பயங்கர வாதிகளின் பிடியில் மும்பை


இந்தியாவின் வர்த்தக தலைநகரமான மும்பை பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ளது. 

கடல் மார்க்கமாக  மும்பை நகருக்குள் நுழைந்த தீவிரவாதிகள்,  உலக பிரசித்தி பெற்ற நட்சத்திர ஹோட்டல் ஆன தாஜ் -ஐ,   தங்களின் பிடியில் எடுத்து அங்கு தங்கியிருந்த வெளிநாட்டினரை பிணைகைதிகளாக வைத்துள்ளனர்,  விடிய விடிய துப்பாக்கி சூடு நடந்து வருகிறது.

மஹாராஸ்டிராவின் முக்கிய காவல் துறை அதிகாரிகள் உட்பட இதுவரை 80 க்கும் அதிகமானவர்கள் மரணம் அடைந்துள்ளனர்.   தேசிய பாதுகாப்பு கமன்டோக்களும், ராணுவமும், மும்பை போலிஸாருடன் இனைந்து விடுதிகளில் பிணைகைதிகளாக உள்ளவர்களை மீட்க போராடி வருகின்றனர். 

இது உலக நாடுகளுக்கு குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு விடபட்டுள்ள மிகப்பெரிய எச்சரிக்கை. 

இனி மேலும் இந்தியா தீவிரவாதத்தில் மென்மையாக இருக்க கூடாது,  அரசியல் கட்சிகளும் ஓட்டு பொறுக்கும் அரசியலை நிறுத்தி விட்டு அனைத்து மக்களுக்கும் நாட்டில் பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி தர முன் வர வேண்டும்.

இத் தீவிர வாதத்தாக்குதல் காரணமாக மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகளுக்கு செபி விடுமுறை அறிவித்துள்ளது.  இந்தமாதத்தின் FnO Expirt Settlement நாளைய தினத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இதுவரை மும்பை நிழல் உலகத்திற்கும் / தீவிர வாதிகளுக்கும் சிம்ம சொப்பனமாக இருந்து வந்த என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் என்று அழைக்கபட்ட காவல் துறை அதிகாரி திரு விஜய் சாலஷ்கர், நேற்று இரவு வீர மரணம் அடைந்தார். அவர் உட்பட இச்சம்பவத்தில் மரணம் அடைந்தவர்களுக்கு நமது அஞ்சலி. அனைவரின் ஆத்மாக்களும் சாந்தி அடைய ஆண்டவனிடம் பிராத்திப்போம். 

http://broadband.indiatimes.com/toivideolist/3761413.cms

16 responses to this post.

 1. இந்தியத் தலைநகரிலேயே, இந்தியாவின் முக்கிய நகரங்களிலேயே தனது குடிமக்களை பாதுகாக்க முடியாத அரசு எப்படி நாட்டின் ஒட்டு மொத்த மக்களுக்கும் பாதுகாப்பை கொடுக்கப் போகிறது.

 2. உலகத்தையே உலுக்கும் அட்டூழியம்.பெங்களூரில் தொடங்கி இன்று மும்பை.எங்கே செல்கிறது இந்த நாடு.தீவிரவாதிகள், அவர்களை அப்படி அழைப்பதை விட காட்டுமிராண்டிகள் என்றே அழைக்கலாம்.சின்ன சின்ன உயிரினங்களைக்கூட கொல்ல உரிமையில்லாத பொழுது, மனிதர்களை கொல்லும் உரிமையை யார் கொடுத்தது.பெங்களூரில் தொடங்கியது..அதன் பிறகு சிரத்தையுடன் மாநிலங்களுக்குள் காட்டுமிராண்டிகள் நுழைவதை தடுக்க முடியாதா? அடுத்து மீதமுள்ள முக்கிய நகரங்களில் சென்னை ஒன்றாக தெரிகிறது..தடுப்பார்களா இனிமேல் இது போல் நடக்காமல்…

 3. அரசு இந்த விவகாரத்தில் போதிய கவனம் செலுத்தாமல் அசிரத்தையாக இருந்து வருகிறதா?

  நாட்டில் உள்துறை அமைச்சர் என்று ஒருவரை உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்வதற்கென்றே அமைச்சராக அமர வைத்து அழகு பார்ப்பது இது போன்ற சம்பவங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கத்தானா?

  ஒரு அரசின் தலையாய கடமை என்பது தனது மக்களின் உயிருக்கு எந்த விதமான அச்சுறுத்தலும் இல்லாத நிம்மதியான ,பாதுகாப்பான வாழ்க்கையை மக்களுக்கு உறுதிப் படுத்துவதே.

  அதைக் கூட செய்யமுடியாத அரசு – தான் ஆயிரம் சாதனைகளை செய்ததாக சொல்லிக் கொண்டாலும் – என்னதான் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி இருப்பதாக கூறிக் கொண்டாலும் – குடிமக்களின் உயிருக்கே பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத நிலை மிகவும் வேதனையானதே………

  அப்பாவிப் பொது மக்களின் உயிர்கள் என்றால் அவ்வளவு மலிவானதா என்ன?

 4. இறந்து போன அப்பாவி மக்கள் செய்த பாவம் என்ன?

 5. மக்களுக்கு பாதுகாப்பை வழங்க முடியாமல் மீண்டும் மீண்டும் கோட்டை விடும் அரசு நாட்டிற்கு அவசியமா? இப்படி அசிரத்தையாக இருக்கும் இந்த அரசு இன்னும் எத்தனை உயிர்களைப் பழி வாங்கிய பின்னர் விழித்துக் கொள்ளப் போகிறதோ தெரியவில்லை………

 6. சிதறிப் போன அந்த இதயங்கள் தன் குடும்பத்தை எண்ணித் துடித்த அந்த இறுதிக் கணங்களில் என்ன பாடு பட்டு இருக்கும்?

 7. இந்த சூழலில், தீவிரவாதிகளுடன் யுத்தம் புரிந்து இறந்து போன அந்த போலிஸ் அதிகாரிகளுக்கு – A Salute to you all Officers.

  No amount of words would express our gratitude.

  May God give the strength to your family to bear the losses.

  மொத்த இந்தியாவுமே, உங்களின் தீரம் குறித்து பெருமிதம் கொண்டிருக்கிறது.

 8. Posted by சாய்கணேஷ் on நவம்பர் 27, 2008 at 9:34 முப

  Vijay Salaskar, officer of the 1983 batch, had till recently killed around 75 dreaded criminals in police encounters. After being out of the spotlight for quite sometime, the encounter specialist was given the plum posting of heading the anti-extortion wing of the crime branch.

 9. AS THERE IS A WIDE BOMBINGS BEEN CARRIED OUT,

  THE BOMBERS MAY HAVE BEEN SEEN BY MANY CITIZENS.

  IT IS TIME FOR EACH AND EVERY CITIZEN SHOULD COME FORWARD AND PROVIDE THE EVIDENCES TO CATCH ALL THE BOMBERS/GROUPS.

  THE BOMBERS AND WHOLE BASE OF THE GROUP SHOULD BE DETAINED AND SHOULD BE EXECUTED .

  NO MERCY SHOULD BE SHOWN TO ANY TERRORIST FROM ANY SOURCE AS THEY ARE KILLING THE INNOCENTS WITHOUT MERCY.

  WE WANT PEACE PEACE PEACE AND THE RIGHT FOR EACH AND EVERY CITIZEN OF INDIA TO LIVE IN PEACE AND HARMONY WITH ONE ANOTHER.

  I AM VERY SADDENED AND HAVE NO WORDS TO EXPRESS MY SAD FEELINGS. vanjoor

 10. மிகவும் வருத்தமாக உள்ளது பலியானவர்களை நினைத்து. அதை விட கோபமும் வேதனையுமே மேலோங்குகிறது அரசாங்கம் நடத்திக் கொண்டிருக்கிறோம் என்பவர்களை நினைத்து.

 11. …..அரசியல் கட்சிகளும் ஓட்டு பொறுக்கும் அரசியலை நிறுத்தி விட்டு அனைத்து மக்களுக்கும் நாட்டில் பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி தர முன் வர வேண்டும்…….. “well said”

 12. http://tamilvarthagam.wordpress.com/..இது சாய் சாரின் செய்திப்பிரிவு

 13. காட்டுமிராண்டி தனமான இந்த செயல் மிகவும் கண்டிக்கவேண்டியது. அப்பாவி மக்கள் என்ன பாவம் செய்தார்கள். எத்தனை வீட்டில் நம்பிக்கை விளக்கு அனைந்து இருக்கும்… யார் அவர்களுக்கு ஆதரவு… ஏன் இந்த வெறி செயல்? யாருக்கு இதானல் நன்மை…. இந்த செயலால் கிடைத்தது கெட்டபெயர் மற்றும் பல குடும்பங்களில் அழுகை சத்தம் மட்டும்தான்…

  என்று நாம் சுகந்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கபோகின்றேம்?

 14. நவம்பர் 15ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் பணவீக்கம் 8.84 சதவீதமாக குறைந்திருக்கிறது. இது, இதற்கு முந்தைய வாரத்தில் 8.90 சதவீதமாக இருந்தது. மெட்டல், பழங்கள், சில உற்பத்தி பொருட்கள், இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய், ரப்பர் போன்றவைகளில் விலை இந்த வாரத்தில் குறைந்திருக்கிறது. மொத்த விற்பனை விலைப்பட்டியல் அடிப்படையில் கணக்கிடப்படும் இந்தியாவின் பணவீக்க விகிதம், கடந்த வருடத்தில் இதே காலகட்டத்தில் 3.35 சதவீதமாகத்தான் இருந்தது. கடந்த அக்டோபரில் இருந்து ரிசர்வ் வங்கி, பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் ரூ.2,75,000 கோடியை புழக்கத்தில் விட்டிருக்கிறது. மேலும் வங்கிகளுக்கான சி.ஆர்.ஆர்.மற்றும் ரிபோ ரேட்டையும் குறைத்திருக்கிறது. இதன் காரணமாக பணவீக்கம் குறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

 15. Posted by K. Mohanraj, Karur on நவம்பர் 28, 2008 at 9:36 முப

  சம்பவங்களை புதன் இரவு தொலைக்காட்சியில் பார்த்த நமக்கே இதயம் பதறுகிறது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் பலரின் குடும்பங்களை நினைக்கும்போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

  அவர்களுக்கு மனதைரியத்தை எல்லாம் வல்ல அந்த இறைவன் தர வேண்டுமென பிரார்த்திக்கிறோம்.

 16. இன்னுயிர் நீத்த வீரர்களைப்பார்த்தாவது மக்களைப்ப்ற்றி சிறிதும் சிந்திக்காத அரசியல் வாதிகள் திருந்துவார்களா?
  தேவா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: