இன்றைய சந்தையின் போக்கு 04.12.2008


நேற்றைய தினம் மிக பெரிய போரட்டமே நடந்தது…. காளைக்கும் (2720) கரடிக்கும் (2580) இடையில்.  இதைத்தான் ஒரு வரியில் சொல்லி இருந்தேன்.   2600 மிக அருகில் இருந்தும் கரடி அதனை வெல்ல இயலவில்லை.  அதிக பட்சம் 2610 ஐ கடந்து செல்ல விடாமல் காளை தடுப்பாட்டம் ஆடியது.  இன்று அதிரடியாக ஆடலாம், அப்படி ஆடி 2735 கடந்தால் அண்ணன் அடுத்து வரும் நாடகளில் 2900 மற்றும் 3000 நிலைகளுக்கு எளிதாக செல்வார்.

டெக்னிகல் பார்வையில் சந்தை மிகவும் சுவரஸ்யமாக இருந்தது…  இந்த போராட்டம் இன்றும் தொடரும்.   நான் காளையின் பக்கம்.    அதற்கு பங்காளியின் நேற்றைய உயர்வு (172 புள்ளிகள்)  ஓரளவு உதவியாக இருக்கும்.  நீங்க யாரு பக்கம்?. 

ஒரு வேளை 2600 உடைபட்டாலும் 2510/2490 மிகவும் வலுவான தடுப்பு நிலைகள் அவற்றை உடைக்கும் அளவுக்கு மிக பாதகமான சூழ்நிலை இல்லை.  ஆனால் கவனிக்க வேண்டிய அரசியல் நிகழ்வுகள்… 

1.  வடமாநில தேர்தல் முடிவுகள்..

2.  20 பேரை ஒப்படைக்க கோரும் இந்தியா,  அவர்கள் யார் என்று தெரியாது சொல்லும் பாகிஸ்தானின் சவடால்.. அதை கண்டிக்கும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்.  இந்த நாடுகளின் ஆதரவுடன் இந்தியா பாகிஸ்தானால் ஆக்கிரமிக்க பட்டுள்ள காஷ்மீர் பகுதியில் உள்ள சில தீவிரவாதிகளின் பயிற்சி முகாம்கள் மீது விமான தாக்குதல் நடத்தலாம் என்று வரு செய்திகள்.

சன் டிவி  அபாரம். 

கடந்த வாரம் எனது விருப்ப பட்டியலில் முக்கிய இடம்பிடிக்கும் சன் டிவி பங்கினை 135 விலையில் வாங்கலாம் என்று சொல்லி இருந்தேன்…  கடந்த 2 நாட்களாக ரெக்கை கட்டி பறக்குது. தற்போதை விலை 175  – 31 %  உயர்ந்துள்ளது.   235, 265, 310 வரை செல்லலாம் என்று எதிர் பார்க்கிறேன்.

இதை தேர்ந்தெடுக்க என்ன காரணம்….  தொடர் சரிவுக்கு பிறகு 135 நிலைகளில் டபுள் பாட்டம் நிலையில் சென்ற வாரம் இருந்தது.  அதே நேரத்தில் வரலாற்று சிறப்பு 🙂 மிக்க குடும்ப இணைப்பு நிகழ போவதாக தகவல் கிடைத்தது.  (நன்றி  ஜூ வி கழுகார்). டெக்னிகல் + செய்தி இரண்டு காரணங்களையும் இணைத்து பார்த்தேன்.

இன்றை பரிந்துரை

United Spirits  – சாராய சாம்ராஜ் (MCDOWELL) விஜய் மல்லையாவின் இந்நிறுவன பங்குகளை 810-850 விலையில் வாங்கலாம்,  டார்கெட் -990,1230 மற்றும் 1450 வரை.

லாபம் அடந்தாலும் நஸ்டம் அடைந்தாலும்,  சந்தோஷம் மற்றும் துக்கம் என்று அதிகமானவர்கள் எப்பவும் தேடி போகும் நிறுவனம் இது.  இந்தியாவில் விற்பனை யாகும் அதிகமான் மது பான பிராண்ட்கள், இவர்களின் தயாரிப்பு தான்.

HDFC நிறுவன மீயுச்சுவல் பண்ட் கள் – 12 லட்சம் பங்குகளில் முதலீடு செய்துள்ளன.

(இந்த பரிந்துரையை உங்களுக்கு கிடைக்கும் தகவல்களுடன் சரிபார்த்து கொள்ளவும்)

நேற்றைய பதிவினை பாராட்டி பின்னூட்டம் எழுதிய அனைவருக்கும் மிக்க நன்றி..  இது அனைவரும் பொதுவாக செய்யும் தவறுகள் தான்.  சில நண்பர்கள் என்னை தனே இப்படி பதிவில் குறிப்பிட்டு காலை வாரி உள்ளீர்கள் என்று வருத்த பட்டார்கள்.  உண்மையில் யாரையும் குறிப்பிட்டு எழுத வில்லை. செவ்வாய் இரவு ஒரு நண்பர் உடன் பேசினேன். அவருடைய தவறுகளை சுட்டி காட்டி அவரிடம் பேசி கொண்டிருந்த போது அவர் தான் இதே தவறுகள் அனைவரும் செய்றாங்க எழுதுங்க சாய் என்றார்.  

செவ்வாய் பதிவில் குறிப்பிட்டிருந்த அந்த முன்னனி வெற்றியாளர்..  பாஸ் ஏன் பெயரை குறிப்பிடவில்லை நீங்களே எழுதுங்கள் என்றார்.   எனது அருமை நண்பர் ஆர் கே வால் அறிமுகம் செய்யப்பட்ட நண்பர் S.K.VIMAL /கரூர்.  அவரின் வெற்றி எனக்கும் இந்த வலைப்பதிவுக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி.  இந்த வலைப்பதிவு மூலம் அறிமுகம் ஆனவர்களில், பங்கு சந்தையில் இழந்ததை முழுமையாக மீட்டெடுத்து விட்ட முதல் நபர்,  எனது லட்சியம் குறைந்தது ஒரு 10 கோடிஸ்வரர்களை உருவாக்குவது,  இதுவரை 5 நபர்களை அடையாளம் கண்டுள்ளேன், அந்த லட்சியத்தில் திரு விமல் இடம் பிடிப்பார் என்று நம்புகிறேன். அதற்கு எனது இஷ்டதெய்வங்களான சாய்+கணேஷ் இருவரும் அருள் புரிய வேண்டும் எனக்கு துனை நிற்க வேண்டும் என்று பிராத்திக்கிறேன்.  நண்பர் விமல் அம்மாவிடம் சொல்லி கண் திருஸ்டி கழிக்க சொல்லுங்கள். ஒரு வாரம் இடைவெளி விட்டு  உங்கள் வெற்றி  பயணத்தை தொடருங்கள் . வணிகத்தின் அளவை பாதியாக குறைத்து கொள்ளுங்கள்.  

 

 

Wednesday, December 03, 2008
Cash and Future -Day Trading
Calls  Target Result
Buy ONGC 648 655/662 1st Target Achieved 
Buy ICICI 325 332/36/38 All Targets Achived
Buy Tata Power 642 646/48/53 Target Achieved.
Future 
Calls  Target Result
Buy Nifty 2634 2655/78/702 Two targtes Achieved – high 2672
Option 
Calls  Target Result
Buy 2800 call at 81 94/98 day traders booked at 100

 

 

Advertisements

15 responses to this post.

 1. நேற்றைய மற்றும் இன்றைய பதிவுகள் இரண்டும் ஒரு சுவராஸ்யமான சிறுகதையை போல் உள்ளது..

  சன் டிவி பரிந்துரை எப்போதும் போல் ஸ்டார் பெர்ஃபார்மன்ஸ்.என்ன பிரச்னையென்றால், இது போன்ற பெர்ஃபான்ஸ்களை பார்த்து பார்த்து, நமது நண்பர்கள் இதே போன்று மிக அதிவேகமான வெற்றிகளை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்.உங்களுக்கு இனி அன்பு தொல்லைதான் 🙂

  கண்டிப்பாக விஜய் மல்லையாவும் நம்மை சந்தோஷத்தில் தள்ளாட வைப்பார்! பரிந்துரைக்கு நன்றி!!

  நேற்றையை பதிவு அனைவருக்குமே தேவையான ஒன்று. நாம் அனைவருமே அவ்வப்பொழுது செய்யும் தவறுகள்தான்.இந்த மாதிரி அடிக்கடி குட்டு பட்டால்தான் 🙂 நாம் அதை உண்ர்கிறோம்.

  கோடீஸ்வரர்களை உருவாக்கும் தங்களது கனவு திட்டத்துக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!!

 2. நமது வெற்றிக்கு முன் காளையும் கரடியும் தவித்து நிற்கும் header அருமை!!

 3. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். காளைக்கும் கரடிக்குமான போராட்டம் நிறைவடைய பிரார்த்திப்போம் .நன்றிகள் பல

 4. CONGRATS VIMAL!!!!!!!!!!!!!!!

 5. திரு. 🙂 S.K.VIMAL /கரூர், வாழ்த்துக்கள்.

  நேற்றைய பதிவு ஒரு கண்ணாடி. எனவே அதில் நம் எல்லோர் முகமும் தெரியும். 😦

 6. நீங்கள் அனுப்பும் கால்கள் அனைத்தும் உங்கள் எண்ணம் போலவே இலக்கை அடைந்து,அதற்கு மேலும் செல்கிறது.உங்கள் கால்கள் அனைத்திலும் பரம திருப்தி அண்ணா..திரு.ஆர்.கே சார்,விஜய் மல்லையா நிறுவனத்தின் பங்கு உள்ளே சென்று தள்ளாட வைக்காமல், வெளியில் இருந்து தள்ளாட வைத்தால் நல்லது 😉

 7. சாய் சார் அவர்களுக்கு நன்றிகள் கோடி. சார் நீங்கள் சில கோடிஸ்வரர்களை உருவாக்குவதாக சொன்னிர்கள் .ஆனால் எங்கள் நம்பிக்கை நீங்கள் சில நூறு கோடிஸ்வரர்களை உருவாக்குவிர்கள்.இன்றைய கால்ஸ் அனைதும் மிகவும் அருமை

 8. சார்(ய்),

  உங்களை எப்படிக் கூப்பிட்டாலும் தகும்…சாய்(ர்).
  உங்கள் ஆலோசனைகள் அனைத்தும் அருமை….!! எல்லாம் தங்கள் எண்ணம் போலவே…!!!
  நிஃப்டியார் 2735 கடந்து விட்டார்…!!
  எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திபோம் தங்கள் நீள் ஆயுளுக்கு.

  வணக்கங்களுடன்,
  வரன்….!!

 9. டியர் சாய் சார்
  கடந்த ஒரு மாத காலமாய் தங்களின் கால்களை ப்ரைஸ் மூலம் பெற்றுகொண்டிருகிறேன் நான் ஆபீஸில் சற்று பிசியாக உள்ளதால் என்னால் சரியாக பின்னூட்டும் எழுத முடியவில்லை உண்மையில் உங்களை போல் ஒருவர் கிடைத்ததில் எனக்கு பெரும் மகிழ்ச்சி & நம்பிக்கை .உங்கள் கால் அனைத்தும் வெற்றி ,பெரிய வெற்றி ,மிகப்பெரிய வெற்றிஐ தந்துள்ளது. உங்கள் வெற்றி தொடர சாய் & கணேஷ் அருள் புரியட்டும் என்றென்றும் .வாழ்த்துக்கள் .
  அன்புடன் ராஜ்குமார்

 10. your calls are (not only today)suuuuuuuuperb.i have no words to say.today is a great day.thank u sir.

 11. திரு. S.K.VIMAL /கரூர். அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  சாய் சார், இன்றைக்கு உங்கள் calls அனைத்தும் மிக அருமையாக இருந்தது.

  நீங்கள் சொல்லும் சில விஷயங்களை கண்டுக்கொள்வதில்லை.அதை குறிப்பிடும் பொழுதுதான் தவற விட்டுவிட்டோமே என்று தோன்றுகிறது.(example:sun tv)

  THANK YOU SIR.

  KEEP IT UP.

 12. தங்களிடம் வந்ததற்கு பிறகு நம் நண்பர்களுக்கு,

  இந்த நாள் மட்டும் அல்ல! எல்லா நாளும் இனிய நாளே!!!

 13. திரு சாய் அவர்களுக்கு வணக்கம், தங்களின் துணையுடன் வர்த்தகம் செய்ய துவங்கியதில் இருந்து நாங்கள் எல்லாருமே ஒரு புதுபொலிவுடன்,எந்தவித டென்சனும் இல்லாமல் இருக்கிறோம் என்றால் அதற்கு பின்னால் இருப்பது தங்களுடைய கடும் உழைப்பு.நாங்கள் பணம் மட்டும் ஈட்டவில்லை நல்ல பல நண்பர்கள், தோழிகள்,சகோதரிகள்,இதற்கெல்லாம் மேலாக ஒவ்வொரு நாளும் புதுபுது அனுபவங்கள்.இப்போது தான் நான் திரும்பிபார்கிறேன்.இவளவு நாளில் (சுமார் 9 வருடங்களில்) என்ன தவறுகள் எல்லாம் செய்துள்ளோம் என்று.இதை விட கொடுமை இதுநாள் வரை அவைஎல்லாம் நமக்கு தவறாகவே தெரியவில்லை என்பதுதான்.இன்று நிறைய பேர் சாய் அவர்களின் பரிந்துரைகளை பாராட்டி பதிவு எழுதிஉள்ளீர்கள் அனைவருக்கும் என் சார்பாகவும் திரு சாய் அவர்களின் சார்பாகவும் நன்றிகள் பல.ஆனால் இன்று மட்டும் அவர் பாரட்டபடவேண்டியவர் அல்ல,என்றுமே பாராட்டுக்குரியவர் அவர்.ஆனாலும் அவர் நம்மிடம் எதிபாற்பதேல்லாம் அவர் நமக்களிக்கும் பரிந்துரைகளால் நமக்கு ஏற்படும் அனுபவத்தைதான் அதை தொடர்ந்து செய்வோமாக.

  நண்பர்கள் சிலர் உனக்கென்ன, நீ தினமும் பின்னூட்டம் எழுதவில்லையே என்று கேட்கலாம்.நான் ஒரு உண்மையை உங்களிடம் சொல்லி ஆக வேண்டும்.நான் கல்வி அறிவிலும் கணினி அறிவிலும் மிகவும் பின்தங்கியவன் இந்த பதிவை எழுத சுமார் ஒரு மணி நேரம் எடுத்துகொண்டேன் என்றால் பாருங்களேன்.அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள் மீண்டும் ஒருமுறை.நன்றி

 14. திரு சாய் சார்
  எல்லோராலும் எல்லா நாளும் வெற்றி பெற இயலாது. ஆனால் உங்கள் வழி காட்டுதல் இருந்தால் எல்லோரும் வெற்றி பெற முடியும். தொடரட்டும் உங்கள் பணி, வாழ்க வளமுடன்

 15. என்ன ஒரே பாராட்டு மலையா இருக்கு…

  இப்போ அவர் குடுக்கிறது பத்தாது… இன்னும் நெறியா வேணும்னு சொல்ல வந்தேன்.. 😉

  ஆனாலும் ஒரு அளவா கணிக்கணும்.. இப்படி இந்தவாரதுல 2900 வரும்ன்னு சொல்லிடீங்க..

  அதுக்காக நிப்டி இவளோ அவசரமா மேல வருதே…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: