இன்றைய சந்தையின் போக்கு 21.11.2008


எல்லோருக்கும் இப்ப கரடியை பிடித்து விட்டதால், நான் காளைக்கு மாறாலாம் என்று நினைத்தேன்.  பொங்கல் திரு நாளுக்கு காளையை தயார் படுத்தலாம் என்றாசையில்.

ஆனால் சரியான சமயம் பார்த்து பங்காளி கழுத்தை (8000) அறுத்து விட்டார்.  நமது சந்தை 2500 இல் மதில் மேல் பூனையாக அமர்ந்த சமயத்தில்,  தொடர்ந்து 6 வாரமாக 8000 ஐ  வலுவான கீழ் நிலையாக வைத்து செயல் பட்ட டவ் ஜோன்ஸ் இன்று டைவ் ஜோன்ஸ் ஆக மாறி 7500 க்கு சென்று விட்டார்.

சரி நம்ம ஆளு நிப்டியார் என்ன செய்வார்,   அவரும் ரெம்ப வலிக்குதுடா… போதும்…. அழுதுடுவேன….. விடுங்கடா நான் மேலே போறேன் என்று தான் முயற்சிக்கிறார்.  ஆனால் சரியான காரணம் கிடைக்க வில்லை. (சந்தையின் போக்கின் மாற்றத்திற்கும் சில காரணங்கள் தேவை படுகிறது, சில மாதங்களுக்கு முன்பு வரை – பணவீக்க விகிதம், தங்கம் மற்றும் கச்சா எண்ணையின் விலை மாற்றம் போன்றவை இருந்து வந்தது நினைவிருக்கலாம்,  தற்போது அந்த காரணிகளை சந்தை மதிப்பதே இல்லை, ஏன் என்றால் தலைக்கு மேலே தண்ணி போய் கொண்டிருக்கிறது.)

நேற்றும் எதிர் பார்த்ததை போல 2500 இல் இருந்து  தனது சரிவுகளை மீட்டெடுக்கத்தான் போராடினார், ஓரளவு வெற்றியும் அடைந்தார்.. (2575).

2200 என்பது அத்தனை வலுவான சப்போர்ட் இல்லை… காரணம் அந்நிலை 27/10 ன் கீழ் நிலைதானேயன்றி ஒரு நாள் கூட அந்த இடத்தில் நிலை பட்டிருந்தது இல்லை.

இன்றைய துவக்கம் கேப்டவுனாகத்தான் துவங்கும்… ஆனால் 2500-2480 க்கு கீழ் நழுவாதவரை பிரச்சினை இல்லை. 2440-2400 நிலைகளை உடைத்தால் 1600 வரை சென்றாலும் ஆச்சரியம் இல்லை.. (இது எச்சரிக்கை தான் – அதற்கான வாய்ப்புகள் மிக குறைவே.)

இந்த மாத F&O Expiry இன்னும் மூன்று வர்த்தக தினங்கேளே உள்ளது..  மீடியா / சிறு வணிகர்கள் ஆகியோர் புதிய கீழ் நிலைகளை பற்றி பேச ஆரம்பித்து உள்ளார்கள்.  தொடந்து 7-8 நாளாக சந்தை சரிவில் இருந்து வந்து உள்ளது.  இவை அனைத்தையும் வைத்து பார்க்கையில், எதிர்பார்ப்புக்கு மாறாக சந்தை சில ஆச்சரியங்களை / அதிர்ச்சியை தரலாம். இது தனிப்பட்ட கருத்து…/ எதிர் பார்ப்பு…  நான் எப்பவும் மாற்று கருத்துக்கான காரணங்களை தேடும் ஆள், இதற்கு வலு சேர்க்கும் விதமாக கடந்த சில நாட்களில் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடு அதிகரித்து வருகிறது.

FII & DII Turnover (BSE + NSE)
(Rs. crore)
  FII DII
Trade Date Buy Sales Net Buy Sales Net
20/11/08 998.23 1,761.17 -762.94 1,002.66 575.71 426.95
19/11/08 1,845.35 2,110.33 -264.98 836.97 641.26 195.71
18/11/08 1,118.71 1,560.30 -441.59 947.18 488.58 458.6

2500-2450 இல் நிலை பட்டு மீண்டும் ஒரு Relief rally  நடக்கலாம்…..

சிறு வணிகர்கள் எச்சரிக்கையாக செயல் படவும்….

Advertisements

21 responses to this post.

 1. //சிறு வணிகர்கள் எச்சரிக்கையாக செயல் படவும்…//.

  THANK YOU FOR GUIDING ME

 2. Posted by K. Mohanraj,Karur on நவம்பர் 21, 2008 at 9:41 முப

  மதிப்பிற்குரிய ஆசான் சாய் அவர்களுக்கு,

  பிரமாதம், அற்புதம், அட்டகாசம், கலக்கிவிட்டீர்கள், இன்னும் நிறைய வார்த்தைகளை தேடிக் கொண்டு இருக்கிறேன் தங்களின் இன்றைய கட்டுரையைப் பற்றி வாழ்த்தி எழுத,,,,

  அவ்வளவு அற்புதமாய் சந்தையின் நிலவரங்களை அலசி தள்ளி விட்டீர்கள். இவ்வளவு நாள் சந்தை 3200 என்ற நிலைகளில் இருந்து 2500 என்ற நிலைக்கு நம்முடைய பொறுமையை சோதித்து பின்னர் பெரிய மனதுடன் கீழே வந்துள்ளது.

  ஏற்கனவே 3200 என்ற நிலைகளிலேயே தாங்கள் சந்தை மீண்டும் 2500 என்ற நிலையை கட்டாயம் அடைந்தே தீர வேண்டுமென சொல்லி விட்டதால் இந்த இடைப்பட்ட பத்து நாட்களும் தங்களுக்கே சந்தை பற்றி எழுத ஒரு அலுப்பு ஏற்பட்டிருக்கலாம்.

  ஆனால் இன்றைய கட்டுரையில் அந்த அலுப்பு எங்கோ பறந்து போய் ஒரு புதிய உற்சாகம் தொற்றிக் கொண்டுள்ளது, இது உங்களுக்கு மட்டுமல்ல சாய் இந்த கட்டுரையை படிக்கும் எங்களுக்கும் உற்சாகமாய் உள்ளது.

  தங்களுடைய கட்டுரை நடையும் மிகவும் அருமை. என்னை விட்டால் இன்னும் எழுதிக் கொண்டே இருப்பேன், ஆனால் வேலைப் பளு காரணமாக முடியவில்லை.

  தங்கள் கட்டுரைக்கு நாங்கள் அனைவரும் மனமார்ந்த நன்றியினை சொல்ல கடமைப் பட்டிருக்கிறோம்.

  தங்களுடைய இந்த சேவை எங்களுக்கு என்றும் தேவை.

  இனிய காலை வணக்கம்.

  வாழ்த்துக்களுடன்,
  கே.மோகன்ராஜ்,
  கரூர்.

 3. Thank you sir !!!

 4. thank you sir!!!!!!

 5. வணக்கம் சாய் சார்.

  நல்ல படியா இது வரை நாமா பயந்த மாதிரி எதுவும் நடக்கலை.. சந்தோசம்… அதே போல் இன்றைய சந்தைகள் நீங்கள் கூறியது போல் கோ அப் ஆக தொடங்கவில்லை…

  வேடிக்கை பார்ப்போம்…

 6. வணக்கம் சாய் சார்,

  மார்க்கெட் காளையாக இருந்தால் என்ன? கரடியாக இருந்தால் என்ன?
  அதை பற்றிய கவலை எங்களுக்கு இல்லை.வழிகாட்ட நீங்கள் இருக்கும்போது வர்த்தகம் செய்ய நாங்கள் தயார்.
  தங்களது கடின உழைப்பால் தங்கள் வலைபதிவு நாளுக்கு நாள் சொல்லொண்ணா வண்ணம் மெருகேறி வருகிறது.வர்த்தக செய்திகள்,பங்கு சந்தையை பாதிக்கும் பொருளாதார காரணிகள் போன்றவைகளை உங்கள் வலை தளத்திலேயே தெரிந்து கொள்ள வசதியாக இருக்கிறது.
  மேலும் நீங்கள் கொடுக்கும் இன்றைய சந்தையின் போக்கு கட்டுரை மிகவும் பயனுள்ளதாகவும் ரசிக்கும் விதமாகவும் அளிக்கிறீர்கள்.
  இதே உற்சாகத்துடன் தொடருங்கள்.

  மிக்க நன்றி.

 7. இன்று ஜடி துறை மற்றும் டெலிகாம் துறையில் மூதலீடு அதிகம் நடைபெறுகின்றது உலக சந்தை ஒரு திசையில் இந்திய சந்தை வேறு திசையில் ஏன்? ஏதற்கு என்று தெரியவில்லை யாருக்கு விரிக்கும் வலை இது?… இன்று சந்தை முடியுவரை இந்த நிலை தொடருமா?
  பல கேள்விகள் மனதில்?

  //முதலீட்டாளர்கள் ரயில் கிளம்பி விட்டது என்று நினைத்து அவசரபட்டு விரட்டி பிடிக்காதீர்கள், உங்களின் ப்ளாட்பாரத்தில் வந்து சேரும், அப்போது ஏறி கொள்ளலாம்.//

  என்று சாய் அவர்கள் கூறியது என் மனதில் ஆணி அடித்தார் போல் பதிந்து உள்ளதால் வேடிக்கை பார்க்க மட்டுமே தோன்றுகின்றது.

  சாய் உங்களில் தெளிவான சந்தை பற்றிய பார்வை தொடரட்டும் எங்களை போல் வழி தெரியாதவர்கள் பாதையாக நீங்க இருந்து தொடர்ந்து வழி காட்டுங்கள். நன்றி….

 8. No evidence of manipulative trading in ICICI Bank shares: SEBI

  Market regulator SEBI today said it did not find evidence of manipulative trading in shares of ICICI Bank, which had demanded a probe by the watchdog after its scrip came under heavy selling pressure in September.
  “While SEBI continues its surveillance of the stock exchange trading in various securities, SEBI did not find evidence of manipulative trading in ICICI Bank shares during the period (September 8 to October 10).

 9. மொத்த விலை‌க் குறியீடு 0.2 விழுக்காடு சரிவு!
  அனைத்துப் பொருட்களுக்குமான மொத்த விலை‌க் குறியீடு, இம்மாதம் 8-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 0.2 விழுக்காடு குறைந்துள்ளது.

  முந்தைய வாரத்தில் 235.5 புள்ளிகளாக இருந்த இந்த குறியீட்டு எண் 8-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 235.0 புள்ளிகளாக சரிந்துள்ளது.

  இதே வாரத்தில் பணவீக்க விகிதம் 8.9 விழுக்காடாக உ‌ள்ளது

 10. மியூச்சுவல் பண்ட்- யூனிட்டுகளை விற்பனை செய்வதால் தான் பிரச்சனை!
  மியூச்சுவல் பண்ட் எனப்படும் பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி. இதன் யூனிட்டுகளை விற்பனை செய்வதால் உண்டான பிரச்சனைதான். இவை செய்துள்ள முதலீடுகளால் அல்ல என்று “செபி” என்று அழைக்கப்படும் பங்குச் சந்தை கட்டுபாட்டு வாரிய சேர்மன் சி.பி.பாவே தெரிவித்தார்.

  மும்பையில் இந்திய-மலேசிய பங்குச் சந்தை அமைப்பின் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த செபி சேர்மன் சி.பி.பாவே செய்தியாளர்களிடம் பேசுகையில், அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், முதலீடு செய்வதற்கான விதிமுறைகளில் மாற்றம் செய்வது பற்றி ஆலோசனைகள் வெளியிடுவதற்கு சிறிது கால அவகாசம் தேவை.

  இந்தியாவில் அந்நிய முதலீடு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் விதி முறைகள் முழுவதும் மறு பரிசீலனை செய்ய வேண்டியதுள்ளது. இதை செய்ய சிறிது காலம் பிடிக்கும். அதற்கு பிறகே ஆலோசனைகள் வெளியிடப்படும்.

  பங்குச் சந்தை அதிக ஏற்ற இறக்கத்துடன் இருப்பதால், சார்ட் செல்லிங் என்று அழைக்கப்படும், பங்குகளை கடன் வாங்கி விற்பனை செய்யும் முறைக்கு உடனடியாக தடை விதிக்கப்படாது என்று தெரிவித்த பாவே, தற்போதைய சூழ்நிலையில் அந்நிய முதலீடு நிறுவனங்கள் தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்து வருகின்றன என்று கூறினார்.

  அவர் மேலும் கூறுகையில், இது இந்தியாவில் மட்டும் உள்ள நிலைமை அல்ல. மற்ற நாடுகளிலும் இதே பிரச்சனைகள் உள்ளது. அவர்கள் நாட்டில் பிரச்சனை இருக்கும் போது, அந்நிய முதலீடு நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்து, முதலீடுகளை திரும்ப கொண்டு செல்வது இயற்கையானது தான்.

  தற்போதைய சூழ்நிலையிலும், அந்நிய முதலீடு நிறுவனங்கள் பங்குகளை வாங்குகின்றன. ஆனால் அவை வாங்கும் அளவை விட, அதிகமாக விற்பனை செய்கின்றன என்று தெரிவித்தார்

 11. செய்திகள் அலைக்கடல் என நமது வலைத்தளத்தில் ”தமிழ் வர்த்தம்” அவர்களுக்கு கோடன கோடி நன்றிகள்….

 12. வாழ்த்துக்களுக்கு நன்றி ஃபைசல் சார்.

  -பி.எஸ்

 13. Reliance Capital Asset Management receives approval in Malaysia
  The Reliance Capital Asset Management Company has received permission from the Malaysian Securities Commission (SC), to start its operations in that country, Ms Zarinah Anwar, Chairman of Securities Commission, Malaysia, in her keynote address to a one-day Indo-Malaysia Capital Market Forum here, said the permission was granted by it two days ago.

 14. Call rates may go down further
  Telecom minister A Raja Thursday said call tariffs could go down further in the future with new operators coming to increase competition for the existing operators.

  The minister said there was enough scope for tariffs to come down to a level of 20 paise per minute for local calls and 50 paise per minute at national level after new operators start services.

 15. Posted by K. Mohanraj,Karur on நவம்பர் 21, 2008 at 1:09 பிப

  மதிப்பிற்குரிய திருமதி PS அவர்களுக்கு,

  தாங்கள் கடந்த மூன்று நாட்களாக அளித்து வரும் தகவல்கள் அருமை. ஒரு தகவல்களை சேகரித்து அவற்றை மொழி பெயர்த்து பின்னர் தமிழில் டைப் செய்து வலையேற்றுவது என்பது மிகவும் சிரமமான காரியம்.

  ஆனால் தாங்களோ மிகவும் சாதரணமாக தகவல்களை அளித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

  வாழ்த்துக்கள்,,,,,,,,

 16. சர்வதேச அளவில் வேலையிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு
  அமெரிக்காவின் பெரிய வங்கியான சிட்டி குரூப் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் 52000 பேரை பணியில் இருந்து நீக்குவதாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து தற்போது கார் தயாரிப்பு நிறுவனங்கள் சர்வதேச அளவில் 7000 பேரை பணி நீக்கம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளன. இதனால் வேலையிழப்போர் எண்ணிக்கை அமெரிக்காவில் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

 17. திரு மோகன்ராஜ் அவர்களுக்கு.,சில தகவல்களை மட்டுமே மொழி பெயர்ப்பு செய்கிறேன், பல தகவல்கள் தமிழிலேயே பல இணையத்தளத்தில் உள்ளன. அவைகளை சேகரித்து நமது வலைப்பூ நண்பர்களுடன் பகிர்கிறேன். அவ்வளவு தான். இது நம் சாய் சார் வலைப்பூ நண்பர்களுக்கு சிறிய அளவிலாவது உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன். இவ்வாழ்த்துக்கள் அனைத்துக்கும் சொந்தக்காரர் திரு சாய் சார் தான்.அவர் கொடுத்த ஐடியா தான் இது.

 18. ஜப்பான், ஐரோப்பா நிறுவனங்களை கையகப்படுத்த இன்போசிஸ் முயற்சி

 19. //விடுங்கடா நான் மேலே போறேன் என்று தான் முயற்சிக்கிறார். ஆனால் சரியான காரணம் கிடைக்க வில்லை//

  //ஆனால் 2500-2480 க்கு கீழ் நழுவாதவரை பிரச்சினை இல்லை//

  when the markets across the world loosing some 5% on indices consequently for both days, you need GUTS to write like this..and it happened..when everyone talking about huge gap-down today, we just had only 40 poins gap down and bounced back.. it is proven that you are always against weird and its only because of your vast knowledge on technicals..

  HATS OFF!!

  sorry for the comments in english as am writing this from another computer

 20. After 7 days of continuous down trend, the market
  finally ended positively.

  BSE ended @ 8874 (Up by 523 points)
  Nifty ended @ 2693 (Up by 140 points)

 21. Posted by தண்டபணி ராஜகோபால் on நவம்பர் 23, 2008 at 12:28 பிப

  சந்தை சரியும் என்று எல்லோரும் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுது ஆச்சிரியங்களும் தரலாம் என்று சரியாகசொல்லிவிட்டீர்கள். நான் தினமும் உங்கள் கட்டுரைகளை படித்துக்கொண்டிருக்கிரேன். நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: