விபத்து – எனது பார்வை


இன்று எனது தம்பியின் நினைவு தினம்… என்பதாலும் (2002 இல் விபத்தில் மரணம் அடைந்த  நாள்) இரண்டு தினங்களுக்கு முன் திருமண நிகழ்ச்சிக்கு காரைக்குடி வந்த  கல்லூரி மாணவர்கள் இருவர், உள்ளூர் மாணவன் ஒருவர், என்று மூன்று பேரும் இரு சக்கர வாகன விபத்தில் மரணம் அடைந்த நிகழ்வு மனதை பாதித்ததாலும் இதை எழுதுகிறேன்…

1. மதுவால் மேல் சொன்ன விபத்துகள் நடக்க வில்லை என்றாலும் -தயவு செய்து மது அருந்தி விட்டு வாகனங்களை ஓட்டாதிர்கள்.(இந்த இடத்தில் மதுவே அருந்தாதிர்கள் என்று சொல்ல வில்லை சொல்லவும் மாட்டேன், அருந்திவிட்டு எந்த வாகனத்தையும் ஓட்டாதிர்கள் என்று தான் சொல்கிறேன் – எதுவும் அளவோடு இருந்தால் தவறில்லை.  வீட்டை சுற்றி அதுவும் அரசே நடத்தும் மதுகடைகளை வைத்து கொண்டு அதை செய்யாதே என்றால் அதைவிட  பைத்தியகாரத்தனம் வேறொன்றும் இல்லை. ஊரோடு ஒத்து வாழ்வோம்)

2. உங்கள் கட்டுபாட்டில் இல்லாத வேகம் வேண்டாம் அது அனுமதிக்க பட்ட வேகமாக இருந்தாலும்.

3. கூடுமானவரை ஹெல்மெட் பயன் படுத்துங்கள் அல்லது 40 கி மீ -க்கும் அதிகமான வேகத்தில் தூரமான இடங்களுக்கு செல்லும் போதவது அவசியம் ஹெல்மெட் பயன் படுத்துங்கள்.

4.மரணம் என்பது உறுதி யாராலும் அதை தவிர்க்க இயலாது,  நாமாக தேடி போக வேண்டாம் ஆனால் எதிர் பாராமல்/ நமது தவறு இல்லாமல் நடக்கும் விபத்தை என்ன செய்வது..   மரணம் என்றால் கூட பரவாயில்லை ஆனால்  கை கால் ஊனம் போன்ற நிகழ்வுகள் இன்னும் கொடுமை. அவரை பராமரிப்பது, மருத்துவ செலவுகள் என்று குடும்பத்தினர் பல அவதிக்கு உள்ளாகின்றனர்.

எதிர் பாராமல் ஒரு மரணம் ஏற்பட்டால், உறவுகள் கூடலாம் கலையலாம், குடும்பத்தினர் அழலாம் ஒரு சில நாட்களுக்கு, தாய் போன்ற உறவுகள் பல நாள்/மாதக்கணக்கில் அழலாம்.  அப்போது  அவரை பற்றிய பல செய்திகளை நினைவு கூறலாம் அது நிரந்தரம் இல்லை. 

ஒரு மாதத்திற்கு பிறகு அவரால் ஏற்பட்ட வெற்றிடத்தை விட அந்த  நபரால் கிடைத்து வந்த வருமானத்தின் வெற்றிடம் தான் பூதாகரமாக அவர்களுக்கு தெரிய வரும். அது தான் எதார்த்தம்.  அதை எப்படி நிரப்புவது.  நடுத்தரம் குடும்பத்தை சேர்ந்த மாதம் 5000/- கொண்டு வந்த ஒருவர் மரணம் அடைந்தால் அந்த குடும்பம் என்ன ஆகும்.

விபத்து காப்பீடு தான் சிறந்த வழி….   இதை படிக்கும் அதிகமானவர்கள் பங்கு வர்த்தகர்கள் தான்.  நமக்கு 500/- 1000/- என்பது பெரிய விசயம் இல்லை.  வாகனத்திற்கு விபத்து காப்பீடு எடுப்பதை போல, தனிபட்ட நபருக்கும் சிங்கிள் பிரிமியம் ஆண்டுக்கு  2000 -5500/- செலுத்தி 10 லட்சம் முதல் 45 லட்சம் வரை காப்பீடு செய்யலாம்.   கணக்கு பார்த்தால் மாதச்செலவு – 200 -400 தான்.

சிந்திப்போம் செயல் படுவோம்…

Advertisements

20 responses to this post.

 1. //இன்று எனது தம்பியின் நினைவு தினம்… என்பதாலும் (2002 இல் விபத்தில் மரணம் //

  வயது மூப்படைந்த பெற்றோர்கள் மரணம் மனது உலுக்குவிடாது. ஆனால் வாழவேண்டிய வயதில் உடன்பிறந்தோர் மரணம் மிகக் கொடியதுதான்.

  😦

  உங்களது அறிவுரைகள் பயனானது.

 2. Thanks for this post. Keep like this.

 3. Posted by K. Mohanraj,Karur on நவம்பர் 6, 2008 at 9:23 முப

  திரு சாய் அவர்களுக்கு,

  தங்களுடைய கருத்துக்கள் ஒவ்வொன்றும் மறுக்க முடியாத முற்றிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே.

  மது அருந்தி வாகனம் ஓட்டினால் ஏற்படும் நிலைமை என்ன என்று தெரிந்தும் நம்மில் பலர் செய்து கொண்டுதான் இருக்கிறோம். கட்டாயம் தவிர்க்க பட வேண்டிய ஒன்று என்பதை அழுத்தமாய் உணர்த்தியிறிக்கிறீர்கள் சாய்.

  மேலும் விபத்து காப்பீடு பற்றியும் தலைக் கவசம் பற்றியும் கூறியுள்ளது கட்டாயம் அனைவரும் கடைபிடிக்க கூடிய ஒன்று.

  மிக்க நன்றி.

 4. sorry to here this…..

 5. காப்பீடு பற்றி நீங்கள் கூறுவது 100 க்கு 100 உண்மை ஆனால் இந்த காப்பீட்டு முகவர்கள் படுத்தும்பாடு இருக்கின்றது அதை சொல்லிமாலது.

  நீங்கள் காப்பீடு வேண்டும் என்று போனால் அவர்கள் பரிந்துரை செய்வது அதிக கமிஷன் கிடைக்கும் காப்பீடுதான்.

  நானும் கடந்த 1.5 வருடமாக ஒரு டேம் காப்பீடு பற்றி விபரம் வேண்டி பல இணையதளம் மற்றும் காப்பீட்டு முகவர்கள் அனுகிவிட்டேன் யாரும் சேவை செய்ய தயார் நிலையில் இல்லை.

  தற்போது சிங்கப்பூரில் எல்.ஐ.சி கிளை திறக்க இருப்பதாக செய்தி படித்ததேன் அவர்கள் திறந்த உடன் முதல் வேலை காப்பீடு எடுப்பது தான்.

 6. தங்களது தம்பியின் ஐந்தாமாண்டு அஞ்சலிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  எனது அனுபவத்தில் இரண்டு முறை ஹெல்மட் அணிந்ததால் மரணத்தை தவிர்த்த இரு சம்பவங்களை உடனிருந்து கண்டிருக்கிறேன்.நானும் பெரும் விபத்திலிருந்து தப்பியிருக்கிறேன்..நண்பர்கள் கட்டாயம் அணியுங்கள்

  டெர்ம் இன்ஸீயுரன்ஸ் மிகுந்த பாதுகாப்பு நமது குடும்பத்துக்கு அளிப்பது.

 7. Dear sai
  ” பிரிமியம் ஆண்டுக்கு 2000 -5500/- செலுத்தி 10 லட்சம் முதல் 45 லட்சம் வரை காப்பீடு செய்யலாம். கணக்கு பார்த்தால் மாதச்செலவு – 200 -400 தான்.”
  i am almost like a frag in yhe well. can you guide us for this -namely-

  “விபத்து காப்பீடு”

  with regards
  mugham

 8. வணக்கம் சாய் ,தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். எல்லார்க்கும் காலை வணக்கம்

 9. தங்களது தம்பியின் ஐந்தாமாண்டு அஞ்சலிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

 10. Sai, very sorry to hear this

 11. சாய் சார் ,
  உங்கள் தம்பியின் நினைவு தினத்திற்கு எனது அஞ்சலி மற்றும் அனுதாபங்கள்.
  உங்கள் சகோதரரின் மறைவு உங்களை எந்த அளவு பாதித்துள்ளது என்பது மிக நன்றாக தெரியும்.
  நீங்கள் கொடுத்துள்ள அறிவுரையை அனைவரும் பின்பற்றுதல் வேண்டும்.பின்பற்றுவோம்.

 12. வயது மூப்படைந்த பெற்றோர்கள் மரணம் மனது உலுக்குவிடாது. ஆனால் வாழவேண்டிய வயதில் உடன்பிறந்தோர் மரணம் மிகக் கொடியதுதான்.

  sorry to here this…..

 13. சாய் சார் ,
  உங்கள் தம்பியின் நினைவு தினத்திற்கு எனது அஞ்சலி மற்றும் அனுதாபங்கள்.
  நானும் மது அருந்திவிட்டு ப்ய்கில் சென்று போலீசில் ஆயிரம் ரூபாய் அபராதம் செலுதீஉள்ளேன் .இப்போது நான் அவ்வாறு செல்வதில்லை .காப்பீடு பற்றி சிந்திகீறேன் செயல படுகிறேன்.எல்லா நண்பர்களுகும்தான் .மது அருந்துவதற்கு பதிலாக யோகா செய்யல்லாம் .ஈஷா யோகா என்னக்குள் பல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. Yoga is a pure science.

 14. வணக்கம் சாய் ,தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.

  நாட்டில் நடக்கும் சாலை விபத்துகளில் பெரும் பங்கு வகிப்பது “கண் கூசவைக்கும் முன்விளக்குகளால்” ஏற்படுவது. இன்னொன்று நீங்கள் குறிப்பிடும் மது, மற்றும் தக்க ஓய்வின்றி ஓட்டும் ஓட்டுனர்கள்.

  ஒவ்வொரு முறை வாகனம் எடுக்கும் போதும் தன்னை சுற்றி உள்ளவர்களை மனதில் நினைவு கொண்டால், கவனம் கூடும்.

  விபத்துகள் தவிர்க்கப்படலாம்.

 15. sorry to here this

 16. Sorry to hear this,Sai sir.

 17. Posted by இராகவன், நைஜிரியா on நவம்பர் 7, 2008 at 2:20 முப

  அன்புள்ள சாய், மிக அழகான பதிப்பு. ஹெல்மெட் கட்டாயம் அணியவேண்டும். இதில் வேகம் முக்கியமில்லை.. தலையில் அடிபட்டாமல் இருப்பதுதான் முக்கியம். மருத்துவர் ராமமூர்த்தி அவர்கள் கூறியபடி இரண்டு சக்கரவாகனங்களில் பாதிக்கு மேற்பட்ட மரணங்கள் தலையில் அடிபடுவதினாலே ஏற்படுகின்றது. ஆகவே நண்பர்களே சிறு பயணம், நெடுந்தூரப் பயணம் என்றில்லாமல், எப்போதும் ஹெல்மெட் பயன்படுத்துங்கள். தன் குழைந்தைகளின் மரணத்தை பார்க்கும் துர்பாக்கியத்தை எந்த பெற்றோர்களுக்கும் தயவு செய்து கொடுத்து விடாதீர்கள். மரணத்தை விட கொடுமையானது அது. இராகவன், நைஜிரியா

 18. unarci matrum unarvu poorvamana payanulla pathivu

  ungal maraintha sagothararku en anuthapangal

 19. Posted by சாய்கணேஷ் on நவம்பர் 7, 2008 at 9:03 முப

  எனது சகோதரனின் 5ம் ஆண்டு நினைவு தினத்தில் எனக்கு ஆறுதல் சொன்ன அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றிகள். இது போன்ற நிகழ்வுகள் என்னை மிகவும் பக்குவபடுத்திவிட்டது. Accept the life as it comes என்பதை போல வாழ்க்கையை அப்படியே வாழ / ஏற்று கொள்ள கற்று கொண்டு விட்டேன். தற்போது எந்த ஒரு சுக/துக்கங்களும் அதிகம் பாதிப்பதில்லை. இதில் அனைத்தும் இறைவனின் செயல் – எனது தம்பி இன்றும் என்னுடன் இருக்கிறான், அவன் மறைந்த பிறகு அடுத்து வந்த அவனின் பிறந்த நாளிலேயே எனது மகன் பிறந்தான். 🙂

 20. ragavan udaya karuthukkal migavum nenjai thodm nijam.Sai your positive thinking is really appreciable

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: