இன்றைய சந்தையின் போக்கு 05.12.2008


நேற்றைய தினம் The Ultimate Winner is Mr.Bull அவருக்கும் அவர் பக்கம் இருந்து வெற்றி பெற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துகள்,  அவரின் வெற்றி நடை தொடரட்டும்..

நேற்றைய சந்தையில் சில விசயங்களை கவனிக்க வேண்டும்… காலையில் இருந்து Big Boy’s எனப்படும் Bad Boy’s  சின்ன புள்ளைங்கள விளையாட விட்டு வேடிக்கை பார்த்தார்கள்.  அதவாது 2620 – 2690 இதன் இடையில் அவர்கள் வரவில்லை. இதில் எந்த பக்கம் போனாலும் Join பண்ணலாம் என்பது அவர்களின் நோக்கம்.   2690 /2728 இந்த நிலைகளை கடந்த உடன் வேகத்தை கவனித்திருக்கலாம். 

சரி இன்றைய சந்தையில் என்ன எதிர் பார்க்கலாம்…  

காலையில் சிறிய அளவில் கேப்டவுன் / சரிவு… எதிர் பார்க்கிறேன்,  நாள் நெடுகில் அதில் இருந்து மீண்டு மேல் நகரும் என்றும் எதிர் பார்க்கிறேன்.. மீண்டும் சந்தையை கரடியின் (போலியான) பிடியில் எடுத்து செல்ல முயற்ச்சிப்பார்கள். 

முக்கிய கீழ்நிலைகள் – 2755, 2735, 2710,2675 

முக்கிய மேல் நிலைகள் –  bull markets have no resistance 🙂

இன்றைய பரிந்துரை.

United Spirits   – அதன் தயாரிப்புகளை  போலவே குப்பென்று ஏறிடுச்சு… L 811 – H 930 C920

Unitech – 29 மற்றும் 24 நிலைகளில் பரிந்துதுரைத்த இப்பங்குகள் 30 என்ற விலையை கடந்து விட்டது. நமது இலக்கினையும் கடந்து செல்லும்.

IFCI Ltd – 17.00 என்ற தற்போதைய விலையில் வாங்கலாம்..  டார்கெட் 26, 31,37.

52 Week High – 116  52 Week Low – 15.35  🙂  🙂

Power Grid Corporation  – தற்போதைய விலையில் (74-76) வாங்கலாம் டார்கெட் 94/104.

(இந்த பரிந்துரைகளை உங்களுக்கு கிடைக்கும் தகவல்களுடன் சரிபார்த்து கொள்ளவும்)

எப்பொழுதும் போல நேற்றும் அனைத்து கால்ஸ்-ம் வெற்றியடைந்தது

===========================================================================

நேற்றைய தினம் பாரட்டிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி…    உங்களுடைய வெற்றி எனது வெற்றி.. இந்த பெருமை அனைத்தும் இறைவனையே சாரும்.  எனது பரிந்துரைகளை பயன் படுத்தி கடந்த ஒரு வாரமாக வெற்றியடைந்தவர்கள், எச்சரிக்கையாக இருக்கவும்.  தொடர் வெற்றி சில நேரத்தில் நமது கவனத்தை திசை திருப்பும், அதீத எதிர்பார்ப்பும் ஆபத்தானது.   தொடர் பாரட்டு மழையில் நனையும் நானே தவறுகள் செய்ய நேரிடலாம். இங்கு நம்மை விட சந்தை தான் Supreme Commendor அவர் என்ன முடிவு எடுப்பார் என்று யாருக்கும் தெரியாது,  ஆனால் நிப்டியார் நமக்கு உறவு முறை (அண்ணன்) என்பதால் நம்மை கை விடமாட்டர்.  இங்கு ஒவ்வொரு நாளும் புதிய போரட்டம் தான். நேற்றைய வெற்றி இன்றைய வெற்றிக்கு உத்திரவாதத்தை தராது. அன்றைய நிகழ்வுகளை அன்றைய தினமே மறந்துவிட்டு அடுத்த நாளை புதியதாக துவங்குவோம். 

ஆர்.கே – அந்த லிஸ்டில் நீங்க தான் முதல் இடத்தில்..  விமல் – யுவராஜின் ஆட்டத்தை ஆடட்டும் நாம சச்சின் மாதிரி நிலைத்து ஆடி சாதனைகளை நமதாக்குவோம்.

தனம் – தங்களின் உணர்ச்சி பூர்வமான பின்னூட்டம் மகிழ்ச்சியை தந்தது. அதிகம் எமோஷனல் ஆகாதிங்க Life is Risk….  so what….  Risk it.  நடந்ததும், நடப்பதும்,  நடக்கப்போவதும் நன்மைக்கே.. 

.

Advertisements

22 responses to this post.

 1. When life gives us 100 reasons to cry,show life that we have 1000 reasons to smile

 2. உள்ளேன் அய்யா..

  அட்டெண்டென்ஸ் போட்டாச்சு…

  வணக்கம் சாய் சார்…

  தங்களின் இவ்வகையான எழுத்து நடை மிகவும் அருமையாக உள்ளது.. கண்டிப்பாக சுத்தி போடவும்.. அனைத்து வகையான பங்குகளும் அடி மேல் அடி வாங்கிக்கொண்டிருக்கோம் பொழுது தங்களின் சரக்கு மற்றும் மீடியா தேர்வு மிகவும் அருமை..

  கண்டிப்பாக சன் பங்கின் ஏற்றத்தினை நான் தவற விட்டு விட்டேன்.. அதில் எனக்கு வருத்தமே..

  இன்றைய நிலைகளும் அருமை…

 3. sai sir goodmarning sir please watch day drading stock this stock daily up@ down piease see and recommand for cliends unitech,punnjlyod,everest kanto cylinder, everon,educomp,suzlon,ivrcl,pstl, sir,eduvum thavaraka sollierundal mannikkavum

 4. //Life is Risk…. so what…. Risk it. //
  உணர்வு பூர்வமான உண்மை.
  வழக்கம் போல இன்றும் பதிவு நன்றாக உள்ளது.

 5. இன்று வித்தியாசமான நாள். ஆசிய

  சந்தைகள் எல்லாம் தொடங்கு நிலையில்

  இருந்து சரிந்தவண்ணமே முடிவுற்றன

  பெரும்பாலும். சுமார் ஒரு மணி நேரம்

  போராடிவிட்டு சீறி பாய்ந்தது நிப்ட்டி

  ராக்கெட்.

  இந்தியா இந்பொலைன்-இல் கூட
  12:05:41 PM High risk traders: Buy Nifty

  2600 put at Rs106-110 with a SL at Rs93 for a

  target of Rs145,149

  01:35:20 PM High Risk Traders: Buy RIL DEC

  1050 PUT at Rs36-39 with a SL at Rs29 for a

  target of Rs53,57
  என்று பரிந்துரைத்தனர்.

  ஆனால் எல்லாம் மண்ணை கவ்வியது.
  02:49:32 PM Our SL triggerd in RIL Dec 1050

  put
  02:01:35 PM Our SL triigered in Nifty 2600

  Put.

  இது போன்ற ஒரு ஓட்டம் பார்த்து நாள்

  ஆகிவிட்டது.

  கட்டுமானம், வங்கித்துறை, கனிமம்

  கூட்டணி. so selling pressure நாளை நிச்சயம்

  உருவாகலாம்.
  http://www.bseindia.com/mktlive/mktwatch_s

  ect.asp

  இன்றைய dow jones 8400

  முடியக்கூடும்.

  நான் கற்பனையாக France INDEX @3210

  Short செய்து வைத்தேன். தோராயமாக 50

  புள்ளிகள் லாபம்.

  dow jones-லும் Short @ 8540 செய்து

  வைத்துள்ளேன். பார்போம்.

  நம்ம ஊரிலேயே

  விளையாடிகொண்டிருந்தால் நாம எப்ப FII

  ஆகிறதாம்??? 😉

 6. //அதீத எதிர்பார்ப்பும் ஆபத்தானது.//

  இந்த எச்சரிக்கை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றுதான்.

  நன்றி.

 7. அனைவருக்கும் வணக்கம் , “காலை 10.30 மணி முதல் 11.30 வரை” என்னான்னு தானே கேக்குறீங்க, நானே சொல்றேன். இன்றைய வர்த்தக நேரம் சாயின் அனைத்து பரிந்துரைகளும் தன்னுடைய எல்லை கோட்டை தொட்டுவிட்டு இளைப்பாறியது.
  இதற்கு மேல் தினவர்த்தகர்களுக்கு என்ன வேண்டும். கோடானு கோடி வணக்கங்கள் சாய் சாருக்கு, வாருங்கள் ஊர்கூடி தேர் இழுப்போம் .நன்றி (தனசேகரன்)

 8. சொந்த பந்தங்கள் எல்லாம் கெடுக்க நினைக்க, முகம் தெரியாத உங்களுக்கு(sai sir) மட்டும் எதற்காக உதவி செயும் எண்ணம். இந்த கேள்வியை எனக்குள் “ஆய்ரம்” முறை கேட்டுகொண்டேன் இன்னும் விடை தெரியவில்லை. என் வாழ்க்கைகள், நான் சந்தித்த முதல் சேவை உள்ளம் கொண்டவர் நீங்கள்தான். இப்போது உங்கள் முலமாக நிறைய நல்ல உள்ளங்கள் கிடைதுள்ளன. உங்கள் சேவை எங்கள் தேவை என்றும் நன்றி உடன் DG

 9. good afternoon சாய் சார். இரண்டு நாட்களாக blog பார்க்கமுடியவில்லை.எவ்வளவு ..
  விஷயங்கள்!!!!!!!!!.அத்தனையும் பாதுகாக்க வேண்டிய பக்கங்கள்.

  //ஒரு இல்லத்தரசி 2000/- என்ற டார்கெட்டுடன் வர்த்தகம் செய்தால்
  17 X 2000 = 34000.00 – 3X2000.00 = 28000.00 மாத இறுதியில் இந்த வருமானத்தை உறுதியாக அடைய முடியும்.
  வீட்டில் இருந்த படியே ஒருவர் அனைத்து செலவுகளும் போக 15-20 ஆயிரம் சம்பாதிக்க முடியும் என்றால், எவ்வளவு பெரிய விசயம்.//

  தினமும் 1000 ரூபாய் அளவில்தான் என்னுடைய வர்த்தகம் உள்ளது . calls அனைத்தும் achieve ஆவதால் 1000 ரூபாய் டார்கெட்டிலேயே 15-20 ஆயிரம் சம்பாதிக்க முடிகிறது என்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
  thank you sai. thank u so much.

 10. இதுவரை சாய் சார் அவர்கள் வலைத்தளத்தில் வந்த 35 பொன்மொழிகள்.

  1. பங்கு வர்த்தகம் எனது முழு நேர தொழில் அல்ல.

  2. தகவல்கள் அனைத்தும் தயார் செய்து அல்லது சிறந்த ஆலோசகர்களிடம் கிடைக்கும் தகவல்களை வைத்து முதலீடு செய்கின்றேன்.

  3. கூடுமானவரை நம்ப தகுந்த தகவல்களை சரி பார்த்த பிறகே முதலீடு செய்கின்றேன்.

  4. எனது அனுபவம் – பங்கு வர்த்தகம் ஒரு சூதாட்டம் கிடையது. இது ஒரு தொழில். அந்த அனுகுமுறை மிக அவசியம்.

  5. இதில் பணம் சம்பாதிக்க அதிகம் தேவை பணம் இல்லை… தேவை அனுபவம்.. ஆர்வம்.. நம்பிக்கை..

  6. பேராசை வேண்டாம்…

  7. லாபத்தை பற்றி கவலை பட வேண்டாம்..

  8. உங்களுடைய முதலீட்டை இழக்கமல் இருக்க வழிதேடுங்கள்…

  9. லாபமோ நஸ்டமோ ஒரு டார்கெட் இருக்க வேண்டும். அந்த டார்கெட்டை அடைந்த பிறகு வர்த்தகம் செய்ய கூடாது. மார்கெட்டை பற்றி கவலை படாமல் வேறு வேலைகளை பார்க்க வேண்டும்.

  10. அதிகாலையில் இருந்து நள்ளிரவு வரை இதே சிந்தனையாகவும், வலை பக்கங்களை மேய்வதும் தவறு.

  11. அடிக்கடி வர்த்தக அளவை மாற்ற கூடாது.

  12. உங்களது வர்த்தக முதலீட்டில் 50% மேல் பயன் படுத்த கூடாது. எதிர் பாராத தோல்விகளில் இருந்து மீண்டு வர அது உதவும்.

  13. சந்தையை வழி நடத்துவது ஒரே நேரத்தில் நாம் எடுக்கும் எதிர் எதிரான முடிவுகள் தான். நாம் இன்று இந்த இடத்தில் வாங்க முடிவு எடுக்கும் போது இன்னொருவன் விற்க முடிவு எடுக்கிறான். அனைவரும் ஒரே நேரத்தில் ஒரு இடத்தில் வாங்கவோ விற்கவோ முடிவு எடுத்தால் சந்தை செயல் படாது, ஸ்தம்பித்து போய் விடும். இதில் எனது ராசி / எனது நேரம் என்று புலம்புவதில் அர்த்தம் இல்லை.

  14. நஸ்டம் என்பது பெரிய விசயம் இல்லை…. ஆனால் அதை மீட்டெடுக்க கால தாமதம் ஆகும் அதற்கான பொறுமை வேண்டும். இருப்பதை இழப்பதில் இருக்கும் வலியை விட இழந்ததை சிறுக சிறுக மீட்டெடுப்பதில் கிடைக்கும் ஆனந்தம் மிகவும் அதிகம்.

  15. சந்தை என்றும் இருக்கும்… நாம் தான் நிரந்தரம் இல்லை….. இன்று எனது வயது 35 இன்னும் ஒரு 15 வருடமாவது இந்த சந்தையில் நிலைத்து நிற்க வேண்டும் என்பது எனது ஆசை. எனக்கு சந்தையை பற்றி கவலை இல்லை. தினசரி 100 புள்ளிகள் குறைந்தால் இன்னும் 26 நாட்களில் சந்தையை பூட்டி விடுவார்களா. பல விதமான Locks தயாரிக்கும் கோத்ரேஜ் நிறுவனத்தாலும் இதற்கு Lock தயாரிக்க முடியாது

  16. முதலில் நீங்கள் INVESTOR அல்லது DAY TRADER என்பதை முடிவு செய்யவும்

  17. நீங்கள் செய்த வர்த்தகம் உங்களுக்கு எதிராக செல்வதை உணர்ந்தால்…தயவு செய்து எப்போது வெளி வரலாம் என்று உணர்ச்சி வசப்படாமல் சிந்திக்கவும்…

  18. அதிக எண்ணிக்கையில் வர்த்தகமாகும் பங்குகளை தேர்ந்தேடுக்கவும்…..(Active & High volume stocks)

  19. தயவு செய்து குறைந்த விலையில் கிடைக்கிறது என்று வாங்காதீர்கள் (ஏனென்றால் இன்னும் விலை குறைய நிறைய வாய்ப்பு இருக்கும்…)

  20. அதிகமாக வர்த்தகம்(TRADING) செய்வதை தவிருங்கள்…

  21. நம் மக்கள் பலர் நஷ்டம் வந்தால் கை கட்டி கொண்டு பார்த்து கொண்டு இருப்பார்கள் ஆனால் அதே லாபத்தே வளர விட மாட்டார்கள் …உடனே கவர் செய்து விடுவார்கள் …..அதனால் ஒவ்வொரு வர்த்தகத்திலும் ஸ்டாப்-லாஸ் கண்டிப்பாக பின்பற்றுங்கள் ….

  22. நஷ்டத்தை குறைக்க மீண்டும் வாங்கியோ அல்லது விற்றோ ஆவ்வேரஜ் செய்யாதீர்கள்….அந்த வர்த்தகத்தை மறந்து அடுத்த வர்த்தகத்திற்கு தயாராகுங்கள்….

  23. இன்னும் சிலர் இருக்கிறார்கள், எதாவது ஒன்று அல்லது இரண்டு பங்குகளை மட்டுமே பார்த்து கொண்டு இருப்பார்கள்….சில சமயம் நாம் எதிர் பார்த்த நகர்வுகளை அந்த பங்கு தராமல் பல் இளித்து விடும்…அதனால் ஊரோடு ஒத்து வாழ் என்பதற்கிணங்க தினசரி கூட வெவ்வேறு பங்குகளில் வர்த்தகம் செய்யலாம்… (வர்த்தகம் தொடங்குவதற்கு முன் அதன் நகர்வுகளை மனதில் நிலை நிறுத்திக் கொள்ளவும் )

  24. தினமும் நீங்கள் செய்த வர்த்தகத்தின் வெற்றி தோல்விகளை குறிப்பெடுத்து கொள்ளுங்கள்…தோல்விகளை எல்லாம் வெற்றி ஆக்கும் வழிகளை கண்டறியுங்கள்…. வெற்றி தோல்விகளை பக்குவமாக எடுத்து கொள்ள மனத்தை தயார் படுத்துங்கள்….

  25. ஒரு நாளைக்கு சுமார் 50000 TO 70000 கோடிகள் வர்த்தகம் ஆகின்றன இதில் என்னால் நான் விருப்பப்பட்ட நேரத்தில் எனக்கு தேவையான பணத்தை எடுத்து கொள்ள முடியும் என்ற எண்ணத்திற்கு வாருங்கள் … என் வீட்டு பீரோவிலிருந்து பைசா எடுக்க எனக்கென்ன பயம் என்ற நிலை வர வேண்டும். எப்போ வேணும்னாலும் நாம கோடிகள் சம்பாதிக்கலாம் ….. (WAIT FOR THE RIGHT TIME)

  26. எதைச் செய்தாலும் மிகவும் சிறப்பாகவே செய்வேன்’ என்று கூறி செயல்படுங்கள்! மட்டகரமான, நடுத்தரமான செயல்களோடு சமரசம் செய்து கொள்ளாதீர்கள்….. சிறந்ததையே நாடி, சிறந்ததையே செய்யும் போது, வாழ்வில் உங்களுக்கு கிடைப்பதும் – அமைவதும் சிறந்ததாகவே இருக்கும்

  27. நம்முடைய நேற்றுதான் இன்றைய நாள். இன்றைய உழைப்பு தான் நாளைய நாள்.” எதிர்காலம் என்பது தானாக வருவதில்லை! நாம் எடுக்கும் முடிவுகளால் உருவாக்கப்படுவது

  28. மனைவின் மரணத்தில் அழிகின்ற உடலைப் பார்த்தான் சாதாரண மனிதன்! அவள் மரணத்தில் அழிகின்ற காதலை பார்த்தான் ஷாஜஹான். முதல் பார்வை சோகத்தில் முடிந்தது! இரண்டாம் பார்வை தாஜ்மஹால் என்ற சாதனையில் முடிந்தது.

  29. சிக்கல்களைத் தீர்ப்பதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் நம்முடைய சிக்கலே, எது சிக்கல், ஏன் சிக்கல், என்ன விதமான சிக்கல் என்று புரிந்து கொள்ள முடியாதது தான்!

  30. இறைவா என்னால் தீர்க்க முடிந்த சிக்கல்களைத் தீர்க்கும் வழியினையும், ஆற்றலையும் எனக்குக் கொடு! தீர்க்க முடியாத சிக்கல்களை ஏற்றுக்கொண்டு வாழும் மனப்பக்குவத்தைக் கொடு!இந்த இரண்டிற்குமிடையே உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ளும் அறிவைக் கொடு

  31. எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் – இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்…… கவியரசு

  32. கல்வியின் நோக்கம், காலியான மூளையை எதையோ சொல்லி நிரப்புவதல்ல. அறிவாலோ, உண்ர்வாலோ அடைபட்டுப் போயிருக்கின்ற மூளையை ஒரு திறந்த மனமாக மாற்றுவதுதான், திறந்திருக்கிற மனமே, சிக்கல்களுக்குச் சிறந்த தீர்வுகளைத் தரும்…….. படித்தது

  33. இன்றைய பொருளாதாரத்தில் “இருப்பவன் – இல்லாதவன்” என்ற நிலை மாறி “தெரிந்தவன்- தெரியாதவன்” என்ற வேறு பாடே முன் நிற்கிறது ஆம், முடிவெடுக்கத் தெரிந்தவர்கள் – தெரியாதவர்கள் என்ற நிலைதான் இன்றைய உலகை, நமது வாழ்க்கையைத் தீர்மானிக்கப் போகிறது! – அன்மையில் படித்தது

  34. வானத்தில் வல்லூறுகளுடன் வட்டமிட்டுப்பறக்க ஆசைபட்டால், வான்கோழிகளோடு ஓடி கொண்டிருக்காதிர்கள்! – எங்கோ படித்து

  35. இருட்டாக இருக்கிறதே! என்று புலம்பிக்கொண்டு இருட்டைப்பற்றிப் பட்டிமன்றம் நடத்துவதை விட்டு, விட்டு என்னால் முடிந்தது சிறு விளக்கையாவது ஏற்றுவேன் என்று முயலுவதே உயர்ந்தது! ” … — தாகூர்.

 11. இன்றைய எனது பின்னூட்டம் #5 நடுநிசி 00.05-00.20 மணி அளவில் பதிவு செய்ய முயற்சித்தேன். என்ன போராடியும் ப்ரோவ்செர் கோளாறு மற்றும் சில மென்பொருள் சிக்கலால் பதிவேரவில்லை. நேரத்தோடு பதிவு செய்திருந்தால் “மதிப்பான” ஒன்றாக இருந்திருக்கும்.

 12. சாய் சார் இது வரை சொன்ன தேர்ந்தெடுத்த கருத்துக்களை மிக அழகாக பொன்மொழிகளாக தொகுத்து கொடுத்ததற்கு மிக்க நன்றி FAIZAL SIR.

 13. //சாய் சார் இது வரை சொன்ன தேர்ந்தெடுத்த கருத்துக்களை மிக அழகாக பொன்மொழிகளாக தொகுத்து கொடுத்ததற்கு மிக்க நன்றி FAIZAL SIR.//

  அசத்தீட்டிங்க… 🙂

 14. valthukkal faizal (Dhanasekaran)

 15. faizal,
  you have done a great job!! it simply shows your involvement with mr.sai and this is the best way to express your respect on his talent!! congrats!!

 16. என் வாழ்க்கைகள், நான் சந்தித்த முதல் சேவை உள்ளம் கொண்டவர் நீங்கள்தான்.

 17. இவ்வகையான எழுத்து நடை மிகவும் அருமையாக உள்ளது.. சந்தை என்றும் இருக்கும்… நாம் தான் நிரந்தரம் இல்லை….. இன்று எனது வயது 35 இன்னும் ஒரு 15 வருடமாவது இந்த சந்தையில் நிலைத்து நிற்க வேண்டும் என்பது எனது ஆசை. எனக்கு சந்தையை பற்றி கவலை இல்லை. தினசரி 100 புள்ளிகள் குறைந்தால் இன்னும் 26 நாட்களில் சந்தையை பூட்டி விடுவார்களா. பல விதமான Locks தயாரிக்கும் கோத்ரேஜ் நிறுவனத்தாலும் இதற்கு Lock தயாரிக்க முடியாது

 18. Posted by raaju.p.d.coimbatore on திசெம்பர் 6, 2008 at 5:43 பிப

  hello sir i am ur new claint on 4 days ur calls very simple but veryyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy power full thanks a lod Thank you sir

 19. dear mr sai,
  iam very satisfied to spoke just now.
  your articals are very nice.pls continue this service to all the share people like me.

  regds
  natarajan.

 20. faizel sir

  Ur service is very … best

  regds
  rajendran

 21. Posted by raaju.p.d coimbatore on திசெம்பர் 7, 2008 at 2:25 பிப

  வணக்கம் சாய்கணேஷ் சார் & நண்பர்கள் எனது சிந்தனைக்கு வந்த சிலவற்றை பதித்திருக்கிறேன் உங்கள் வாழ்க்கையை சுயநலம் பார்க்காத வாழ்வாக அமைத்துக் கேஅல்லுங்கள்.
  > உங்களுக்காக மட்டும் வாழாமல் பிறருக்காகவும் வாழப்பழகிக் கொள்ளுங்கள். உங்களது
  > செயல் அனைவருக்கும் நன்மை தரும்படியாகவே இருக்கட்டும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: