Archive for திசெம்பர், 2008

சிறிய ஓய்வு

வெளியூர் பயணம் மேற்கொள்ளுவதால் அடுத்த மூன்று நாட்களுக்கு தினசரி கட்டுரைகள் எழுத இயலாது…   வரும் திங்கள் முதல் புது பொலிவுடன் தொடருவோம்..  அதுவரை இன்றைய பதிவில் குறிப்பிட்ட நிப்டியின் நிலைகளே போதுமானதாக இருக்கும் 🙂
மீண்டும்

நண்பர்கள் அனைவருக்கும்

 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

Happy New Year 2009.

இன்றைய சந்தையின் போக்கு 30.12.2008

காலை வணக்கங்கள்,

நேற்றைய சந்தை உலக சந்தைகளை பின்பற்றியது என்றால் மிகை இல்லை…  காலையில் டவ் ஜோன்ஸ் ப்யூச்சரின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்றவாறு நமது நிப்டியின் நிலையும் அமைந்தது.

அதே போல நேற்றைய உயர்நிலையான 2950 முதல் 5 நிமிட வர்த்தகத்திலேயே தீர்மானிக்க பட்டது.   மதியம் சந்தை உற்சாகமாக உயர்ந்தாலும் அந்த உயர்நிலையான 2950 உடைக்காததை கவனிக்கலாம்.    நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படி ஒரு சித்தர்களின்  விளையாட்டை பார்க்கிறேன்.   கடந்த 10-15 நாட்களில் 4-5  முறை மிக பெரியதொரு கேப் டவுனை எதிர் பார்த்து சந்தையை முடிக்கிறார்கள் ஆனால். உலக மற்றும் ஆசிய சந்தைகள் அதற்கான வாய்ப்புகளை தட்டி விடுகின்றன.  ( 12/11 அன்று ஏற்பட்ட கேப்டவுனை போல)

சிறிய வேலை பளு காரணமாக பதிவெழுதுவதில் தாமதம் மற்றும் அதிகம் எழுத வில்லை. 

அடுத்து வரும் நாட்களில் முக்கியமான நிலைகள்….  

2689,  2719, 2768, 2784, 2852, 2901, 2951,2985,3034, 3118  

இதில் கீழ் நிலைகளை இன்னும் வலுவாக எதிர் பார்க்கிறேன்…  

 தங்களின் மேலான அன்பிற்கும்,  ஆதரவுக்கும் மிக்க நன்றிகள்…. 

கடந்த முறை நிப்டியின் முடிவு என்ன போட்டியில் வென்ற அனைவருக்கும் பரிசாக ஒரு மாத ஆலோசனைகள் அனுப்பி விட்டோம்.   திரு செந்தில் / ஹைதராபாத் அவர்கள் மட்டும் தற்போது வேலை பளு காரணமாக வர்த்தகம் செய்வதில்லை பிறகு பெற்று கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.   

 மீண்டும் அப்போட்டியினை  ஜன 1  2009 ல் இருந்து ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்.   மேலும் அதை சிறப்பாக செய்ய போட்டி விதி முறை மற்றும் பரிசு போன்றவற்றில் என்ன மாற்றம் செய்யலாம் என்பதை நண்பர்கள் ஆலோசனை கூறினால் நன்றாக இருக்கும்.   

இன்றைய சந்தையின் போக்கு 29.12.2008

அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்…. 

2008  பல கசப்பான அனுபவங்களுடன் முடிவடையும் தருவாயில் உள்ளது.   நல்லதோ கெட்டதோ இந்த ஆண்டினை பங்கு வணிகர்கள் உட்பட யாராலும் மறக்க முடியாது.  

1. நாடெங்கும் குண்டு வெடிப்புகள்..   2. அரசியல் நாடகங்கள்.. குதிரை பேரங்கள், பாரளுமன்றத்திலேயே கோடிகளை கொட்டிய சம்பவம்..,  ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்றவர்கள் இணைந்த சம்பவம்.  (ஒட்டவே ஒட்டாது என்று நினைத்தவர்கள் எதை வைத்து ஒட்டினார்கள் என்று பெவிகால் நிறுவனத்திற்கே ஆச்சரியமாம் என்பது கூடுதல் தகவல்)   4. அமெரிக்க பொருளாதார சரிவு, அவர்களுடன் அணு சக்தி ஒப்பந்தம். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமாவின் வெற்றி,  5 . ஏறிய விலைவாசி இறங்காது என்ற உலக விதியை  140$  -ல் இருந்து 35 $ க்கு குதித்து மாற்றி எழுதிய கச்சா எணணை.  6.  நம்ம அண்ணன் ஜனவரி மற்றும் அக்டோபர் மாதங்களில் அடித்த அந்தர் பல்டிகள்.  எவ்வளவு அடித்தாலும் தாங்கும் சக்தியுடைய நம்மை போன்ற நல்லவர்கள்.   7.  தாஜ் மற்றும் ஓபாராய் நட்சத்திர ஓட்டல்களில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதல் அதை தொடர்ந்து பக்கத்து வீட்டுகாரனுடன் போர் மேகம் சூழ்ந்துள்ள நிலமை என்று இந்த ஆண்டினை நினைவில் வைக்க நிறைய உள்ளன.

தகவல் தொடர்பில் ஏற்பட்ட புரட்சியால் ஆண்டுகள் ஓடுவதே தெரியவில்லை….  பரபரப்பான ஒரு தொடர் ஓட்டத்தில் நம்மை நாமே திணித்து கொண்டு விட்டோம்.  1999 இல் பரபரப்பாக பேசப்பட்ட Y2K  பிரச்சினை ஏதோ நேற்று பேசியதை போல உள்ளது.  ஆனால் அதன் பிறகு 9 ஆண்டுகள் ஓடி விட்டன. 

இந்த 2008ம் ஆண்டினை இனிதே வழியனுப்பி 2009 ஐ ஆரவாரத்துடன் வரவேற்போம்..   அனைவருக்கும் மகிழ்ச்சிகுறியதாக அமைய இறைவனை பிராத்திப்போம். 

அனைவருக்கும் என் சார்பாகவும் எனது குடும்பத்தினர் சார்பாகவும்

 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

Happy New Year 2009.

============================================================================

இன்றைய நமது சந்தையின் துவக்கம் ஆசிய மற்றும் உலக சந்தைகளின் அடியொட்டியே இருக்கும்.     

ஆனால்  ஆசிய சந்தைகள் மந்தமாக துவங்கியுள்ளது மற்றும் டவ் ஜோன்ஸ் ப்யூச்சர் 100 புள்ளிகள் வரை சரிவுடன் வர்த்தகமாவது ஆகியவை கரடிக்கு சாதகமான விசயங்களே.  

2772 க்கு கீழ் நழுவினால் நமது டார்கெட்டான 2727  எளிதில் சாத்தியமாகும்,  இன்றோ அல்லது நாளையோ நமது டார்கெட் கிடைக்க வாய்ப்புகள் அதிகம்   உள்ளது.

============================================================================

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும், அப்பொருள்        மெய்ப்பொருள் காண்பது அறிவு.

நேற்றைய தினம் ரஹ்மான் என்பவர் அல்லது அந்த பெயரில் யாரோ என்னை பற்றி சில தவறான தகவல்களை பின்னூட்டம் எழுதி சென்றுள்ளார். அதற்கு பதில் எழுத வேண்டாம் என்றே கருதினேன்.  ஆனால் அப்பின்னூட்டத்தினை  ஒரு சிலர் நண்பர்களும் படித்து உள்ளார்கள்.  ஆகையால் பதில் சொல்வது அவசியமாகிறது. 

 மாற்று கருத்துகள் இருக்கலாம் தவறில்லை… அதை நாகரிகமான முறையில் வெளிப்படுத்தலாம்ஆதாரத்துடன் நிருபிக்கலாம் ஆனால் அசிங்கமான வார்த்தைகளால் திட்டுவது என்பது,   ஏதோ உள் நோக்கத்துடன் செய்யப்பட்டதாகவே கருதுகிறேன்.  

நான் எப்படி பட்டவன் என்பதை நான் நிருபிக்க வேண்டியதில்லைஎன்னுடன் நெருங்கி பழகியவர்களுக்கு தெரியும்.

மன வருத்தம் தான் இருந்தாலும் “காய்த்த மரம் கல்லடி படும்” என்பார்கள்.. அப்படியே நானும் எடுத்து கொள்கிறேன். 

அவர் கூறிய குற்ற சாட்டினை ஆதாரத்துடன் நிருபிக்கவேண்டுகிறேன்.  அந்த விஜயகுமார் யார் அவரின் வெப்சைட் முகவரி என்ன. அவரின் கடந்த கால கட்டுரைகள்,  என்ன என்ற விவரங்கள் உடபட.  நான் அதை பதிவாக வெளியிட தயார்…  

 

 

மறக்க முடியாத 2008 -ன் கடைசி வெள்ளி…

இந்த நாளை மறக்க முடியாது…   காரணம்

காலையில் பதிவில் குறிப்பிட்டது போலவே கேப் அப் ஆக / உற்சாகமாக துவங்கிய சந்தை நாள் நெடுகில் அதை தக்கவைக்க வில்லை. 

இன்று அனைத்து பரிந்துரைகளும் எல்லா டார்கெட்-களையும் அடைந்தது.  அதில் குறிப்பாக BANK NIFTY 5030 இல் சார்ட் செய்ய சொல்லி எடுத்த கால் இன்று எதிர் பார்த்த அனைத்து டார்கெட் – களையும் வெற்றிகரமாக கடந்தது. 

//Sell Bank Nifty at 5030 tgt 5000/4980/4965/47 /4864 s/l 5075   //    – Day Low 4777   – 250 points 

அனைவருக்கும் இந்த வருடத்தின் வார இறுதி (சனி ஞாயிறு) மகிழ்ச்சியாக அமைய மனமார்ந்த வாழ்த்துகள்.

இன்றைய சந்தையின் போக்கு 26.12.2008

கடந்த 2 மாதங்களில்  வாரநாட்களில் அதிகமான விடுமுறைகள்…   இம்மாதிரியான விடுமுறைகள் எப்பொழுதும் சந்தையின் போக்கில் ஒரு வேகத்தடையாகத்தான் அமையும். 

சந்தை மேடு பள்ளங்களுடன் பயணிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

அதிகமாக எழுத ஏதும் இல்லை சந்தையில், அரசின் சில அறிவிப்புகளை எதிர் பார்த்து சரிவுகள் தாமத படுத்த படுகிறது என்றே நினைக்கிறேன்.   அம்மாதிரியான அறிவிப்புகள் சிறிய அளவில் உற்சாகத்தை ஏற்படுத்தலாம். 

ஜனவரி 2008 இல் இருந்து அக்டோபர் வரை சந்தை சரிவடைய காரணம் சர்வதேச சந்தை நிலவரங்களின் அடிப்படையிலான டெக்னிகல் காரணிகள் தான்.  ஆனால் இந்திய நிறுவனங்களின் Fundamental வலுவாகத்தான் இருந்து வந்தது/வருகிறது.  ஆனால் அடுத்து வரும் காலாண்டு லாப நஷ்ட கணக்குகளை பற்றி பல விதமான தகவல்கள் வருகின்றன.   குறிப்பாக ஆட்டோ மொபைல்ஸ்  துறை நிறுவனங்களில். 

சிறிய அளவில் கேப் அப் ஆக/உற்சாகாமாக் துவங்கலாம், நாள் நெடுகில் அது வலுவிழக்க வாய்ப்புகள் உள்ளது.

இன்றைய பிவோட் நிலைகள் 

3010 2986 – 2951-29272892 – 2868-2833

இன்றைய சந்தையின் போக்கு 24.12.2008

காலை வணக்கம்,

நேற்றைய தினம் எதிர் பார்த்ததை போலவே பெரிய சரிவுகளை தள்ளி போட முயற்சி செய்து ஓரளவு அதில் வெற்றியும் பெற்றார்கள்.   இன்றும் அம்முயற்சி மதியம் வரை தொடரும். நண்பகல் வரை மந்தமான சூழ்நிலையில் வைத்திருக்க விரும்புவார்கள்.   காரணம் இம்மாதத்தின் ஆப்ஸன் பிரிமியத்தை நீர்த்து போக செய்யத்தான்…   பிற்பகலில் சந்தை வேகமாக  சரிவடைய வாய்ப்புகள் உள்ளது.   

முக்கிய நிலைகள்  3090 – 3060 – 3030 –  2992  –     2929    

இரண்டு நாள் சரிவை கண்ட உடனே 2200,  2000 1700 என்று நேற்றே புலம்ப ஆரம்பித்து விட்டார்கள்.

ஆனால் தற்போதைய எனது எதிர் பார்ப்பு 2700/680 இல் மீண்டும் ஒரு எழுச்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது.  ஒரு வேளை 2680 க்கு கீழே 2 நாட்களுக்கு மேல் நிலை கொண்டால் அதிக பட்ச சரிவு 2500 வரை இருக்கலாம்.  

அனைவரும் 2200 ஐ பாட்டம் என்று எடுத்து கொள்கிறார்கள்.  ஆனால் (என் அளவில்) அது டெக்னிகல் ரீதியாக பாட்டம் இல்லை.     27/10/2008 அன்று சந்தை மார்ஜின் பிரஸர்,  ஸ்டாப் லாஸ் ஹிட் போன்ற காரணங்களால் டெக்னிகல் கட்டுபாட்டை இழந்து 2220 வரை சென்று 2520 இல் முடிவுற்றது.  சந்தை 2500 க்கு கீழ் ஒரு நாள் கூட (Closing Basis) நிலை கொண்டிருந்தது இல்லை, ஆகையால் 2500 ஐ தான் நான் பாட்டமாக எடுத்து கொள்கிறேன்.

nifty24122008

நேற்றைய டாட்டா மோட்டார்ஸ் பரிந்துரை அபாரம்….  182 இல் சார்ட் செய்திருந்தால் கூட 10/- லாபம்.  லாட் சைஸ் 425  x 10 = 4250.00  இதற்கு முதலீடு (மார்ஜின்)  தோராயமாக 21000 /- முதலீட்டிற்கு எதிரான லாப கணக்கு பார்த்தால்  20%.   யாராவது பயன் அடைந்திருந்தால் சொல்லுங்கய்யா.

சத்யம் பற்றி சிலர் கேள்வி கேட்டிருந்தார்கள்…  எரிகிற வீட்டில் எடுத்தவரை லாபம் என்பார்கள் ஆனால் அது சிலநேரம் நம்மை காயப்படுத்தவும் வாய்ப்பு உள்ளதால். தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பதே நல்லது.   அடுத்து அடுத்து வரும் செய்திகள் (உலக வங்கி தடை) அனைத்தும் பாதகமாகவே உள்ளது.

ரவி – என் இதயத்தில் இடம் தருகிறேன் என்று சொல்லும் அளவுக்கு 🙂 எனக்கு பெரிய மனசு இல்லை என்றாலும்,  பின்னூட்டத்தில் என்ன மெயின் பதிவிலேயே இடம் உண்டு.  தங்களை போன்றவரின் அங்கிகாரத்தில் தான் எனது வெற்றி அடங்கி உள்ளது.

சிம்பா – நாம் யாரையும் குறை சொல்ல வேண்டாம்… நமது செயல்கள் நம்மை பற்றி பேசட்டும்.    “நடந்ததும் நடப்பதும் நன்மைக்கே….. எல்லாம் அவன்” செயல்

இன்றைய சந்தையின் போக்கு 23.12.2008

வணக்கம் நண்பர்களே,

நேற்றைய தினம் சரிவுகளுக்கான  வாய்ப்புகள் அதிகரித்தாலும் அதை 2 நாட்கள் தள்ளிபோடும் முயற்சி நடைபெற்றது, அம்முயற்சி இன்றும் தொடரும்…  எந்த அளவு சாத்தியம் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

இன்று நிக்கி / ஜப்பான் சந்தைக்கு விடுமுறை போல தெரிகிறது அதனால் தலை தப்பியது ஹாங்க் செங்க்  490 புள்ளிகள் வரை சரிவடைந்துள்ளது. மற்ற உலக சந்தைகளும்  ஓரளவு சரிவுடனே காணப்படுகிறது.

முக்கிய நிலைகள். 

3175, 3113, 3088,  3060, 3003,  2992,  2970, 2929

ப்யூச்சரில்  டாட்டா மோட்டார்ஸ் நிறுவன பாங்கினை சார்ட் போகலாம் லாபம் 10-15%  –  3 முதல் 5 நாட்களில். 

பின்னூட்டம் இல்லையே என்று கேட்ட பிறகு நிறைய பின்னூட்டங்கள் வந்துள்ளது..  நன்றி.   

அசோக் – கேப் அப் மற்றும் கேப் டவுன் பற்றிய கேள்விக்கு தாங்கள் கூறிய காரணங்கள் சரியே ஆனால் பிரதி மாதம் ஒரு குறிப்பிட்ட நாளில் அவ்வாறு கேப் அப் / கேப் டவுனாக துவங்குவதில்லை, முடிந்தால் அதை கண்டு பிடியுங்கள்.  

 கேப் அப் / கேப் டவுன் நிகழ்வுகளை முன்கூட்டிய சில டெக்னிகல் கூறுகள் தெரிவிக்கின்றன அதை பற்றிய ஆய்வினை மேற் கொள்ளும் போது தான் மேலே சொன்ன செய்தியும் கிடைத்தது.  அதனால் பெரிய பலன் இருக்கா இல்லையா என்பது தெரிய வில்லை ஆனால் ஆச்சரியம் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டும் அப்படி ஒரு நிகழ்வு நடைபெறுவது இல்லை என்பதே. அதற்கான காரணத்தை அறியவும் முயற்சிக்கிறேன்.    விரிவாக பிறகு எழுதுகிறேன்.