இன்றைய சந்தையின் போக்கு 17.12.2008


பொறுமையின் எல்லைக்கே எடுத்து சென்று விட்டார்கள்.. சித்தர்கள்.    சில முன்னணி தொழில் நுட்ப ஆய்வாளர்கள் உட்பட, அதிகமானவர்கள் சந்தை இறங்கும் என்ற நம்பிக்கையை இழந்து விட்டு  தங்களது நிலைகளை மாற்றி வருகிறார்கள், இதைத்தான் போலியான காளையின் தோற்றத்தை உருவாக்கியவர்களும் விரும்பினார்கள். 

செய்திகளின் தாக்கம் சந்தையில் இருக்கும் என்பதை நானும் ஏற்கிறேன்.. ஆனால் அதனால் முழுமையாக டெக்னிகல் போக்கினை மாற்ற முடியாது.   பெடரல் வங்கியின் அறிவிப்பு அமெரிக்க சந்தையில் சின்ன உற்சாகத்தை ஏற்படுத்தலாம். ஆனால் 0%-0.25% என்பதும், pledged to use “all available tools” to turn back a deepening recession  என்று சொல்வதும் அமெரிக்கா பொருளாதாரத்தின் அவல நிலையைத்தான் வெளிச்சம் போடுகின்றன.

r

இன்று காலையில் Dow இன் உற்சாகத்தால் உந்தப்பட்டு 400 புள்ளிகள் உயர்வுடன் துவங்கிய ஜப்பானின் நிக்கி அடுத்த 20 நிமிடத்தில் 300 புள்ளிகளை இழந்து விட்டது.

Dow Future – ம் 100 புள்ளிகள் சரிவடைந்து வர்த்தகமாகிறது.

எனது கணிப்புகள் 100% டெக்னிகல் அடிப்படையில் தான்..  அனைத்து தொழில் நுட்ப காரணிகளும்,  குறியீடுகளும் காளைக்கு எதிராகத்தான் உள்ளது,  இருந்தும் கரடி இன்னும் களத்தில் இறங்காமல் இருப்பது ஆச்சரியம்…    

எனது எதிர்பார்ப்பு இன்னும் அதிகரிக்கிறது, வலுவடைகிறது…    என்ன முன் கூட்டியே எதிர் பார்ப்புகளை பதிவு செய்தேனோ என்று வருத்தப்படுகிறேன்.

Still I am Bearish…  atleast for this week…. i have revised my Stop Loss to 3175 from 3075 for my positional shorts, and my targets are 3030, 2929, 2828, 2727…   it may be delayed by a day or two but i am very much expecting these levels.  it’s my personal view.   i may be wrong this time… let us see.

அண்ணன் நிப்டியார் எதிர்பாராத அதிர்ச்சியை தரலாம்.

Advertisements

23 responses to this post.

 1. இனிய காலை வணக்கம்

 2. அண்ணன் நிப்டியார் எதிர் பாராத அதிர்ச்சியை தரலாம்.

  nangalum athaiye varaverkirom nantri anaivarukkum iniya kalai vanakkam

 3. Dear Sai,

  We are expecting from last 4 days that market will come down.

  But operators are playing very well.

  Let’s wait and See.

  Thank you very much for your view.

  Good Morning and Have a nice day,,,,,,,

 4. Good Morning and thank you very much for your views sir.

  Good Morning to everybody and wish you all happy and profitable trading.

  Any time selling pressure and profit booking may come and the market will go down. I expect this. But it may go wrong due to operators.

 5. BABA IS ALWAYS WITH US.HE WILL DO ALL.BE BRAVE.

 6. SAI SIR
  GOOD MORNING AND TO ALL
  AS PER YOUR VIEW, FROM TODAY BEAR WILL PLAY A VITAL ROLE SO BE HAPPY TO SHORT

 7. சாய் சார் உங்கள் உறுதியான நிலைப்பட்டை மிகத்தெளிவாக பதிவு செய்து இருக்கின்றீர்கள்… பாராட்டுக்கள். 100% உண்மை சில சமயம் பொய்யாக தெரியும் (உலகம் உருண்டை என்று சொன்னபோது எப்படியோ அப்படி) வரும் நாட்களிள் வர இருக்கும் பண்டிகைகளை கொண்டாட சித்தர்கள் செல்லும் போது சந்தையில் பணம் வெளியேரும். அப்போது பார்ககலாம்… அல்லது மூதலீடு செய்யலாம்.

 8. வணக்கம் சாய் சார்,

  wordpress இணைப்பு வேலை செய்யவில்லை.. அதும் நல்லதுக்கு தான்.. நுட்ட்ப்பக்கூருகளுக்கு மேல், செய்திகளால் உந்தப்படும் சந்தைகள் என்ற தலைப்பில் இன்று சிறிய அளவில் ஒரு பெரிய பின்னூட்டம் இட வேண்டும். அதற்க்கு சந்தைகள் முடிந்த பின்னர் எழுதினால் மிக சரியாக பொருந்தும்.

  we don’t have to prove our self for the fake of others…

  i am ready wid my gun… loaded with bullets..

 9. ஒரு லட்சம் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ள இந்நாள் நமது நாளாக அமையும்.. இந்த சிறப்பும், பெருமையும் உங்களது உழைப்புக்கு கிடைத்த முதல் வெற்றி..

  கூடிய விரைவில் இது பத்து லட்சங்களை தாண்ட வேண்டும்…

 10. இனிய காலை வணக்கம்

 11. தகர்ந்தது கனவு..

  நேற்று வரை, deposit காலியாகும் என்று தெரிந்தாலும் வானை நோக்கி விரல் நீட்டும் அரசியல் வாதிகள் போல் ஆனது சிலரது நிலைமை..

  இதற்கு மேல் கொடுப்பதற்கு ஒன்றும் இல்லை என்ற ரீதியில் அமெரிக்கா அரசின் கடைசீ ஆயுதமும் புஸ்வானம் ஆனது.. அனைத்து நுட்ட்பக்கூருகளும் 3150,3250,3400,3600 என்ற நிலைகளை நோக்கி பயணிக்கிறது என்றும்.. இனி திரும்பி பார்ப்பதற்கு வேலை இல்லை என்று கூறியவர்கள், இன்று எந்த பொந்துக்குள் தலையை விடுவது என்று தெரியாமல் திணறுகிறார்கள்..

  bulls do not have resistance என்ற தத்துவம் அவர்கள் உணர்ந்திருந்தால் இது ஒரு வேலை தெளிவாகி இருக்கலாம். இருந்தும் மீசையில் மண் ஒட்டாதது போல் buy in dips என்ற வரிகள் வருகின்றன..

  இன்னும் சிலரோ இதற்க்கு மேல் (அ) இதற்கு கீழ் என்ற வரிகளை மிகவும் பக்குவமாக உபயோகிக்கின்றனர்…. ஒரு வேலை இரண்டுக்கும் இடையில் என்ற நிலைகளை அவர்கள் உணராமல் இருக்கலாம்.. அப்படி உணர்ந்திருந்தால் கடந்த மூன்று தினங்களாக சந்தைகள் இரண்டும் கெட்டான் நிலையில் இருந்தது என்பதை அவர்கள் தெளிவுபடித்தியிருப்பார்கள்..

  நிப்டி ஒரு வேலை 2786 க்கு கீழே சென்றால் நான் கரடியின் பக்கம் என்று சொன்னவர்கள் கூட இன்று பாதி நிலைகளில் காளைகளின் மீது சாவாரி செய்வது அவளவு எளிது அல்ல என்று கூறி தரையில் நிற்கிறார்கள்.. கண்டிப்பாக இத்தகைய உலக நடப்புகளில் கரடிகளின் பக்கம் நின்றவர்களுக்கு shirt, pant மட்டுமே போயிருக்கும்.. ஆனால் காளைகளின் நிலைகளோ.. அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதை தான்.. கோவணம் கூட மிஞ்சாது என்பது அவர்களுக்கு ஓரிரு நாட்க்களில் புலப்படும்.

  எனது மனதின் ஆதங்கத்தினை சிறிதளவு இங்கே கொட்டிவிட்டேன். இது யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்படவில்லை.. சந்தைகளின் மந்திரமே.. ஒருவரின் தோல்வியே இன்னொருவரின் வெற்றி..

  அப்படி தோல்வி அடைந்தவர்களை பார்த்து எக்காளமிடும் முன் அதில் நமது நண்பர்களும் உள்ளார்கள் என்று நினைத்தால் இந்த வெற்றியின் கேவலம் புரியும்.

 12. Posted by திருநெல்வேலி சீமையிலிருந்து அசோக்... on திசெம்பர் 17, 2008 at 4:49 பிப

  முன்பெல்லாம் சந்தை எப்போது ஏறும் என்ற நிலை மாறி இன்று எப்போது சந்தை இறங்கும் என்ற கேள்விகள் தான் அதிகம்…இன்று நம் குடும்பத்தில் சிலர் பரவச நிலையை அடைந்திருப்பார்கள் …. எதிர்பார்த்த கனவு சிறிது அரங்கேற்றம் கண்டது …..மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் …..

 13. சிம்பா…உண்மை தான் நீங்கள் சொல்வது…இது வரை சந்தையை யார் எடுத்து சென்றார்கள்,என்ன நடந்தது சந்தைக்குள்..என்பது தெரியாது..ஆனால் பாதை எது வரை என்பதும்,போனவர் கண்டிப்பாக போன வழியில் வெகு விரைவில் திரும்பி தான் வர வேண்டும் என்பதையும் கற்றரிந்தவர்(நமது சாய் அண்ணா) சொல்ல கேட்டோர் நாம்…அதனால் பாதிப்பு நமக்கில்லை…

 14. அருமையான கட்டுரை சிம்பா, சாய் அவர்கள் நேற்று முன்தினமே வரும் நாட்களில் சந்தை எப்படி இருக்கும் என்று எழுதியதாள் என்னை போன்றவர்களுக்கு சரியான தருணமாக அமைந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு சிறிது லாபம் பார்க்க முடிந்தது இல்லை என்றால் நஷ்ட கணக்கு தான் எழுத வேண்டியது தான்.

  சரி யாருமே இன்று Satyam Computer Services Ltd க்கு எற்பட்ட நிலைபற்றி தகவல் அல்லது பின்னுடம் இடவில்லை நல்ல பங்கு மகன் நிறுவணத்தை காக்க எடுத்த முடிவில் சரியான அடி வாங்கி இருக்கின்றது இந்த பங்கு 33% வரை இறக்கம். தெரிந்து இருந்தால் இன்று வாங்கி சில நாட்களில் லாபம் பார்த்து இருக்கலாம்…

  சாய் முடிந்தால் Satyam Computer Services Ltd பங்கை நாளை வாங்கலாம? என்று என்று கூறவும்…

 15. வணக்கம் சாய் சார்,
  //i may be wrong this time…//
  இல்லை சாய் சார்.நீங்கள் சரியாக தான் கணித்தீர்கள்.அதுபடியே எல்லாம் நடக்கிறது.
  பாராட்டுகள்…

 16. வணக்கம் சாய் சார்,

  வழக்கமான தினத்தைவிட இன்றைய தினம் கூடுதல் லாபம் அடைய வழி காட்டியமைக்கு மிக்க நன்றி.

 17. சாய் சார் தங்களின் எண்ணம் போலவே இன்றைய சந்தை அமைந்தது..என் மனமார்ந்த வாழ்த்துகள்.

 18. லட்சியத்தை அடைய வழிகாட்டிய ,சாய் சார் லட்சத்தை அடைத்து விட்டார் .வாசிப்புகள் 1,00,717….,
  மேலும் மேலும் , அதிகரிக்க வாழ்த்துகள்.

 19. wow 100723 வாசிப்புகள். வாழ்த்துக்கள் sir .நான் தொடக்கத்தில் இருந்தே தங்கள் பதிவின் வாசகி என்பதில் எனக்கு மிக மகிழ்ச்சி.நீங்கள் சொன்னது போல் உங்கள் (calls) உதவியுடன் (இருப்பதை இழப்பதில் இருக்கும் வலியை விட இழந்ததை சிறுக சிறுக மீட்டெடுப்பதில் கிடைக்கும் ஆனந்தம் மிகவும் அதிகம்.) உணர்ந்து வருகிறேன் thank you.

 20. Great Going…

  No Doubt Ur BLOG will cross 10L soon.

 21. Dear Faisal Sir,

  Hope u have read the whole thing…

  Satyams CEO does some nasty things always… eventhough he is very good in doing business.

  But this time things got NOSE-DIVED.

  http://www.capitalmarket.com/if1.asp?L=marketnews&M=cmedit%2fstory1-3.asp%3fsno%3d285819

  with regards.

 22. thanks for link Mr. Ramparsad

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: