY)….But your link helps me to get more materials about charting and others…. Thank You Very much….

 19. Posted by தண்டபாணி ராஜகோபால் on திசெம்பர் 22, 2008 at 7:04 பிப

  முதலில் நன்றி கூறி விடுகிறேன். தங்களின் புத்தகத்தை நான் download செய்து விட்டேன். ஆனால் இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை. பயனுள்ள உதவி. தொடரட்டும் தங்கள் பணி. நன்றி.

 20. thank you sai sir.

 21. APTECH LTD இல் தற்போது Double bottom பார்மாகி உள்ளது.தற்போதைய விலையில் வாங்கலாம என்பதை technical தெரிந்த நண்பர்கள் சொல்லலாமே

 22. i want join in the comunity

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: