இன்றை சந்தையின் போக்கு 20.11.2008


நேற்றைய முடிவின் படி,  சிறிய ஏற்றம் இருந்திருக்க வேண்டும் அப்படிப்பட்ட நிலையில் தான் டெக்னிகல் கூறுகள் அமைந்துள்ளது,  அந்த சிறிய ஏற்றத்திற்கு பிறகே நமது நீண்ட நாளைய எதிர்பார்ப்பான 2500 நாளை பூர்த்தியாகும் என்று கணித்திருந்தேன்.

ஆனால் அந்த எதிர் பார்ப்பு இன்றே நிறைவேறும் என்று ஆசிய சந்தைகள் தெரிவிக்கின்றன,  இன்றைய சந்தையின்  நிறம் சிவப்பு என்று Dow உட்பட அனைத்து சந்தைகளும் தேர்தெடுத்துள்ளன.

நமது அண்ணன் எதிர்பார்ப்புக்கு மாறாக செயல் படலாம், கேப் டவுனாக துவங்கி அந்த இடைவெளியை இன்றே நிரப்பலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.

2500 கீழ் நழுவினால்,   எனது அடுத்த டார்கெட்  2220…

FII & DII Turnover (BSE + NSE)
(Rs. crore)
  FII DII
Trade Date Buy Sales Net Buy Sales Net
19/11/08 1,845.35 2,110.33 -264.98 836.97 641.26 195.71

வரும் திங்கள் முதல் இன்னும் விவரமாக சுவாரஸ்யமாக எழுத முயற்சிக்கிறேன்.

நண்பர் கார்த்திகேயன் – தங்களின் கடிதம் கிடைத்தது, மிக்க மகிழ்ச்சி… எழுதுவது நிறுத்த மாட்டேன்,  ஒரு வாரம் / 10 நாளைக்கான டிரெண்டை விவரமாக எழுதலாம், அதில் மாற்றம் நிகழும் போது மீண்டும் விவரமாக எழுதலாம் என்று நினைக்கிறேன்.  உதாரணத்திற்கு 3300 நிலைகளிலேயே நாம் விவரமாக அலசிவிட்டோம் 2500 தான் டார்கெட் என்று, அது வரை காத்திருந்திருக்கலாம், அதை விடுத்து அரைத்த மாவையே தினசரி அரைக்கும் போது படிப்பவர்களுக்கு சலிப்பு ஏற்படுகிறது, நாம் சொல்லியதன் முக்கியத்துவம் காணமல் போகிறது.   2750 நிலைவரை ஏற்றத்தை பற்றி பேசியவர்கள் தற்போது தான் சரிவை பற்றி பேச ஆரம்பித்து உள்ளார்கள். 

27/10/2008 – இந்த நாளை யாரும் மறந்திருக்க முடியாது..  அதே போன்று இன்று அமையலாம். 

Advertisements

20 responses to this post.

 1. அனைவருக்கும் என் இனிய காலை வணக்கம். மேலும் செய்தி பிரிவிற்கு பொறுப்பேற்றிருக்கும் சகோதரி ப்ரியா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.நன்றிகள் பல,

 2. gud morning frnds… gud morning sai sir..

 3. எழுதுவது நிறுத்த மாட்டேன், —-VERY HAPPY TO READ THIS

 4. Posted by K. Mohanraj,Karur on நவம்பர் 20, 2008 at 10:02 முப

  Good Morning Sai sir,,,,,,,

  Your prediction has come true today,,,,,,,,,now nifty achieved the target of 2500. You are saying this levels from 3200 from last 8days.

  Congratulations Sai,,,,,,,,,,,You have done a great job,,,,,,,

  Have a nice trading day,,,,,,,,

 5. அனைவருக்கும் என் இனிய காலை வணக்கம்

 6. can 2500 sustain???

 7. Dear Sai,
  Thank you sir , we are daily reading your blog ,some time due to job i could n’t put the comments.Keep write

  Murugesan
  Abudhabi

 8. Inflation for the week ended NOV 8th is @ 8.90%

 9. என்ஆர்ஐ முதலீடுகள், டெபாசிட்டுகளுக்கு அதிக வட்டி

  வெளிநாடு வாழ் இந்தியர்களின் இந்திய முதலீடுகள் மற்றும் இந்திய வங்கிகளில் செய்யும் என்ஆர்இ டெபாசிட்டுகளுக்கு வட்டியை உயர்த்தியுள்ளன நாட்டின் 3 பெரிய வணிக வங்கிகள்.

  பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட வங்கிகள் வட்டி வீதத்தை 0.75 சதவீதம் வரை உயர்த்தி உள்ளன. வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் சம்பாதிக்கும் பணத்தை தாய்நாட்டில் முதலீடு செய்ய இந்திய வங்கிகளில் கணக்கு தொடங்க அனுமதிக்கப்படுகிறது. இதற்கு என்ஆர்இ கணக்கு எனப்படுகிறது.

  நாட்டின் மிகப் பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பாங்க்கில் டாலராக செய்யப்படும் முதலீடுக்கு இதுவரை இருந்த 3.42 சதவீத வட்டி 4.17 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. யூரோவுக்கு 5.12 சதவீதத்தில் இருந்து 5.87 சதவீதமாகவும், பவுண்டுக்கு 6.26ல் இருந்து 7.01 சதவீதமாகவும் வட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது.

  ஐசிஐசிஐ வங்கியும் டாலருக்கு 3.35 சதவீதத்தில் இருந்து வட்டியை 4.1 சதவீதமாக உயர்த்தியுள்ளது. பவுண்டுக்கு 7.01 சதவீத வட்டி தருகிறது. பஞ்சாப் நேஷனல் வங்கி டாலர் முதலீடுக்கு வட்டியை 3.42 சதவீதத்தில் இருந்து 4.17 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன்மூலம், வெளிநாடு வாழ் இந்தியர்களின் முதலீடு அதிகரிக்கும் என்று வங்கிகள் எதிர்பார்க்கின்றன.

 10. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடும் சரிவுக்குள்ளாகி வருவதால், இந்தியாவில் பெட்ரோல் விலையைக் குறைக்க முடிவு செய்துள்ளது மத்திய அரசு.

  பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3-ம் டீஸலுக்கு ரூ.2-ம் குறைக்கப்பட உள்ளதாக பெட்ரோலியத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 11. சமாளிப்பான் சாமானியன்; ‘பாவம்’ முதலாளிகள்!!

  ஒரு காரில் பயணிப்பதை விட விமானத்தில் பயணிப்பதே இன்றைக்கு மலிவானது. அந்த அளவு விமானங்களுக்குப் பயன்படுத்தும் எரிபொருளின் விலை குறைந்துவிட்டது இப்போது. ஆனால் அதன் பலன்கள் மக்களைப் போய்ச் சேர்கிறதா என்பதுதான் இன்றைய கேள்வி.

  சமீபத்தில் கிடுகிடு வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது கச்சா எண்ணெய் விலை. ஆனால் விலை ஏறும்போது கேட்ட கூக் குரல்களை இன்றைக்குக் காணோம். காரணம் முன்பு விட்டதைப் பிடிக்க, இப்போது ‘கமுக்கமாக’ லாபம் பார்த்துக் கொண்டிருப்பதாக பெட்ரோலியத் துறை அமைச்சரே பகிரங்கமாக அறிவித்துள்ளார்
  உதாரணத்துக்கு, ஒரு லிட்டர் விமான பெட்ரோல் (ATF) விலை ரூ.40.69 காசுதான். கிட்டத்தட்ட 24 ரூபாய் குறைத்திருக்கிறார்கள். ஆனால் சாதாரண பெட்ரோலின் விலை 55 ரூபாய்க்கும் அதிகம் (மாநிலங்களில் விதிக்கப்படும் வரிகளைப் பொறுத்து…)

  ஆனால் விமானக் கட்டணங்கள் மட்டும் முன்பைக் காட்டிலும் ஒன்றரை மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. எண்ணெய் விலை ஏற்றத்தைக் காரணம் காட்டி உயர்த்தப்பட்ட விமானக் கட்டணத்தை குறைக்கும் ஐடியாவே எந்த தனியார் ஏர்வேஸூக்கு இல்லை போலிருக்கிறது.

  இந்தப் போக்கைக் கட்டுப்படுத்துவதற்குப் பதில், தனியார் விமான நிறுவனங்களின் லாபத்தைப் பெருக்கும் நடவடிக்கைகளில் மட்டுமே பெட்ரோலியம் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகங்கள் செயல்படுவதாக பெட்ரோலியத் துறையின் முன்னாள் அமைச்சர் ராம் நாயக் குற்றம் சாட்டியுள்ளதை வழக்கமான புகாராகத் தள்ளிவிட முடியாது.

  ஒரு பக்கம் விமான நிறுவனங்கள் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறார் மத்திய நிதி அமைச்சர். ஆனால் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரோ தனியார் விமான நிறுவனங்களுக்குப் பரிந்து கொண்டு வருகிறார். ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கும் இந்த நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் அரசு என பகிரங்கமாகப் பேசி வருகிறார் பிரபுல் பட்டேல்.

  இன்னொரு பக்கம் ‘நஷ்டத்தில் ரத்தக் கண்ணீர் வடிக்கின்றன பெட்ரோல் நிறுவனங்கள்!’ என உருக்கமாகப் பேசும் முரளி தியோராவும் கூட, விமான எரிபொருள்களுக்கு மட்டும் தாராளமான விலைக் குறைப்புச் சலுகைகளை அறிவித்துள்ளார்.

  இதே சலுகைகள் பயணிகளுக்கும் கிடைக்குமா… விமான எரிபொருளுக்கு கிடைத்த வரிச் சலுகைகள், தீர்வை விலக்குகள் சாமானியர்கள் பயன்படுத்தும் சாதா பெட்ரோலுக்கும் கிடைக்குமா?

  நிச்சயம் கிடைக்காது. பேருக்கு ஒரு ரூபாயோ 4 ரூபாயோ குறைத்துவிட்டு அமைதியாகி விடுவார்கள்.

  என்ன செய்தாலும், சாமானியன் தான் சமாளிப்பானே.. முதலாளிகள் தானே ‘பாவம்’!!

 12. Posted by விக்னேஷ் குமார் on நவம்பர் 20, 2008 at 3:41 பிப

  Investor George Sorus has brough GVK power shares in huge quantity. Buy GVK power on every dip for a short term target of Rs. 25.

 13. dear vigneshkumar,

  your comments will be removed by our moderator ..
  my earlier comment also removed by our moderator.

 14. Posted by விக்னேஷ் குமார் on நவம்பர் 20, 2008 at 6:54 பிப

  Dear vimal,
  why does this happens?whats wrong with our comments.

 15. Posted by சாய்கணேஷ் on நவம்பர் 20, 2008 at 7:08 பிப

  dear vimal/ vignesh,

  nothing wrong with your coments…

  தனிபட்ட நபர்களின் வலைப் பக்கத்தின் இணைப்புகளை தவிர்த்து, செய்திகளை தங்களின் கருத்துகளை இங்கு பின்னூட்டமாக எழுதுங்கள்…

  இது ஏற்கனவே நான் சொல்லியது தான்… 🙂

  தவறாக எடுத்து கொள்ளவேண்டாம்…

 16. Thank you sai sir. I read your blog everyday which is very useful for my intraday trading.
  Today also i did intraday trading in RNRL, SAIL, JP ASSOCIATES and earned Rs.4000/- as profit . During every fall i bought and in rise i sold it. Nowadays, traders used to book profit even when the market shows little rise.

 17. Thank you sai sir

  vimal

 18. சாய் சார்.

  இந்த விஷயம் இப்போதுதான் எனக்கு தெரியும்.

  விமல்

 19. Posted by விக்னேஷ் குமார் on நவம்பர் 20, 2008 at 9:50 பிப

  Thank you sai sir.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: