இன்றைய சந்தையின் போக்கு 01.12.2008


வாழ்க்கையில் சில நிகழ்வுகளை மறக்க முடியாது…  ஆனால் சோகங்கள் மறக்கப் பட வேண்டியது தான்.   கடந்த வார நிகழ்வுகள் நினைவில் என்றும் நிற்கும்.  அதனால் ஏற்பட்ட சோகங்களை மறக்க முயற்சிப்போம்.

சில நூறு ரூபாய்களுடன் மும்பையில் கால் பதித்த என்னை போன்ற பலரின் வாழ்க்கையை புரட்டி, புடம் போட்ட பெருமை பம்பாய் என்ற மும்பைக்கு உண்டு.  எவ்வளவு அடித்தாலும், தாங்கி எழுந்து நிற்கும் மும்பை மாநகரம்.. இன்று கொதிப்படைந்து உள்ளது.   எப்பொழுதும் போல மும்பை Sprit என்ற வார்த்தை விளையாட்டால் மக்களை ஏமாற்ற முயலுகிறார்கள்… முட்டாள்களின் கூட்டம்.   அங்கு வாழும் முக்கால் வாசி மக்கள் பசியின் வலி அறிந்தவர்கள்.. அதனால் வாழ்வின் ருசியை தேடுபவர்கள்.   அதிகமான நாட்கள் எங்களின் உணவு  சாலை யோர கடையில் ஆவி பறக்கும் “கட்டிங் சாயவும்,  வடா பாவும்”  தான்.   அப்படி பட்ட மக்கள், எந்த ஒரு துயர சம்பவத்திற்கு பிறகும் அடுத்த நாள், தான் உண்டு, தன் வேலை உண்டு என்று ஓட ஆரம்பிப்பதும்,  மின்சார ரயிலின் பரபரப்பான வாழ்க்கையில் தன்னை திணித்து கொள்வதும்,  தனது இயலாமையின் காரணமாகத்தானே ஒழிய.  மீடியாக்களும் / தலைவர்களும் சொல்லி வரும் Mumbai Sprit என்ற உணர்வு காரணம் அல்ல.   அங்கு வாழும் மக்கள் அனைவருக்கும் மரண பயம் உள்ளது. அங்கிருந்து வெளியேறலாம் என்றால் அங்கு கொட்டி கிடக்கும் வாய்ப்புகள் வெறெங்கும் இல்லை என்ற நிர்பந்தம்.  

மன்னிக்கவும் அங்கு நடந்த சம்பவங்கள் அதிக அளவு பாதித்ததால் ஒரு வரியில் சொல்ல வந்த செய்தி சில வரிகளுக்கு நீண்டு விட்டது.  இன்னும் விரிவாக ஒரு பதிவு எழுதுகிறேன்.

இந்த சம்பவத்தில் உயிர் நீத்த பாதுகாப்பு படை / காவல் துறை வீரர்களுக்கும், அப்பாவி மக்களுக்கும் நாம் கண்ணீர் அஞ்சலி செலுத்துவோம்.  

================================================================

சரி நாமும் நமது உணர்ச்சிகளை ஒதுக்கி வைத்துவிட்டு நமது அன்றாட வாழ்க்கைக்கு திரும்புவோம்.   (இது நமது நிர்பந்தம்) வேற வழி?? 

கடந்த வியாழன் அன்று சந்தைக்கு விடுமுறை விட்டது.. சரியான செயலே. வெள்ளி கிழமை அன்று மாதந்திர கணக்கு வழக்கு முடிக்கும் சம்பிரதாயங்கள் தான் நடை பெற்றன.  இந்திய பங்கு சந்தைகளை கட்டுப்படுத்தும் பல முக்கிய சக்திகளின் அலுவலகங்கள்…  நரிமன் பாய்ண்டில் தான் உள்ளது.  குறிப்பாக ஓபாராய் ஹோட்டலின் எதிர் புறங்களில் தான் உள்ளது. 

இன்றைய துவக்கம் அமைதியாக துவங்கும், அதன் பிறகே அடுத்த கட்ட நகர்வுகள் தீர்மானிக்கபடும். 

2720 மற்றும் 2680 ஆகியவை முக்கிய சப்போர்ட் நிலைகளாக இருக்கும். 

இந்த மாதத்திற்கான பிவோட் நிலைகள்..    

4006 – 3652 – 3203 – 2849 – 2400 – 2046 – 1597

இந்த வாரத்திற்கான  பிவோட் நிலைகள்..  

 3008 – 2909 – 2831 – 2732 – 2654 – 2555 – 2477

இன்றைய பிவோட் நிலைகள்..

2873 – 2828 – 2791 – 2746 – 2709 – 2664 – 2627

காலம் கடந்து எடுக்கும் எந்த ஒரு முடிவும் பலன் அளிக்காது என்பது வள்ளுவர் சொன்னது.  நிதி அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் மாற்றம் என்பது (4-5 மாதத்தில்) என்ன பலனை தந்து விடப் போகிறது.  

காக்காய் உக்கார பனம் பழம் விழுந்த கதையாக.. நிதி அமைச்சகத்தை தன் வசம் பிரதமர் எடுக்கும் இந்த சமயத்தில் நிப்டியார் ஒரு சிக்னலை தருகிறார்.  என்ன வென்றால். ஜனவரி 2008 ல் ஆரம்பித்த கீழ் நோக்கிய பயணம் நவம்பர் 2008 ல் முடிவுற்றது என்று.  நீண்ட கால முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை துவங்கலாம்.  

நண்பர்களே…

இங்கு நான் முதலீட்டிற்கு பரிந்துரைக்கும் பங்குகளில் வரும் லாப நஷ்டத்திற்கு நான் பொறுப்பல்ல. எனது பார்வையில் சரி என்று படுபதை எழுதுகிறேன். அதை உங்களுக்கும் கிடைக்கும் பிற தகவல்களுடன் சரி பார்க்கவும்.  அது தொடர்பாக எந்த ஒரு கேள்வியையும் யாஹூவிலோ / தொலை பேசியிலோ என்னிடம் கேட்காதீர்கள். 

யுனிடெக் நிறுவனபங்குகள் குறுகிய கால முதலீட்டிற்கு உகந்ததாக உள்ளது என்று எழுதியதை அடுத்து நிறைய கேள்விகள்,  இன்றும் எனது நிலைப்பாடு அதே தான்.   என்போன்றவர்கள் வதந்திகளின் அடிப்படையில் முடிவு எடுக்க முடியாது.  546 ல் வர்த்தகம் ஆன பங்கினை 24/- ல்  ஏன் வாங்க கூடாது.  இன்றும் SBI மற்றும் LIC ஆகியவை 5 லட்சம் யுனிடெக் பங்குகளை கையில் வத்துள்ளன.

 

Advertisements

10 responses to this post.

 1. thank u sir good annalize.

 2. அனைவருக்கும் காலை வணக்கங்கள்

 3. Thank you sir !!!

 4. Posted by Gireesh khumaar,Hosur on திசெம்பர் 1, 2008 at 9:23 முப

  Thank u sir ,I lost lot of rs in market.But your tips very useful for me.So,as early as possible i earned that.

 5. உயதிரு சாய் அவர்களுக்கு,

  தங்களுடைய கட்டுரை மும்பை தாக்குதல் மூலம் நாம் அடைந்திருக்கும் துயரங்களை சொல்லியிருக்கிறது.

  தற்போதைய அரசியல்வாதிகள் ஓட்டு பொறுக்கும் அரசியலை விட்டு விட்டு குறைந்த பட்சம் நாட்டு மக்களுக்கு ஒரு பாதுகாப்பான வாழ்க்கையாவது தர முயற்சிக்க வேண்டும்.

  அப்பொழுதான் மக்களுக்கு அவர்கள் மீது சிறிதேனும் நம்பிக்கை இருக்கும்.

  இந்த மாதிரியான நேரங்களில் தமது உயிரையும் பொருட்படுத்தாமல் naattaik kaapparrum நமது காவல்துறை மற்றும் தேசிய பாதுகாப்பு படை, ராணுவ வீரர்களுக்கு நாம் நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறோம்.

  மேலும் இந்த தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்.

 6. Still i cant come out of the shock due to bombay attack…..but we should salute our brave warriors.

 7. இன்றைய கட்டுரையில் மும்பைச் சம்பவத்தின் தாக்கம் அதிகம் உள்ளது. இங்கிருக்கும் எங்களுக்கே மிகவும் வருத்தமாக உள்ளது. அங்கேய வாழ்ந்தவர் நீங்கள். உங்களுடைய கோபம் நியாயமானதே. இறந்தவர்களுக்கு சாந்தியையும் இருப்பவர்களுக்கு தைரியத்தையும் நல்கிட இறைவனை பிரார்த்திப்போ

 8. we appreciate your service.
  Deva.

 9. Posted by சாய்கணேஷ் on திசெம்பர் 1, 2008 at 1:19 பிப

  டாக்டர் சார்,

  தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி…

 10. //கடந்த வியாழன் அன்று சந்தைக்கு விடுமுறை விட்டது.. சரியான செயலே.//

  U have not wrote anything for last FRIDAY…
  That’s also a GOOD THING.
  I’ve INTENSIONALLY AVOIDED TRADE on FRIDAY, eventhough I got 2 Opportunities to KICK-GOALS.

  //இந்த தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்.//

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: