இன்றைய சந்தையின் போக்கு 11.11.2008


மூன்று நாட்களாக சந்தையில் ஒரு உற்சாகம் தொடர்கிறது இது நிரந்தரமான ஒரு ஏற்றமாக / தொடர் ஏற்றமாக இருந்தால் சந்தோஷபடலாம் ஆனால் இது தற்காலிக மானது தான், நேற்றைய உற்சாகம் இன்று தரைதட்டும்,  முதல் தடைகல்லான 3144 ஐ நாளின் முடிவில் கடந்தாலும் அடுத்த வலுவான நிலையான 3310 ஐ  கடந்து செல்வது மிகவும் சிரமம் ஆக இருக்கும்.

முதலீட்டாளர்கள் ரயில் கிளம்பி விட்டது என்று நினைத்து  அவசரபட்டு  விரட்டி பிடிக்காதீர்கள், உங்களின் ப்ளாட்பாரத்தில் வந்து சேரும், அப்போது ஏறி கொள்ளலாம்.

நேற்றைய தினம் Dow Jones ப்யூச்சரில் கிடைத்த 160 புள்ளிகள் ஏற்றத்தையும் இழந்ததுடன் மேலும் ஒரு 70 புள்ளிகள் சரிவுடன் முடிவடைந்தது.

தற்போது துவங்கியுள்ள ஆசிய சந்தைகளும் வலுவிழந்து காணப்படுகிறது.

நமது நிப்டியாரும் கேப்டவுன் ஆகத்தான் துவங்குவார்…. மீண்டும் 3032 முக்கியமான சப்போர்ட்டாக இன்று இருக்கும் இது உடை பட்டால் நேற்று போராடி தோற்ற கரடியின் பலம் கூடும்

நேற்று மூன்று நிலைகளையும் ஏன் கொடுத்துள்ளேன் என்று கேட்டதற்கு.

நண்பர்கள் திரு முருகேசன், ராம் பிரசாத் மற்றும் ராஜ் கூறியது சரிதான்.

1. மூன்றிலும் நடு நிலை – 3040 ஐ ஒட்டியே அமைந்துள்ளது.

2. நாளின் மொத்த நிலைகளும் (7 நிலைகளும்)  வாரத்தின் முதல் சப்போர்ட் – முதல் ரெசிஸ்ட்டுக்கு இடையில் அடங்கி உள்ளது.

3.வாரத்தின் மொத்த நிலைகளும் மாதத்தின் முதல் சப்போர்ட் – முதல் ரெசிஸ்ட்டுக்கு இடையில் அடங்கி உள்ளது.

கடந்த 3 நாட்களாக 3030-40 ஐ ஒட்டியே சந்தையின் நகர்வுகள் இருந்து வருகிறது.  நண்பர் தனசேகர் சொன்னதை போல சந்தை ஏதோ ஒரு பாதையில் செல்லலாம். 

தாராசின் முள்ளாக 3040 ம், ஒரு தட்டில் 3800ம் இன்னொரு தட்டில் 2000 ம் இருக்கிறது நான் கீழ் நிலையின் தட்டில் இருக்கிறேன்.   🙂

Advertisements

16 responses to this post.

 1. Thank you sir!!!

 2. அனைவருக்கும் காலை வணக்கம்

 3. Posted by K. Mohanraj,Karur on நவம்பர் 11, 2008 at 9:23 முப

  Good Morning and Have a nice day,,,,,,,,

 4. WISH YOU ALL A HAPPY AND PROFITABLE TRADING DAY

 5. Posted by Dhanam - -Ramnad on நவம்பர் 11, 2008 at 9:46 முப

  thanks thiru sai, arumaiyaana vilakkam thanthatharku nantri.

 6. அனைவருக்கும் காலை வணக்கம்

 7. I entered relcap short @672 &covered @664.i booked profit.Thanks a lot.

 8. IVRCLINFRA 75% விலையேற்றம் கடந்த 5 தினங்களில் யாருக்காவது ஏன் என்று தெரியுமா? தற்போது எந்த நிலை வந்தால் மீண்டும் மூதலீடு செய்யலாம் என்று தெரிந்தவர்கள் கூறவும்…

 9. Everonn Systems 76% விலையேற்றம் கடந்த 5 தினங்களில் யாருக்காவது ஏன் என்று தெரியுமா?
  எந்த நிலை வந்தால் மீண்டும் மூதலீடு செய்யலாம்?

 10. // மூன்று நாட்களாக சந்தையில் ஒரு உற்சாகம் தொடர்கிறது இது நிரந்தரமான ஒரு ஏற்றமாக / தொடர் ஏற்றமாக இருந்தால் சந்தோஷபடலாம் ஆனால் இது தற்காலிக மானது தான், நேற்றைய உற்சாகம் இன்று தரைதட்டும்//

  தரையை மட்டுமா தட்டி உள்ளது..தரைக்கு கீழேயே போய்விட்டது!!!!!!

  // முதலீட்டாளர்கள் ரயில் கிளம்பி விட்டது என்று நினைத்து அவசரபட்டு விரட்டி பிடிக்காதீர்கள், உங்களின் ப்ளாட்பாரத்தில் வந்து சேரும், அப்போது ஏறி கொள்ளலாம்.//

  இவ்வளவு சீக்கிரம் வரும் என யாரும் நினைக்க வில்லை!!!!!

  // மீண்டும் 3032 முக்கியமான சப்போர்ட்டாக இன்று இருக்கும் இது உடை பட்டால் நேற்று போராடி தோற்ற கரடியின் பலம் கூடும் //

  3030 ல் நிப்டியார் ரொம்ப நேரம் போராடினார்!!!

  // தாராசின் முள்ளாக 3040 ம், ஒரு தட்டில் 3800ம் இன்னொரு தட்டில் 2000 ம் இருக்கிறது நான் கீழ் நிலையின் தாட்டில் இருக்கிறேன் //

  no comments

 11. Posted by சாய்கணேஷ் on நவம்பர் 11, 2008 at 5:28 பிப

  வாங்க சார் இங்கு தான் இருக்கிங்களா??

 12. MAY I BUY SUZLON, UNITECH & SESAGOA AT THIS TIME.

 13. // முதலீட்டாளர்கள் ரயில் கிளம்பி விட்டது என்று நினைத்து அவசரபட்டு விரட்டி பிடிக்காதீர்கள், உங்களின் ப்ளாட்பாரத்தில் வந்து சேரும், அப்போது ஏறி கொள்ளலாம்.//

  மாட்டவே மாட்டோம்ல.

  நிச்சயம் அடுத்த 6 மாதங்களுக்கு ரயில் எங்கள் பிளாட்பாரம் வந்தாலும்…

  ஏன் ?

  வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல். அதை ஒட்டி அளிக்கப்படும், அள்ளிவிடப்படும் சலுகைகள்.

  வரவிருக்கும் அமெரிக்கா கம்பெனிகளின் (நொண்டி)காலாண்டு அறிக்கைகள்.

  மேலும் பல உலகளாவிய வட்டி குறைப்பு மற்றும் பல பொருளாதார அவசர நடவடிக்கைகள்.

  அமெரிக்கா அரசின் US$700 Billion நிதி பயன்பாட்டு திட்டங்கள் பற்றிய விளக்கங்கள்.

  அமரிக்க கிரெடிட் கார்டு சிக்கல்களின் தன்மைகள். இந்த அணுகுண்டு எப்ப வெடிக்கும்?

  எம்ம்புட்டு…
  முடியல…

  😦 😦 😦

 14. 3200-ஐ ஒட்டி ஒரு டபுள் அல்லது டிரிப்பிள் பாட்டம் உருவாகி இருப்பது போல் தெரிகின்றது(உபயம் : http://www.icharts.in, ஒரு மாத சார்ட்). இந்த அனுமானம் சரிதானா? சரியென்றால், நீங்கள் 2000 என்னும் நிலையினை எதிர்பார்க்க இதுவும் ஒரு காரணமா?

  உங்கள் பழைய பதிவுகளை படித்து சார்ட் பார்க்க முயற்சி செய்தேன். அதனால் தான் இந்த கேள்வி எழுந்தது.

  நன்றி !

 15. ஒவ்வொரு நிறுவனமும் டிவிடெண்டுகள் எனப்படும் பங்கு லாப ஈவுத்தொகை அறிவிப்பை ஆண்டுதோறும் வெளியிடும். அந்த அறிவிப்பு வெளியாகும் ரெக்கார்ட் தேதியை இந்த பல்க் டிரேடர்களுக்கு அத்துபடி. பல நாளிதழ்களும் கூட இவற்றை வெளியிடுகின்றன.

  எந்த நிறுவனமாவது டிவிடெண்ட் தரப்போவதாக அறிவித்தால் போதும், இந்த பல்க் டிரேடர்கள் அவற்றின் பங்குகளை லட்சக்கணக்கில் வாங்குவார்கள். இதனால் அவற்றின் பங்கு மதிப்பும் உயரும். ரெக்கார்ட் தேதி முடிந்ததும் சரசரவென பங்கு விலையும் சரிந்துவிடும். ஆனால், அதற்குள் வாங்கிய பங்குகளை விற்றுவிட்டு வெளியேறி இருப்பார்கள் இந்த பல்க் டிரேடர்கள்.

  கிட்டத்தட்ட வாங்கிய விலைக்கே அல்லது அதைவிட குறைந்த விலைக்கு இவர்கள் விற்பது ஏன்…? அது ஒரு டெக்னிக்! வரி ஏய்ப்பு டெக்னிக்!!.

  அதிக பங்குகளை வாங்குவதால் அவற்றுக்கான டிவிடெண்ட் முழுவதையும் பெற்றுக் கொள்கிறார்கள். விலை சரிந்த பிறகு பங்குகளை விற்பதால் வருமான வரித்துறைக்கு நஷ்டக் கணக்கைக் காட்டி தப்பித்துக் கொள்ளலாம். அந்த நேரத்தில் தங்களிடம் உள்ள பிற பங்குகளை லாபத்துக்கே விற்றாலும், ஏற்கெனவே ஏற்பட்ட நஷ்டத்தைக் காட்டி தப்பித்துக் கொள்ளலாம். இது ஒரு ஹைகிளாஸ் எகனாமிகல் க்ரைம்தான். ஆனால் சட்டம் ஒன்றும் செய்ய முடியாத, அங்கீகரிக்கப்பட்ட குற்றம்.

  இதற்கு மார்க்கெட் உச்சத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை. டிவிடெண்ட் தரும் நிலையில் நிறுவனங்கள் இருந்தால் போதும்!.

  டிவிடெண்டுக்கு வருமான வரி கிடையாது என சிறு முதலீட்டாளர்களுக்கு வருமான வரித்துறை அளித்திருந்த சலுகை ஓட்டைக்குள் இந்த பல்க் பெருச்சாளிகள் நுழைந்ததால்தான் இந்த நிலை.

  இந் நிலையில் மிக லேட்டாக இப்போது தான் அந்த ஓட்டையை அடைத்துள்ளது வருமான வரித்துறை.

  ஆனால், இவர்கள் இன்னொரு ஓட்டையை கண்டுபிடிக்காமலா விடுவார்கள்…?!
  நன்றி: தட்ஸ்தமிழ்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: