இன்றைய சந்தையின் போக்கு 12.11.2008


எதிர் பார்த்ததை போலவே… நேற்றைய தினம் கரடியின் பலம் கூடியது ஆனால் இந்த அளவு எதிர் பார்க்கவில்லை,  30 புள்ளிகள் தான் கேப் டவுனாக துவங்கியது,  அடுத்து அடுத்து 20- 30 புள்ளிகள் என்று சரிய காரணம் மக்களின் பயம் தான்.   

 இன்றைய துவக்கம் ஆரவாரமின்றி துவங்கும்,  2880 க்கு கீழ் நழுவினால் கரடியின் ஆதிக்கம் அதிகரிக்கும்,  அதற்கு அடுத்ததாக சென்ற வாரத்தின் கீழ் நிலையான 2854 உடைபட்டால் கரடியின் தனி ஆவர்த்தனம்   நடைபெறும்.

சரி காளைக்கு ஏதாவது வாய்ப்பு உண்டா என்றால்,   காளைக்கு தடுப்பாட்டம் தான் சிறந்த வழி, ஏற்கனவே 3030 மற்றும் 2965 ஆகிய இரண்டு முக்கியமான விக்கெட்டுகளை இழந்து விட்டதால்,  2880/2854 ஆகிய விக்கெட்டுகளை இழக்காமல்,  ஒவ்வொரு ரன் களாக எடுத்து 2970 மற்றும் 3065 ஆகிய இழக்கை அடைந்தால் பாலோ ஆனை தவிர்க்க இயலும்.

திரு பைசல் –  IVRCLINFRA,  Everonn Systems  – ஆகியவற்றின் சார்ட்களில்,  3/11 மற்றும் 30/10 ஆகிய நாட்களில் ஒரு டெக்னிகல்  டிரெண்ட் ரிவர்சல் (Bullish) உருவாகி உள்ளதை காண முடிகிறது.  இது விவரமாக இன்று மாலை ஒரு மெயில் அனுப்புகிறேன் பாருங்கள்.   மிண்டும் கீழ் நிலைகளில் வரும் போது வாங்கலாம், தற்போது எனது watch list-ல் சேர்த்து விட்டேன்.

ஜான்சி அக்கா –  போதும் என்ற மனம் இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு சிறந்த உதாரணம் நீங்கள் தான்.   இது முக ஸ்துதி இல்லை, எனது அனுபவத்தில் இவ்வளவு மோசமான சந்தையிலும் தினவர்த்தகத்தில் ஈடுபட்டு 4 மாதங்கள் ஆன பிறகும் நஸ்டம் இல்லாமல் வணிகம் செய்பவர் நீங்கள் தான்.  

நண்பர்களே ஜான்சி அக்காவின் டிரேடிங் பார்முலா இது தான் – 600 விலையில் ஒரு பங்கினை வாங்குங்கள் என்றால்,  உடனே 605 / 606 க்கு விற்கவும் முடிவு செய்து விடுவார்கள்,  நான் 650 டார்கெட் சொன்னாலும்.  காரணம் அவர்களது எதிர்பார்ப்பு  500 தான். 

திரு ராம் பிரசாத் – தங்களின் பின்னுட்டத்திற்கு மிக்க  நன்றி, என்னப்பு பண்றது இம்ம்ப்புட்டு இருக்கிறதை பார்த்து இப்பவே கண்ணை கட்டுது, முடியலை. அப்ப்ப்பா….

திரு ஜெயக்குமார் – காத்திருக்கலாம் என்று கருதுகிறேன்.

ரோஜா காதலன் என்ற கோபி  – நண்பரே ஜெர்மனியில் இருந்து தாங்கள் தொலை பேசியில் பேசியதில் மிகுந்த சந்தோஷமடைந்தேன்.  குறிப்பாக கடந்த ஒரு வாரமாக ஆரம்பத்தில் இருந்து எனது அனைத்து பதிவுகளையும்/பின்னுட்டங்களையும் படிக்கிறேன், என்று சொன்னது ஆச்சரியம். 

தாங்கள் கூறிஉள்ள நிலைகளை டபுள் டாப்பாக எடுத்து கொள்ளலாம்,  2000 எதிர் பார்ப்பதற்கு இது காரணம் கிடையாது என்றாலும்,  அது வலுசேர்க்கும் என்பதில் ஐயம் இல்லை.  

ஆமா நண்பா, தங்களின் ரோஜா – ஜெர்மனியா இல்லை தமிழகமா?.

திரு சந்திரன் – தங்களின் தகவல்களுக்கு மிக்க நன்றி.

Advertisements

16 responses to this post.

 1. Posted by விக்னேஷ் குமார் on நவம்பர் 12, 2008 at 8:06 முப

  காலை வணக்கம் சார்

 2. காலை வணக்கம் திரு சாய், இன்னும் நிறைய பேர் பேராசையாலேயே இழப்புகளை சந்திக்கிறோம்.
  வரும் காலங்களில்
  அதை தவிர்க்க முயலலாம் .நன்றி

 3. காலை வணக்கம் சார்

 4. GOOD MORNING TO EVERYBODY.

  THANK YOU VERY MUCH FOR YOUR VIEWS SIR.

  Yesterday I took short position in JP ASSOCIATES. Even though the stock fell sharply,
  i sold 1500 stocks at 90.30 and covered the same at 87.90. If we do like this,we can earn profit.

  PODUM ENRA MANAME … THIS IS APPLICABLE IN INTRADAY TRADING.

  WISH YOU ALL A HAPPY AND PROFITABLE TRADING.

 5. IIP nos will get announced today around 12 noon and will guide the markets further. Govt may announce it earlier if nos are better to boost the sentiments of the market

 6. I felt really very happy to read your comment about me. Thanks a lot.

 7. இருக்கிற இம்சைல இது வேறயா??

  IIP nos will get announced today around 12 noon and will slide the markets further.

  Thanks PS mam for CAUTIONING us…

  பொதுவில் மத்திய கலால், சுங்கம், வருவாய், வணிகவரி மற்றும் வருமானவரி துறையினர் காலை 9.30 முன்னரோ அல்லது 3.30 பின்னரோ RAID-களை செய்யலாமே.

  மேலும் IIP, INFLATION போன்ற முக்கிய அறிக்கைகளை சந்தை நேரத்துக்கு பின்னர் வெளியீடு செய்யலாமே ?

  சந்தையில் பல குளறுபடிகள் தவிர்க்கப்படுமே. சூதாடி சித்தர்களின் கொட்டம் குறையுமே…

  செய்வார்களா சம்பந்த பட்டவர்கள்???

 8. raid பத்தின information எனக்கு எதும் தெரியல Mr.Ram. அத பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன் plz

 9. மன்னிக்கவும். இன்று RAID-ஏதும் இல்லை. எனக்கு தெரிந்த வகையில்.

  நான் சொன்னது a STATEMENT in general.

  உதாரணம்:

  செய்தி: இன்று மதியம் 12மணி அளவில் ரிலையன்ஸ் தலைமையகதில் வருமான வரி துறையினரின் பரிசோதனை.

  மேற்கண்ட செய்தி உடனே ஒரு மோசமான விளைவை பங்குச்சந்தையில் உருவாக்கும்.

  மீடியா பேனை பெருச்சாளி ஆக்கி, பெருச்சாளியை பூதமாகி விடுவர்.

  இதன் பாதிப்பு தின வர்த்தகர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் தானே.

  மதியம் 3.30க்கு பிறகு RAID என்றால் பங்குசந்தைக்கு ஒரு பாதிப்பும் இல்லை அல்லவா?

  நான் குறிப்பிட வந்தது இதைதான்.

 10. ok Mr.Ram..Thanks for your clarification

 11. Posted by சாய்கணேஷ் on நவம்பர் 12, 2008 at 12:37 பிப

  திரு ராம் பிரசாத்,

  இதே ஆதங்கம் எனக்கும் உண்டு….

  ரெய்டு விசயங்களை தவிர்க்க இயலாது….

  ஆனால் அரசு பொருளாதாரம் சம்மந்த பட்ட அரிவிப்பு / அறிக்கைகளை சந்தையின் வேலை நேரத்தில் தவிர்க்கலாம்…

  தற்போது ஐஐபி டேட்டாவை வைத்து 5 நிமிடங்களில் 100 புள்ளிகள் வரை உயர்ந்தது… இந்த இடத்தில் துகிலுரியபட்ட வர்த்தகர்களின் கதி?

  இந்த உயர்வை நம்பி லாங் செல்லும் வணிகர்களின் கதி….

  திரு சிதம்பரம் சிந்திப்பாரா?

  லாயர் யாராவது இருந்தால் பொது நல வழக்கு தொடரலாம்.

  இது அனைத்து அரசுகளும் செய்து வரும் செயல் தான்….

 12. Posted by K. Mohanraj,Karur on நவம்பர் 12, 2008 at 12:57 பிப

  அனைவருக்கும் இனிய காலை வணக்கம்,

  தற்போது IIP Data சந்தையினை சிறிது மேலே கொண்டு சென்று பின் என்னுடைய வேலை அவ்வளவுதான் என்பதுபோல் மீண்டும் கீழே விட்டுவிட்டது.

  மத்திய அரசாங்கத்தில் இருந்து வரும் இதுபோன்ற தகவல்கள் சந்தையின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை பெற்று இருந்தால் அதன் மூலம் மேல் மட்ட அளவில் இருப்பவர்கள் நிறைய பேர் அதனை வைத்து சந்தையில் நிறைய ஆதாயம் பெறுகிறார்கள்.

  நிலைமை இவ்வாறு இருக்கையில் அவர்கள் எப்படி அதனை இழக்க விடுவார்கள். அவர்களுக்கு நம்மைப் போன்றவர்களை பற்றிய கவலை இல்லை. அவர்களுடைய காரியம் மட்டுமே முக்கியம்.

  எனவே சந்தை நேரங்களில் இதனை தவிர்ப்பது என்பது இவர்களை போன்ற அரசியல்வாதிகள் இருக்கும் வரையில் பகல் கனவுதான்.

 13. அனைத்து நண்பர்க்களுக்கும் அடியேனின் வணக்கங்கள் !

  சாய் அவர்களே,

  பின்னூட்டம் இடும் ஆர்வத்தில் நேற்று டபுள் டாப் என்பதற்கு பதிலாக டபுள் பாட்டம் என்று குறிப்பிட்டுவிட்டேன்.

  சந்தையில் இருக்கும் சாதக பாதகங்களை தெளிவுபடுத்தி, என்னைப் போன்ற புதியவர்களுக்கும் புரியும்படி எடுத்து சொல்லி வழிநடத்தும் உமது பணி பெரும் சிறப்பு வாய்ந்தது, வாழ்த்துக்கள் !

  என்னுடைய ரோஜா தமிழகம் தான். நான் டிசம்பர் 13ஆம் தேதி இரவு சென்னை வந்து சேர்கிறேன்.

 14. i just came online to thank SAI sir… today i have earned some profit without using net, chart, tools, news and nothing..

  just followed sai sir call, also he has helped me with some level to enter.. also called me to close the positions..

  i sincerely thank our sai sir.. came online only to write this comment…

  once again thanx sai sir…

 15. சாய் சார், திரு மோகன்ராஜ் குறிப்பிட்டதை போல “அதிகாரத்தில் இருப்போர் ஆதாயம் கருதுவதால்” இந்த நிலை தொடரும்.

  பொது நல வழக்கு போட்டு, ஜெயித்தாலும் பின்கதவு(backdoor) தில்லுமுல்லுகள் தொடரவே செய்யும்.

  நாம் கவனமாக இருப்பதை அன்றி வேறு சிறந்த “மாற்று வழி” இல்லை.

  பழைய கதை (காத்து வழி செய்தியே):

  பல பல ஆண்டுகளுக்கு முன்பு பட்ஜெட் தயாரிப்பில் இருப்போர் செய்திகளை “கடத்துவதில்” பல உத்திகள் கையாண்டனர்.
  அவற்றில் ஒன்று டீ/காபி குடித்து முடித்த கப் & சாசெரில், கப்பின் அடிப்பக்கம் “சிகரெட் வரி 5%+” போன்ற சங்கேத குறிப்புகளை கொடுப்பார்.
  ===========
  தினமலர் அந்துமணி-இன் “பார்த்து-கேட்டது-படித்தது” கட்டுரையில் பல வருடங்களுக்கு முன் படித்தாக நியாபகம்.
  ===========

  குறிப்பு:

  இப்போது பட்ஜெட் தயாரிப்பில் இருப்போர் 1/2 மாதங்கள் நாடாளுமன்றத்தில் முழுமையாய் தங்கி இருந்து செயல் படுகின்றனர். வெளி தொடர்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில்.

  ஆக இது போல ஒரு காலமாற்றம் வருமென நம்புவோம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: