இன்றைய சந்தையின் போக்கு. 03.12.2008


அனைவருக்கும் என் இனிய காலை வணக்கங்கள்.

நேற்றைய சந்தையை பற்றி பார்ப்போம். நாம் சொன்னது போலவே ஒரு Fake Bearish சிக்னல் சந்தையில் உருவாக்க பட்டது.  நேற்றைய பதிவில் பார்த்தால் தெரியும், நிப்டி நிலைகளில் 2540 வரை பச்சை வண்ணத்தில் தான் கொடுத்திருந்தேன். இருந்தும் சில நண்பர்கள் நாளின் கீழ் நிலைகளில் சார்ட் நிலை எடுத்து விட்டு வருத்தப் படுகிறார்கள்.

இந்த இடத்தில் ஒரு விசயத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.. சில நேரத்தில் தேவைக்கு அதிகமாக தகவல்களை படிப்பதும், பார்ப்பதும் கூட குழப்பங்களை உண்டாக்கும். என்னை பொறுத்த வரை அனுபவம் உள்ள அனைத்து அனலிஸ்ட்களுமே திறமையானவர்களே, இவன் பெரியவன், இவன் சரியில்லை என்ற பேச்சில் அர்த்தம் இல்லை.  தவறுகள் நம் மீது தான்.  யாரும் ஒருவரை முழுமையாக பின்பற்றுவதில்லை.   ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றை Follow செய்வதன் விளைவு தான் தோல்விக்கு காரணம்.

சில நண்பர்கள் தினசரி 10-15 வலைத்தளங்களையும்/பதிவுகளையும் படிக்கிறார்கள். அவர்களுக்கும் சில தொழில் நுட்ப காரணிகள் தெரியும்,  இதை அனைத்தையும் படித்து விட்டு, அவர்களுக்கு பிடித்த ஒருவரின் நிலையினை எடுப்பார்கள். அதில் நிலை இல்லாமல் மற்றவற்றுடன் சந்தையின் வேலை நேரத்தில் ஒப்பிட்டு பார்ப்பது.   அதனால் குழப்பம் உடனே நிலைகளை மாற்றுவது என்று சந்தையுடன் ஒரு போராட்டமே நடத்துவார்கள்.  

சந்தையில் நீங்கள் இரண்டு (வாங்கவோ / விற்கவோ) முடிவுகள் தான் எடுக்க முடியும்,  மிக எளிமையாக வைத்து கொள்ளுங்கள் உங்களது அணுகு முறையை.  கூடுமான வரை ஒரு தெளிவான முடிவு எடுங்கள்,  அதில் வெற்றியோ தோல்வியோ உறுதியாக இருங்கள். எந்த ஒரு தொழில் நுட்ப காரணிகளையும் அல்லது ஒரு நபரையும் பின் பற்றும் முன்பாக காகித வர்த்தகம் செய்து பாருங்கள். எல்லா நாளும் எல்லோராலும் வெற்றி பெற இயலாது.   ஆனால் ஒரு வழியை பின்பற்றும் போது நமது வெற்றியின் அளவு கீழ் கண்டவாறு அமைந்தாலே நாம் Winning Candidate தான்.

20 நாள் வர்த்தகம்  =    15-17 நாள் வெற்றி.   – 3-5 நாள் தோல்வி =  10-14 நாட்கள் உறுதியான வெற்றி.

இதில் சில சுய ஒழுக்கம் / கட்டுப்பாடு அவசியம்….

1. லாபமோ நஸ்டமோ ஒரு டார்கெட் இருக்க வேண்டும்.  அந்த டார்கெட்டை அடைந்த பிறகு வர்த்தகம் செய்ய கூடாது.  மார்கெட்டை பற்றி கவலை படாமல் வேறு வேலைகளை பார்க்க வேண்டும்.  அதிகாலையில் இருந்து நள்ளிரவு வரை இதே சிந்தனையாகவும்,  வலை பக்கங்களை மேய்வதும் தவறு. (நீயும் இதை தானடா செய்கிறாய் என்று கேட்கலாம். இது தான் எனது முழு நேரத்தொழில்.   எனது நண்பர்கள் எப்பொழுதும் Winning Candidate’ஸ் ஆக இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம். ) 

2. அடிக்கடி வர்த்தக அளவை மாற்ற கூடாது.

3. உங்களது வர்த்தக முதலீட்டில் 50% மேல் பயன் படுத்த கூடாது.  எதிர் பாராத தோல்விகளில் இருந்து மீண்டு வர அது உதவும்.

இந்த மூன்றையும் பின்பற்றி ஒரு இல்லத்தரசி  2000/-  என்ற டார்கெட்டுடன் வர்த்தகம் செய்தால்.. 

17  X 2000 = 34000.00 – 3X2000.00  =  28000.00  மாத இறுதியில் இந்த வருமானத்தை உறுதியாக அடைய முடியும்.

வீட்டில் இருந்த படியே ஒருவர் அனைத்து செலவுகளும் போக 15-20 ஆயிரம் சம்பாதிக்க முடியும் என்றால், எவ்வளவு பெரிய விசயம்.

நான் இங்கு எது எல்லாம் தவறு என்று சொல்கிறேனோ அதை அனைத்தையும் நான் செய்துள்ளேன்.

சந்தையை வழி நடத்துவது ஒரே நேரத்தில் நாம் எடுக்கும் எதிர் எதிரான முடிவுகள் தான். நாம் இன்று இந்த இடத்தில் வாங்க முடிவு எடுக்கும் போது இன்னொருவன் விற்க முடிவு எடுக்கிறான்.  அனைவரும் ஒரே நேரத்தில் ஒரு இடத்தில் வாங்கவோ விற்கவோ முடிவு எடுத்தால் சந்தை செயல் படாது, ஸ்தம்பித்து போய் விடும்.   இதில் எனது ராசி / எனது நேரம் என்று புலம்புவதில் அர்த்தம் இல்லை.  எப்பொழுதும் நான் சொல்வதையே சொல்லி விட்டு முடிக்கிறேன் இந்த அறுவையை…  

நஸ்டம் என்பது பெரிய விசயம் இல்லை…. ஆனால் அதை மீட்டெடுக்க கால தாமதம் ஆகும் அதற்கான பொறுமை வேண்டும்.   இருப்பதை இழப்பதில் இருக்கும் வலியை விட இழந்ததை சிறுக சிறுக மீட்டெடுப்பதில் கிடைக்கும் ஆனந்தம் மிகவும் அதிகம். என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்தவன்.

சந்தை என்றும் இருக்கும்…  நாம் தான் நிரந்தரம் இல்லை….. இன்று எனது வயது 35 இன்னும் ஒரு 15 வருடமாவது இந்த சந்தையில் நிலைத்து நிற்க வேண்டும் என்பது எனது ஆசை.  எனக்கு சந்தையை பற்றி கவலை இல்லை.    தினசரி 100 புள்ளிகள் குறைந்தால் இன்னும் 26 நாட்களில் சந்தையை பூட்டி விடுவார்களா. பல விதமான Locks தயாரிக்கும் கோத்ரேஜ் நிறுவனத்தாலும் இதற்கு Lock தயாரிக்க முடியாது 🙂

அனைவரும் வெற்றி பெற வாழ்த்துகள்…

சரி எங்கடா இன்றைய சந்தையின் போக்கு கட்டுரை…..

இங்க தான் இருந்துச்சு…  காணோம்….

2580 முக்கிய கீழ் நிலையாகவும்,    2720  மேல் நிலையாகவும் இருக்கும்.

போதும் ஒரு வரி செய்தி.

Tuesday, December 02, 2008
Cash and Future -Day Trading
Calls  Target Result
Buy ONGC 655 660/65/’74 Targets Achieved 667 high
Buy ICICI 314 320/23/37 All Targets Achived
Buy Rel Cap 417 424/28 1st Target Achieved 
Buy Tata Power 635 640/50/53 Target Achieved.
Future 
Calls  Target Result
Buy Nifty 2590 2635 / 2658 /96 Two targtes Achieved – high 2664
Buy Bank Nifty 3970 4030/70/4150 Tgts achieved – high 4114
Option 
Calls  Target Result
Buy 2700 call at 104-110 145/65 day traders booked at 136/40
Buy 2800 call at 80 105/120 day traders booked at 94-96
Advertisements

17 responses to this post.

 1. இனிய காலை வணக்கம், நல்ல அறிவுரை அனைவரும் பின்பற்றலாம்
  இதில் யாருக்கும் மாறுபட்ட கருத்தே இருக்காது நன்றி.

 2. இருப்பதை இழப்பதில் இருக்கும் வலியை விட இழந்ததை சிறுக சிறுக மீட்டெடுப்பதில் கிடைக்கும் ஆனந்தம் மிகவும் அதிகம். evalavu aalamaana sinthanai.

 3. உயர்திரு சாய் அவர்களுக்கு,

  தங்களுடைய இன்றைய கட்டுரையை படித்ததும் ஒரு அருமையான சொற்பொழிவை கேட்டது போன்ற ஒரு ஆனந்தமான உணர்வு. தாங்களோ அதனை அறுவை என்கிறீர்கள்.

  நிறைய தகவல்கள் தின வணிகத்தைப் பற்றி, தாங்களின் அனுபவத்தில் இருந்து கூறியுள்ளது மிகவும் அருமை. அனைவரும் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டியுள்ளது, அதை திருத்திக் கொள்வதற்கு உதவியாய் இருக்கும்.

  எனினும் சந்தை என்பது என்னைப் பொருத்த வரையில் நமது அன்றைய வர்த்தக திட்டத்தை ஒரு நொடியில் உடைத்துப் போட்டுவிடும் வல்லமை படைத்தது என்றே நினைக்கிறேன்.

  நிறைய பேர் தெளிவான முடிவுடன் வந்து பின்னர் சந்தையைப் பார்த்து குழம்பி பின்னர் சொதப்பி விடுகின்றனர். இது தினமும் நடக்கும் வாடிக்கை. இதை தங்களுடைய கட்டுரையை படித்த பின்னராவது மாற்றிக் கொள்ள வேண்டுமென்பதே நமது விருப்பம்.

  மற்றபடி கட்டுரையை மிகவும் அருமையாக கொடுத்து விட்டு சந்தையைப் பற்றி ஒரே வரியில் முடித்து விட்டீரே!!!!!!!!!!!!

  அனால் அந்த வரிகள் திருக்குறள் போல அவ்வளவு விசயத்தையும் இரண்டு நிப்டி நிலைகளுக்குள் கொண்டு வந்தது மிகவும் அற்புதம் சாய்.

  வாழ்த்துக்கள்.

  இனிய காலை வணக்கம்.

 4. ALL YOUR WORDS ARE TRUE…TRUE…TRUE ONLY.LIFE IS WONDERFUL IF WE KNOW HOW TO LIVE.

 5. அனைவருக்கும் காலை வணக்கம்.இங்கு வழங்கப்பட்டிருக்கும் அறிவுரைகள் அனைத்தும் பண்பட்ட,பயனுள்ள சொற்கள்.நமது நண்பர்கள் வட்டத்தில் குறைவான சந்தை அனுபவம் உள்ள என்னை போன்றார்க்கு உங்கள் சொற்கள் வேதவாக்கு.சந்தைக்குள் நுழைந்த போதே உங்களின் வார்த்தைகள் எனக்கு கிடைத்திருந்தால் முதலீட்டை இழந்திருக்க மாட்டேன்.அப்பொழுது கிடைக்காதது துரதிஷ்டமாக இருந்தாலும் இப்பொழுது கிடைத்திருப்பது அதிர்ஷ்ட்டம்….நன்றிகளுடன் தங்கை ப்ரியா

 6. இனிய காலை வணக்கம்

 7. Very Nice article sai sir. All statements are absolutely true.

 8. அன்புள்ள சாய் அவர்களுக்கு,
  வணக்கம் தங்களின் கருத்துக்கள் மிகவும் உண்மையானவை. நேர்மையான வரிகள். தின வர்த்தகர்கள் தங்களின் இந்த மேலான கருத்துக்களை மனதில் கொண்டால் நஷ்டம் வாராது என்பது நிச்சயம். ஒவ்வொரு நாளும் தங்களை போன்றவர்களின் வழிகாட்டுதல்கள் மூலம் நல்ல முறையில் வர்த்தகம் செய்ய முடிகிறது. உங்களது சேவை தொடரட்டும். பிரதிபலன் இன்றி வழிகாட்டும் தங்களை போன்றவர்களுக்கு ஆண்டவன் நீண்ட ஆயுளை தரவேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். நன்றி
  அன்புடன்
  நவீன்

 9. உண்மையான வரிகள்… சுய ஒழுக்கம் / கட்டுப்பாடு அவசியம் மேலும் காகித வர்த்தகம் செய்து பாருங்கள் என்று கூறி இருப்பது அருமையான வழிகாட்டுதல்.

  சாய்…. உங்களது சேவை தொடரட்டும் நீங்கள் என்று எங்கள் மனதில்…

 10. no body in chat room?

 11. இன்றைய பதிவை…
  “மேற்கோள்” காட்டி பாராட்டமுடியவில்லை !!
  பதிவு மொத்தமும் “அட்டகாசம்”.
  வெடிச்சிரிப்பில் தரையில் உருள வேண்டியதாகிவிட்டது.
  🙂

  yesterday 1’ve been a victim of that “false bearish” moves.
  but you gave that 2540 level in green, i forgot to note that.

  However today’s post is a part of TRADERS’ BIBLE/QURAN/GEETHAI..

  Thank u.

 12. what can we do today.

 13. Thank you sir !!!

 14. வணக்கம் சாய் சார்,

  //சந்தையில் நீங்கள் இரண்டு (வாங்கவோ / விற்கவோ) முடிவுகள் தான் எடுக்க முடியும், மிக எளிமையாக வைத்து கொள்ளுங்கள் உங்களது அணுகு முறையை. கூடுமான வரை ஒரு தெளிவான முடிவு எடுங்கள், அதில் வெற்றியோ தோல்வியோ உறுதியாக இருங்கள்.//

  சில சமயம் நீங்கள் கொடுத்த நிலைக்கு எதிர் நிலையாக சிறிது சென்றாலும் உடனடியாக சுயமாக முடிவெடுத்து (உங்கள் ஆலோசனையை கேட்காமல்,s/l ஐ மதிக்காமல் ) நிலைகளை மாற்றி தோல்வியில் நான்.டார்கெட் achieved என வெற்றியில் நீங்கள்.

  (அப்போ தோணும், “சாய் சார் சொன்னதை ஏன் மறந்தோம்? ” ன்னு.
  அதனால இப்ப அந்த வேலையையே விட்டாச்சு.
  வெற்றியோ தோல்வியோ உறுதியா இருந்துக்கறது.)

  //இருப்பதை இழப்பதில் இருக்கும் வலியை விட இழந்ததை சிறுக சிறுக மீட்டெடுப்பதில் கிடைக்கும் ஆனந்தம் மிகவும் அதிகம்.//

  இன்றைக்கு நீங்கள் எழுதிய வரிகள் அனைத்தும் நிதர்சனமான உண்மைகள்.

  ஆரம்பத்தில் பங்கு சந்தையில் இழந்து நம்பிக்கை அற்று இந்த பங்கு வர்த்தகமே வேண்டாம் என்று நான் இருந்த போது உங்களிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அன்று நீங்கள் கொடுத்த தன்னம்பிக்கையில் தான் இன்று நான் கணிசமான லாபத்துடன் தின வர்த்தகம் செய்துக்கொண்டிருக்கிறேன்.

  அதற்காக கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்.

  தொடரட்டும் உங்கள் சேவை.

  நன்றி.

 15. YOUR VIEWS ARE EXCELLENT. I DON’T FIND WORDS TO EXPRESS. I EARN SOME GOOD PROFIT DAILY BY KEEPING YOUR ADVICE ALWAYS IN MIND. THANK YOU VERY MUCH SIR.

  TRADE ACCORDING TO MARKET TREND. THIS IS THE SUCCESSFUL MANTRA FOR INTRADAY TRADERS.

 16. This is a good article Mr. Sai!

  In very simple words you explained about the basic needs of the markets. I really appreciate you for this good article. Simple, thoughtful & humorous!!

  HOPE OUR FRIEND ATTUR RAVI READ THIS ARTICLE TWICE :))

  Rgds – RK

 17. வணக்கம் சாய் சார்,

  இப்போ தான் நான் பதிவ படிச்சேன். மிக அருமையாக சொல்லியிருக்கீங்க,, இது தான் நடைமுறை என்று அருமையான விளக்கம் கொடுத்திருக்கீங்க.. ஆசை படலாம் ஆனா பேராசை பட்டா என்ன நடக்கும்னு நீங்க சொன்ன விதம் அருமை..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: