இன்றைய சந்தையின் போக்கு 10.11.2008.


வெள்ளி கிழமை நமது சந்தை வியாழன் அன்றைய Dow Jones ன் முடிவுக்கு எதிராகவும்  ஆசிய  சந்தைகளில் Nikkie யின் போக்கிற்கு மாறாகவும் அமைந்தது.

சிறிது அளவு சந்தை தன்னை நிலைபடுத்தி கொள்ளவும், கிடைத்த ஏற்றத்தினை தக்கவைத்து கொள்ளவும் முயற்சிக்கிறது. ஆனால் அது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பது தெரியவில்லை.

தற்போதைய சார்டினை பார்த்த்தால் ஜூன் மாதம் / ஜுலை மாத முதல் வாரத்தின் நிலையை (3800-4300)  பிரதிபலிக்கிறது. 

இந்த இடத்தில் சின்ன பாதகமான செய்தி வந்தாலும் மக்கள் மிகப்பெரிய சரிவை நோக்கி எடுத்து செல்வார்கள்.  உதாரணத்திற்கு சென்ற வாரம் திங்கள் அன்று காலையில் ஏற்பட்ட செல்லிங் பிரசர் மட்டும் பிரதிபலித்திருந்தால் இன்று 2400 இல் தான் சந்தை இருந்திருக்க வேண்டும்.. இதை தரகு நிறுவனங்களை சார்ந்த நண்பர்கள் நன்கு அறிவர்.  NSE Future Data சரியாக கிடைக்காதாதால் தப்பித்தது.  இது ஒரு சின்ன உதாரணம் வணிகர்களின் மன நிலை எப்படி சந்தையில் பிரதிபலிக்கிறது என்பதற்கு.

நேற்றும், இன்று காலையிலும் சில நண்பர்கள் கேட்ட கேள்வி 3100க்கு மேல் சந்தை கடக்க உள்ளது, ஆகையால் உங்களின் 2500 என்ற எதிர்ப்பார்ப்பு என்னவாகும்  என்றார்கள்.

எனது பதில் குறைந்த பட்சம் 2500 என்பது தவிர்க்க இயலாத நிலை,  அவசியம் சந்தை அந்த நிலையை அடையும்.  இது டிரேடர்களுக்கு உதவாமல் போகலாம் முதலீட்டாளர்களுக்கு உதவும். 

இன்றைய முக்கிய நிலைகள்…

3174, 3140, 3058, 3032, 2986 2928, 2886

இது என்ன கணக்கு என்று சில நண்பர்கள் கேட்டார்கள், இது பிவோட் அல்ல…  இதற்கு எந்த பார்முலாவும் இல்லை.  சார்டினை பார்க்கும் போது கிடைக்கும் பொதுவான நிலைகள்.

சென்ற வாரச்சத்தையின் அடிப்படையில் இந்த வாரத்திற்கான பிவோட் நிலைகள்

3646, 3456, 3255, 3045, 2824, 2634, 2413

இந்த மாதத்துகான பிவோட்

5656, 4838, 3868, 3048, 2079, 1259, 291

இந்த மூன்று நிலைகளையும் இங்கு கொடுத்துள்ளதற்கு என்ன காரணம் என்பதை பின்னூட்டம் மூலமாக தெரிவிக்கவும்.

Advertisements

13 responses to this post.

 1. Dear Sai

  thanks for the good comment, your indicator shows anything can happen any time

  Murugesan

 2. Posted by K. Mohanraj,Karur on நவம்பர் 10, 2008 at 9:29 முப

  உயர்திரு சாய் அவர்களுக்கு,

  இனிய காலை வணக்கம். தங்களுடைய கட்டுரை வழக்கம் போலவே மிகவும் அருமை. தற்போதைய இக்கட்டான சூழ்நிலைகளில் தங்களுடைய கட்டுரைகள்தான் எங்களுக்கு பிரம்மாஸ்திரம் போல. எதிர்வரும் சரிவுகளில் இருந்து தப்பிக்கவும் இந்த மாதிரியான தற்காலிக உயரங்களில் சிக்கிக் கொள்ளாமல் பாதுகாப்பாகவும் நீங்கள் எங்களுக்கு ஒரு சிறந்த ஆசானாக உள்ளீர்கள் என்றால் மிகையாகாது.

  தங்களின் கூற்றுப்படி சந்தை ஒருமுறை கீழே இறங்கி வந்திருக்க வேண்டும். ஆனால் வழக்கம் போலவே வித்தை கட்டுகிறார்கள். இதில் சிக்கி கொள்ளாமல் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்பதே நமது ஆசை.

  இன்று இனிய வர்த்தக தினமாக அனைவருக்கும் அமைய வாழ்த்துக்கள்.

 3. Posted by K. Mohanraj,Karur on நவம்பர் 10, 2008 at 9:32 முப

  உயர்திரு சாய் அவர்களுக்கு,

  இனிய காலை வணக்கம். தங்களுடைய கட்டுரை வழக்கம் போலவே மிகவும் அருமை. தற்போதைய இக்கட்டான சூழ்நிலைகளில் தங்களுடைய கட்டுரைகள்தான் எங்களுக்கு பிரம்மாஸ்திரம் போல. எதிர்வரும் சரிவுகளில் இருந்து தப்பிக்கவும் இந்த மாதிரியான தற்காலிக உயரங்களில் சிக்கிக் கொள்ளாமல் பாதுகாப்பாக இருக்கவும் இந்த கட்டுரைகள்தான் எங்களுக்கு உதவியாக உள்ளது. நீங்கள் எங்களுக்கு ஒரு சிறந்த ஆசானாக உள்ளீர்கள் என்றால் மிகையாகாது.

  தங்களின் கூற்றுப்படி சந்தை ஒருமுறை கீழே இறங்கி வந்திருக்க வேண்டும். ஆனால் வழக்கம் போலவே வித்தை காட்டுகிறார்கள். இதில் சிக்கி கொள்ளாமல் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்பதே நமது ஆசை.

  இன்று இனிய வர்த்தக தினமாக அனைவருக்கும் அமைய வாழ்த்துக்கள்.

 4. வணக்கம் சந்தையில் எதுவும் சாத்தியம் யாரும் மறுப்பதற்கில்லை
  பொறுத்து பார்க்கலாம்
  நன்றி

 5. எங்களை கவனமாக இருக்க எச்சரிக்கை செய்வதற்க்கு நன்றி…

 6. 3032, 3045, , 3048, muunrilum mukkiyamaana nilaigal sir

 7. 3032-3048 breaking or breaching is going to lead up or down trend

 8. //இந்த மூன்று நிலைகளையும் இங்கு கொடுத்துள்ளதற்கு என்ன காரணம் ???//

  ஏற்ற இறக்கங்கள் அதிகம் இருக்க கூடும். எதிர்பாரா தருணங்களில்.
  கவனமான செயல்பாடு அவசியம், லாப நிலைகளில் உடனடியாக உறுதி செய்து வெளி ஏறுதல். போன்றவற்றை மறைமுகமாக உணர்த்துகிறது.

 9. //இந்த மூன்று நிலைகளையும் இங்கு கொடுத்துள்ளதற்கு என்ன காரணம் ???//

  ஏற்ற இறக்கங்கள் அதிகம் இருக்க கூடும். எதிர்பாரா தருணங்களில்.
  கவனமான செயல்பாடு அவசியம், 10-15-20% லாப நிலைகளில் உடனடியாக உறுதி செய்து வெளி ஏறுதல். போன்றவற்றை மறைமுகமாக உணர்த்துகிறது.

 10. இன்று உலக சந்தை அணைத்தும் பச்சை நிறத்தில் ஜெலி ஜெலிக்கின்றது… இன்று போல் இருக்கத்தான் ஆசை ஆனால்… இது நிரந்தரம் அல்ல என்பது மட்டும் நன்றாக தெரிகின்றது… கவனமான செயல்பாடு அவசியம் என்று கூறிய சாய் அவர்களுக்கு நன்றி…

 11. SELLING PRESSURE MAY COME ANY TIME.THIS IS MY PREDICTION. AS SIR TOLD, ANY PROFIT ACHIEVED HAS TO BE CONVERTED TO CASH(FOR BOTH INVESTORS AND DAY TRADERS).

 12. Goldman Sachs cuts India FY09 GDP growth forecast to 6.7% vs 7.5%.

  * Industry source says Tata Motors may postpone Nano launch beyond Mar.

  * India Oct car sales down 7% on year; truck, bus dn 36%.

  * Satyam Comp to acquire Motorola’s Malaysia software unit

  * SBI, Oman govt sign agreement to set up $100 mln investment fund.

  * Andhra Bank cuts BPLR 75 bps; to decide deposit rate cut shortly.

  * Power secy says Dabhol output dn by 300MW on gas turbine failure.

  * PFC’s fund raising so far at 60% of FY09 target, disbursement 50%.

  * ICICI Home Fin offers 11.15% on select deposits for limited period.

  * Glenmark Pharma’s arm launches pain drug in US.

  * Lupin gets regulator’s OK for heart-rate lowering drug.

  * SKS Microfinance raises 3.66 bln rupees

 13. Goldman Sac has cut down GDP growth to 6.7% from 7.5,other broking & investment banking companies will follow the suit– Market will react to this– later or sooner– if not today maybe in next couple of days– Market is heading higher,because of the rumours that FM may announce some sort of Bail out package for some of the ailing sectorsviz textile,auto,airline,infra,realty etc.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: