இன்றைய சந்தையின் போக்கு 18.11.2008


கடந்த சில தினங்களாக எதிர்பார்ப்புகளை ஒட்டிய நகர்வுகள்,  தினவர்த்தகத்திற்கு உகந்த ஆரவாரமற்ற தெளிந்த நீரோடை போன்ற சூழல். 

8000 என்ற சப்போர்ட்டை உடைக்க முயற்ச்சிக்கும் Dow Jones,  அதனால் சரிவுகள், அதை உன்னிப்பாக கவனித்து வரும் உலக சந்தைகள். 

நம்பிக்கை இழந்த நிலையில் கிடைத்த வாய்ப்பை பயன் படுத்தி, அடுத்தடுத்து சதம் அடித்து விஸ்வரூபம் எடுத்து நிற்கும் யுவராஜை போல ஏதாவது ஒரு நிகழ்வு சந்தையை சீற்றம் காண வைக்காதா என ஏங்கும் முதலீட்டாளர்கள்.

தொடர் சதம் அடித்து வரும் கரடியை யாரும் ரசிக்கவில்லை, தினவர்த்தகர்களை தவிர.

ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கும் முன்னனி நிறுவனங்கள், அதுவும் 10, 20, 50 ஆயிரம் என்ற அளவில். அதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பது தெரியாத சூழ்நிலை.

என்னடா சம்மந்தம் இல்லாமல் ஏதேதோ எழுதுகிறான் என்று யோசிக்க வேண்டாம்.. இன்றும் சரியும், இன்னும் சரியும் என்று ஒரு வரி செய்தியை எப்படி எழுதுவது.

இன்றை துவக்கம் சிறிய அளவில் கேப் டவுனாக துவங்கி நாள் நெடுகில் அதை மீட்டெடுக்க போராடும் (அப் போரட்டத்தில் தோற்கும் வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன)

நேற்றைய தினம் –  சர்வதேச முதலீட்டாளர்கள் விற்றது 2716 கோடிகள்,  வாங்கியது 2152 கோடிகள் = -564 கோடிகள்.

சேம நிதி நிறுவனங்கள் – விற்றது 620 கோடிகள்,  வாங்கியது 316 கோடிகள் = -304 கோடிகள்.

நண்பர்களே…

பின்னூட்ட பகுதியை விவாதங்களுக்கான,  செய்தி, மற்றும் கருத்து பரிமாற்றங்களுக்கான தளமாக பயன் படுத்துங்கள் என்றழைப்புக்கு பிறகும், எந்த ஒரு பயனும் இல்லை.

பின்னூட்டம் எழுத கூட நேரமில்லாத ஒரு பரபரப்பான வாழ்க்கையாகி போய்விட்டது, வர்த்தகர்களின் நிலை.

நேற்றைய பரிந்துரைகளை பாராட்டிய திரு முன்னாவர் பாஷா,  இந்த வலை உலகம் எனக்கு தந்த அருமை நண்பர் ஆர் கே, மற்றும் திரு மகேஸ் ஆகியோருக்கு மிக்க நன்றிகள்.

மகேஸ் – உங்களின் பின்னூட்டத்தை பார்த்து சிரித்தேன், வருமானத்தை பாருங்கள். கட்ட வேண்டியதை கட்டிட்டா போச்சு,   கூடுமான வரை மீண்டும் பழைய தவறுகளை திரும்ப செய்யாதீர்கள்.  வரும் லாபத்தை பத்திரமா பார்த்துகங்க…  அதையும் வர்த்தகத்தில் பயன் படுத்த வேண்டாம்.  என்மீது அளவுக்கு அதிகமான எதிர் பார்ப்புகளை வைத்து செயல் படவேண்டாம், எதிர்பார்ப்புகள்  பொய்க்கும் போது தான்  உறவில் விரிசல் விழுகிறது.  சந்திக்கலாம் கூடிய விரைவில். 

Monday, November 17, 2008
Cash and Future -Day Trading
Calls  Target Result
sell fin tech 680/75 Target Achieved 
Sell Bhel  1225.00 not excuted
Sell ONGC 680/673/665 Target Achieved Low – 668
Divis Lab sell 1180/75 Targets Achieved
Sell Tata Power  731/725 Target Achieved – Low- 691
Future 
Calls  Target Result
SELL NIFTY 2750/38/25/665 Tgts achieved -Low 2695
Buy Nifty 2725/55 Tgts achieved – high 2810
Short Nifty  2765/2700/2625 In Position
Option 
Calls  Target Result
Buy 2700 put 120 151 Tgts achieved 
Advertisements

21 responses to this post.

 1. A short trading in JAIPRAKASH ASSOCIATES gave me good profit for the past few days.

  Your views are very useful for intraday traders like me.

  Thank you very much and keep it up.

 2. தல வர வர நீங்க T.R மாதிரி கவிதை எல்லாம் சொல்ல ஆரம்பிச்சுடீங்க… இன்னிக்கு பதிவு நல்லா இருக்கு… ஆமா விவாத மேடை ல என்ன பிரச்சனை????

 3. Posted by சாய்கணேஷ் on நவம்பர் 18, 2008 at 9:51 முப

  விவாத மேடையை காணாம் கிறது தான் பிரச்சினை.. சிம்பா…

 4. நேற்று படிக்கவேண்டிய கோல்டன் ரூல்ஸ் இன்றுதான் படித்தேன்.BETTER LATE THAN NEVER.அனைவருக்கும் உதவக்கூடியது. நன்றி.

 5. thanks sir

 6. GOOD MORNING.

  //என்மீது அளவுக்கு அதிகமான எதிர் பார்ப்புகளை வைத்து செயல் படவேண்டாம், எதிர்பார்ப்புகள் பொய்க்கும் போது தான் உறவில் விரிசல் விழுகிறது.//

  100% உண்மையான வார்த்தைகள் சாய்.

 7. சாய்… கடந்த சில நாட்களாக வேலையின் காரணமாக பின்னூடம் இடமுடியவில்லை. இந்த வாரம் இறுதிவரை இன்நிலை தொடரும்….

  வெள்ளிகிழமை திரு ராம் பிரசாத் பின்னூட்டம் மிகவும் அருமை. ராம் பிரசாத் உங்கள் புக்மாக்கை நீங்கள் உங்கள் கணினியில் வைக்காமல் http://delicious.com போன்ற இனைய தளத்தில் வைத்தால் பாதுகப்பாகவும் இருக்கும் மேலும் உங்களுடைய புக்மாக்கை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் முடியும்.

  விக்னேஷ் குமார் நீங்கள் டெக்னிகல் பற்றி படிக்க இந்த இணையத்தளம் செல்லாம் நான் தற்போது இதில் இருந்து தான் படிக்கின்றேன்.

  http://stockcharts.com/school/doku.php?id=chart_school:chart_analysis

  விடியோ திரையில் பாக்க… (சில நாட்களுக்கு முன்பு புக்மார் செய்தது நான் இன்னும் பார்க்கவில்லை) நீங்கள் பார்த்து நன்றாக இருந்தால் உங்கள் கருத்தை கூறவும்.

  http://video.google.com/videoplay?docid=3236390700554076825&hl=en

  http://www.elitetrader.com/vb/showthread.php?s=&threadid=95437.

  மேல் உள்ள குறிப்புகள் நம் வலைப்பூ வாசகர்களுக்கு உதவும் என நம்புகின்றேன்….

 8. நன்றி ஃபைசல் சார்.கண்டிப்பாக நீங்கள் அளித்த தகவல்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

 9. // இன்றும் சரியும், இன்னும் சரியும் என்று ஒரு வரி செய்தியை எப்படி எழுதுவது.

  இன்றை துவக்கம் சிறிய அளவில் கேப் டவுனாக துவங்கி நாள் நெடுகில் அதை மீட்டெடுக்க போராடும் (அப் போரட்டத்தில் தோற்கும் வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன) //

  இப்போதெல்லாம் பதிவுகள் படிப்பதில் சுவராஸ்யமே இல்லை 🙂

  பின்னே, நீங்கள் பாட்டுக்கு அன்று நடக்க இருப்பதை புட்டு புட்டு வைத்தால்..சப்பென்று ஆகி விடுகிறது..

  just kidding…we all are not only escaping from the crisis but making handsome profits in this market condition..KUDOS!!!!

 10. ஒபாமா டீமில் இன்னொரு இந்தியர்…….

  http://www.rediff.com/news/2008/nov/18uspoll-another-indian-american-in-obama-transition-team.htm

 11. ஒபாமாவின் ஆலோசனை குழுவில் இன்னொரு இந்தியர்

  வாஷிங்டன்: அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றவுள்ள பராக் ஒபாமா தனது ஆலோசகராக மேலும் ஒரு இந்தியரை நியமித்துள்ளார்.

  ஏற்கனவே சோனால் ஷா, ப்ரீத்தா பன்சால் ஆகியோரை தனது ஆலோசனைக் குழுவில் இடம் பெறச் செய்துள்ள ஒபாமா அடுத்ததாக அன்ஜான் முகர்ஜி என்ற இந்தியரையும் தனது 15 பேர் கொண்ட குழுவில் சேர்த்துக் கொண்டுள்ளார்.

  இவர் அமெரிக்காவின் முன்னணி நிதி முதலீட்டு நிறுவனமான பிளாக்ஸ்டோனின் நிர்வாக இயக்குனராக உள்ளார். இவர் ஒபாமாவுக்கு பொருளாதாரம் மற்றும் சர்வதேச வர்த்தகம் குறித்த ஆலோசனைகளைத் தரவுள்ளார்.

  இவர் தவிர நிகோலஸ் ரத்தோட் என்ற இந்தியருக்கும் வெள்ளை மாளிகையில் மிக முக்கியப் பொறுப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

  அமெரிக்காவில் சுமார் 30 லட்சம் இந்தியர்கள் வசிப்பது குறிப்பிடத்தக்கது.
  Source: Oneindia

 12. Posted by விக்னேஷ் குமார் on நவம்பர் 18, 2008 at 1:40 பிப

  Thank you so much Faizal sir, surely ill try out those blogs and share with others.
  Also i thank mr.ramprasad.

 13. இந்தியாவின் இரண்டாவது பெரிய சாப்ட்வேர் நிறுவனம் எனப்படும் இன்போஸிஸ் 25000 பேருக்கு வேலை தரும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.

  எந்த செய்தித்தாளை அல்லது வலைதளத்தைப் பார்த்தாலும், ஆயிரக்கணக்கான வேலை இழப்புகள் மட்டுமே செய்திகளாக வரும் இந்த நாட்களில் இந்தச் செய்தி நிச்சயம் ஒரு இனிய மாறுதல்தான்.

  வரும் நிதியாண்டில் ஐரோப்பா மற்றும் ஜப்பான் நிறுவனங்களிடமிருந்து கணிசமான ஆர்டர்களை இன்போஸிஸ் எதிர்பார்க்கிறது. எனவே இந்த புதிய திட்டம் எளிதாக நடைமுறைப்படுத்தப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது இந்நிறுவனம்.

  இதுகுறித்து இன்போஸிஸ் முதன்மை செயல் அலுவலர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், நடப்பு ஆண்டில் இன்போஸிஸ் வருவாயில் சற்று சுணக்கம் காணப்பட்டாலும், வரும் ஆண்டுகளில் நல்ல வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம். வெளிநாட்டு ஆர்டர்கள் நிறையக் கிடைக்கும் சாத்தியக் கூறுகள் உள்ளன.

  இந்த வேலைகளைச் செய்ய 25 ஆயிரம் பேரை புதிதாக நியமிக்கிறோம். ஏற்கெனவே 9 ஆயிரம் பேருக்கு வேலைக்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 16 ஆயிரம் பேர் விரைவில் தேர்வு செய்யப்படுவார்கள் என்றார்.

 14. thanks for your service

 15. டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ் நிறுவனம் சீனாவில் தனது நான்காவது டெலிவரி மையத்தைத் திறந்துள்ளது.

  சீனாவின் தியான்ஜின் நகரில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மொத்தம் 300 ஊழியர்கள் பணியாற்றுவார்கள். ஏற்கனவே பெய்ஜிங், ஷாங்காய், ஹாங்ஷோ ஆகிய நகரங்களிலும் டிஎசிஎஸ்ஸின் டெலிவரி மையங்கள் உள்ளன.

  ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய சந்தைகளுக்கான பிபிஓ பணிகளை தியான்ஜின் மையம் கவனித்துக் கொள்ளும் என டிசிஎஸ் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

 16. பொருளாதாரம் பாதிக்காமல் தடுக்க நாட்டின அனைத்துப் பிரிவு வர்த்தகர்களும், தொழில் நிறுவனங்களும் விலையைக் குறைக்க முயற்சிக்க வேண்டும் என நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேட்டுக் கொண்டுள்ளார்.

  குறிப்பாக வாகன உற்பத்தியாளர்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், விமான நிறுவனங்கள் மற்றும் ஹோட்டல்கள் கட்டணங்களை குறைக்க வேண்டும் சிதம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார்.

  அதேநேரம் உலக பொருளாதார மந்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கான சுங்கத் தீர்வையைக் குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அவர் இன்று உறுதி அளித்துள்ளார்.

  டெல்லியில், இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் சர்வதேச பொருளாதார அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்திய பொருளாதார உச்சி மாநாட்டில் பங்கேற்ற சிதம்பரம் கூறியதாவது:

  விமான நிறுவனங்கள் பயணக் கட்டணத்தையும், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் விலைகளையும், மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள் அவற்றின் விலையையும் உடனடியாகக் குறைக்க வேண்டும்.

  நாட்டின் உற்பத்தி பாதிக்கப்படாமல் இருக்கவும், மோசமான விளைவுகளை முன்கூட்டியே தடுக்கவும்தான் இந்த வேண்டுகோளை முன் வைக்கிறேன். இப்போது லாபம் மட்டுமே முக்கியமல்ல. நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும், ஸ்திரத்தன்மையையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார் சிதம்பரம்.

 17. இரு சக்கர நான்கு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையைக் குறைக்க வேண்டும் என்ற மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் யோசனையால் ஒரு பலனும் ஏற்பட்டுவிடாது என பஜாஜ் நிறுவனத் தலைவர் ராகுல் பஜாஜ் அறிவித்துள்ளார்.

  வேண்டுமானால் வட்டி விகிதத்தைக் குறைக்க அரசும் நிதி நிறுவனங்களும் முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  சிஐஐ எனப்படும் இந்திய தொழில் கூட்டமைப்பின் முன்னால் தலைவரான ராகுல் பஜாஜ் இதுகுறித்துக் கூறியதாவது:

  இரு சக்கர மோட்டார் வாகனங்கள் சாமானிய மக்களின் அத்தியாவசியத் தேவைகளுள் ஒன்றாகிவிட்டன. இவற்றின் விலையைக் குறைத்து ஒன்றும் ஆகப் போவதில்லை. பெரிய பொருளாதார மாற்றம் எதையும் கொண்டு வந்துவிடவும் முடியாது. அதைவிட, அனைத்து வங்கிகளும் சாதாரண மக்களுக்கு கடன் வழங்குவதில் மும்முரம் காட்டலாம். வட்டி விகிதத்தைக் குறைக்கலாம். இதன் மூலம் வாங்கும் சக்தி அதிகரிக்கும். தொழிலும் காப்பாற்றப்படும்.

  வங்கிகள் வீட்டுக் கடன்களுக்குத் தரும் முக்கியத்துவத்தை வாகனக் கடன்களுக்கும் தரவேண்டும். இதற்கு மத்திய அமைச்சர் சிதம்பரமும், ரிசர்வ் வங்கி கவர்னரும் ஆவண செய்வார்களா..?, என்றார்.

  அதேபோல சுங்க வரியைக் குறைப்பதால் பெரிய மாற்றம் எதுவும் வந்துவிடாது என கருத்து தெரிவித்துள்ளார் பஜாஜ்.

 18. பின்னூட்டம் குறைவாக வருகிறது என்று சொன்னாலும் சொன்னார். இந்த ப்ளாக்கையே நியூஸ் ப்ளாக்கா மாத்திட்டீங்களேப்பா….

  பங்கு சந்தையில் பணம் பண்ணலாம் வாங்க போய்

  நியூஸை உடனடியா தெரிஞ்சுக்கலாம் வாங்கன்னு மாத்திட போறாங்க.

 19. வர்த்தக செய்திகள் இல்லாமல் பங்குசந்தை இல்லை.செய்திகளின் முக்கியத்துவம் பங்குசந்தையில் விளையாடும் அனைவருக்கும் தெரிந்தது தானே..இச்செய்திகள் இப்பின்னூட்டங்களை பார்க்கும் ஒரு சிலருக்காவது உபயோகமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தான் நான் படித்ததை படித்தவுடன் பின்னூட்டமாக அனுப்பினேன்.ஒரு சிலருக்காவது உபயோகப்பட்டிருக்கும் என இன்னும் நம்புகிறேன்.என்ன நண்பர்களே அப்படித்தானே?

 20. good post. keep it up. we are learning many things about sharemaket and please continue the good work

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: