இன்றைய சந்தையின் போக்கு 20.10.2008


அனைவருக்கும் வணக்கம்,

தீப திரு நாளை கொண்டாடுவதற்கு அனைவரும் தயாராகி கொண்டிற்கும் இந்த வேளையில் நம்ம அண்ணன் நிப்டியாரும் இந்த தீபாவளியை வெகு விமரிசையாக (ஏற்றத்துடன்)  கொண்டாட ஆயத்தமாகிறார் என்று நினைக்கிறேன்.  விரிவாக பார்ப்போம்.

டெக்னிகல்

 நாம் 2 பார் கீ ரிவர்சல் என்ற அமைப்பை பற்றி ஆகஸ்டில் பேசினோம்,  அதனுடைய இன்றைய நிலை என்ன என்பதை பார்ப்போம்..

நாம் ஆகஸ்ட் மாதம் எழுதியது –  இந்த அமைப்பு வாராந்திர சார்ட்டில் அமைந்துள்ளது..  10 வாரங்களுக்கு இதன் தாக்கம் இருக்கும்.  4560 ஐ சந்தை உடைத்து மேலே உயராது என்று. 

இந்த அமைப்பு உருவாகி சென்ற வாரத்துடன் 10 வாரம் மூழுமை அடைந்து விட்டது.. அதன் தாக்கம் இனி இருக்காது.   சரி அதன் தாக்கம் முடிவடைந்ததுக்கு வேறு அறிகுறிகள் உருவாகியுள்ளாதா..? என்றால் ஆம் சில வாரங்களுக்கு சந்தை கரடியின் ஆதிக்கத்திலிருந்து விடுபடும் என்று கருதுகிறேன்.. எப்படி என்றால்?.

இந்த படத்தை பார்ருங்கள், முதல் சரிவு ஒரு 8-9 வாரத்தில் முடிவடைந்தது.. அதன் பிறகு ஒரு ஹேமர் என்ற அமைப்பு உருவாகி மாற்றத்தை காட்டியது. 

தற்போது தொடர் சரிவுக்கு பிறகு ஒரு இன்வர்ட்ட் ஹேமர் என்ற அமைப்பு உருவாகியுள்ளது.  அதாவது சென்றா வாரத்தின் கீழ் நிலை ஒரு வலுவான சப்போர்ட் ஆக இருக்கும் (சில வாரங்களுக்கு)  

சரி இது நமது சந்தையின் போக்கு,  ஆனால் கடந்த ஒரு மாதமாக சந்தை உலக பங்கு சந்தைகளாலும் குறிப்பாக அமெரிக்க பங்கு சந்தையாலும் வழி நடத்த படுகின்றன. அப்படி இருக்கையில் இன்னும் அமெரிக்கா சரிவடைந்தால் ?? என்று விதன்டா வாதம் செய்பவர்களுக்கு..   ஆகஸ்ட் மாதம் நமது அண்ணன் நான் கரடியின் கைகளுக்கு செல்கிறேன் என்று முன்னறிவிப்பு (2 பார் கீ ரிவர்சல்) செய்த போது,  அமெரிக்காவில் இந்த நிலைமை இல்லை.  பின் எப்படி  ஆகஸ்ட் 2 வது வாரத்திலேயே FII’s / Treaders ன் மனநிலையில் ஒரு மாற்றம் ஏற்படுவதை காட்டியது. ??

இதை எழுதுவதற்கு முன்பாக டவ் ஜோன்ஸ் சார்ட் பார்த்தால்.. அங்கும் வாரந்திர சார்டில் ஒரு இன்சைடு பார் உருவாகியுள்ளது. அங்கும் 8000 என்பது தற்போதைய சப்போர்ட்டாக இருக்கும் என்று தெரிகிறது.

தற்போதைய சரிவு புதியதல்ல ஜனவரி சரிவின் மீதம்/தொடர்ச்சி தான். இரண்டு முறை அதிலிருந்து மீழ்வதற்கு (Relief Rally) முயற்சித்தது ஆனால் அதில் வெற்றி பெறவில்லை.

 

அதே கண்ணோட்டத்தில் டவ் ஜோன்ஸ் ஐ பார்ப்போம், அவர்கள் கடந்த 4 வருடத்தில் ஒரு சீராண ஏற்றத்தில் தான் இருந்துள்ளார்கள் ஆனால்  நமது ஏற்றத்தின் வேகம் மிக மிக அதிகம். ஆனால் அவர்களின் வீழ்ச்சியின் வேகம் தான் அதிகம் ஆனால் நம் வேகம் குறைவு தான்.

டெக்னிகல் விசயம் போதும் – இந்த வாரம் ஒரு முக்கியமான வாரமாக அமையும், அது இனிதாகவும் சுகமாகவும்  அமைய வேண்டும் என்பது தான் அனைவரின் ஆசையும்.  அடுத்த வாரம் திபாவளி அப்போது நடக்கும் லக்ஷ்மி பூஜை 1 மணி நேர வணிகத்தின் போது இந்த ஆண்டு ++இல் முடிவடையும் என்றும் எதிர் பார்க்கிறேன். அதுவும்  சந்தையின் ஒரு செண்டிமெண்ட் ஆகையால்.

இன்றைய சந்தை

இன்றைய துவக்கம் சிறியஅளவில் கேப் அப் ஆக இருக்கும்,   3120 முக்கியமான தடை கல்லாக இருக்கும் அதனை அடுத்து 3155 / 3180 / 3255 ஆகியவை இருக்கும்.

குறுகிய கால முதலீடு

Bongaigaon Refinery & Petrochemicals Ltd  – தற்போதைய விலையான 44 இல் வாங்கலாம் இலக்கு விலை – 65.00  ஸ்டாப் லாஸ் 35-37/-

பரிந்துரைகளின் செயல் பாடு

 

Friday, October 17, 2008
Cash and Future -Day Trading
Calls Target Result
Sella DlF 3xx 310/305/300 Target Achieved – Low – 285
SELL ONGC 8xx 790.00 Target Achieved – LOW – 760
Future
Calls Target Result
SELL NIFTY AT 33XX 3245/219/175/ All Targets Achieved
இன்றைய நிப்டியின் முடிவு என்ன?
தங்களின் பதில்களை இந்த பதிவிலேயே பின்னூட்டமாக எழுதாலாம்.
Advertisements

24 responses to this post.

 1. அனைவருக்கும் காலை வணக்கம்.

 2. சாய் சார்,காலை வணக்கம்,எங்கே விவாத மேடை பகுதியை காணோம்?

 3. காலத்திற்கேற்ற மிகவும் முக்கியமான பதிவு இது.
  நன்றி.

 4. அருமை அருமை அருமை. இந்த கட்டுரைக்கு இதை தவிர வேறு வார்த்தை தோன்றவில்லை. சொல்லி வச்ச மாதிரி சந்தைகள் 3110 தொடங்கியது. உங்களது நிப்டி நிலை மிகவும் அருமை. மூன்று நாள் suspense இப்போ தெளிவு ஆய்ருச்சு சார். எண்ணற்ற உள்ளங்கள் படிக்கும் ஒரு பதிவில், இவ்வாறான ஒரு விஷயத்தை சொல்வதற்கு கண்டிப்பாக வலுவான காரணங்கள் வேண்டும். அதற்க்கு நீங்கள் கொடுத்துள்ள படங்கள் மிகவும் அருமை.

  மேலும் சந்தைகளின் திசை மேலே நோக்கினால், இந்த பதிவு ஒரு வரலாற்று பதிவாக மாறும். இத நான் பேச்சுக்கு சொல்லல. எல்லோரும் 2900, 2800, 2500 அப்படின்னு சொல்லும் போது… இவ்வளவு குழப்பமான உலக நிலவரத்தில் இவ்வளவு தெளிவான கட்டுரை. வேற என்ன சொல்ல…

  நன்றி சாய் சார்.

 5. Hello sir,

  Today NIFTY will close by 3214

 6. oct nifty will end in 3234

 7. திரு சாய் அவர்களுக்கு,

  சந்தை தினமும் சரிந்து பீதியை கிளப்பிக் கொண்டிருக்கும் நேரத்தில் தங்களுடைய இன்றைய கட்டுரை எங்களுக்கு ஒரு உற்சாகம் தரும் அருமருந்தாய் உள்ளது என்றால் அது மிகையாகாது சாய்.

  Chart- டுடன் போட்டு இன்றைய பதிப்பை மெருகேற்றி கலக்கி விட்டீர்கள். பாராட்ட வார்த்தைகள் இல்லை.

  இனிய காலை வணக்கம் சாய்.

 8. சந்தை ஒரு பாய்ச்சலுக்கு தயராகி விட்டதை பதிவின் மூலம் எளிய முறையில் தெரிந்து கொண்டோம்.அனைவருக்கும் ஒரு தெளிவான கண்ணோட்டத்தை கொடுத்துள்ளதற்க்காக நன்றி!

 9. today nifty may close at 3200

 10. நல்ல பதிவு சாய்… நீங்கள் கூறிய போல் சந்தை சிரிய ஓட்டம் எடுக்க பார்க்கின்றது நாள் இறுதியில் பார்ப்போம்.

 11. ஹவ் டு யூஸ் வின்டோஸ் லைவ் ரைட்டர் (How to use Windows Live Writer) என்ற தலைப்பில் புதிய பதிவு ஒன்று எனது வலைத்தளதில். நிச்சயமாக உங்களுக்கு உதவியா இருக்கும் விரும்பியவர்கள் சென்று பார்க்கவும்

  http://kmdfaizal.blogspot.com/

 12. nity close 3196.20

 13. சாய்… உங்கள் வேண்டுகோளுக்கு இனங்க NHM Writer என்ற மென்பொருளை எவ்வாறு பயன் படுத்துவது என்று எழுதி இந்த வார இறுதிக்குள் பதிவு செய்கின்றேன்.

 14. நன்றி சிம்பா – இது வரலாற்று பதிவாக மாறினால் அதை விட சந்தோசம் என்ன இருக்கு. சந்தையை நேசித்ததுக்கு கிடைத்த வெற்றி என்று எடுத்து கொள்வேன். இதில் தவறினால் இன்னும் கற்று கொள்வோம்.

  மோகன் ராஜ் /ஆர்கே / பைசல் – நன்றி..

 15. 15% Capital Gain (for 2007 year 10%) வரி கட்டவேண்டும் என்று நம்ம நிதி அமைச்சர் இந்த ஆண்டு சொன்னறே? லாபம் என்று வந்தால் வரி கட்டுவோம்.

  இந்த வருடம் நிலையை பார்த்தால் நஷ்ட கணக்கு தான்? அப்ப நஷ்டம் வந்தால் நமம் என்ன செய்வது? நமக்கு 15% நஷ்டத்துல திருப்பி தருவாங்கலா?

 16. நன்றி சாய் சார்,உங்கள் NHM முலம் தமிழில் டைப் செய்கிறேன்.

  இன்று முடிவில் NIFTY 3178.60 இருக்குமென நினைக்கிறேன்.

  உங்கள் Chart விளக்கம் மிகவும் அருமை
  நன்றி,நன்றி,நன்றி.

  முருகேசன்
  அபுதாபி

 17. வெற்றி பெற்றவர்கள் மீண்டும் நிப்டி இன்று போட்டியில் கலக்கலாமா? ஆம் என்றால் இன்று நிப்டி 3210

 18. nifty – 3185

 19. வாங்க பைசல், தாரளமா.. கலந்துகொள்ளுங்கள்..

 20. இன்று nifty 3155 ல் முடியும் என எதிர்பார்கிறேன்

 21. will close at 3148.4

 22. This is the time for intraday traders. If one do trading according to market trend then they will get benefit. If one who analysis the market trend between 11.00 A.M, TO 2.00 P.M.the market oscillate both in long and short position. particularly between 1.15 p.m. to 1.45 p.m. if one would have gone short definitely they would got benefit. Intraday traders can get profit when the market fluctuates that too the fluctuation remains some minutes only.

 23. இன்று Chart அருமை.
  keep it up,Sir.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: