இன்றைய சந்தையின் போக்கு 12.12.2008


அனைவருக்கும் வணக்கம்,

நேற்று இரவு நண்பர்கள் இருவருடன் கதைத்து 🙂 கொண்டிருக்கையில், இருவரும் என்ன சாய் எல்லோரும் மேலே செல்லும் சென்று டார்கெட் சொல்லும் போது நீங்க மட்டும் இப்ப 2750/680 என்று சொல்றிங்க?  ஏன் இப்படி…  நாங்க வேற எல்லாம் சார்ட் செய்துள்ளோம் என்றார்கள் அந்த சமயம் நான் ஒரு பந்தயம் கட்டினேன்…  ..  அப்பொழுது  Dow Baba 8790-80 இல் இருந்தார்.   இப்ப பாருங்க இன்று இரவு (11/12)  8840 ஐ கடந்து செல்ல மாட்டார் என்று…   எழுதி தருகிறேன் என்றேன்.  நானும் 8823 நிலையில் ஒரு கோடும் 8550,  8400 மற்றும் 8380 என்று 3 டார்கெட் குறிப்பிட்டு வைத்து விட்டு ,  காலையில் 5.30 க்கு எழுந்து பார்த்தால்..  நமது எல்லை கோட்டில் நிற்கிறார்.

நீங்களும் பாருங்க…

dow

அதேபோல் நமது அண்ணன் 3050-60 ஐ கடந்து செல்ல மாட்டார்..  அதற்கு முன்பாக குறைந்த பட்சம்  7-10%  கீழ் சென்று தான் மேலே திரும்புவார்.. என்றும் அவர்களிடம் சொல்லியிருக்கிறேன், பார்ப்போம்..  

முதலீட்டாளர்கள் இதை பார்த்து பயம் கொள்ளவேண்டாம்..  சந்தை தன்னை நிலைப்படுத்தும் செயல் தான்…. அதாவது வெள்ளம் / புயல் போன்ற சீற்றங்களுக்கு பிறகு நடக்கும் ஒரு புனர் நிவாரனம் போன்றது…. மேலிருந்து கிழே குதிச்சாச்சு, ஏறனும் என்றால் அப்படி முடியாது… அதற்கு படிகள் அமைக்கும் வேலை தான்..

 கடந்த 10 நாட்களில் நாம் இங்கு பரிந்துரைத்த பங்குகளும், அதன்  விலை மாற்றமும்…

Unitech 29 – 36   –  24%   up

Sun Tv  – 133 – 175   31%  up

Unitech – 24 – 36  –  50%  up

United Sprits  – 810 –  980   –   20%

IFCI  17.00  – 19.55  –   15% 

Wipro  –  235  –    265  –  12.7%  

power grid  மட்டும் பரிந்துரைத்த விலையில் உள்ளது.

இப்ப சொல்லுங்க எந்த தொழில் ஒரு வாரம், 10 நாளில் 10% to 50% லாபத்தை தரும்.. டிரெடிங் செய்யமால் முதலீடாக இப்படி தேடி தேடி செய்தாலே நல்ல வருமானம் பார்க்கலாம்.  அதே நேரத்தில் 20% உயர்ந்த உடன் நமது கையிருப்பில் 80% ஐ விற்று வெளியேறிவிடவேண்டும்.  20% பங்குகள் நமக்கு இலவசமாக கிடைத்தது போல் ஆகிவிடும். அதனை Long Term முதலீடாக வைத்து கொள்ளவேண்டும். 

இன்றைய சந்தை கேப்டவுனாக துவங்க வாய்ப்புகள் அதிகம்…   நாள் நெடுகில் சரிவுகளில் இருந்து மீண்டுவர போராடும்…  போரட்டத்தில் கரடியின் கை ஓங்கும்.

============================================================================

எனது   அரசுக்கு பின்னூட்டத்தில் உள்ளிருந்தும் (மெம்பர்ஸ்)  வெளியில் இருந்தும் (மெம்பர்ஸ் அல்லாத) – திரு பைசல்,சக்தி, ராம்பிரசாத் ….. )   ஆதரவளிக்கும் நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி… உங்களின் ஆதரவுடன் என்றும் நமது ஆட்சி தொடரும்…

யாரும் குறை சொல்ல வில்லை…. சின்னதா நஸ்டம் வரும் போது… அதை கண்டு பதட்டம் அடைகிறார்கள்..   தின வர்த்தகர்கள் லாபமோ நஸ்டமோ அன்றே முடித்து கொள்ள வேண்டும்.  பொசிசன் டிரேடர்ஸ் 150-200 புள்ளிகள் வரை கூட காத்திருக்க பழக வேண்டும் (டிரெண்ட் நமக்கு சாதகமாக இருக்கும் போது.. )  

நேற்றைய தினம் அனைத்து பரிந்துரைகளும் அருமையாக செயல் பட்டு லாபத்தை வழங்கியது. .

Advertisements

23 responses to this post.

 1. Thank you sir ,you are views are amazing.

 2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம், திரு சாய் அவர்களின் கட்டுரை மிகவும் அருமை.உங்களின் வார்த்தைகளே போதும். திரும்ப திரும்ப படித்து பார்க்கிறேன் . உண்மையான அதே நேரம் எதார்த்தமாக, எப்படி இவை எல்லாம் திரு சாய் அவர்களே வாழிய பல்லாண்டு. நல்லாசிகளுடன் தனசேகரன்

 3. // நமது அண்ணன் 3050-60 ஐ கடந்து செல்ல மாட்டார்.. அதற்கு முன்பாக குறைந்த பட்சம் 7-10% கீழ் சென்று தான் மேலே திரும்புவார் //

  குறிச்சாச்சு..இந்த மாதிரி நீங்கள் போகிற போக்கில் உதிர்க்கும் சந்தை நிலைகள் எத்தனையோ சமயங்களில் கை கொடுத்துள்ளது..

  தங்களின் 20% profit campaign ல் (பரிந்துரைகள்) பங்குபெற்று லாபமடைந்த நண்பர்களுக்கு வாழ்த்துகள்!!

  // உங்களின் ஆதரவுடன் என்றும் நமது ஆட்சி தொடரும்…யாரும் குறை சொல்ல வில்லை…. சின்னதா நஸ்டம் வரும் போது… அதை கண்டு பதட்டம் அடைகிறார்கள்.. //

  ஒரு சர்மாவிடமோ இல்லை கபூரிடமோ கால்கள் பெறும் நண்பர்கள் யாரும் குறை சொல்ல முடியாது ஏனென்றால் அவர்கள் நமக்கு காது கொடுக்க மாட்டார்கள்.. ஆனால் உங்களுக்கு பிரச்னையே, நீங்கள் தாய்மொழியில் யாருக்கும் கிடைக்காத மிக மிக அரிய சேவையை தந்து கொண்டுள்ளீர்கள்..அதனால் எங்களுக்கு அதன் முக்கியத்துவம் தெரிய வில்லை.. எதுவுமே புரியாத அல்லது எளிதாக கிடைக்காத நிலையில் இருந்தால்தான் நாம் அதற்கு மதிப்பு கொடுப்போம் 🙂 ). .நானெல்லாம் சில சிறிய டெக்னிக்கல் நிலை சந்தேகங்களுக்காக, எத்தனையோ இரவுகள் வலை மேய்ந்துள்ளேன்..ஆனால், உங்களது வரவுக்கு பின், அனைத்தும் விரல் நுனியில்..எந்த நிலை எதனால் எடுக்கலாம் என்பது முதல், F&O வின் சில சூத்திரங்கள் வரை எளிதாக கை வர ஆரம்பித்து விட்டன..

  நாங்கள் எந்த ஒரு பட்நாயக்கிடமோ அல்லது சிங்கிடமோ ஒரு சந்தேகம் என்றால் உடனே தொலை பேச முடியாது..ஆனால் உங்களுக்கு எந்த நேரம் வேண்டுமானாலும் அழைக்கலாம் என்ற உரிமையை தந்துள்ளீர்கள்..

  நண்பர்கள் அனைவரிடமும் ஒரு வேண்டுகோள்..லாபத்தையும் நஷ்டத்தையும் முடிவு செய்ய வேண்டியது நாம்தான்..எனவே நாமும் பதட்டபடமால், சாய் அவர்களையும் பதட்ட படுத்தாமல் 🙂 நிதானமாக டிரேட் செய்வொம்..வெற்றி பெறுவோம்!!!

 4. Good Morning and thank you very much for your views sir. Your views are very helpful for intraday traders like me.

 5. அனைவருக்கும் வணக்கம்.சாய் அண்ணா எந்த ஒரு டார்கெட் சொல்லும் போதும்,அந்த டார்கெட்டுக்கும் அப்போது உள்ள நிலைக்கும் ஏகப்பட்ட தூரம் இருக்கும்.நீங்கள் டார்கெட் சொல்லும் போது இது சாத்தியமா என்று கூட நினைக்க வைக்கலாம்.ஆனால் ஒவ்வொரு தடவையும் நீங்கள் சொன்னது போல் டார்கெட் அடையும் போது எப்படி இது என்று பெரிய ஆச்சர்யமாக இருக்கும்.அப்போ தான் தெரியும் என்னைப்போல் நீங்கள் குருட்டாம்போக்கில் சொல்லவோ,நினைக்கவோ இல்லை..வேற என்னமோ(சார்ட்) இருக்குன்னு தெரியும்.உங்கள் சாமர்த்தியம் என்னை பல முறை வியக்க வைத்திருக்கு அண்ணா………..

 6. மதிப்பிற்குரிய சாய் அவர்களுக்கு,

  கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக பின்னூட்டம் அளிக்க முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். காலை நேரங்களில் ஏற்பட்ட அகலபாட்டை இணைய வசதி (Broadband) கோளாறு சந்தை thuvangum நேரங்களில் மட்டுமே சரியானது. அதனால்தான் இந்த நிலை.

  தங்களுடைய கட்டுரையை எப்பொழுதுமே காலை 9 மணிக்குள் படித்து விடுவேன். கடந்த நான்கு நாட்கள் நிலைமை தலைகீழ். எதையோ இழந்தது போன்ற ஒரு உணர்வு. தற்பொழு ஓரளவிற்கு சரிபட்டுவிட்டது. மிக்க மகிழ்ச்சி.

  சந்தை மேலே சென்று கொண்டிருக்கும்பொழுது தாங்களோ நேற்று ௱ முதல் 150 புள்ளிகள் வரை கீழே வரும் என்று சொன்னீர்கள்.தாங்கள் சொன்னது போலவே இன்று நடக்கிறது, நேற்றும் நடந்து. அருமை சாய்.

  தங்களுடைய கணிப்புகள் அனைத்தும் மிகவும் அருமை. தங்களுடைய இந்த வெற்றிப் பயணத்திற்கு நாங்கள் என்றும் துணையாக இருப்போம்.

  இனிய காலை வணக்கம்.

 7. thank you Sai,
  your comments and hardwork highly rewardable

  Murugesan
  Abudhabi

 8. Posted by raaju.p.d coimbatore on திசெம்பர் 12, 2008 at 9:45 முப

  hello sai sir & friends good morning

 9. உங்களின் ஆதரவுடன் என்றும் நமது ஆட்சி தொடரும்…

 10. YOU ARE DOING A GREAT WORK!!!!!!!!!!!!!

 11. 🙂 🙂 🙂

  வணக்கம் சாய் சார்.

  விடிய விடிய உக்காந்து பைல் அவுட் ஆககுமா ஆகதானு பார்த்தேன்… நிச்சயமா ஆகாது என்ற எனது நம்பிக்கை பொய்க்கவில்லை.. ஆனா காலைல தூங்கிட்டேன்…

  உங்க குறி ஆரம்பத்துலேயே அடிச்சிருச்சு போல…

  🙂 🙂 🙂

 12. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
  தங்களுடைய கணிப்புகள் அனைத்தும் மிகவும் அருமை
  நன்றி

 13. நீண்ட நாட்களுக்கு பிறகு…
  வரும் திங்கள் கிழமை “கருப்பு திங்களாக” (BLACK MONDAY) வாய்ப்புகள் அதிகம், உள்ளது.
  …ம்ம்ம்ம்ம்ம்…
  பார்க்கலாம்.

  இன்று 3.00PM-இக்கு மேல் ஷொர்ட் போனவர்கள்(position TRADERS) கொடுத்துவைத்தவர்கள்.

 14. ஒரு கேள்வி:

  பணவீக்கம் (WPI) ஒற்றை இலக்கத்தில் இருந்தாலும், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பல பொருட்களின் விலை 50% சதம் வரை உயர்ந்துள்ளது,
  அரசு அறிக்கைக்கும், நடைமுறைக்கும் ஆன இடைவெளி…, கசக்கிறது.

  இது போன்றே IIP புள்ளிவிவரத்திற்கும், நடைமுறை உற்பத்திக்கும் ஆன இடைவெளி பற்றி யாராவது சொல்லமுடியுமா…?
  எனக்கு தெரிந்து சிறுதொழில் முனைவோர் பலர் சொல்லவென்ன சிக்கலில் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

 15. good evening sai sir nangal enrume ungal party 3day market patthu payapatamattom jai sairam

 16. DEAR SAI
  I CAN NOT UNDERSTAND THE REASON FOR THIS STATMENT

  “இன்று 3.00PM-இக்கு மேல் ஷொர்ட் போனவர்கள்(position TRADERS) கொடுத்துவைத்தவர்கள்.”

  IN WHAT BASIS HE (Mr.RAMPRASAD.V )EXPECT” GAP DOWN ” ON MONDAY?
  CAN YOU EXPLAIN?
  with regards
  mugham.m

 17. i didn’t type the tamil words

  “மட்டறுத்தலுக்காக உங்கள் மறுமொழி கிடப்பிலிருக்கிறது. ”

  but how it appears?

  mugham.m

 18. ஸ்ஸ்ஸ்ஸ்ஹ்ஹ்ஹ்… அப்பாடா !!

  Escape.

  BLACK MONDAY had been avoided, I think so. As of Now.

 19. dear ramprasad.v

  “BLACK MONDAY had been avoided” HOW?

  CAN YOU TELL US?
  with regards
  mugham.m

 20. Hello Mr.Mugham.M

  Nice to HEAR U.

  Comment no.15 has been made @ 4.48pm, based on EUROPE Markets, Which were trading around 5 to 6% down & flat at that time.

  //இன்று 3.00PM-இக்கு மேல் ஷொர்ட் போனவர்கள்(position TRADERS) கொடுத்துவைத்தவர்கள்.//

  The above statement was based on that.

  There had been a CHANCE of EUROPE CRACK DOWN about 8-10% at that TIME.

  Comment no.20 has been given @10.57, as a CORRECTION , based on EUROPE Closure, & US markets TREND at that TIME.

  with thanks & regards.

 21. dear ramprasad.v

  thanks for your immediat reply.i have already went short on minifty at 2875 (2 lots)
  let us see what will happen on monday.
  with regards
  mugham.m

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: