இன்றைய சந்தையின் போக்கு 18.12.2008


நேற்றைய தினம் சந்தை கரடிக்கு சாதகமாக அமைந்தாலும் இன்னும் முழுமையாக அதன் கையில் வரவில்லை.

அமெரிக்க சந்தையும் நேற்று இரவு எந்த ஒரு சலனமும் இல்லாமல் முடிந்துள்ளது. இன்றைய ஆசிய சந்தைகளும் ஒரு வித குழப்பத்தில் தான் துவங்கியுள்ளது. நமது சந்தையும் இன்று அமைதியாக துவங்கி… ஆசிய ஐரோப்பிய சந்தைகளின் நகர்வுகளை ஒட்டியே மேடு பள்ளங்களுடன் காணப்படும்.   இன்று வெளிவரும் பணவீக்க விகிதம் சிறிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அமெரிக்காவிடம் இனிமேல் வெட்டுவதற்கு (fed cut)   ஒன்றும் இல்லை…   all available tools  என்ன உள்ளது… வளரும் நாடுகளின் தலையில் மிளகாய் அரைப்பது… நீ அரிசி கொண்டு வா… நான் உமி கொண்டு வரேன் ரெண்டு பேரும் ஊதி ஊதி சாப்பிடலாம்… என்ற பித்தலாட்டம்..  சில பிராந்தியங்களில் பதட்டத்தை உண்டாக்கி ஆயுதம் வியாபாரம் செய்வது. பெரிய அண்ணன் தோரனையில் நாடுகளுக்கு இடையே கட்ட பஞ்சாயத்து.  கச்சா எண்ணை வியாபார சூதாட்டம் இதை விட்டால் வேற என்ன இருக்கிறது.  

இன்று அவர்கள் வெளியிட உள்ள GDP Data மற்றும் சில குறியீடுகளை   எதிர்பார்த்து அனைவரும் காத்திருக்கிறார்கள். 

இன்றைய முக்கிய நிலைகள்  3020, 3003 மற்றும் 2929, 2889.

நேற்றைய தினம் நமது வலைப்பதிவு 1,00,000  ஹிட்ஸ் கடந்தது.  அந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் மன நிலையில் நாம் இல்லாததால் நேற்று அதை குறிப்பிடவில்லை.  ஆனால் அண்ணன் அந்த நாளை மகிழ்ச்சியாக்கிவிட்டார். நேற்றைய நமது பரிந்துரைகளும் அபாரம்.   தங்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி.

நேற்றைய பின்னூட்டத்தில் தம்பி சிம்பாவின் ஆதங்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது, நாம் நமது நிலைப்பாட்டில் உறுதியா இருந்தா போதும் அருண்.  அவரின் அன்பு கட்டளைக்கு இணங்க எந்த ஒரு திருத்தமும் இல்லாமல் அனுமதித்து விட்டேன்.  சிம்பா உங்களிடம் பல திறமைகள் உள்ளது.. அவற்றை சரியாக பயன்படுத்தினால் மிகபெரிய அளவில் பேசப்படும் நபராக வரலாம்.   குறிப்பாக உங்கள் எழுத்து நடை… வாசிப்புகளை அதிகப்படுத்துங்கள்.. புழுதிகாட்டில் இன்னும் அதிரடிகாற்று வீசட்டும்…    வாழ்க வளமுடன். 

—————————————————————————————————————————————–

நண்பர்களே…. பொறுமைக்கு என்றும் பலன் உண்டு..  பங்கு சந்தையே ரிஸ்கானது தான் அதில் வந்து விட்டு ரிஸ்க் எடுக்க மாட்டேன்  என்றால் ???   எடுக்கும் முடிவுகளை சரியாகவும்…  தைரியமாகவும்…  அதிரடியாகவும்…   எடுங்கள்…   வெற்றி நமதே..

திங்கள் கிழமை பதிவில் – நாம் பரிந்துரைத்தை Future Short’s ன் இன்றைய நிலையை பாருங்கள் ரிலையன்ஸ் கேப்பிட்டல் மட்டும் 90-95/-  விலை குறைந்து உள்ளது.  லாட் சைஸ் 138 ஒரு டாட்டிற்கு கிடைத்த லாபம் மட்டும் 17000/- +++ 

யாராவது, லாபம் அடைந்திருந்தால் பின்னூட்டம் எழுதுங்கள்… அது மேலும் இப்பதிவை மேம்படுத்த உதவும்.

13 responses to this post.

 1. Good morning all of you ,I didn’t know whether where are going in market ,after accompany with sai sir, I get lot of confidence – lot of thanks guru -ravishankar

 2. good morning to all

 3. 1,00,000 HITS.IM VERY HAPPY.வாழ்க வளமுடன்!!!!!!!!

 4. Posted by சாய்கணேஷ் on திசெம்பர் 18, 2008 at 9:59 முப

  இன்று 7.30 மணிக்கு பதிவு எழுதி விட்டேன் ஆனால் Internet சதி செய்து 7.30 வேளை செய்ததால் கால தாமதம்.

 5. இனிய காலை வணக்கம்.
  1,00,000 HITS.IM VERY HAPPY

 6. வணக்கம் சாய் சார்,

  முதலில் இந்த சிறியவனின் வலைபூ இணைப்பினை தங்களது தளத்தில் இன்னைப்பு வழங்கி பெருமை படுத்தியமைக்கு மிக்க நன்றி.. எனக்கு நன்றாக ஞாபகம் உள்ளது, எனது முதல் பதிவினை வலையேற்றியவுடன் உங்களிடம் காண்பித்து, அதற்க்கு நீங்கள் சில திருத்தங்கள் சொல்லி எனக்கு வழி காட்டியது … உங்களை போன்றவர்களின் ஆசியால் எதோ என் மனதுக்கு பட்டதை எழுதிக்கொண்டிருக்கிறேன்..

  நேற்றைய எனது பின்னூட்டம் ஒரு சில அடக்க முடியாத உணர்வுகளால் எழுதப்பட்டதே.. இருந்தாலும் சந்தையை பற்றி நான் இன்னமும் தெரிந்துகொள்ள வேண்டியது எவ்வளவோ உள்ளது…

  இன்றைய எனது ஆசை தங்களது இரண்டாவது கீழ் நிலையை உடைத்து சந்தைகள் கீழே சரியா வேண்டும்.

  நன்றி சாய் சார்..

 7. GOOD EVENING
  SAI SIR,
  I SOLD SAIL DEC FUTURES AT 73.30. CAN I HOLD IT OR NOT. PLEASE TELL ME SIR……….

 8. எனது மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய உயர்திரு சாய் அவர்களுக்கு,

  தங்களுடைய கட்டுரை மிகவும் அருமை. தாங்கள் சொன்ன கீழ் நிலைகளை நிப்டி அடைவது உறுதி என்று நாங்கள் நம்புகிறோம். Operators பற்றி தாங்கள் கூறியுள்ளது மிகவும் சரிதான். “அதிகமானவர்கள் சந்தை இறங்கும் என்ற நம்பிக்கையை இழந்து விட்டு தங்களது நிலைகளை மாற்றி வருகிறார்கள், இதைத்தான் போலியான காளையின் தோற்றத்தை உருவாக்கியவர்களும் விரும்பினார்கள். ” – இன்றும் அவர்கள் அந்த வேலையைத்தான் செய்துள்ளார்கள் என்றே நினைக்கிறோம்.

  பணவீக்கம் குறைந்துள்ளது ஒரு சாதகமான விசயம்தான் என்றாலும் சந்தையை இவ்வளவு மேலே கொண்டு செல்லும் அளவுக்கு அந்த விஷயம் பலம் உள்ளதா? என்ற ஒரு கேள்வி வலுவாக நிற்கிறது. சூடி சித்தர்கள் இத்தனை நன்றாக பயன்படுத்திக் கொண்டு விட்டனர் என்றுதான் சொல்ல வேண்டுமென நினைக்கிறேன்.

  ஏனெனில் கடந்த நாட்களில் வெளிவந்த தொழில் வளர்ச்சி விகிதம் பாதாளத்துக்கே சென்று விட்டது. ஆனால் அதற்கு சந்தையில் சிறிதும் பதில் இல்லை. மாறாக சந்தையை கீழே விடாமல் மேலேதான் அன்றும் கொண்டு சென்றனர்.

  ஒரு பாதகமான விசயத்திற்கே சந்தையை கீழே விடாமல் மேலே கொண்டு சென்றவர்களுக்கு பணவீக்கம் குறைந்தது வெறும் வாய்க்கு அவில் கிடைத்த கதையாகி விட்டது.

  ஒரு விஷயம் இதில் இருந்து தெளிவாக தெரிகிறது. சந்தை கீழே இறங்கும்போது நம்மை ( சூதாடிசித்தர்கள்) தவிர வேறு யாரும் short position- இல் இருக்ககூடாது என்று முடிவு எடுத்து விட்டார்கள் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

  மேலும் இன்றைய கட்டுரையின் துவக்கத்திலேயே தாங்கள் கூறிய வரிகள் மிகவும் அருமை. “நேற்றைய தினம் சந்தை கரடிக்கு சாதகமாக அமைந்தாலும் இன்னும் முழுமையாக அதன் கையில் வரவில்லை.” இந்த வரிகள் இன்றைய சந்தைக்கு மிகவும் பொருந்தும்.

  நாங்களும் உங்களைப் போலவே எங்களது short நிலைகளுக்கு 3175- யை stop loss ஆக வைத்துக் கொண்டு உங்களுடன் காத்திருக்கிறோம். எங்கே போய்விடப் போகிறது சந்தை, எங்கே சென்றாலும் ஒரு முறை கீழே வந்து விட்டதுதானே செல்லப் போகிறது.

  நமது வலைப்பதிவு நேற்று ஒரு லட்சம் ஹிட்ஸ் கடந்தது மிகவும் சந்தோசமாய் இருக்கிறது. இது தங்களது உண்மையான உழைப்புக்கும் அர்பணிப்புக்கும் கிடைத்த வெற்றி. இந்த வெற்றி மென்மேலும் தங்களது வாழ்வில் தொடர எமது மனமார்ந்த நன்றிகள்.

  மேலும் தங்களுடைய நட்பு எங்களுக்கு காலம் தோறும் முடிவின்றி தொடர வேண்டுமென அந்த இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

  இனிய மாலை வணக்கம்.

 9. வணக்கம் சாய் சார்,
  உங்கள் வலைதளம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
  தொடரட்டும் தங்கள் பணி,
  தலைகனத்துடன் வாழும் சுயநலவாதிகளை கண்டு வருந்தாமல்…..

 10. லட்சம் வாசிப்புகளை கடந்ததற்கு
  வாழ்த்துக்கள் சாய் சார்.

 11. ஒரு லட்சம் வாசிப்புகளை கடந்ததற்கு
  இதயபூர்வமான வாழ்த்துக்கள்.

  தோழமையுடன்,
  MS.JAYAPANDIAN.

 12. Posted by திருநெல்வேலி சீமையிலிருந்து அசோக்... on திசெம்பர் 18, 2008 at 8:12 பிப

  நமது வலைப்பதிவு நேற்று ஒரு லட்சம் ஹிட்ஸ் கடந்தது…..ஓர் ஆயிரங்களை சொடுக்கிய சந்தோஷத்தில் வாழ்த்துக்கள் கூற கடமை பட்டு உள்லேன்…..

 13. SAI SIR
  I ASKED ABOUT SAIL BUT U DID NOT GIVE ANY OPINION. WHAT CAN I DO, PLEASE TELL ME. I AM VERY UPSET WITH MY SELF. PLEASE DO ANYTHING FOR ME. PLEASE………………….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: