Archive for நவம்பர், 2008

பயங்கர வாதிகளின் பிடியில் மும்பை

இந்தியாவின் வர்த்தக தலைநகரமான மும்பை பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ளது. 

கடல் மார்க்கமாக  மும்பை நகருக்குள் நுழைந்த தீவிரவாதிகள்,  உலக பிரசித்தி பெற்ற நட்சத்திர ஹோட்டல் ஆன தாஜ் -ஐ,   தங்களின் பிடியில் எடுத்து அங்கு தங்கியிருந்த வெளிநாட்டினரை பிணைகைதிகளாக வைத்துள்ளனர்,  விடிய விடிய துப்பாக்கி சூடு நடந்து வருகிறது.

மஹாராஸ்டிராவின் முக்கிய காவல் துறை அதிகாரிகள் உட்பட இதுவரை 80 க்கும் அதிகமானவர்கள் மரணம் அடைந்துள்ளனர்.   தேசிய பாதுகாப்பு கமன்டோக்களும், ராணுவமும், மும்பை போலிஸாருடன் இனைந்து விடுதிகளில் பிணைகைதிகளாக உள்ளவர்களை மீட்க போராடி வருகின்றனர். 

இது உலக நாடுகளுக்கு குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு விடபட்டுள்ள மிகப்பெரிய எச்சரிக்கை. 

இனி மேலும் இந்தியா தீவிரவாதத்தில் மென்மையாக இருக்க கூடாது,  அரசியல் கட்சிகளும் ஓட்டு பொறுக்கும் அரசியலை நிறுத்தி விட்டு அனைத்து மக்களுக்கும் நாட்டில் பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி தர முன் வர வேண்டும்.

இத் தீவிர வாதத்தாக்குதல் காரணமாக மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகளுக்கு செபி விடுமுறை அறிவித்துள்ளது.  இந்தமாதத்தின் FnO Expirt Settlement நாளைய தினத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இதுவரை மும்பை நிழல் உலகத்திற்கும் / தீவிர வாதிகளுக்கும் சிம்ம சொப்பனமாக இருந்து வந்த என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் என்று அழைக்கபட்ட காவல் துறை அதிகாரி திரு விஜய் சாலஷ்கர், நேற்று இரவு வீர மரணம் அடைந்தார். அவர் உட்பட இச்சம்பவத்தில் மரணம் அடைந்தவர்களுக்கு நமது அஞ்சலி. அனைவரின் ஆத்மாக்களும் சாந்தி அடைய ஆண்டவனிடம் பிராத்திப்போம். 

http://broadband.indiatimes.com/toivideolist/3761413.cms

இன்றைய சந்தையின் போக்கு 26.11.2008

நேற்றைய தினமும் நமது எதிர்பார்ப்பை ஒட்டிய நகர்வுகள்,    100 புள்ளிகள் வரை கேப் அப் ஆக துவங்கிய சந்தை,  இங்கு எழுதியதை போல 2800 க்கு மேல் தன்னை தக்க வைக்க இயலவில்லை,  அதனால் 2760 களில் ஏற்பட்ட செல்லிங் பிரசரை எதிர்த்து நீண்ட நேரம் மக்கள் போராடினார்கள்…

ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு சீட்டு கட்டு கோபுரம் போல சரிவடைந்தது.

இதற்கு சித்தர்களின் சித்து வேலைகளும் ஒரு காரணம்.

இன்று அமைதியாக அல்லது சிறிய அளவில் கேப் அப் ஆக துவங்கும், 2600 மற்றும் 2670 நிலைகளை கடப்பதில் தான் அடுத்த கட்ட நகர்வுகள் தீர்மானிக்கப்படும்.

இன்றைய பிவோட் நிலைகள்

2931 – 2870 – 2756 2695 – 2581 – 2520 – 2406

 
 
 

 

FII & DII Turnover (BSE + NSE)
(Rs. crore)
  FII DII
Trade Date Buy Sales Net Buy Sales Net
25/11/08 1,394.65 1,556.53 -161.88 758.55 603.46 155.09

 நேற்றைய எமது பரிந்துரைகளின் செயல் பாடுகள்:

Tuesday, November 25, 2008
Cash and Future -Day Trading
Calls  Target Result
ONGC  695/90 Targets Achieved  low 677
Sell Tata Power 660/655/52 Target Achieved – Low- 641
Future 
Calls  Target Result
     
Sell Nifty at 2765 2685/63/42 Tgts achieved – low 2635
Option 
Calls  Target Result
Buy 2600 put 13 25 Tgts achieved  – high 39

இன்றைய சந்தையின் போக்கு 25.11.2008

இன்றைய சந்தை கேப் அப் ஆக துவங்கும்,  அந்த உயரத்தை தக்க வைக்குமா என்பதை பொறுத்தே அடுத்த கட்ட நகர்வுகள் அமையும்.   நேற்றைய பதிவில் குறிப்பிட்டது போல சந்தையின் நகர்வுகள் 2850-2900 ஐ நோக்கி அமையும்.

2805 – 2775 இல் ஒரு செல்லிங் பிரசர் வரலாம், என்று எதிர் பார்க்கிறேன்.

FnO Exipiry நெருங்குவதால் சீரான ஏற்றம் இருக்காது, நேற்றைய தினம் போல பெரிய மேடு பள்ளங்கள் காணப்படும் என்று நம்புகிறேன்.

இன்றைய பிவோட் நிலைகள்

2865 – 2804 – 2754 26932644 – 2583 2533
FII & DII Turnover (BSE + NSE)
(Rs. crore)
  FII DII
Trade Date Buy Sales Net Buy Sales Net
24/11/08 1,051.76 1,612.59 -560.83 804.31 579.41 224.9
21/11/08 1,081.08 1,786.64 -705.56 814.41 768.19 46.22

நேற்றைய எமது பரிந்துரைகளின் செயல் பாடுகள்

Monday, November 24, 2008
Cash and Future -Day Trading
Calls  Target Result
ONGC 687 675/663  Targets Achieved 
Sell BHEL 1297 1275/69 1st Target Achieved 
Sell Tata Power 644 635/619 Target Achieved – Low- 624
Future 
Calls  Target Result
     
Sell Nifty at 2720 2685/63/42 Tgts achieved – low 2633
Option 
Calls  Target Result
Buy 2600 put 35-36 45/55 Tgts achieved  – high 58

இன்றைய பரிந்துரை

யுனிடெக் நிறுவன பங்கினை 29.00 -31.00 விலையில் வாங்கலாம்

திரு மோகன் ராஜ் –  நேற்றைய பின்னூட்டம் கண்டு மிகவும் மகிழ்ந்தேன்,  தொடரட்டும் நமது நட்பு, வாழ்க நலமுடன்.

இன்றைய சந்தையின் போக்கு – 24.11.2008

வெள்ளி கிழமை எதிர் பார்த்ததை போல அதிர்ச்சியை தந்தது,  என்னடா எப்பொழுதும் பங்காளியை பார்த்து என் வழியை முடிவு செய்றீங்க, இன்று அவன் என்னை பின் தொடரட்டும் என்று, நிப்டியார் என் வழி தனி வழி என்று சென்றார்.

அதை தொடர்ந்து அமெரிக்க சந்தைகளும் நிப்டியை பின் தொடர்ந்து ஏற்றம் அடைந்துள்ளது.

இன்றைய சந்தை சில ஏற்ற இறக்கம் காணப்படலாம்…   இந்த Relief rally  அதிக பட்சம் 2850-900 வரை தொடர வாய்ப்பு உள்ளது.  அதை அடுத்து ஒரு சரிவு வரலாம்..

இந்த மாதத்தின்  FNO Expiry  க்கு இன்னும் 3 தினங்களே உள்ளதால்,   மேடு பள்ளம் அதிகம் காணப்படலாம்.

எனது இன்றைய நிலைகள்.. சிறிய அளவு கேப்டவுனாக துவங்கலாம் அவ்வாறு துவங்கினால் 2670-60 கவனிக்க வேண்டிய நிலைகள்.

2837  – 2783  – 2759   – 2663 – 2635 – 2589

இன்றைய பிவோட் நிலைகள்

2985 – 2858 – 27942667 – 2603 – 2476 – 2412

இந்த வாரத்திற்கான பிவோட் நிலைகள்

3241 – 3045 – 2887 – 2691 – 2533 – 2337 – 2179

நீண்ட கால முதலீட்டாளர்கள் சின்ன சின்ன முதலீடுகளை துவங்கலாம், 

இன்றைய எனது  பரிந்துரை – சன் டீவி நெட்வொர்க் – 135 விலையில் வாங்கலாம். டார்கெட் – 165, 194, 220. 

இன்றைய சந்தையின் போக்கு 21.11.2008

எல்லோருக்கும் இப்ப கரடியை பிடித்து விட்டதால், நான் காளைக்கு மாறாலாம் என்று நினைத்தேன்.  பொங்கல் திரு நாளுக்கு காளையை தயார் படுத்தலாம் என்றாசையில்.

ஆனால் சரியான சமயம் பார்த்து பங்காளி கழுத்தை (8000) அறுத்து விட்டார்.  நமது சந்தை 2500 இல் மதில் மேல் பூனையாக அமர்ந்த சமயத்தில்,  தொடர்ந்து 6 வாரமாக 8000 ஐ  வலுவான கீழ் நிலையாக வைத்து செயல் பட்ட டவ் ஜோன்ஸ் இன்று டைவ் ஜோன்ஸ் ஆக மாறி 7500 க்கு சென்று விட்டார்.

சரி நம்ம ஆளு நிப்டியார் என்ன செய்வார்,   அவரும் ரெம்ப வலிக்குதுடா… போதும்…. அழுதுடுவேன….. விடுங்கடா நான் மேலே போறேன் என்று தான் முயற்சிக்கிறார்.  ஆனால் சரியான காரணம் கிடைக்க வில்லை. (சந்தையின் போக்கின் மாற்றத்திற்கும் சில காரணங்கள் தேவை படுகிறது, சில மாதங்களுக்கு முன்பு வரை – பணவீக்க விகிதம், தங்கம் மற்றும் கச்சா எண்ணையின் விலை மாற்றம் போன்றவை இருந்து வந்தது நினைவிருக்கலாம்,  தற்போது அந்த காரணிகளை சந்தை மதிப்பதே இல்லை, ஏன் என்றால் தலைக்கு மேலே தண்ணி போய் கொண்டிருக்கிறது.)

நேற்றும் எதிர் பார்த்ததை போல 2500 இல் இருந்து  தனது சரிவுகளை மீட்டெடுக்கத்தான் போராடினார், ஓரளவு வெற்றியும் அடைந்தார்.. (2575).

2200 என்பது அத்தனை வலுவான சப்போர்ட் இல்லை… காரணம் அந்நிலை 27/10 ன் கீழ் நிலைதானேயன்றி ஒரு நாள் கூட அந்த இடத்தில் நிலை பட்டிருந்தது இல்லை.

இன்றைய துவக்கம் கேப்டவுனாகத்தான் துவங்கும்… ஆனால் 2500-2480 க்கு கீழ் நழுவாதவரை பிரச்சினை இல்லை. 2440-2400 நிலைகளை உடைத்தால் 1600 வரை சென்றாலும் ஆச்சரியம் இல்லை.. (இது எச்சரிக்கை தான் – அதற்கான வாய்ப்புகள் மிக குறைவே.)

இந்த மாத F&O Expiry இன்னும் மூன்று வர்த்தக தினங்கேளே உள்ளது..  மீடியா / சிறு வணிகர்கள் ஆகியோர் புதிய கீழ் நிலைகளை பற்றி பேச ஆரம்பித்து உள்ளார்கள்.  தொடந்து 7-8 நாளாக சந்தை சரிவில் இருந்து வந்து உள்ளது.  இவை அனைத்தையும் வைத்து பார்க்கையில், எதிர்பார்ப்புக்கு மாறாக சந்தை சில ஆச்சரியங்களை / அதிர்ச்சியை தரலாம். இது தனிப்பட்ட கருத்து…/ எதிர் பார்ப்பு…  நான் எப்பவும் மாற்று கருத்துக்கான காரணங்களை தேடும் ஆள், இதற்கு வலு சேர்க்கும் விதமாக கடந்த சில நாட்களில் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடு அதிகரித்து வருகிறது.

FII & DII Turnover (BSE + NSE)
(Rs. crore)
  FII DII
Trade Date Buy Sales Net Buy Sales Net
20/11/08 998.23 1,761.17 -762.94 1,002.66 575.71 426.95
19/11/08 1,845.35 2,110.33 -264.98 836.97 641.26 195.71
18/11/08 1,118.71 1,560.30 -441.59 947.18 488.58 458.6

2500-2450 இல் நிலை பட்டு மீண்டும் ஒரு Relief rally  நடக்கலாம்…..

சிறு வணிகர்கள் எச்சரிக்கையாக செயல் படவும்….

இன்றை சந்தையின் போக்கு 20.11.2008

நேற்றைய முடிவின் படி,  சிறிய ஏற்றம் இருந்திருக்க வேண்டும் அப்படிப்பட்ட நிலையில் தான் டெக்னிகல் கூறுகள் அமைந்துள்ளது,  அந்த சிறிய ஏற்றத்திற்கு பிறகே நமது நீண்ட நாளைய எதிர்பார்ப்பான 2500 நாளை பூர்த்தியாகும் என்று கணித்திருந்தேன்.

ஆனால் அந்த எதிர் பார்ப்பு இன்றே நிறைவேறும் என்று ஆசிய சந்தைகள் தெரிவிக்கின்றன,  இன்றைய சந்தையின்  நிறம் சிவப்பு என்று Dow உட்பட அனைத்து சந்தைகளும் தேர்தெடுத்துள்ளன.

நமது அண்ணன் எதிர்பார்ப்புக்கு மாறாக செயல் படலாம், கேப் டவுனாக துவங்கி அந்த இடைவெளியை இன்றே நிரப்பலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.

2500 கீழ் நழுவினால்,   எனது அடுத்த டார்கெட்  2220…

FII & DII Turnover (BSE + NSE)
(Rs. crore)
  FII DII
Trade Date Buy Sales Net Buy Sales Net
19/11/08 1,845.35 2,110.33 -264.98 836.97 641.26 195.71

வரும் திங்கள் முதல் இன்னும் விவரமாக சுவாரஸ்யமாக எழுத முயற்சிக்கிறேன்.

நண்பர் கார்த்திகேயன் – தங்களின் கடிதம் கிடைத்தது, மிக்க மகிழ்ச்சி… எழுதுவது நிறுத்த மாட்டேன்,  ஒரு வாரம் / 10 நாளைக்கான டிரெண்டை விவரமாக எழுதலாம், அதில் மாற்றம் நிகழும் போது மீண்டும் விவரமாக எழுதலாம் என்று நினைக்கிறேன்.  உதாரணத்திற்கு 3300 நிலைகளிலேயே நாம் விவரமாக அலசிவிட்டோம் 2500 தான் டார்கெட் என்று, அது வரை காத்திருந்திருக்கலாம், அதை விடுத்து அரைத்த மாவையே தினசரி அரைக்கும் போது படிப்பவர்களுக்கு சலிப்பு ஏற்படுகிறது, நாம் சொல்லியதன் முக்கியத்துவம் காணமல் போகிறது.   2750 நிலைவரை ஏற்றத்தை பற்றி பேசியவர்கள் தற்போது தான் சரிவை பற்றி பேச ஆரம்பித்து உள்ளார்கள். 

27/10/2008 – இந்த நாளை யாரும் மறந்திருக்க முடியாது..  அதே போன்று இன்று அமையலாம். 

இன்றைய சந்தை – இன்றும் சரியும், இன்னும் சரியும்.

தலைப்பிலேயே மேட்டரை சொல்லியாச்சு இப்ப என்ன எழுதுவது…  

பங்காளி அமெரிக்கா தன்னை நிலைப்படுத்தி கொள்ள ரெம்பவே போராடுகிறார்… ஜனவரி மாதம்  பெரியப்பு புஷ்க்கு ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு.  சித்தப்பு ஒபாமா,  பங்காளி வீட்டுக்கு பொறுப்பு ஏற்று ஏதாவது செய்தால் தான்.  பேச்சுகளில் இருக்கும் அதிரடி செயல்களில் இருக்குமா.  உலக நாடுகளுக்கு அவர் ஒசாமா ஆகாமல் இருந்தால் சரி.

டெக்னிகலில் பார்வையில் சந்தை தன்னை நிலைப்படுத்தி கொள்ளதான் முயற்ச்சிக்கிறது, இன்னும் முழுமையாக நிலைப்படவில்லை.. சரிவுகள் மீதம் உள்ளது,

முதலீட்டாளர்கள் காத்திருக்கவும்,  நல்ல விருந்து படைக்க காத்திருக்கிறது சந்தை. 

இன்றைய சூழ்நிலையில் 2830 ஐ கடக்காமல் Relief Rally சாத்தியமில்லை. 

இன்றய துவக்கமும் அமைதியாக அல்லது சிறிய அளவில் கேப் டவுனாக துவங்கி நாள் நெடுகில் அதை மீட்டெடுக்க போராடும்.

புதிதாக நமது செய்தி பிரிவுக்கு பொறுப்பு ஏற்றிருக்கும் திருமதி பி.எஸ் அவர்களுக்கு வாழ்த்துகள்.  தொடரட்டும் உங்கள் சேவை. பின்னூட்டம் உங்க ஏரியா கலக்குங்க.

நண்பர் ஆர் கே, 

தாங்கள் சொல்வது உண்மைதான்,   தற்போது நான் சொல்வதில் அல்லது எழுதுவதில் சுவாரஸ்யம் குறைந்து உள்ளதாக தெரிகிறது ஒரு சிறு இடைவெளி விட்டு தொடரலாமா என்று கூட யோசிக்கிறேன்.

சந்தையின் போக்கு பற்றி எழுத ஆரம்பித்த பிறகு நான் எழுதியதில், நானே ஆச்சரிய பட்டது, பத்திரமாக Save பண்ணி வைத்துள்ள 4/5  கணிப்புகளில்.

4500 இல் இருந்த போது  4640 ஐ கடந்து செல்லாது,  அதற்கு முன்பாக 4200 உறுதி என்று கணித்தது.

3700 உடைபட்டால் 4300 என்பதே நீண்டகால கனவாக மாறிவிடும் என்று எழுதியது.  உண்மையாகவே 4300 அடுத்த ஐந்தாண்டு திட்டம் போல ஆகி விட்டது.

3200-3300 இருந்த போது சொன்ன டார்கெட் 2500 இன்னும் 200 புள்ளிகள் தான் மீதம் உள்ளது.

 

Tuesday, November 18, 2008
Cash and Future -Day Trading
Calls  Target Result
Sell Bharthi 636/627/615 Target Achieved  (615.60)
Sell Tata Power  696/85 Targets Achieved (677)
Sell DLF 219.00 S/L Triggered – 6 rs loss
Sell Rel Cap  525/519 Targets Achieved – 518 
Buy Tata power  685/697/705 Target Achieved – Low- 702.90
Future 
Calls  Target Result
STBT – 17/11/2008    
Sell Nifty at 2800 2765/2700/2665 Tgts achieved -2665
Sell Nifty at 2750 2725/2700 Tgts achieved  – 2655
Buy Nifty at 267 2700/2725/55 Made high 2697 and closed without loss/profit
Option 
Calls  Target Result
Buy 2700 put 95-97 125/137 Tgts achieved  – high 145.
கட்டண சேவை பெற்று வரும் நண்பர்களே…

சரியான பஸ்சில்/ரயிலில் (கால்ஸ்/எண்ட்ரி) ஏற்றி விட வேண்டிது எனது வேலை. எந்த இடத்தில் (டார்கெட்) இறங்க வேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இன்னும் இறங்குமா அல்லது ஏறுமா என்று என்னிடம் கேட்காதிர்கள்.  கிடைத்த லாபம் போதுமா இல்லையா என்பது அவர் அவர் மன நிலையை பொறுத்தது.  ஒரு வேளை அந்த பஸ் தவறான ரூட்டில் செல்கிறது என்றால் ஸ்டாப்லாஸில் இறங்க வேண்டியது தான்.

பொதுவாக அனைத்து வர்த்தகர்களும் செய்யும் தவறு,   தினசரி அளவை (qty) மாற்றுவது அதவாது இன்று ரிலையன்ஸ் கேப்பிட்டல் 100 வாங்கவோ விற்கவோ செய்திருப்பார், லாபம் கிடைத்திருக்கும், உடனே மனம் எனும் குரங்கு தன் வேலையை காட்டும், 100×25 = 2500 கிடைத்தது, நீ 300 போயிருந்தால் என்ற கேள்வி கேட்கும் உடனே நம்மாளு நாளைக்கு  300 வாங்குவார்.  நஸ்டம் 20×300 = 6000.00 என்றாகிவிடும்.  அடிக்கடி அளவை மாற்றாதிர்கள்.  அது 50/100/200/300 என்று எதுவாக இருந்தாலும்.  சீராக இருக்கட்டும்.