இன்றைய சந்தையின் போக்கு 10.12.2008


அனைவருக்கும் காலை வணக்கம்…

அண்ணன் பரம பதம் ஆட்டம் ஆடுகிறார்…. ஏணி கிடைத்து விட்டது என்று ஏறினால் அங்கு பாம்பின் தலை கிடைக்கிறது என்ன செய்ய..

கரடியின் ஆதிக்கத்தில் வணிகம் செய்வதும் அதிகம் லாபம் பார்ப்பதும் எளிது… ஆனால் காளையை  அடக்கி ஆளுவது எல்லோராலும் முடியாது.   கொஞ்சம் ஏமாந்தாலும் காளை முட்டி தள்ளி விட்டு போய் விடும்.

இந்த பரம பத  ஆட்டம் இனி தொடரும்… எனது பார்வையில் சந்தைகளில் சரிவுகள் ஏதும் மீதம் இல்லை.. 2490 நிலையில் பாட்டம் அரெஸ்ட்டாகி விட்டது.  முதலீட்டாளர்களுக்கு ஏற்ற நிலையில் சந்தை உள்ளது.  3150 நிலை வரை பெரிதாக Volume இருக்காது.  

ஆளும் கட்சிக்கு 3 மாநிலத்தில் கிடைத்துள்ள வெற்றி..  மத்திய அரசை மேலும் உற்சாகப்படுத்தும்,  தேர்தல் ஆணையம் லோக் சபா தேர்தல் ஏப்ரல் மே மாதம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது, அது வரை அரசு சில நடவடிக்கைகள்… மற்றும் பல அறிவிப்புகள் என்று சந்தையை 3700-4000 என்ற நிலைக்கு எடுத்து செல்ல முயற்ச்சிக்கும்.    அதற்கு வலு சேர்க்கும் விதமாக ஜனவரியில் பங்காளி வீட்டில் ஒபாமா ஆட்சி பொறுப்பேற்று…  வாய் சொல் வீரர் மட்டும் இல்லை..  செயல் வீரர் என்றும் நிருபிக்க முயற்ச்சிப்பார்.

திங்கள் அன்று சந்தை 2850 க்கு மேல் தன்னை தக்க வைக்க இயலாததில் ஆச்சரியம் இல்லை…   இன்றைய சூழ்நிலையில் 4-5 % ஏற்றம் என்பது மிக மிக அதிகம்.  அதுவும் அடுத்த நாள் விடுமுறை…  எப்படி சந்தை மேலே நிலைப்படும்..   

சரி இன்றைய சந்தை எப்படி இருக்கும்….

2800 க்கு மேல் நிலைப்படுத்தத்தான் முயற்ச்சிப்பார்கள்..    2850, 2870, 2892.  கவனிக்க வேண்டிய மேல் நிலைகள்..

ஒரு 50 புள்ளிகள் இடைவெளி உள்ளதால் – 2710 வரை வரலாம் அவ்வாறு வாந்தால் 2600 /2580 வரை சென்று திரும்பலாம்.  அவ்வாறு நிகழ்ந்தால் அது Bottom Fishing செய்ய நினைப்பவர்களுக்கு இறுதி வாய்ப்பாக அமையும்.  

இன்றைய பிவோட் நிலைகள்..

2969 – 2923 – 2857 – 2811 – 2745 – 2699 – 2633

இன்றைய பரிந்துரை… 

Wipro ltd  –  235 என்ற விலையில் வாங்கலாம்.   டார்கெட் -320,380  

ஒரு சந்தோஷமான செய்தி திங்கள் அன்று எனது நிப்டி பரிந்துரை நீண்ட நாட்களுக்கு பிறகு ஸ்டாப் லாஸை உடைத்தது..  🙂  அதன் பிறகு தான் டார்கெட் அடைந்தது.   ஒரு சிலர் Revised Stop Loss பின்பற்றி லாபம் அடைந்தனர்.  மற்ற அனைத்து கால்ஸ்ம் எப்பொழுதும் போல் வெற்றியை தேடித் தந்தது.

ஒரு சில நண்பர்கள் தொலைபேசியில் கேட்டார்கள்… எல்லா கால்ஸ்ம்/ எல்லா நாளும் Targets Achieved என்றே எழுதுறீங்க அது எப்படி சார்,  விளம்பரத்திற்காக எழுதுறிங்களா என்று. இங்கு எழுதுவது அனைத்தும் உண்மையான தகவல்கள் என்பது அதன் பயனாளிகளுக்கு தெரியும். 

மெம்பர்ஸ் உங்களுக்கு ஒரு வேண்டு கோள்… உங்கள் தின வர்த்தக விவரங்களை  Excel Sheet -ல் கீழ் வருமாறு எழுதி வாருங்கள்.. உங்களுக்கும் பயன் தரும்..  என்ன நாம் செய்கிறோம் என்பது தெரிய வரும்.  விரும்பினால் எனக்கு மெயிலில் மாதம் ஒரு முறை அனுப்பி வைக்கவும். 

Date  Stock /Future/ Entry  Exit  Price  Diff  Profit Loss
  Option Buy/ Sell Sell/Buy   (+/-)    
               
               
               

 

 

 

 

சிலர் பிவோட் கால்குலேட்டர் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள்..  அவர்கள் இங்கு இருந்து டவுன் லோட் செய்து கொள்ளலாம்.  PivotCalculator05-06-05.exe

Advertisements

14 responses to this post.

 1. Thank you sir !!!

 2. good morning sir

 3. nantri sai sir, “thodarattum vetrikal” valthukkaludan vanakkam

 4. vannakkam sir this stock is very vollantne but day trading very good please watch sir unitech,everestkanto cylinder, punnj lyod,pstl, educomp.ivrcl,hcc. thanks. eduvum thavaraga eludierundal mannikkavum

 5. CONGRATS!CONGRATS!CONGRATS!SEARCHING FOR WORDS ………………….

 6. கலக்கலான பதிவு சாய் சார்… உங்களுடைய பதிவு ஜனவரி வரை எவ்வாறு சந்தை செயல்படும் எவ்வாறு சிறு மூதலீட்டை தொடங்கலாம் என்பதை மிக தெளிவாக கூறியுள்ளீர்கள்… நன்றி…

 7. thank u for your briefly comments

 8. ஒரு சிறந்த கட்டுரையாளராக மாறி வருகிறீர்கள்.

  // அண்ணன் பரம பதம் ஆட்டம் ஆடுகிறார்…. ஏணி கிடைத்து விட்டது என்று ஏறினால் அங்கு பாம்பின் தலை கிடைக்கிறது என்ன செய்ய //

  ஒரு கட்டுரையை இதை விட அமர்க்களமாக எப்படி ஆரம்பிக்க முடியும்.

  We appreciate your follow-up sms on monday for revised SL on nifty..lot of us avoided loss and booked handsome profit…

 9. Boss today all calls stop loss triggered.Just like newtons law,for the past 20 to 25 days all calls target achieved.But today calls triggered stop loss.No problem i have faith on you and god,surely i will recover the same in a day or two.
  If there is profit there must be a loss,so we must accept the both. Then only we can achieve in our life forever.

  This the message that i want to convey it to our friends.

 10. Your advice is very useful for intraday traders like me.

 11. Posted by விக்னேஷ் குமார் on திசெம்பர் 10, 2008 at 7:27 பிப

  தங்களது கட்டுரை மிகவும் அருமை சார்.வெப்சைட் முகவரியை லிங்க்(link) பார்மட்டில் கொடுப்பது எப்படி என்று தெரிவித்தால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

 12. கரடியின் ஆதிக்கத்தில் வணிகம் செய்வதும் அதிகம் லாபம் பார்ப்பதும் எளிது… ஆனால் காளையை அடக்கி ஆளுவது எல்லோராலும் முடியாது. கொஞ்சம் ஏமாந்தாலும் காளை முட்டி தள்ளி விட்டு போய் விடும். இன்று அப்படிதான் ஆனது, இதை காலையிலே சார் உணரத்தான் செய்தாரோ என்னவோ ? உங்கள் கருத்துக்கு தலை வணங்குகிறேன் சாய் நன்றிகள் கோடி.

 13. வணக்கம் தல

  என்னடா காலைல வர்ற ஆளு இரவில்னு பார்கறீங்களா.. காலைல எப்பவும் போல வெளிய சுத்த போய்டேன்.. இப்போ வந்தது உங்க கட்டுரையின் நோக்கத்தை பகிர அல்ல.. உங்களில் எழுத்து நடையை சிலாகித்துப்பேசவே…

  உண்மையில் மிக அருமையாக உள்ளது… சாய் சார்…

 14. அனைவருக்கும் இனிய கார்த்திகை “மகாதீபஒளி திருநாள்” நல்வாழ்த்துக்கள்.(அறியாமை) இருள் விலகி (தன்னம்பிக்கை) நல்லருள் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.உண்மையும் நேர்மையும் அனைவருக்கும் ஒருங்கே அமைய வாழ்த்துவோம்.என்றென்றும் நன்றியுடன் ஏ.எஸ்.தனசேகரன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: