இன்றைய சந்தையின் போக்கு 19.12.2008


எழுதுவதற்கு ஒன்றும் இல்லை…

தற்போது அதிகமானவர்கள் என்னை கூர்ந்து கவனித்து வருவதால்… எனது பொறுப்பும் கூடுகிறது. எதோ எழுதுகிறேன் என்று கிறுக்க கூடாது. இங்கு எழுதுவது ஒரு சந்தையின் கண்ணோட்டம் தான் இதன் அடிப்படையில் பெரிய ஒரு லாபம் நஸ்டம் ஏற்பட்டுவிட போவதில்லை. ஆனால் இங்கு நான் தரும் முதலீட்டு மற்றும் வர்த்தக பரிந்துரைகளில் மிகுந்த எச்சரிக்கையாகவே தேர்ந்தெடுக்கிறேன். உதராணத்திற்கு தீபாவளி போர்ட் போலியோ, சன் உட்பட சில முதலீட்டு பரிந்துரைகள் மற்றும் திங்கள் அன்று வழங்கிய ப்யூச்சர் சார்ட் செல்லிங் பரிந்துரைகள்.

வரும் நாட்களில் மேலும் இது போன்ற விசயங்களில் கவனம் செலுத்தலாம், காரணம் இங்கு வருகை தரும் நண்பர்களில் அதிக மானவர்கள் வணிகர்கள் அல்ல… சிறு முதலீட்டாளர்கள் தான். அவர்களுக்கு இது போன்ற முதலீட்டு பரிந்துரைகள் பயன் தரும்.

கடந்த ஒரு வாரமாக ஒரோ கண்ணோட்டத்தில் எழுதி எனது எதிர் பார்ப்பை இங்கு தினிக்கின்றேனோ என்ற வருத்தம் ஏற்படுகிறது.. இங்கு அழுத்தமாக நான் எனது கருத்துகளை பதிவு செய்யும் சமயங்களில் அது எனது வர்த்தக ரீதியான ஆலோசனைகளில் ஒரு பாதிப்பை ஏற்படுத்துவதை உணர முடிகிறது… நிச்சயம் அது தவறு தான்..

அதீத நம்பிக்கையில் (Over Confident)  முன் கூட்டியே… சந்தையில் நிகழ போகும் ஒரு மாற்றத்தை சொல்லிவிட்டேன் என்று தான் தோன்றுகிறது.  3800, 4650, 3800,  3700 , 2200 ,3200 2510 ஆகிய நிலைகளில் எல்லாம் கணிப்பு சரியாக அமைந்தது காரணமாக இருக்கலாம். 

இல்லை அண்ணன் நிப்டியாருக்கு என் மிது என்ன கோபமோ… தெரியவில்லை.   இன்றும் எனது நிலைகளில் மாற்றம் இல்லை அண்ணன் நிச்சயம் கீழ் நிலைகளுக்கு வருவார்..   சென்ற வாரம் நான் எதிர் பார்த்தது ஒரு சிறிய அளவிலான சரிவுதான் (2900 to 2680)  ஆனால் கடந்த ஒரு வாரமாக முன்னால் போன கடிக்கிறது… பின்னால் சென்றால் உதைக்கிறது என்று 2900-3050 நிலைகொண்டு வருவதை பார்த்தால் மிகப் பெரிய அளவில் (சில வாரங்களில்)  கீழே வர வாய்ப்புள்ளதாகவே கருதுகிறேன்.    ஆகையால் நான் இன்னும் சார்ட் நிலைகளில் இருந்து வெளியேற முடிவு செய்யவில்லை. 

ஆனால் சிறு வணிகர்கள்….   மேல் நிலைகளில் ஆவரேஜ் செய்து இன்று கிடைக்கும் கீழ் நிலைகளில் (சிறிய அளவு நஷ்டத்துடன்) வெளியேறி விட முயற்சிக்கலாம்.  அதன் பிறகு புதிய நிலைகளை எடுக்கலாம். 

எனது பார்வையில் இன்றைய முக்கியமான  நிலைகள்….   3040, 2990, 2960, 2929

இதில் கவனிக்க வேண்டிய விசயம் 2929 என்பது கடந்த இரு நாட்களாக மிகவலுவான சப்போர்ட்டாக இருந்து வருகிறது.  இரண்டு முறை (2936, 2931.20)  அதை உடைக்க முயற்சி செய்தும் அது இயலாமல் போனது.

Advertisements

15 responses to this post.

 1. kindly send me your tips in english to the
  undermentioned mail address

 2. thank you, kindly send me the tips to my
  mobile

 3. Good Morning sir .

  I am confident in your market views. Of course, it is individual who has to take decision while trading depending upon market trend by keeping your views as basic thing.

  wish everybody a happy and profitable trading.

 4. thanks for u r vieve sir matrum nanparkal anaivarukkum iniya kaalai vanakkam

 5. I AM BENIFITTING FROM YOUR VIEWS.KEEP IT UP.

 6. உள்ளேன் அய்யா..

  எப்படி காலையில் வந்த உடனே சலாம் போட்டாச்சு… இன்னிக்கு முழிக்க லேட் ஆகிருச்சு சார்.

  மீதி அப்புறம்…

 7. சாய்,

  உங்கள் கருத்துக்கள் அனைத்தும் முற்றிலும் சரியே…” நாட்கள் ஆக ஆக…உங்கள் மேல் நாங்கள் (சிறு முதலீட்டாளர்கள் )வைத்துள்ள நம்பிக்கை தான் அதிகரிக்கிற தவிர, பிணக்குகள் ஒன்றும் இல்லை..! :”

  நன்றிகளுடன்,
  வரன்.!!

 8. GOODMORNING SIR WHAT IS TREND? 2700,2800 LEVEL NOT COMING?

 9. // இங்கு அழுத்தமாக நான் எனது கருத்துகளை பதிவு செய்யும் சமயங்களில் அது எனது வர்த்தக ரீதியான ஆலோசனைகளில் ஒரு பாதிப்பை ஏற்படுத்துவதை உணர முடிகிறது //

  நிச்சயம் இல்லை..ஒரு தேர்ந்த சந்தை கணிப்பாளர், நிச்சயம் தனது நிலைகளில் இருந்து தினம் தினம் மாறமாட்டார்..தாங்களும் அந்த நிலைகளிலேயே உள்ளீர்கள்..தங்களது இந்த நிலைதான், மிக அதிகமான தருணங்களில் நமது நண்பர்களுக்கு பெரும் லாபத்தை ஈட்டி தந்துள்ளது..

  சந்தையின் ஆத்திசூடி கூட தெரியாமல், தினமும் குதிரை மேல் பணம் கட்டி சம்பாதிப்பதை போல் சம்பாதிக்க நினைப்பவர்கள்தான், தினமும் லாபத்தை எதிர்பார்க்க முடியும்..சந்தையின் ஒவ்வொரு வர்த்தகத்தி்ன் முடிவிலும் ஒருவர் வெற்றியடைகிறார்..ஒருவர் தோல்வி அடைகிறார்.. நாம் எல்லா நாளும் வெற்றியாளராக இருக்க முடியாது..இந்த அடிப்படை புரியாமல் நாம் நீண்ட நாள் சந்தையில் இருக்க முடியாது..

  நமது வெற்றி தொடரட்டும்…

 10. நாங்கள் வைத்துள்ள நம்பிக்கை தான் அதிகரிக்கிற தவிர, பிணக்குகள் ஒன்றும் இல்லை.

  நன்றி

 11. Posted by சாய்கணேஷ் on திசெம்பர் 19, 2008 at 12:04 பிப

  🙂

 12. உயர்திரு சாய் அவர்களுக்கு,

  கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அனைவருமே சந்தை சிறிது கீழே இறங்கும் என்று எதிர்பார்த்தது என்னவோ உண்மைதான். ஆனால் அனைவரின் எண்ணத்தையும் வேண்டுமென்றே தவிடு பொடியாக்கி விட்டனர்.

  ஆனால் தங்களின் கணிப்புப்படி சந்தை தற்போது கீழே வரவில்லை என்றாலும் நீங்கள் கவலைப் படுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இதற்கு முன்னர் தாங்கள் கூறியது எப்படி சந்தையில் நன்றாக நிறைவேறியது என்பது இந்த வலைத்தளத்தை தொடர்ச்சியாக படிக்கும் நமது நண்பர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

  மேலும் தின வர்த்தகத்தில் தங்களுடைய பரிந்துரைகள் மிகவும் அருமையாக work out ஆகியதை பார்த்து நாங்கள் நிறைய நாள் வியந்திருக்கிறோம். மாதத்தில் ஓரிரு நாட்கள் எதிராக போகலாம். எனவே அதனைப் பற்றி தாங்கள் கவலைப் படக்கூடாது.

 13. GOOD EVENING
  SAI SIR, I THINK NEXT WEEK SHOULD BE BEAR’S WEAK. I MEAN, “IT IS YOUR WEEK”.
  YOU NEED TO GET SUCCESS. THEN ONLY YOUR CLIENDS WILL GET SUCCESS.
  DONOT WORRY “BABA WILL HELP US “

 14. சாய் உங்கள் முடிவை நீங்கள் எங்கள் மீது தினிப்பதாக என்ன வேண்டாம்… நாம் யாவரும் எதிர்பர்ப்பது சந்தை கீழ் நோக்கி சரியும் என்று தான் அதறக்கு சந்தை பற்றி அறிந்தவர்க்ள் ஆம் என்றால் நாம் முடிவு சரியே என மனதிற்கு சமாதானம் செய்து கொள்கின்றோம் அவ்வளவுதான்…

  நேற்று இந்தியா இன்போ லைன் நண்பரிடம் பேசிய போது அவர் சந்தை மீண்டும் 1800க்கு வரும் என்று கண்டிப்பாக கூறினார் எனக்கு மிகவும் ஆச்சரியம்.

  நீங்கள் அவ்வப்போது கூறுவாது போல் மீடியாக்கள் மற்றும் சந்தையில் உள்ள சித்தர்கள் எதையும் அதிகமாக கூறுகின்றார்கள் என்று தோன்றுகின்றது. ஆனால் நீங்க குறிப்பிட்டுள்ள இறக்க நிலை என்னை போன்ற சாரதனவர்கள் எற்று கொள்ளகூடிய அளவில் உள்ளது. கவலையை விடுங்கள் சாய்.

  நான் திரு சரவணன் சார் அவர்களுக்கு எழதியதை தான் உங்களுக்கும் கூற விரும்புகின்றேன்.

  “having a blog is this beast like a monkey on your back. It wants to be fed every day, but we all have jobs and it’s hard to do.”

  நீங்கள் எடுத்த பணி சிறப்பானது இன்னும் நிறைவு பெறவில்லை சந்தை கஷ்டமான இந்த நேரத்தில் தான் உங்கள் உதவி மற்றும் ஆலோசனை எங்களுக்கு தேவை மீண்டும் பரிசிலனை செய்யுங்கள். நீங்கள் 3.12.2008 அன்று ”ஒரு Fake Bearish சிக்னல் சந்தையில் உருவாக்க பட்டது.” என்று கூறவிட்டால் நான் சந்தையில் இருந்து வெளியேறி இருப்பேன்.

  8-12-2008 அன்று கூறியது போல் ”தேவை பட்டால் மேலும் நடவடிக்கைகள் எடுக்க அரசு தயங்காது என்ற கூடுதல் அறிவிப்பு. இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் இன்னும் வாண வேடிக்கைகளை எதிர் பார்க்கலாம்” மத்திய அரசும் தினம் தினம் அறிவிப்பு என கடந்த வாரம் தந்தது. மேலும் புஷ் பேகிற போக்கில் (செறுப்பால் அடி வாங்கியும்) தன்னால் முடிந்த வரை சில அறிவிப்புகள் தந்து நம்மை மேலும் காப்பாற்றுகின்றோன் என்ற பெயரில் நான்றகா மாட்டிவிட்டு போகின்றார்.

  15-12-2008 அன்று லாபத்தை உறுதி செய்யுங்கள்.. என்று கூறினீர்கள் அதன்படி லாபத்தை உறுதி செய் முடிந்து (நீன்ட நாட்களுக்கு பிறகு)

  எது எப்படியோ சாய் நீங்கள் உங்க சிந்தனையை சற்று மாற்றி இப்படி யோசியுங்கள் blog is a scratch-pad, and a discipline to collect your thoughts, compose your thoughts, advance your thoughts, and do it in public in a way that can amplify your thoughts by not only reaching an audience, but also getting feedback on your thoughts. Blogging is a way to make self smarter.

  நான் வேண்டுவது Change your perceptive you can change y(our) world. தயவு செய்து மனம்தளரமால் உச்சாகத்துடன் எழுதுங்கள்.

 15. Hello Sai Sir..

  //..சிறு முதலீட்டாளர்கள் தான். அவர்களுக்கு இது போன்ற முதலீட்டு பரிந்துரைகள் பயன் தரும்..//

  Eagerly Awaitng !!

  //..கடந்த ஒரு வாரமாக ஒரோ கண்ணோட்டத்தில் எழுதி எனது எதிர் பார்ப்பை இங்கு தினிக்கின்றேனோ என்ற வருத்தம் ஏற்படுகிறது..//

  நான் அப்படி நினைக்கவில்லை… இது சூதாடிகளின் வேலைதான். நண்பர் திரு.பைசல் சொன்னபடி இந்தியா இன்போலன்-இல் கடந்த வெள்ளி அன்று எனக்கு தரப்பட்ட தகவல் 2700-க்கு இந்த வாரம் வரும் என்பதே.

  //..இங்கு அழுத்தமாக நான் எனது கருத்துகளை பதிவு செய்யும் சமயங்களில் அது எனது வர்த்தக ரீதியான ஆலோசனைகளில் ஒரு பாதிப்பை ஏற்படுத்துவதை உணர முடிகிறது… நிச்சயம் அது தவறு தான்..//

  பிரச்சனை-ஐ நயமாக சொல்லிடீங்க… அதே போல் முடிவு என்ன எடுத்தீங்க என்றும், வரும் நாட்களில் சொல்லுவீங்க என்று நினைக்கிறேன்.

  சந்தை-இன் செயல்பாட்டு நேரத்து நிலைகள், பல காரணிகளை கொண்டு இருப்பதால், நிச்சயம் நிறம் மாறிக்கொண்டே இருக்கும். காலை 9.55 மணிக்கு முன்னர் பதிவிடப்படும் போது இது தவிர்க்கமுடியாது…

  ஆகையால் உங்கள் பதிவு ஒரு “கைத்தடி”… உங்கள் சந்தை நேர ஆலோசனைகளை(PAID-Service) “கால்கள்” என்று புரிந்து கொண்டிருக்கிறேன், அதனால் எனது சந்தை நேர “ஓட்டம்” தடைபடுவதில்லை.

  அன்புடன்… 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: