இன்றைய சந்தை – இன்றும் சரியும், இன்னும் சரியும்.


தலைப்பிலேயே மேட்டரை சொல்லியாச்சு இப்ப என்ன எழுதுவது…  

பங்காளி அமெரிக்கா தன்னை நிலைப்படுத்தி கொள்ள ரெம்பவே போராடுகிறார்… ஜனவரி மாதம்  பெரியப்பு புஷ்க்கு ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு.  சித்தப்பு ஒபாமா,  பங்காளி வீட்டுக்கு பொறுப்பு ஏற்று ஏதாவது செய்தால் தான்.  பேச்சுகளில் இருக்கும் அதிரடி செயல்களில் இருக்குமா.  உலக நாடுகளுக்கு அவர் ஒசாமா ஆகாமல் இருந்தால் சரி.

டெக்னிகலில் பார்வையில் சந்தை தன்னை நிலைப்படுத்தி கொள்ளதான் முயற்ச்சிக்கிறது, இன்னும் முழுமையாக நிலைப்படவில்லை.. சரிவுகள் மீதம் உள்ளது,

முதலீட்டாளர்கள் காத்திருக்கவும்,  நல்ல விருந்து படைக்க காத்திருக்கிறது சந்தை. 

இன்றைய சூழ்நிலையில் 2830 ஐ கடக்காமல் Relief Rally சாத்தியமில்லை. 

இன்றய துவக்கமும் அமைதியாக அல்லது சிறிய அளவில் கேப் டவுனாக துவங்கி நாள் நெடுகில் அதை மீட்டெடுக்க போராடும்.

புதிதாக நமது செய்தி பிரிவுக்கு பொறுப்பு ஏற்றிருக்கும் திருமதி பி.எஸ் அவர்களுக்கு வாழ்த்துகள்.  தொடரட்டும் உங்கள் சேவை. பின்னூட்டம் உங்க ஏரியா கலக்குங்க.

நண்பர் ஆர் கே, 

தாங்கள் சொல்வது உண்மைதான்,   தற்போது நான் சொல்வதில் அல்லது எழுதுவதில் சுவாரஸ்யம் குறைந்து உள்ளதாக தெரிகிறது ஒரு சிறு இடைவெளி விட்டு தொடரலாமா என்று கூட யோசிக்கிறேன்.

சந்தையின் போக்கு பற்றி எழுத ஆரம்பித்த பிறகு நான் எழுதியதில், நானே ஆச்சரிய பட்டது, பத்திரமாக Save பண்ணி வைத்துள்ள 4/5  கணிப்புகளில்.

4500 இல் இருந்த போது  4640 ஐ கடந்து செல்லாது,  அதற்கு முன்பாக 4200 உறுதி என்று கணித்தது.

3700 உடைபட்டால் 4300 என்பதே நீண்டகால கனவாக மாறிவிடும் என்று எழுதியது.  உண்மையாகவே 4300 அடுத்த ஐந்தாண்டு திட்டம் போல ஆகி விட்டது.

3200-3300 இருந்த போது சொன்ன டார்கெட் 2500 இன்னும் 200 புள்ளிகள் தான் மீதம் உள்ளது.

 

Tuesday, November 18, 2008
Cash and Future -Day Trading
Calls  Target Result
Sell Bharthi 636/627/615 Target Achieved  (615.60)
Sell Tata Power  696/85 Targets Achieved (677)
Sell DLF 219.00 S/L Triggered – 6 rs loss
Sell Rel Cap  525/519 Targets Achieved – 518 
Buy Tata power  685/697/705 Target Achieved – Low- 702.90
Future 
Calls  Target Result
STBT – 17/11/2008    
Sell Nifty at 2800 2765/2700/2665 Tgts achieved -2665
Sell Nifty at 2750 2725/2700 Tgts achieved  – 2655
Buy Nifty at 267 2700/2725/55 Made high 2697 and closed without loss/profit
Option 
Calls  Target Result
Buy 2700 put 95-97 125/137 Tgts achieved  – high 145.
கட்டண சேவை பெற்று வரும் நண்பர்களே…

சரியான பஸ்சில்/ரயிலில் (கால்ஸ்/எண்ட்ரி) ஏற்றி விட வேண்டிது எனது வேலை. எந்த இடத்தில் (டார்கெட்) இறங்க வேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இன்னும் இறங்குமா அல்லது ஏறுமா என்று என்னிடம் கேட்காதிர்கள்.  கிடைத்த லாபம் போதுமா இல்லையா என்பது அவர் அவர் மன நிலையை பொறுத்தது.  ஒரு வேளை அந்த பஸ் தவறான ரூட்டில் செல்கிறது என்றால் ஸ்டாப்லாஸில் இறங்க வேண்டியது தான்.

பொதுவாக அனைத்து வர்த்தகர்களும் செய்யும் தவறு,   தினசரி அளவை (qty) மாற்றுவது அதவாது இன்று ரிலையன்ஸ் கேப்பிட்டல் 100 வாங்கவோ விற்கவோ செய்திருப்பார், லாபம் கிடைத்திருக்கும், உடனே மனம் எனும் குரங்கு தன் வேலையை காட்டும், 100×25 = 2500 கிடைத்தது, நீ 300 போயிருந்தால் என்ற கேள்வி கேட்கும் உடனே நம்மாளு நாளைக்கு  300 வாங்குவார்.  நஸ்டம் 20×300 = 6000.00 என்றாகிவிடும்.  அடிக்கடி அளவை மாற்றாதிர்கள்.  அது 50/100/200/300 என்று எதுவாக இருந்தாலும்.  சீராக இருக்கட்டும்.

Advertisements

20 responses to this post.

 1. யாஹூ நிறுவனத்திலிருந்து அதன் நிறுவனர்களில் ஒருவரும் தலைமை நிர்வாகியுமான ஜெர்ரி யாங் பதவி விலகுகிறார்.

  கடந்த ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்துடனான வர்த்தக பேரத்தை வலிந்து முறித்துக் கொண்டதால் கோபமடைந்த யாஹூ இயக்குநர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கோபமே அவரைப் பதவி விலக வைத்துள்ளதாகக் கூறுகின்றனர் சர்வதேச வர்த்தக நிபுணர்கள்.

  யாங் வெளியேறினாலும் சீனாவின் அலிபாபா நிறுவனத்துடனான 1 பில்லியன் டாலர் முதலீட்டுத் திட்டத்திலிருந்து யாஹூ பின்வாங்காது என்றே கருதப்படுகிறது.

  தைவானைச் சேர்ந்த ஜெர்ரி யாங், யாஹூவை நிறுவியவர்களில் ஒருவர். அலிபாபா நிறுவனத்துக்கு மிக நெருக்கமானவராகத் திகழ்ந்தவர். அலிபாபா நிறுவனத்தின் பெரும்பாலான வர்த்தக நிகழ்வுகளில் இவரும் உடன் இருந்துள்ளார். சீனாவின் தீவிர ஆதரவாளர்.

  இவரது விலகலால் அலிபாபாவில் யாஹூவுக்கிருந்த 40 சதவிகித பங்குகள் விற்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் ஆரம்பத்தில் நிலவியது.

  ஆனால் சீனாவில் இன்று முன்னணியில் உள்ளது அலிபாபா நிறுவனம். இதில் உள்ள தனது 40 சதவிகித பங்குகளை விற்க யாஹூ முனைந்தால் அது அவர்களுக்குத்தான் பெரும் நஷ்டம் என்பதால், புதிதாக வரும் தலைமை நிர்வாகி அலிபாபாவுடன் உறவைத் தொடர்வார் என்றே எதிர்பார்க்கிறார்கள் வர்த்தக நிபுணர்கள்.

 2. Good work PS.Keep it up.
  Sai, really you are doing an excellent job. There are many silent readers who are benifitting from your blog….keep doing

 3. The response of at least two out of the five sectors to which Finance Minister P Chidambaram appealed to cut product prices in order to revive demand has not been encouraging at all. While the automobile industry outrightly said no to Chidambaram’s plea, the aviation sector largely remained non-committal.

  Automotive manufacturers clarified that high input and operational costs, a sluggish last quarter and an equally disappointing festive season had dented their operating profit. So, any reduction in vehicle prices was not possible at the moment.

  Companies such as Mahindra & Mahindra, Bajaj Auto [Get Quote], Hero Honda and Hyundai Motors ruled out any price cut for now, citing the above reasons.

  Pawan Goenka, President (Automotive Sector), Mahindra & Mahindra, said, “We are yet to recover costs from the surge in raw material prices during April-September this year. We will not cut prices for now, but if the FM withdraws the additional excise duty, which was levied post-budget, then we will definitely pass on the benefit to the customer.”

  “Availability of finance has been a major cause of concern. Banks are not ready to lend to car buyers and this has impacted sales. There is no scope for cutting prices at the moment. If the excise duty is reduced, then we will surely pass on the benefit to our customers,” said Arvind Saxena, Senior Vice President (Marketing and Sales), Hyundai Motors India.

  Similarly, two biggest motorcycle manufacturers in the country–Hero Honda and Bajaj Auto–have also ruled out any price cuts.
  Chidambaram had reduced excise duty on cars and two-wheelers from 16 per cent to 12 per cent during the last budget, following which all auto-makers had agreed to pass on the benefit to the customer. However, instead of keeping their word, they hiked vehicle prices twice this year.

  Unlike the auto-makers, most of the airlines have been non-committal about a reduction in air fare following the FM’s appeal. Probably, Kingfisher is the only airline that said a price reduction was not possible at this point in time.

  Air India refused to comment on the issue and SpiceJet said that they were still reviewing the situation.

  “It is very easy for the FM to tell the airlines to cut prices. But what one has to understand is that in the last six-to-eight months when fuel prices roared, we accumulated tremendous amount of arrears that we still have to pay.

  Also, the savings that we have made out of the benefits will be only visible from next month. We might evaluate a lowering of prices only after that,” said Hitesh Patel, Executive Vice President, Kingfisher Airlines.

  When contacted, a SpiceJet spokesperson said, “We will have to review our pricing. But, we have not yet taken a call on it.” Airlines, especially full service carriers, have not passed on to the customer the benefit of ATF price cuts in the last three months.

  Meanwhile, in its review of the aviation sector, a committee headed by Prime Minister Manmohan Singh today expressed concern over the falling passenger traffic and asked the Civil Aviation Ministry to take up the possibility of lowering fares with airlines.

 4. நிதி நெருக்கடி: ஹோட்டல், குடியிருப்புத் திட்டங்களை ஒத்திப் போட்டது டி.எல்.எப்

  உலகளாவிய பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள தாக்கத்தால், தனது வீடு கட்டும் திட்டங்கள் மற்றும் ஹோட்டல் திட்டங்கள் சிலவற்றை நாட்டின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான டி.எல்.எப். ஒத்திவைத்துள்ளது.

  உலகளாவிய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளில் ரியல் எஸ்டேட்டும் ஒன்று.

  இதன் காரணமாக நாட்டின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான டி.எல்.எப். தனது வீடு கட்டும் திட்டங்கள் மற்றும் ஹோட்டல் திட்டங்கள் சிலவற்றை நிறுத்தி வைத்துள்ளது.

  இதுகுறித்து நிறுவனத் தலைவர் கே.பி.சிங் கூறுகையில், சில குடியிருப்பு, வர்த்தக மற்றும் ஹோட்டல் திட்டங்களை நிறுத்தி வைத்துள்ளோம். நிதி நெருக்கடி மற்றும் வாடிக்கையாளர்கள் ஆர்வமின்மை காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளோம்.

  வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் அதிகரித்து வருவதால் வீடுகளின் தேவைகள் குறைந்துள்ளன. வீட்டுக் கடன் வட்டிகள் 7 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும். அப்போதுதான் நிலைமை சகஜமாகும் என்றார் அவர்.

  எத்தனை திட்டங்களை டி.எல்.எப் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது என்பதை கே.பி.சிங் தெரிவிக்கவில்லை.

 5. ரூ. 1500 கோடி முதலீட்டில் 325 கடைகள் திறக்கும் ஸ்பென்சர்

  ஆர்.பி.ஜி. குழுமத்தைச் சேர்ந்த ஸ்பென்சர் ரீடெய்ல் நிறுவனம் நாடு முழுவதும் 325 புதிய கிளைகளைத் திறக்கவுள்ளது. இதற்காக ரூ. 1500 கோடியை அது முதலீடு செய்யவுள்ளது.

  அடுத்த 15 மாதங்களில் இந்த அதிரடிக் கிளைத் திறப்புகளை மேற்கொள்ளவுள்ளது ஸ்பென்சர் ரீடெய்ல். இதன் மூலம் தங்களது வர்த்தகம் 60 சதவீதம் உயரும் எனவும் அது தெரிவித்துள்ளது.

  இதுகுறித்து நிறுவனத்தின் துணைத் தலைவர் சஞ்சீவ் கோயங்கா கூறுகையில், அடுத்த 15 மாதங்களில் அனைத்து வகையான நிறுவனங்களை – மொத்தம் 325 ஸ்டோர்கள் – திறக்கவுள்ளோம். இதற்காக ரூ. 1500 கோடியை முதலீடு செய்யப் போகிறோம்.

  குழுமத்திற்குள்ளிருந்தே இதற்கான நிதியை ஒதுக்கவுள்ளோம்.

  6 மாதங்களுக்கு முன்பு நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு ரீடெய்ல் வர்த்தகம் இல்லை. பொருளாதார மந்த நிலைதான் இதற்குக் காரணம்.

  இருப்பினும் ஸ்பென்சர் நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கை எதையும் நாங்கள் மேற்கொள்ளப் போவதில்லை. தற்போது வேலையில் உள்ளவர்களின் வேலை பாதுகாப்பில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இருப்பினும் வருங்காலத்தில் ஆட்கள் எடுப்பதில் சற்று நிதானப் போக்கை கடைப்பிடிக்கவுள்ளோம் என்றார்.

  ஸ்பென்சர் ரீடெய்ல் நிறுவனத்திற்கு தற்போது நாடு முழுவதும் 406 கடைகள் உள்ளன. இவற்றில் வர்த்தகம் சரியாக இல்லாததால் 56 கடைகளை கடந்த 3 மாதத்தில் மூடியுள்ளனர். இந்தக் கடைகளின் வருவாய், மொத்த வர்த்தகத்தில் 12 சதவீதமாகும்.

  பொருளாதார நெருக்கடியால், ஏராளமான நிறுவனங்கள் தடுமாறிக் கொண்டிருக்கையில், ஆயிரக்கணக்கான கோடிகளை ஸ்பென்சர் நிறுவனம் கொட்டவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 6. இன்டெல் நிறுவனத்தின் புதிய பிராசஸர் வெளியீடு

  இன்டெல் நிறுவனத்தின் புதிய, நவீன டெஸ்க் டாப் பிராசஸர், இன்டெல் கோர் ஐ7 மும்பையில் வெளியிடப்பட்டது.

  நெஹேலம் பிராசஸர் வரிசையில் வெளியாகும் முதல் பிராசஸர் இது என்பது குறிப்பிடத்தக்கது. இன்டெல் நிறுவனத்தின் பிராசஸர்களிலேயே மிகவும் நவீனமானது, அதிக வசதிகளைக் கொண்ட பிராசஸர் இதுதான்.

  புதிய பிரசாஸரை அறிமுகப்படுத்தி பேசிய இன்டெல் ஐ7 விற்பனை மார்க்கெட்டிங் குழு இயக்குநர் ராஜேஷ் குப்தா கூறுகையில், வீடியோ எடிட்டிங், விளையாட்டு, மற்றும் பிற இன்டர்நெட் செயல்பாடுகள், கம்ப்யூட்டர் செயல்பாடுகளை இந்த பிரசாஸர் விரைவுபடுத்தும்.

  மின்சாரத்தை அதிகம் உறிஞ்சாமல் கூடுதல் வேலையை இது செய்வது முக்கியமானது.

  இன்டெல்லின் ஹைபர் திரெடிங் தொழில்நுட்பத்துடன் கூடியது புதிய ஐ7 பிராசஸர். ஒரே நேரத்தில் பலவிதமான வேலைகளை செய்யக் கூடிய திறனும் இந்த பிராசஸருக்கு உண்டு என்றார் அவர்..

 7. Government considering further cut in CRR, SLR
  The Reserve Bank of India [Get Quote] is expected to announce another round of rate cuts in a week or so in an effort to ease liquidity and reduce borrowing costs to counter slowing economic growth, senior government officials told Business Standard

 8. வணக்கம் சாய் சார்…

  எந்த ஒரு விசயத்தையும் தொடர்ந்து செய்து வந்தால், ஒரு சில நேரங்களில் அலுப்புத்தட்டும்… இது இயற்க்கை தான்… இன்னும் சிறிது நாட்க்களில் நமக்கும் எழுதுவதற்கு சுவையான செய்திகள் கிடைக்கும் போல் தான் தெரிகிறது.. :))

  புதிய செய்தி தொடர்பாளருக்கு வாழ்த்துக்கள்.. ;))

 9. //பொதுவாக அனைத்து வர்த்தகர்களும் செய்யும் தவறு, தினசரி அளவை (qty) மாற்றுவது…//

  WELL SAID

  மேலும் அடுத்து வரும் பல நல்ல வாய்ப்புகளை இழக்கவும் வழி வகை செய்கிறது.

  புதிய செய்தி பகிர்வாருக்கு நன்றி+வாழ்த்துக்கள்… 🙂

 10. இன்றைய பதிவு நன்றாக வந்துள்ளது..

  // சந்தையின் போக்கு பற்றி எழுத ஆரம்பித்த பிறகு நான் எழுதியதில், நானே ஆச்சரிய பட்டது, பத்திரமாக Save பண்ணி வைத்துள்ள 4/5 கணிப்புகளில்.

  4500 இல் இருந்த போது 4640 ஐ கடந்து செல்லாது, அதற்கு முன்பாக 4200 உறுதி என்று கணித்தது.

  3700 உடைபட்டால் 4300 என்பதே நீண்டகால கனவாக மாறிவிடும் என்று எழுதியது. உண்மையாகவே 4300 அடுத்த ஐந்தாண்டு திட்டம் போல ஆகி விட்டது.

  3200-3300 இருந்த போது சொன்ன டார்கெட் 2500 இன்னும் 200 புள்ளிகள் தான் மீதம் உள்ளது. //

  இதைத்தான் நான் நேற்று சுட்டி காட்டினேன்..

  ஒரு பேட்டர்ன் உருவாகும் போது அதை கவனித்து இது இங்குதான் செல்லும் என கணிப்பதில்தான் வெற்றி இருக்கிறது.அதை திறம்பட செய்து வருகிறீர்கள்..( your predictions are working out at all levels like intra day / 1&2 days movement & 1/2 week/month movement..you are a player who simply rocks in T20/1day and in test mathces too)

 11. காலை வணக்கம்..

 12. டெல்லியில், இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் சர்வதேச பொருளாதார அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்த பொருளாதார சிக்கல்கள் குறித்த மாநாட்டில் பேசிய சிதம்பரம்,

  விமான நிறுவனங்கள் பயணக் கட்டணத்தையும், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் விலைகளையும், மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள் அவற்றின் விலையையும் உடனடியாகக் குறைக்க வேண்டும்.

  இதன் மூலம் தான் உங்கள் விற்பனையை அதிகரிக்க முடியும். விற்பனை தொய்வில்லாமல் இருந்தால் தான் உங்கள் நிறுவனங்களும் உங்களைச் சார்ந்த பிற நிறுவனங்களும் பிழைக்க முடியும், தொழிலாளர்களைக் காப்பாற்ற முடியும்.

  மக்கள் பொருள்களை வாங்கினால் தான் நாட்டின் பொருளாதாரம் தப்பும்.

  தினமும் சென்செக்ஸையும் நிப்டியையும் (தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண்) பார்த்துக் கொண்டிருக்காதீர்கள். அவை நமக்குத் தருவது ஒரு தோராயமான கணிப்பைத் தான். அதை வைத்துக் கொண்டு நாம் எந்த அவசர நடவடிக்கையும் எடுக்கக் கூடாது.

  நாட்டின் பொருளாதார நிலையை நிதியமைச்சகமும் அதிகாரிகளும் 24 மணி நேரமும், வாரத்தில் 7 நாட்களும் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறோம். நமது பொருளாதாரம் ஏராளமான கட்டுப்பாடுகளைக் கொண்டது, இதனால் நமக்கு இதுவரை பெரிய பாதிப்பு ஏதும் இல்லை. இருந்தாலும் உலகளாவிய சிக்கல்களில் இருந்து நாம் தப்ப முடியாது.

  லாபம் மட்டுமே முக்கியமல்ல. நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும், ஸ்திரத்தன்மையையும் நிறுவனங்களும் வங்கிகளும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

  இங்கே வந்திருக்கும் பெரும்பாலான நிறுவனங்களின் அதிபர்கள், 30 சதவீத லாபத்தையும் ஆண்டுதோறும் 9 சதவீத வளர்ச்சியையும் கண்டு வருபவர்கள். நீங்கள் 9 முதல் 10 சதவீத லாபத்தில் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கொள்ளை லாப நிறுவனங்களை மறைமுகமாத் தாக்கி ஒரு போடு போட்டார் சிதம்பரம்.

  எங்களால் முடியாது.. வங்கிகள் தான் செய்யனும்:

  ஆனால், நிதியமைச்சரின் விலை குறைப்பு யோசனையை பெரும்பாலான நிறுவனங்கள் ஏற்க மறுத்துள்ளன.

  பஜாஜ் நிறுவனத்தின் தலைவர் ராகுல் பஜாஜ் கூறுகையில், கடந்த பல மாதங்களாகவே இரு சக்கர வாகன உற்பத்தியாளர்கள் விலை குறைப்பைத் தானே செய்து கொண்டு வருகிறோம். இனியும் இதில் குறைக்க என்ன இருக்கிறது. எங்களுக்கு ஒரு வாகனத்துக்கு 30 சதவீத லாபம் எல்லாம் கிடைப்பதில்லை. 4 முதல் 5 சதவீத லாபம் தான் கிடைக்கிறது. இது ரொம்ப கம்பி, இதில் இன்னும் விலையைக் குறைக்க வழியே இல்லை.

  வங்கிகள் தான் கடன்களுக்கான வட்டியைக் குறைத்து மக்களிடையே வாங்கும் சக்தியை அதிகரிக்க முயல வேண்டும்.

  இதே கருத்தையே ஹீரோ ஹோண்ட அதிபர் பிரிஜ் மோகனும் எதிரொலித்தார். ஊதியங்களும் பெட்ரோல் விலையும் மின்சார கட்டணமும் உயர்ந்து கொண்டிருக்கும் வரை எங்களால் விலையைக் குறைக்க முடியாது என்றார்.

  எங்களால் முடியாது.. ரிசர்வ் வங்கி தான் பார்க்கனும்:

  ஐசிஐசிஐ தலைவர் காமத் கூறுகையில், வங்கிகள் கடன் வட்டியைக் குறைக்க வேண்டுமானால் ரிசர்வ் வங்கி ரெபோ ரேட்டையும் (வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தரும் கடனுக்கான வட்டி) சிஆர்ஆர்யையும் (வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய கட்டாய முதலீடு) இன்னும் குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் வட்டியைக் குறைக்க சாத்தியமில்லை.

  இந்தியாவைப் பொறுத்தவரை சிஆர்ஆர், ரெபோ ரேட்டை இன்னும் 2.5 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை குறைக்கலாம் என்றார்.

  எங்களால் முடியாது.. ரியல் எஸ்டேட் தான் கவனிக்கனும்:

  மேலும் அவர் கூறுகையில், மக்களிடையே வாங்கும் ஆர்வத்தை அதிகரிக்க ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் பிற நிறுவனங்களும் தான் வீடுகள், அப்பார்ட்மெண்டின் விலையைக் குறைக்க வேண்டும் என்றார்.

  எங்களால் முடியாது.. வங்கிகள தான் உதவனும்:

  ஆனால், டிஎல்எப் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் தலைவர் கே.பி.சிங் கூறுகையில், ஏற்கனவே ரியல் எஸ்டேட் துறை நஷ்டத்தில் மூழ்கிக் கிடக்கிறது. இதில் இன்னும் விலை குறைப்புக்கு சாத்தியம் எங்கே இருக்கிறது. வட்டி விகிதங்களை வங்கிகள் 7 சதவீதம் அளவுக்குக் குறைத்தால் தான் ரியல் எஸ்டேட் துறை பிழைக்க முடியும்.

  இப்போதிருக்கும் வட்டிக்கு யாரால் கடன் வாங்கிவிட்டு ஒழுங்காக இஎம்ஐ கட்ட முடியும் என்றார்.

  மொத்தத்தில் எல்லோரும் சேர்ந்து மீண்டும் பந்தை ப.சிதம்பரத்திடமே போட்டுவிட்டனர்.

 13. hi all

  Max newyork life insurance INDIA to hire 44000
  http://in.yahoo.com/s/93229

  //..மொத்தத்தில் எல்லோரும் சேர்ந்து மீண்டும் பந்தை ப.சிதம்பரத்திடமே போட்டுவிட்டனர்..//

  So, as usual we are the SCAPE GOATS…

 14. //முதலீட்டாளர்கள் காத்திருக்கவும், நல்ல விருந்து படைக்க காத்திருக்கிறது சந்தை.//

  Dear Sai Sir,
  Iam very much waiting for the market and waiting for your signal and portfolio

 15. ps very super ur comment

 16. thanks sir

 17. பிரியா மேடம் சும்மா அள்ளி தெளிக்கிறிங்க……..

 18. I always fix my target after buying /selling to make profit.
  For example, if buy 2000 JP ASSOCIATES for 69.50
  I will put the order for selling at 70.50 so that if the market goes up it will automatically traded.
  If we modify the target in the volatile market nowdays, we wont get profit but we incur loss.]

  This is the secret for making profit in intraday trading. Even if the market goes up, i won’t care the imaginatory profit.

 19. சாய் சார் கொடுத்த டிப்ஸ்ன் சில தமிழாக்கங்கள்….

  (1)முதலில் நீங்கள் INVESTOR அல்லது DAY TRADER என்பதை முடிவு செய்யவும்

  (2)நீங்கள் செய்த வர்த்தகம் உங்களுக்கு எதிராக செல்வதை உணர்ந்தால்…தயவு செய்து எப்போது வெளி வரலாம் என்று உணர்ச்சி வசப்படாமல் சிந்திக்கவும்…

  (3)அதிக எண்ணிக்கையில் வர்த்தகமாகும் பங்குகளை தேர்ந்தேடுக்கவும்…..(Active & High volume stocks)

  (4)தயவு செய்து குறைந்த விலையில் கிடைக்கிறது என்று வாங்காதீர்கள் ……(ஏனென்றால் இன்னும் விலை குறைய நிறைய வாய்ப்பு இருக்கும்…)

  (5)அதிகமாக வர்த்தகம்(TRADING) செய்வதை தவிருங்கள்…

  (6)நம் மக்கள் பலர் நஷ்டம் வந்தால் கை கட்டி கொண்டு பார்த்து கொண்டு இருப்பார்கள் ஆனால் அதே லாபத்தே வளர விட மாட்டார்கள் …உடனே கவர் செய்து விடுவார்கள் …..அதனால் ஒவ்வொரு வர்த்தகத்திலும் ஸ்டாப்-லாஸ் கண்டிப்பாக பின்பற்றுங்கள் ….

  (7)நஷ்டத்தை குறைக்க மீண்டும் வாங்கியோ அல்லது விற்றோ ஆவ்வேரஜ் செய்யாதீர்கள்….அந்த வர்த்தகத்தை மறந்து அடுத்த வர்த்தகத்திற்கு தயாராகுங்கள்….

  (8)இன்னும் சிலர் இருக்கிறார்கள், எதாவது ஒன்று அல்லது இரண்டு பங்குகளை மட்டுமே பார்த்து கொண்டு இருப்பார்கள்….சில சமயம் நாம் எதிர் பார்த்த நகர்வுகளை அந்த பங்கு தராமல் பல் இளித்து விடும்…அதனால் ஊரோடு ஒத்து வாழ் என்பதற்கிணங்க தினசரி கூட வெவ்வேறு பங்குகளில் வர்த்தகம் செய்யலாம்… (வர்த்தகம் தொடங்குவதற்கு முன் அதன் நகர்வுகளை மனதில் நிலை நிறுத்திக் கொள்ளவும் )

  (9)தினமும் நீங்கள் செய்த வர்த்தகத்தின் வெற்றி தோல்விகளை குறிப்பெடுத்து கொள்ளுங்கள்…தோல்விகளை எல்லாம் வெற்றி ஆக்கும் வழிகளை கண்டறியுங்கள்….
  வெற்றி தோல்விகளை பக்குவமாக எடுத்து கொள்ள மனத்தை தயார் படுத்துங்கள்….

  (10)ஒரு நாளைக்கு சுமார் 50000 TO 70000 கோடிகள் வர்த்தகம் ஆகின்றன …இதில் என்னால் நான் விருப்பப்பட்ட நேரத்தில் எனக்கு தேவையான பணத்தை எடுத்து கொள்ள முடியும் என்ற எண்ணத்திற்கு வாருங்கள் … என் வீட்டு பீரோவிலிருந்து பைசா எடுக்க எனக்கென்ன பயம் என்ற நிலை வர வேண்டும். எப்போ வேணும்னாலும் நாம கோடிகள் சம்பாதிக்கலாம் ….. (WAIT FOR THE RIGHT TIME)

 20. hi all

  Finally FII selling has CROSSED 1Lakh CRORE Mark.

  http://www.bseindia.com/mktlive/market_summ/categorywise_turnover.asp

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: